search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம்"

    • பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.
    • திருமண மாலைகள், கார்த்திகை பூ சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் கீரின்நீடா என்ற சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் பனை திருவிழா நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழா அரங்கில் பனையில் இருந்து தயாரிக்கப்பட்டபனை அல்வா உள்ளிட்ட பொருட்கள், மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.

    பனை திருவிழாவினை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் நாராயணன் தொடங்கி வைத்து பேசுகையில் பனைமரம் தமிழகத்தின் பாரம்பரிய மரம்.

    பனைமரம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கிறது. நாம் அனைவரும் வீடுகளில் பனை மரம் வளர்க்க வேண்டும். பனைமரத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

    மேலும் பனைத் திருவிழாவில் நாம் மறந்துபோன பனை ஓலை காத்தாடி, பனங்காய் நுங்கு வண்டி, பனங் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் பனை அல்வா, பனை குல்பி, பனை ஓலையில் செய்யப்பட்ட கைப்பை , திருமண மாலைகள், கார்த்திகை பூ சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.

    இதுதவிர கவியரங்கம், கருத்தரங்கம், நாட்டுப்புறப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. #KRSDam
    மாண்டியா:

    கர்நாடகம்-தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை திகழ்கிறது. இந்த அணை மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும்.

    இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை இல்லை. மேலும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.



    நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 102.23 அடியாக இருந்தது. அணையில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ராமநகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும், காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்திற்கும் என மொத்தம் வினாடிக்கு 3,600 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 113 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.

    இதே நிலை நீடித்தால் ஏப்ரல், மே மாதங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கே.ஆர்.எஸ். அணை நீர்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு (2018) ஏப்ரல் 11-ந்தேதி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 87.69 அடியாக இருந்தது. ஆனால் தற்போது 102.23 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட தற்போது மழை பொழிவு குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும்.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவில் எந்த பாதிப்பும் இருக்காது. கே.ஆர்.எஸ். அணையில் 45.05 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் இருப்பு வைக்கலாம். தற்போது அணையில் 20.24 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KRSDam

    மழை முற்றிலும் ஓய்ந்துள்ளதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119 அடியாக குறைந்துள்ளது.
    கூடலூர்:

    கேரளா எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களாக பருவமழை பொய்த்து போனதால் ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது. தற்போதும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணைக்கு 186 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மேலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 119.25 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 56.17 அடியாக உள்ளது. 156 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.86 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 24 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    நேற்று 85.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 84.82 அடியானது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 293 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 179 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், டெல்டா பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 85.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 84.82 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2.3 அடி குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 869 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 750 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 21-ந் தேதி 94.27 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 91.9 அடியாக இருந்தது.

    இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் சரிந்து 90.97 அடியானது. இதனால் 3 நாட்களில் 2.3 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.65 அடியாக குறைந்துள்ளது.
    கூடலூர்:

    இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது. 142 அடிவரை உயரும் என எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறையத்தொடங்கியது.

    அதன்பின்னர் சாரல்மழை மட்டுமே பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு 187 கனஅடிநீர் வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 900கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 127.65 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. 859 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து பாசனம் மறறும் மதுரை மாநகர குடிநீருக்காக 1760 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாக உள்ளது. 21 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.47 அடியாக உள்ளது. 17 கனஅடிநீர் வரும் நிலையில் 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    நீர்பிடிப்பில் தொடரும் மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியை நெருங்கி வருகிறது. #MullaperiyarDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக கேரளாவிலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    130.30 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 130.90 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1209 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4908 மி. கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 60.20 அடி. வரத்து 1310 கன அடி. திறப்பு 3110 கன அடி. இருப்பு 3640 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 117 கன அடி. திறப்பு 110 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.27 அடி. வரத்து 52 கன அடி. திறப்பு 30 கன அடி. #MullaperiyarDam

    நேற்று 101.65 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.89 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 5 ஆயிரத்து 81 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 643 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 500 கன அடியும் கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 200 கன அடியாக குறைக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 101.65 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.89 அடியாக உயர்ந்தது. பிற்பகலில் 102 அடியை எட்டியது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam
    நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 99.10 அடியாக உயர்ந்தது. #NellaiRain #ManimutharDam
    நெல்லை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் லேசாக வெயில் அடித்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் சில பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை, செங்கோட்டை, கருப்பாநதி அணைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள‌து.

    இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1004 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 516 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 128.38 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 130.97 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 99.10 அடியாக உயர்ந்தது. மாலையில் இந்த அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 424 கன அடி தண்ணீர் வருகிறது. கடனா அணை நீர்மட்டம் நேற்று 73.80 அடியாக இருந்தது. இன்று இது 74.20 அடியாக அதிகரித்துள்ளது.

    ராமநதி அணை நீர்மட்டம் 66.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளன. அடவிநயினார் அணை நீர்மட்டம் 97.50 அடியாக இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 28.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:‍-

    கருப்பாநதி-21, செங்கோட்டை-19, குண்டாறு-11, நம்பியாறு-8, பாபநாசம்-7, சேர்வலாறு-6, களக்காடு-5.4, ராமநதி-5, தென்காசி-4.3, கடனா நதி-2, அடவிநயினார் அணை-2.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 4 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2.5 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 2.4 மில்லிமீட்டரும், கடம்பூர், வைப்பரில் தலா 2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. #NellaiRain #ManimutharDam
    மேட்டூர் அணை நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக இன்று இரவு அல்லது நாளை காலை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    நேற்று அணைக்கு 6 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை இது 6 ஆயிரத்து 144 கன அடியாக அதிகரித்து உள்ளது.

    காவிரி டெல்டா பாசன பகுதியில மழை பெய்த காரணத்தால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.

    நேற்று காலை 99.42 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 99.74 அடியாக உயர்ந்துள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலை நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டில் 2-வது முறையாக நீர்மட்டம் 100 அடியை தொட உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டது.

    தற்போது கால்வாய் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் மீண்டும் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மொத்தம் 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. #MetturDam

    நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியிலும் புயல் காரணமாக கன மழை பெய்தது.

    இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. தற்போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்துள்ளதால் அதன் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 133.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1116 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1907 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5504 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1190 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4666 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு நீர்மட்டம் 50.80 அடி. வரத்து 64 கனஅடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 15 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 1.8, கூடலூர் 2.6, வைகை அணை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியுள்ளது. #MullaPeriyar #PeriyarDam
    கூடலூர்:

    கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர தொடங்கி உள்ளது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு 127 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 132 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3474 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1550 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    கோப்புப்படம்

    இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து தற்போது 59.58 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.50 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1, தேக்கடி 7, வைகை அணை 3.6, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை முதலே தேனி மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் மழைப்பொழிவு அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MullaPeriyar #PeriyarDam
    ×