search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 122727"

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இயக்குவதற்காக 14 புதிய பஸ்கள் ஊட்டி கோட்டத்திற்கு வழங்கப்பட்டது. இதன் இயக்கத்தை கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குன்னூர் கிளைக்கு வழங்கப்பட்ட புதிய பஸ்களில் ஒன்று நேற்று குன்னூரில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் 52 பயணிகள் பயணம் செய்தனர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் கே.என்.ஆர். நகர் இடையே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக சென்று எதிரே கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும், பஸ்சில் பயணம் செய்த கோவையை சேர்ந்த பத்மாவதி (வயது 45), குன்னூரை சேர்ந்த உஷா (50), கரோலின் (50), சுந்தரி (60) ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் சக பயணிகள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றி சென்ற 5 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது விருத்தாசலம் சாலையில் மணல் ஏற்றிய 2 லாரிகள் வேகமாக வந்தன. போலீசார் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள சே‌ஷ நதியில் சிலர் மினி லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அங்கு போலீசார் சென்ற போது மணல் அள்ளி கொண்டிருந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இதையடுத்து அங்கிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதுபோல் உளுந்தாண்டவர் கோவில் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு கும்பல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தது.

    இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    மணல் ஏற்றிய நிலையில் அங்கு நின்ற ஒரு லாரியையும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விக்கிரவாண்டி அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    விக்கிரவாண்டி:

    சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று நெல்லைக்கு புறப்பட்டது. பஸ்சை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரையை சேர்ந்த பாலமுருகன் (வயது 35) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருந்தார். அந்த பஸ் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் உள்ள சென்னை- திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை பஸ் டிரைவர் முந்திச்செல்ல முயன்றார். இதில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பயணிகள் சென்னை அய்யப்பன் நகரை சேர்ந்த வாசுகி(25), குரோம்பேட்டை சசிகுமார், மாம்பாக்கம் அண்ணாமலை(30), கொளப்பாக்கம் பிரவின்குமார்(42) உள்ளிட்ட 10 பேர் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த வாசுகி உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான அரசு பஸ் மற்றும் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தாசில்தார் லெனின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டில்பட்டி கிராமம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், உரிய ஆவணங்கள் இல்லாததும், திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    டீசல் விலை தினசரி உயர்வு, 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 24-ந் தேதி பிரதமர், பெட்ரோலிய துறை, சாலை போக்குவரத்து துறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் ஜூன் 18-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. எனினும் மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர உள்ளோம்.

    நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், இன்று நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு இல்லை. நாங்கள் ஜூலை 20-ந் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போம். எனவே இன்று அனைத்து லாரிகளும் இயங்கும் என்றார். 
    லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் ஊற்றப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கழிவு நீரை பெற்று வெளி இடத்துக்கு கொண்டு சென்று ஊற்ற தனியார் டேங்கர் லாரிகள் அதிக அளவு பணம் வசூலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் டிரைவர்கள் ஊற்றி வருகிறார்கள்.

    இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தட்டிக் கேட்கும் பொது மக்களை டேங்கர் லாரி டிரைவர்கள் மிரட்டும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    கழிவுநீரால் அண்ணா நகர், சூளைமேடு பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    உகாண்டாவின் வடக்கு பகுதியில் பேருந்து ஒன்று டிராக்டர் மற்றும் லாரியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UgandaBusAccident

    கம்பாலா:

    உகாண்டாவில் சாலை போக்குவரத்து மிகவும் அபாயகரமானதாகும். அங்கு 2015 முதல் 2017-ம் ஆண்டு வரையில் நடந்த சாலை விபத்துகளில் 9,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள் கிர்யாடோங்கோ என்னும் பகுதியில் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் எதிரே டிராக்டர் ஒன்று விளக்கு இல்லாமல் வந்துள்ளது. இரவு நேரம் என்பதால் இருட்டில் அந்த டிரக்டருடன் பேருந்து மோதியுள்ளது. 



    அதோடு பின்னே பீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மீது அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #UgandaBusAccident
    மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
    போபால்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் பஞ்சாப் மாநிலம் அகமதாபாத்துக்கு பலர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தினை கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது.

    மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 47 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #busaccident
    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பழ வியாபாரி பலியானார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சரவணன் (வயது 26). பழ வியாபாரி. இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் செவ்வாப்பேட்டை துர்க்கையம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்திசையில் பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சரவணணுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    அவ்வாறு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    ×