search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியோடு நிறைவடைகிறது.
    • சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    சென்னை :

    வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியோடு நிறைவடைகிறது. இந்த கால கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.

    இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம்.
    • புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருக்கும், அவருடன் பயணிப்பவருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தஞ்சையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு போலீசார் உடனுக்குடன் அபராதம் விதித்து வருகின்றனர்.

    தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது.

    • 3 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் நடைமுறைப்படுத்து வதற்கான அரசாணை வெளியிட்டது.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் போக்கு வரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த வகை செய்யும் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் பல மாநிலங்களில் ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் நடைமுறைப்படுத்து வதற்கான அரசாணை வெளியிட்டது.

    தமிழக அரசு அதன்படி, 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் புதிய அபராத வசூல் விதிக்கப்படு ம் என விழுப்புர மாவட்ட போலீசார் எச்சரிக்கை செய்து ள்ளனர். இந்த அபராத வசூல் பின்வருமாறு:-

    உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ.500- ஆக இருந்த அபராதத் தொகை இப்போது ரூ.5,000-ஆக அதிகரிக்க ப்பட்டுள்ளது. மொபைலில் பேசிக் கொண்டே மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் இப்போது ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதே விதிமீறலை செய்து 2-வது முறை பிடிபட்டால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்குத் தண்டனை விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுவதோடு, இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 25,000 வரை அபராதமும் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

    பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதும், "வீலிங்' எனப்படும் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டால் ரூ.500ஆக இருந்த அபராதம் ரூ.5,000-ஆகவும், இரண்டாவது முறை பிடிபட்டால் அபராதம் ரூ.10,000-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ.1000 அபராதம். காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அபராதம். பதிவு இல்லாத வாகனங்களை ஓட்டினால் ரூ.2,500 அபராதம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ.10,000 அபராதம். விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உயத்தப்பட்ட அபராதம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறது எனபதை சரிபார்த்துக் கொண்டு சாலைகளில் வாகனங்களில் செல்ல போலீசார் கூறுகின்றனர்.

    • சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து விதிமீறல்களை பற்றியும் புதிய அபராத தொகை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபராதம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று இரவு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய அபராத தொகையை வசூலிப்பது தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை இன்று தொடங்கினார்.

    இன்று காலையில் அவசரம் அவசரமாக அலுவலகங்களுக்கு சென்றவர்கள், வெளியிடங்களுக்கு சென்றவர்கள் ஆகியோரை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் புதிய அபராத தொகை தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    வேப்பேரி கமிஷனர் அலுவலக சந்திப்பில் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை மடக்கி பிடித்து புதிய போக்குவரத்து அபராத தொகை குறித்து எடுத்துக் கூறினார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டினாலும் அபராதமாக கூடுதல் தொகையை செலுத்த நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

    அதே நேரத்தில் அதிவேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000-மும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும் என்றும், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை பற்றியும் புதிய அபராத தொகை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார்கள். சீட் பெல்ட்டு அணியாமல் கார் ஓட்டினாலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் ரூ.1000 அபராத தொகை வசூலிக்க சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர பணிகளுக்கான வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து காலை 10 மணியில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. திடீரென மோட்டா் வாகன விதிமீறல் குற்றங்களுக்கு அதிக அளவிலான தொகையை போலீசார் கேட்டதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள். ஒரு சிலர் இன்று மட்டும் விட்டு விடுங்கள் சார், நாளை முதல் லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவற்றுடன் பயணிக்கிறேன் என்றும் கூறினர்.

    புதிய அபராத கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.

    புதிய அபராத தொகையை வசூலிப்பதற்கு ஏதுவாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் கையடக்க எந்திரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    புதிய போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கான கூடுதல் அபராத தொகை போக்குவரத்து கணினி சேவை மையத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் கையடக்க எந்திரத்திலும் அது அப்டேட் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்க ப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, கொங்கனாகுறிச்சி என்.சுப்பலாபுரம், செங்கமலநாச்சியார்புரம், வத்திராயிருப்பு, முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 886 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.55 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சில வாடிக்கையாளர்கள் மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டு ரூ.38 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர்.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளரின் 94430-37508 செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சுகாதாரத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தெங்கம் புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று டெம்போவை பிடித்தனர். பின்னர் டெம்போ மாநகராட்சி அலுவல கத்திற்கு கொண்டு வரப்ப ட்டது. தொடர்ந்து டெம்போ உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது.

    • கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தன.
    • இந்திய போட்டி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

    புதுடெல்லி :

    ஆண்ட்ராய்டு செல்போன் சூழியல் அமைப்பின் பல சந்தைகளில் கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தன. குறிப்பாக தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.

    இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் தற்போது விதிக்கப்பட்டு உள்ளது.இதைத்தவிர நியாயமற்ற வணிக நடைமுறைகளை நிறுத்துமாறும், வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நடத்தையை மாற்றியமைக்குமாறும் கூகுள் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
    • ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு காரணங்களால் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களும் ஏற்படுகின்றன.

    இதனால் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக தண்டனை மற்றும் அபராதத்தை கடுமையாக்க மத்திய அரசு 2019-ல் மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தது.

    இதை அடிப்படையாக கொண்டு தமிழக அரசும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. அதற்கேற்ப மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு அபராத தொகைகளையும் உயர்த்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு எந்தெந்த வகையில் அபராதம் விதிக்கப்படும் என்பதை விரிவாக பட்டியலிட்டு உள்ளார்.

    மொத்தம் 46 வகையான குற்ற விதிமீறல்களுக்கு அபராத தொகை எவ்வளவு என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் அரசாணையாகவும் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-

    மோட்டார் வாகனத்தை ஓட்டும் போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டினாலோ ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    சாலைகளில் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000மும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களை ஓட்டுவதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதி இல்லாதவர்கள் வாகனத்தை ஓட்டினால் முதன்முறை ரூ.1000-ம், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    சாலைகளில் வாகனம் ஓட்டும்போது விதிகளை மதிக்காமல் அதிக ஒலி எழுப்பினாலோ, அதிக புகையுடன் வாகனங்களை ஓட்டி சென்றாலோ ஏற்கனவே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகை உயர்த்தப்படவில்லை.

    உரிய பதிவெண்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.2500 அபராதமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.போக்குவரத்து வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனுமதி (பெர்மிட்) இன்றி ஓட்டினால் வசூலிக்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் அபராத தொகையும் அதிகரிக்கப்படவில்லை. இனி வரும் காலங்களிலும் இதே தொகையே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் பயன்படுத்தும் கார் உள்ளிட்ட வாகனங்களையும் உரிய அனுமதியின்றி போக்குவரத்து விதிகளை மீறி இயக்கினால் முதன்முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும்.

    உரிய இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டி போலீசில் விதி மீறினால் முதல் முறை ஆயிரமும், 2-வது முறை 4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்சுக்கு வழி விடாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றி சென்றால் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். லாரிகளை நிறுத்த மறுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்க அதில் விதிமுறைகள் திருத்தப்பட்டு உள்ளன.

    லாரிகளில் அதிக உயரத்தில் பாரம் ஏற்றி வந்தாலோ அல்லது அகலமாக பாரம் ஏற்றி வந்தாலோ ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவை விட அதிகமான பயணிகளை ஏற்றி சென்று ஒவ்வொரு பயணி வீதம் கணக்கீட்டு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

    மோட்டார் வாகனத்தை புதுப்பிக்க தவறினால் முதல் முறையாக ரூ.500 அபராதமும், இரண்டாவது முறையாக இத்தவறினை செய்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.

    பிற மாநிலத்தில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்களை 12 மாதங்களுக்குள் மீண்டும் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்காவிட்டால் முதல் முறையாக ரூ.500-ம், தொடர்ந்து அதே தவறு செய்தால் ரூ.1500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட மோட்டார் வாகனத்தை பெயர் மாற்றம் செய்யவில்லை என்றால் முதல் முறை ரூ.500-ம், 2-வது முறை இதே தவறினை செய்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.

    மோட்டார் விதி அடையாள குறிகளை அகற்றினால் முதல் முறையாக ரூ.500-ம், தொடர்ந்து இதே தவறுக்கு ரூ.1,500-ம், மோட்டார் விதிகளை மீறினால் ரூ.1,500, பொது இடத்தில் வாகனங்களை விபத்து ஏற்படும் நிலையில் நிறுத்தி இருந்தால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.

    வாகனத்தில் முன்பகுதி அல்லது ஓடுகிற பகுதியில் நின்று பயணித்தாலோ அல்லது உட்கார்ந்து பயணித்தாலோ முதலில் ரூ.500-ம் அடுத்தடுத்து தவறு செய்தால் ரூ.1500-ம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகன சோதனையின் போது, லைசென்சு, கண்டக்டர் லைசன்சு, பதிவு, பெர்மிட், தகுதி சான்று, இன்சூரன்ஸ் ஆவணங்களை காட்டாவிட்டால் முதலில் ரூ.500-ம், தொடர்ந்து தவறு செய்தால் ரூ.1500-ம் அபராதம் விதிக்கப்படும்.

    டிரைவிங் லைசென்சு தொடர்பான குற்றங்களுக்கு முதல் முறையாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் முதல் முறையாக ரூ.5000 அபராதமும், கண்டக்டர் லைசென்சு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகன தயாரிப்பாளர், இறக்குமதியாளர், டீலர், விற்பனையாளர், வாகனத்தை ஆல்டர் செய்வதில் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1 லட்சம் அபராதம் ஒரு வாகனத்திற்கு விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு மோட்டார் வாகன விதி மீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் போக்குவரத்து புதிய அபராத விபரங்கள் தொடர்பாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரும் அபராத விபரங்களை வெளியிட்டார். சென்னையில் மூடப்பட்டுள்ள சாலைகள் மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்த தகவல்களை கூகுல் மேப் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக புதிய செயலி ஒன்றை அவர் வெளியிட்டார்.

    • ஜவுளி கடைகள், சுவீட் கடைகள், வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின்போது சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று சோதனை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் சேலம், ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு ஜவுளி கடைகள், சுவீட் கடைகள், வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று சோதனை நடத்தினர். அப்போது சட்ட விதிகளை கடைபிடிக்காதது, மறு முத்திரை செய்யப்படாத எடையளவுகள், பொட்டல பொருட்களில் அறிவிக்கை இல்லாமல் விற்பனை செய்வது என்பது உள்ளிட்ட முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    இதையடுத்து வணிக, ஜவுளி, சுவீட் நிறுவ னங்க ளுக்கு ரூ.55 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது தொழிலாளர் துணை ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அஞ்சலக கண்காணிப்பாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • அடையாள அட்டை வழங்காத

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் முருகப்பாண்டியன். இவர் கடந்த 1.06.2017ம் ஆண்டு பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக அடையாள அட்டை வேண்டி அதற்கான தொகை ரூ. 250ம் அளித்து விண்ணப்பித்திருந்தார். இவரது அடையாள அட்டை தராததால் மாவட்ட தலைமை தபால்நிலைய அலுவலரிடம் பலமுறை தன் அடையாள அட்டையை தாருங்கள் என கேட்டுப் பார்த்தும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறி காலம்தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலான முருக ப்பாண்டியன் எதிர்மானு தாரர்களான ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்கா ணிப்பாளர், பெரம்பலூர் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலர் ராஜி, பாடாலூர் அஞ்சல் அலுவலக தபால்காரர் கலியமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து சேவை குறைபாடு காரணமாக ரூ,9 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ. 10 ஆயிரம் பெற்றுத்தரவேண்டும் என பெரம்பலூர் வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மூலம் வழக்கு தொடந்தார்.

    இந்த வழக்கு விசாரனையில் முறையான பதில் தாக்கல் செய்யபடாததாலும், இதுவரை அஞ்சல் அடையாள அட்டை வழங்காததாலும் இரு தரப்பையும் விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர். அஞ்சலக சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மனுதாரர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாற்காக நஷ்ட ஈடாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரமும் மனுதாரருக்கு கொடுத்திட வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • ஆயிரத்து 218 வாகன ஓட்டுனர்களுக்கு 16 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ஊத்துக்குளி, மங்கலம் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்:

    சாலை விதிமுறைகளை மீறி இயங்கி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் சிவகுமரன் உத்தரவின் பேரில், பல்லடம், சின்னக்கரை, வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், காங்கயம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, ரெயில் நிலையம் அருகில், 63 வேலம்பாளையம், ஊத்துக்குளி, மங்கலம் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 9 வட்டார போக்குவரத்து அலுவலர்கள், 21 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.ஆய்வில் உரிய ஆவணம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உட்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ஆயிரத்து 218 வாகன ஓட்டுனர்களுக்கு 16 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தகுதிச்சான்று இல்லாத 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பல இடங்களில் அதிகாரிகள் வாகனத்தணிக்கை மேற்கொண்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளின் பொறுப்பு.
    • பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், மீறுபவர்களுக்கு அபதாரம்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளில் பொறுப்பு குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் தலைமை வகித்தார்.

    முகாமில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ரமணன், ஒன்றிய பொறியாளர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செயல்பாடுகள் சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளின் பொறுப்பு கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட பயிற்சி வழங்கினர்.

    மேலும் ஊராட்சிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலு மாக தடை செய்து, மீறுபவர்களுக்கு அபதாரம் விதிப்பது குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    முகாமில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×