search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
    • நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தாக்கம் கடந்த 2 வாரமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பொது இடங்களில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ- மாணவிகள், மற்றும் என்.சி.சி.மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி ஈரோடு ஜி.எச்.ரவுண்டானாவில் தொடங்கியது. மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம், டவுன் டி.என். பி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணி மீனாட்சி சுந்தரனார் சாலை, பன்னீர்செல்வம் பார்க், கச்சேரி வீதி வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது

    இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் வாகன தணிக்கையில் தப்பினாலும் சேலத்தில் உள்ள தனியங்கி காமிராக்கள் மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும்.
    • அதன்படி விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 15 நாளில் 10ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் கோடா உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.

    10 ஆயிரம் வழக்கு

    அதன்படி விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 15 நாளில் 10ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே ஆன்லைனில் அபராதம் செலுத்தாத 1500 பேரிடம் அபராதம் வசூல் செய்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைத்தது.

    சேலம் 5 ரோடு சந்திப்பில் விதி மீறி தொடர்ந்து வாகனம் இயக்கியதால் 119 முறை அபராதம் விதிக்கப்பட்ட நபர் அதனை செலுத்தாமல் இருந்தார். அவரை போலீசார் வாகன தணிக்கையின் போது பிடித்து 12 ஆயிரத்து 900 ரூபாயை வசூலித்தனர்.

    அதிக அபராதம்

    அந்த நபர் தமிழகத்திலேயே அபராதமாக அதிக தொகை செலுத்திய 2-வது நபர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் விதி மீறுவோர் போலீசார் வாகன தணிக்கையில் தப்பினாலும் சேலத்தில் உள்ள தனியங்கி காமிரா க்கள் மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும்.

    இதனால் வாகன ஓட்டிகள் எப்போதும் போக்குவரத்து விதிமுறை–களை கடை பிடித்து ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஹெல்மெட் அணியாததால் ஆன்லைன் மூலம் 16 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு துணை கமிஷனர் மாடசாமி தகவல் தெரிவித்தார்.
    • கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் வாகன விபத்தை தடுக்கும் வகையில் சேலம் வடக்கு பகுதிக்கு உட்பட்ட ஏ.வி.ஆர், 5 ரோடு,சேலம் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களுக்கு முகாமில் வைத்து விபத்து வீடியோ மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது. 16 நாட்கள் நடத்த இந்த சிறப்பு முகாமில் 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    ஒரே ஒரு வாலிபர் மட்டும் ஹெல்மெட், ஓவர் ஸ்பீடு மூலம் ஒரு ஆண்டில் 120 முறை ஆட்டோமெட்டிங் கேமரா மூலம் ரூ.12 ஆயிரத்து 900 கட்டி உள்ளார். முதல் தடவை அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு துணை கமிஷனர் மாடசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

    கரூர்:

    புகழூர் நகராட்சிக்குட்பட்ட பிரியாணி, டிபன், பழம், பலகாரம், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் நகராட்சி துப்புரவு அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த

    சுமார் 50 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

    • போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • 33 பேருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    நீலகிரி,

    கோத்தகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாலிபர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமலும், ஹெல்மெட் அணியாமலும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

    மனோகரன் மற்றும் போலீசார் கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்குவது, ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக 33 பேருக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை மீட்டனர்.
    • வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    கோவை :

    கோவை ஆனைகட்டி பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் துவைப்பதி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் வனத்துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, மான் இறைச்சி சமைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். அருகில் இருந்த மற்றொரு வீட்டில் சோதனை செய்தபோது, முருகன் (வயது 49) என்பவர் துரைசாமி (65) என்பவருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. விசார ணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆனைகட்டியைச் சேர்ந்த கருப்பராயன் (39), ஜெயக்குமார் (31), ஜெகநாதன்(39) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில், முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்படி துவைப்பதியில் இருந்த ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை, கொடுவாள் ஆகியவற்றை மீட்டனர்.

    இதையடுத்து, மானைக் கொன்ற முருகனுக்கு ரூ.25 ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் மூங்கில்பள்ளம் அருகே உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அங்குசென்ற வனத்துறையி னர் ரங்கசாமி (65) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தனது வளர்ப்பு நாயை விட்டு மான்களை கொன்று இறைச்சிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு (40), சுப்பிரமணி (45), ராமு (30), சிவதாஸ் (37), கந்தசாமி (40) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மான் இறைச்சிகளை மீட்டனர்.அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    ஆனைகட்டி பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதைத்தடுத்து நிறுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மதுரை மாவட்டத்தில் மின்சாரம் திருட்டு; ரூ.32.19 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படை யில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அம லாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மீமிசல், கோட்டைப்பட்டினம், கொடிக்குளம், மணல்மேல்குடி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளில் 9 இடங்களில் மின் திருட்டு கண்டறி யப்பட்டது.

    எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.29 லட்சத்து 55 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் மின்சாரம் திருடிய நுகர்வோர்களுக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக நுகர்வோர்களிடம் மொத்தம் ரூ.32 லட்சத்து 19 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன் எண்: 94430-37508 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலத்தில் 44 ரேசன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக சேலம் டவுன், கிச்சிப்பாளையம், எருமாபாளையம் பகுதிகளில் செயல்படும் 26 ரேசன் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில் 24 கடைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடை விற்பனையாளர்களுக்கு மொத்தமாக ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதுபோல் ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் செயல்படும் 24 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 20 ரேசன் கடைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனால் அந்த கடை விற்பனையாளர்களுக்கு மொத்தமாக ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அபராதம் விதிப்புக்குள்ளான ரேசன் கடை விற்பனையாளர்கள் உடனடியாக வேறு பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

    சேலத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் ரேசன் கடைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எத்தனை ரேசன் கார்டுகள் உள்ளன? எவ்வளவு அரிசி இருப்பு உள்ளது?அனைத்து கார்டுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக அரிசி வழங்கப்படுகிறதா? ஒவ்வொரு மாதமும் எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது?, பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள ரேசன் அரிசி இருப்பு உள்ளதா? என ஆய்வு செய்கிறோம். இது குறித்து விற்பனையாளர்களிடமும் கேள்விகள் கேட்கப்படுகிறது.

    இதேபோல் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுகளும் சரியான முறையில் வழங்கப்படுறதா? எனவும் ஆய்வு செய்கிறோம். ரேசன் கடையை முறையாக பராமரிக்காத, அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்; உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகங்கை டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது மாதவன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட 50 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அதனை பறிமுதல் செய்ததுடன் உணவு பாதுகாப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் கடை உரிமையாளர் மாதவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் அருகில் இருந்த மலைச்சாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 5 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    அவற்றையும் பறிமுதல் செய்து உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சங்கராபுரம் பகுதியில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கெண்டனர்.அப்போது, பொது இடங்களில் புகை பிடித்த நபர்களுக்கு அபாரதம் விதித்து, பொது இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு கடைகளில் பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் பாலசேகரன், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பல்லடம்,

    தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆங்காங்கே புகையிலைப் பொருட்கள் குறித்து சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில், பல்லடம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகநாதன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பையன், தமிழ்ச்செல்வி மற்றும் சுகாதார அலுவலர்கள் பல்லடம் நகரப் பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும், பெட்டிக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு தலா ரூ.100 விதம் 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளை சீல் வைப்பது, மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதைகளை ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    திங்கள்நகர் பஸ் நிலையத்தில் குளறுபடியாக பஸ்களை நிறுத்துவது குறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், திங்கள்நகர் பேரூராட்சிக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சசி உத்தரவின்பேரில் போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டுமென்றும் மினி பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை கூறினார். மேற்குநெய்யூர் வழியாக பெத்தேல்புரம் செல்லும் பஸ்கள் மற்றும் ஞாறோடு, வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, ஆசாரிப்பள்ளம், ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

    விதி முறைகளை மீறும் அரசு பஸ்கள், மினி பஸ்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதைகளை ஆய்வு செய்தார். அப்போது மாற்றுதிறனாளிகளுக்கு நடை பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது திங்கள்நகர் பணிமனை பொது மேலாளர், திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சுமன், செயல் அலுவலர் எட்வின்ஜோஸ், கவுன்சிலர் செல்வின்ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×