search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • மின் திருட்டு கண்டறியப்பட்டது.

    மதுரை

    மதுரை மின்வாரிய மண்டலத்துக்குட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது நிலக்கோட்டை, என்.ஆண்டிபட்டி, கன்னிவாடி, ஒட்டன் சத்திரம், க.கீரனுார், சித்தை யன்கோட்டை, ஜவ்வாது பட்டி, கே.எஸ்.பட்டி, தர்மத்துப்பட்டி, ஆத்தூர், கலிமந்தையம், வேலாயு தபுரம், கொசவ பட்டி, மார்க்கம்பட்டி இடையகோட்டை, சின்னக் களையம் புத்தூர், சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.9லட்சத்து 2ஆயிரத்து 96 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர்களிடம் 55ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டது.

    மதுரை மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக மின் திருட்டில் ஈடுபட்டதாக 9 லட்சத்து 57 ஆயிரத்து 96 ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

    மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் 94430-37508 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பேரூராட்சி இணைந்து உதவி பொறியாளர் உஷாராணி தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை மற்றும் ஜவுளி உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் என 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    இதற்காக ரூ.3 ஆயிரத்து 600 வரை அபராதம் விதித்தனர். அனைத்து வியாபாரிகளுக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்து வோருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றியை பெற்றபோதிலும், குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தாமதமாக பந்து வீசியதாக ஆர்சிபி கேப்டன் டூ பிளிசிஸ்க்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ‘பயோ மைனிங்’ முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
    • பொது இடத்தில் குப்பைகளை தீ வைத்து எரித்தாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.

    இந்த 2 இடங்களிலும் கடந்த 20 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு அபாயமும் உருவானது.

    இதற்கு தீர்வுகாணும் வகையில் 'பயோ மைனிங்' முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. பெருங்குடியில் 34.02 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பைகள் குவிந்துள்ளன. இது ரூ.350.65 கோடியில் 'பயோ மைனிங்' முறையில் தரம் பிரிக்கப்படுகிறது.

    கொடுங்கையூரில் 350 ஏக்கர் பரப்பளவில் 70 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பைகள் குவிந்துள்ளன. இங்கு ரூ.700 கோடி செலவில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் இங்கு நேரடியாக கட்டிட கழிவுகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக சென்னையில் பெரும்பாலானோர் நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், கால்வாய்களில் கட்டிட கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சாலை ஓரங்களில் கொட்டுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் சென்னையில் நீர்நிலைகள், நீர் வழித் தடங்களான ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில் சென்னையில் நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அதிகபட்சமாக ரூ.5000 வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. 1 டன்னுக்கு மேல் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். 1 டன் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    பொது நிகழ்ச்சி நடத்தி சுத்தம் செய்யாமல் இருத்தல், பெரு நிறுவனங்கள் குப்பையை தரம் பிரிக்காமல் போடுதல் ஆகியவற்றுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    மீன், இறைச்சி கழிவுகளை பொது இடத்தில் கொட்டினாலும், பொது இடத்தில் குப்பைகளை தீ வைத்து எரித்தாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    மேலும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் போலீசார் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுப்பார்கள், வாகனங்களும் சிறைபிடிக்கப்படும். இந்த நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து எடுப்பார்கள்.

    மேலும் நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக சென்னையில் கட்டிட கழிவுகளை கொட்ட மண்டல வாரியாக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 15 மண்டலங்களிலும் இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அந்தந்த வார்டு என்ஜினீயர்கள் அனுமதியுடன் பொதுமக்கள் கட்டிட கழிவுகளை கொட்ட வேண்டும்.

    இந்த விதிகளை மீறுவோர் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

    • அனைத்து பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.
    • சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகரில் சில பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மேலும் மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாதாக்கோட்டை சாலை குழந்தை இயேசு கோவில் அருகில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.

    இதில் கண்டறியப்பட்ட பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன.

    தொடர்ந்து அகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை அந்தந்த பஸ்களின் டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்டன.

    அப்போது டிரைவர், கண்டக்டர்களிடம்

    ஏர்ஹாரன்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எடுத்துக் கூறினார்.

    மேலும் முதன்முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கிறேன்.

    நாளையில் இருந்து ஏர்ஹாரன் உள்ள பஸ்களில் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    இதேபோல் தஞ்சை நகரில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி கண்டறியப்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.

    • மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.20.98 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • விருதுநகர் மின்பகிர்மான வட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    மதுரை

    மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், விருது நகர் மின்பகிர்மான வட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    கோவிலாங்குளம், தொட்டி யங்குளம், வட பாலை, தென்பாலை, திருச்சுழி, அரசகுளம், மேல கள்ளன்குளம், திம்மாபுரம், காஞ்சநாயக்கன்பட்டி, தம்பி பட்டி, தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், தச்சநேந்தல், ரெட்டியாபட்டி, வி.கரிசல்குளம், தெற்கு காரியாபட்டி, வடக்கு காரியா பட்டி, கீழராஜ குலராமன், அசிலாபுரம் ஆகிய பகுதிகளில் 24 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.19 லட்சத்து 57 ஆயிரத்து 804 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் அபராதம் பெறப்பட்டது.

    மதுரை மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக மின் திருட்டில் ஈடுபட்டதாக ரூ.20 லட்சத்து 98 ஆயிரத்து 804 அபராதம் பெறப்பட்டுள்ளது.

    மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால், மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் செல்போன் எண் 94430 37508-ல் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது
    • மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தொகுதி அமைப்பாளர் பன்னீர் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய பொரு ளாளர் சம்பத், ஒன்றிய துணை செயலாளர்கள் கண்ணன், ஜானகிராமன், செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் நிர்வாகிகள் குணத்தொகையண், பால முருகன், தமிழரசன், அம்பேத், சக்திமுருகன், மாரிமுத்து, லிங்கேஷ், சிவசக்தி, பிரகாஷ், பழனி நாதன் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற ஏப்ரல் 14 -ந் தேதி கடலூரில் நடைபெறும் ஜனநாயகம் காப்போம் பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது. கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அனைத்து வாக னங்களையும் புதுச்சேரி போலீசார் ஒரு தலை பட்சமாக பிடித்து அபராதம் விதிப்பதை கண்டித்து முள்ளோடையில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
    • அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

    மதுரை

    மதுரை-நத்தம் சாைலயில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பா.ஜ.க. நிர்வாகிகள் பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக பா.ஜ.க. சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையும் மீறி பா.ஜ.க. நிர்வாகிகள் வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.1,500 வீதம் அபராதம் விதித்தனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • எந்தவிதமான தகவலும் கூறாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக தெரிவித்துள்ளது

    நாகர்கோவில் :

    தக்கலை அருகே உள்ள குமாரகோயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார் வில்லுக்குறி யிலுள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் நகைக் கடன் எடுத்திருந்தார்.

    அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக எதிர்தரப் பினரை தொடர்பு கொண்ட போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அசல் மற்றும் வட்டியினை செலுத்தி நகைகளை திருப்பி கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். ஆனால் நுகர்வோருக்கு எந்த வித அறிவிப்பும் கொடுக்காமல் அடகு வைத்த நகைகளை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வ தாக தெரிய வந்துள்ளது.

    உடனே மனுதாரர் நகையை திருப்ப எவ்வளவு பணம் செலுத்த வேண்டு மென கணக்கு விபரம் தருமாறு நேரில் சென்றுள் ளார். ஆனால் அவரை அலைக்கழித்ததுடன் கணக்கு விபரத்தை கொடுக்கவில்லை. அதோடு எந்தவிதமான தகவலும் கூறாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு சேவை குறைபாடு என்பதால் நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகி யோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.5 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், மேலும் அடகு தொகையை பெற்றுக் கொண்டு நகைகளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டுமென உத்தர விட்டனர்.

    • போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
    • மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை கே.புதூர் கற்பக விநாயகர் காலனியை சேர்ந்தவர் மைதீன் மதார். இவருக்கு சுந்தர்ராஜன்பட்டியில் ஒரு வீடு உள்ளது.

    அதே பகுதியைச் சேர்ந்த முகமது யாகூப், முகமது அனிபா ஆகியோர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மூலம் மைதீன் மதார் வீட்டுக்கான மின் இணைப்பு பெற்றதாக தெரிகிறது.

    இது தொடர்பாக மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும், அவருக்கு நிவாரணமாக மின்வாரிய அதிகாரிகள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    • வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.
    • வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா ஓவேலி வனச்சரகம் புன்னம்புழா ஆற்றுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.

    இதை தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 45), மணிகண்டன் (40) மற்றும் தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்த சுதாகரன் (36) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரக யுவராஜ்குமார் கைதான 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார்.

    • விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர்.
    • ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்ப்பட்டுள்ளது

     காங்கயம் :

    காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, முத்தூர் பிரிவு சாலை, சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, தாராபுரம் சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம் பிரிவு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் நகரில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையிலும், தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உட்பட, பல்வேறு விதிகளை மீறியதாக, 1,197 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்ப்பட்டுள்ளது.இந்த தகவலை காங்கயம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

    ×