search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129867"

    • சசிதரூர் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி இருந்தனர்.
    • காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோர் 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

    வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருகிற 22-ந்தேதி வெளியாகுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வாக்காளிக்க இருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. சசிதரூர் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி இருந்தனர்.

    அதில் கட்சியின் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்று அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வருகிற 8-ந் தேதி வெளியிடப்படும் 9 ஆயிரம் பேர் கொண்ட பிரதிநிதிகள் (வாக்காளர்) பட்டியலை பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மது சூதனன் மிஸ்திரி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக சசிதரூர் உள்ளிட்டோருக்கு மதுசூதனன் மிஸ்திரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தலைமை தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது, தேர்தலில் வாக்களிக்க உள்ள ஒட்டு மொத்த பிரதிநிதிகளின் பட்டியலை பெற்றுக் கொள்ள முடியும்.

    அந்த பட்டியலில் இருந்து தங்களுடைய வேட்பு மனுவில் கையொப்பமிடுவதற்கான 10 ஆதரவாளர்களை போட்டியாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த பதிலால் திருப்தி அடைந்து இருப்பதாக சசிதரூர், கார்த்தி சிதம்ரம் ஆகியோர் அந்த கடிதங்களை தங்களின் டுவிட்டர் பக்கத்தில் இணைத்து பதிவிட்டுள்ளனர்.

    • 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் முடிகிறது.
    • 66வது மகாசபை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கமான சைமாவில் 6 நிர்வாக பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் முடிகிறது.கடந்த 2ந்தேதி கூடிய செயற்குழுவில் தற்போது உள்ள நிர்வாகிகளே, 2022 - 2025ம் ஆண்டில் பதவியில் தொடரலாம் எனவும், உறுப்பினர் யாரேனும் தெரிவித்தால் சங்க விதிமுறைகள்படி தேர்தல் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.வருகிற 29ந்தேதி மாலை 4:30 மணிக்கு, ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அரங்கில் 66வது மகாசபை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலை தவிர்க்கும் சைமாவின் செயற்குழு முடிவு ஒருதரப்பு உறுப்பினர் குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதியவர்கள், இளைஞர்களுக்கு மூத்த நிர்வாகிகள் வழிவிடவேண்டும் என சங்க தலைமையை வலியுறுத்தி தேர்தலுக்கு ஆயத்தமாகிவருகின்றனர். எதிர்ப்போருக்கு பதவி வழங்கி தேர்தலை தவிர்ப்பதற்காக அமைதி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் 7 நிர்வாக பதவி,20 செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி தேதி. இந்தநிலையில் கே.எம். நிட்வேர் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு அனைத்து நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 27 பேர் திரண்டு வந்து சங்க அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம், துணை தலைவருக்கு பெஸ்ட் கார்ப்பரேஷன் ராஜ்குமார், எஸ்.என்.க்யூ.எஸ்., இளங்கோவன், பொதுச்செயலாளருக்கு எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் திருக்குமரன், இணைச் செயலாளருக்கு சில்வின் நிட் பேஷன் சின்னசாமி, ஈஸ்டன் குளோபல் கிளாத்திங் குமார் துரைசாமி, பொருளாளர் பதவிக்கு ராயல் கிளாசிக் மில் கோபாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 20 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    தேர்தல் குறித்து ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகள் ஒரு தலைமையின் கீழ் சங்க நிர்வாகம் செயல்பட்டு வந்தது.விதிமுறைப்படி தற்போது புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. கே.எம்., நிட்வேர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு சங்கத்தின் அனைத்து பதவிகளுக்கும் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 6 ஆண்டுகளாக பதவி வகித்தோர் தற்போதைய தொழில் சூழல் உணர்ந்து தேர்தலில் போட்டியை தவிர்க்கவேண்டும் என்றார்.

    • பல இடங்களில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் மட்டும் பெயரளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டது.

     பல்லடம் :

    கோவையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக, முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து காரில் ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 15 அமாவாசைகள் கடந்துவிட்டன. மீதம் 45 அமாவாசைகள்உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற ஆய்வுக்குழு போடப்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்கள் .ஆனால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.குழுக்களை அமைத்து மக்களை ஏமாற்றுகின்ற வேளையில் அரசு ஈடுபட்டுள்ளது என்று எண்ணத் தோன்றுகின்றது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம், கேஸ் சிலிண்டர் வாங்க ரூ. 100 மானியம் திட்டம், கல்வி கடன் ரத்து இது போல பல திட்டங்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அவை யாவும் நிறைவேற்றப்படவில்லை .முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று சொன்னார்கள் . ஆனால் பல இடங்களில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல்,விலையை பல்வேறு மாநிலங்களில், மாநில அரசாங்கங்களால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பெயரளவுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டது. மக்கள் பயன்பெறும் வகையில் விலை குறைப்பு செய்யப்படவில்லை. கேட்டால் நிதி நிலை சரியில்லை என்கிறார்கள் . மக்கள் பயன்படக்கூடிய எந்த திட்டமும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. சொத்து வரியும் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி,. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம். எஸ். எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன், மாவட்ட அவைத்தலைவர் சிவாச்சலம், பொருளாளர் அரிகோபால், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர்கள் யூ.எஸ். பழனிச்சாமி, காட்டூர் பிரகாஷ், பல்லடம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி,மற்றும் பானுபழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் பதவியேற்கின்றனர்.
    • 6 ஆண்டுகளாக ராஜாசண்முகத்தை தலைவராக கொண்டு ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் 1,168 பேரை உறுப்பினராக கொண்டு செயல்படுகிறது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம். இந்த சங்கத்தில் தலைவர், 2துணை தலைவர், பொதுச்செயலாளர், 2 இணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 7 நிர்வாக பதவி, 20 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் பதவியேற்கின்றனர்.

    கடந்த 2016 மற்றும் 2019 தேர்தல்களில் வெற்றி பெற்றதால், 6 ஆண்டுகளாக ராஜாசண்முகத்தை தலைவராக கொண்டு ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.கடந்த 2019ல் தேர்வான நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. புதிய நிர்வாகம் அமைவதற்காக சங்க தேர்தல் நடத்தவேண்டியுள்ளது. இதுகுறித்து முடிவு செய்வதற்காக, ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு, அப்பாச்சி நகரில் உள்ள சங்க அரங்கில் கூடியது. சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில் 2022-2025க்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் செப்டம்பர் 30-ந் தேதி சங்க தேர்தல் நடத்துவது, அன்று மாலை 32வது பொதுக்குழு கூட்டம் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஓட்டுப்பதிவு மற்றும் பொதுக்குழு கூட்டம் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்--டீ கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைமுறை தொடர்பான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    • வரும் தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
    • கரூரில் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றார்

    கரூர்:

    2024 மற்றும் 2026ம் ஆண்டு தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக திகழும்

    என விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

    கரூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட விஜயபிரபாகரன் பேசியதாவது:

    ஒரு ஓட்டுநர் வேலைக்குக்கூட தகுதி, திறமை குறித்த ஆலோசித்த பிறகு பணியை வழங்குகின்றனர். நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு என்ன அனுபவம், தகுதி, திறமை உள்ளது என்பதை மக்கள் ஆராய்ந்து பார்த்து அரசியலில் வாய்ப்பு வழங்கவேண்டும். சாதாரண தொண்டனாக உங்கள் முன்னால் நிற்பதற்கு தயாராக இருக்கிறேன். நீங்கள் சரியான நபர் யார் என்று சிந்தித்து அவர்கள் பின்னால் நிற்கவேண்டும்.

    வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தல், வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தே.மு.தி.க. இடம் பெறும் கூட்டணியே வெற்றிப்பெறும் நிலையை நீங்கள் ஏற்படுத்தவேண்டும். இத்தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்றார்.

    • விவசாய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம்
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோதையாறு வடிநில கோட்டத்தில்46 நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங் களுக்கான மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பி னர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையொட்டி ஆட்சி மண்டல தொகுதி வாரியாக 18 வயது நிறைந்த அனைத்து நில உரிமையா ளர்களுமாகிய விவசாய வாக்காளர்களின் விவரம் படிவம் வி மற்றும் வி (ஏ) தமிழ்நாடு 2000-ம் ஆண்டு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் விதிகள் 4 (2)-ன்படி வருவாய் துறை கிராம அலுவலகங்களில் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. படிவம் வி மற்றும் வி (ஏ)-ல் மறுத்தல், சேர்த்தல் மற்றும் நீக்கல் போன்ற திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரி செய்வதற்கு ஏதுவாக விவசாயிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இறுதி வாக்காளர் பட்டியல் படிவம் 9-ல் வெளியிட ஏதுவாக படிவம் வி மற்றும் வி (ஏ)-ல் திருத் தங்கள் செய்ய வேண்டி இருப்பின் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களையோ அல்லது வருவாய் துறை கிராம அலுவலர்களையோ அணுகி உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி சரி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 2521 உறுப்பினர்கள் உள்ளனர்.
    • தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் 15 நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 2521 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் சங்க தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்சிஎம். முருகேசன் தலைமையில் ஒரு அணியினரும், கேபிஆர் என்கிற பி.மூர்த்தி தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிட்டனர். தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் 15 நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    தலைவர் பதவிக்கு எஸ் சி எம். முருகேசன் மற்றும் கே பி ஆர் .மூர்த்தி, செயலாளர் பதவிக்கு முருகேசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கே எஸ் .சுப்பிரமணியம் மற்றும் செல்வராஜ் ஆகியோரும் உப தலைவர் பதவிக்கு ராயல் பிரபு மற்றும் சங்கர் ஆகியோரும் உப செயலாளர் பதவிக்கு லட்சுமி சரவணன் மற்றும் செல்வராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவிக்கு 2 அணியில் இருந்தும் தலா 15 பேர் போட்டியிட்டனர் .

    இது தவிர பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தனியாக ஒருவர் போட்டியிட்டார் . ஆக மொத்தம் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு 31 பேர் அடங்கிய வாக்குச் சீட்டும் 5 பொறுப்புகளுக்கு தனி தனியாக 5 வாக்கு சீட்டுகளும் என ஒவ்வொரு உறுப்பினரும் 20 வாக்குகள் செலுத்த வேண்டி இருப்பதால் வாக்குப்பதிவு செய்ய கூடுதலான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கு இணையாக கடந்த ஒரு மாதமாகவே வாக்கு கேட்பு நடந்து வந்த நிலையில் இரு பிரிவினரும் பலத்த போட்டியில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மகாசபை கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை திருச்செங்கோட்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின்படி கட்சியின் 15-வது பொது தேர்தல் நடந்து வருகிறது.
    • விருப்பமனு மற்றும் மனு கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    திருமங்கலம்

    தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின்படி கட்சியின் 15-வது பொது தேர்தல் நடந்து வருகிறது. இதில் பகுதிகழக தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விருப்பமனுபெறுதல் மற்றும் மனு தாக்கல்செய்தல் நேற்று தொடங்கியது. மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் வடக்கு, தெற்கு, அவனியாபுரம் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கான விருப்பமனு மற்றும் மனு கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன், தேர்தல் ஆணையாளர் ராசாஅருண்மொழி ஆகியோர் கட்சியினரிடம் இருந்து மனுக்களை கொடுத்தனர். திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மனுக்களை பெற்று கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, விமல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுவாமி நாதன், முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகரசெயலாளர் ஸ்ரீதர், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டி, ஈஸ்வரன், சிவா, செந்தாமரைகண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டத்தில் நாங்கள் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறோம்.
    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க. தலைவர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்த்த நிகழ்வு தற்போது நடந்து உள்ளது.

    கோவை

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப் பட்டு உள்ளார்.

    இந்தநிலையில் அவர் சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் அ.தி.மு.க அலுவலக மான இதயதெய்வம் மாளி கைக்கு புறப்பட்டார்.

    வரும் வழியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை- அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்கு நடந்து சென்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். கட்சி அலுவலகத் தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளது மிகப்பெரிய எழுச்சி மட்டுமல்லாமல், தொண்டர்கள் எல்லோரும் கொண்டாடக்கூடிய நிகழ்வாக அமைந்து உள்ளது.

    கடந்த ஒரு ஆண்டாக கோவை மாவட்டத்தில் எந்த பணிகளும் நடக்கவில்லை. எனவே மீண்டும் அத்தனை திட்டங்களும் மக்களுக்கு வர வேண்டும் என்றால் எடப் பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் முடிவு செய்து விட்டனர்.

    அதற்கு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க. தலைவர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்த்த நிகழ்வு தற்போது நடந்து உள்ளது.

    தலைமை நிலைய செயலாளராக என்னை நியமித்து உள்ளனர். இதற்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எனது நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன். கோவை மாவட்டத்தில் நாங்கள் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறோம். எனவே விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் 100-க்கு 100 வெற்றி பெறுவோம். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோதரன், அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ெஜயராம், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் செல்வக்குமார், காலனி ராஜ்குமார், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.
    • காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 -ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் தேவசேனா ராஜேந்திரன். இவர் உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.

    காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    தேர்தலில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா ராஜேந்திரன் மகள் நிலா (வயது22) ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.அவரை எதிர்த்து வேறு எவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக நிலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தராஜ் அறிவித்தார்.

    போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் நிலாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான நிலா 22 வயது உள்ள தமிழகத்தில் மிகவும் குறைந்த வயது ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

    • 16 பதவியிடங்களுக்கு தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.
    • வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாமக்கல்:

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 16 பதவியிடங்களுக்கு தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    20-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 16 பதவிகளுக்கு 50 மனுக்கள் பெறப்பட்டதில் 11 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதில் 5 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

    எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இளநகர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக சுப்பிரமணியம், மாவுரெட்டிப்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக பூங்கொடி கந்தசாமி, கபிலர்மலை ஒன்றியம் சிறுநெல்லிக்கோவில் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக ஜெய்பிரவின், பரமத்தி ஒன்றியம் செருக்கலை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக சுதா சக்திவேல், திருச்செங்கோடு ஒன்றியம் சிறுமொளசி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக கவுரி பிரபாகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

    மீதமுள்ள 11 காலிப்பதவியிடங்களில் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று நடந்தது.

    மாவட்டத்தில் உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினராக தி.மு.க. சார்பாக போட்டியிட்ட உஷாராணி ஜனார்த்தனன் 389 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகம் 3108 ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றார்.

    நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தங்கமணி செல்வகுமார் 1407 ஓட்டுகள் வாங்கி பெற்றார். எருமப்பட்டி வடவத்தூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சகுந்தலா ராமர் 128 ஓட்டுகளுடனும், நாமகிரிபேட்டை மத்துருட்டு ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அங்கமுத்து 182 ஓட்டுகளுடனும், பள்ளிபாளையம் ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெகதீஷ் 190 ஓட்டுகளுடனும், தட்டாங்குட்டை ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நாகராஜ் 648 ஓட்டுகளுடனும் வெற்றி பெற்றனர்.

    இதேபோல் புதுச்சத்திரம் ஒன்றியம் கதிராநல்லூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சண்முகம் 174 ஓட்டுகளுடனும், ராசிபுரம் ஒன்றியம் மேளப்பாளையம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக தாமரைச்செல்வி 138 ஓட்டுகளுடனும், சேந்தமங்கலம் ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக சர்மிளா தமிழ்செல்வனும் வெற்றிபெற்றுள்ளார்கள். வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • மதுரை-விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.
    • விருதுநகர் மாவட்டத்தில் 11 காலியாக இருந்த பதவிகளுக்கு 28 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடந்தது.

    விருதுநகர்

    மதுரை-விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 11 காலியாக இருந்த பதவிகளுக்கு 28 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 9 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி விபரம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி விருதுநகர் யூனியனுக்கு உட்பட்ட அழகாபுரி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 713 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் அழகுத்தாய் 557 வாக்குகளும், முனீஸ்வரி 127 வாக்குகளும் பெற்றனர். 29 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 430 வாக்குகள் வித்தியாசத்தில் அழகுத்தாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதேபோல் வலையப்பட்டி பஞ்சாயத்து தேர்த லில் 729 வாக்குகள் பதிவாகின. இதில் மீனாட்சி 410 வாக்குகளும், முத்து ப்பாண்டி 310 வாக்குகளும் பெற்றனர். 9 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 100 வாக்குகள் வித்தியாசத்தில் மீனாட்சி வெற்றி பெற்றார்.

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமரம் பஞ்சாயத்து 3-வது வார்டு இடைத்தேர்தலில் 129 வாக்குகள் பதிவாகின. இதில் சுரேஷ்குமார் 68 வழக்குகளும், பிருத்யூமன் 51 வாக்குகளும் பெற்ற னர். 10 வாக்குகள் செல்லாத வையாக அறிவிக்கப்பட்டது. 17 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசங்கர நாராயணன் அறிவித்தார். டி.எஸ்.பி. சரோஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    ×