என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுப்பெண்"
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது32). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மரக்காணம் அருகே கீழ்பேட்டையை சேர்ந்த பூரணி (22) என்பவருக்கும் கடந்த 3.2.2017 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பூரணிக்கு பெற்றோர் போதுமான சீர்வரிசை வாங்கி கொடுத்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் பூரணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் ஞானசேகர், கொழுந்தனார் ரகுபதி, மாமியார் செந்தாமரை ஆகியோர் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்தரவதை செய்து வந்ததால் பூரணி இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று ஞானசேகர், ரகுபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர். செந்தாமரையை தேடி வருகிறார்கள். புதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த சம்பவத்தில் திருமண நாளில் கணவர் மற்றும் கொழுந்தனார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருத்தங்கலை சேர்ந்த கணேசன் மகள் லாவண்யா (வயது 23)வுக்கும், வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் லாவண்யா புகார் செய்தார்.
எனக்கு திருமணத்தின் போது 30 பவுன் நகையும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கூடுதலாக 20 பவுன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் கேட்டு கணவர் ராஜமுருகன், அவரது பெற்றோர் ஹரிராம்- விஜயா, கணவரின் சகோதரி மகாலட்சுமி ஆகியோர் சித்ரவதை செய்தனர்.
மேலும், சில நாட்களுக்கு முன்பு கணவர் ராஜமுருகன் தாலியை பறித்துக்கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ராஜமுருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DowryTorture
ஆரல்வாய்மொழி:
நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் வேம்பத்தூர் காலனியைச் சேர்ந்தவர் லதா (வயது 30). இவரது கணவர் யோவிந்த் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது.
கணவர் வெளிநாட்டுக்கு சென்றதால் லதா தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். நேற்று இரவு லதா மற்றும் பெற்றோர் வீட்டில் தூங்கினர். இன்று காலை அவர்கள் விழித்தெழுந்து பார்த்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை , ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகள் அனைத்தும் புதுப்பெண்ணான லதாவுக்கு உரியவை ஆகும். அங்கிருந்த ஒரு ஜோடி கம்மல், ஒரு செயின், 3 மோதிரம், அரசு திருமண உதவியாக வழங்கிய 4 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.
நகைகள் கொள்ளை போனதால் லதாவும், அவரது பெற்றோரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இதேபோல லதா வீட்டின் பக்கத்து வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லதா வீட்டின் அருகே வசிப்பவர் கார்த்திக். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் அவரது மனைவி ஸ்டெபி மற்றும் கார்த்திக்கின் தாயார் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் 2 பேரும் திங்கள் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இரவில் அவர்களது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், வீடு முழுவதும் நகை, பணத்தை தேடியுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. இதனால் சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களை வீட்டு முன்பு கொண்டு வந்து போட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. கொள்ளையர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களா? அல்லது யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செட்டிமூலையை சேர்ந்தவர் வீராசாமி. விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி . இவர்களுக்கு லட்சுமி (வயது 23) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் வீராசாமியின் மகள் லட்சுமிக்கும் திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜேந்திரனுக்கும் (26) கடந்த மே மாதம் 25-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மணமகள் லட்சுமி வீட்டில் விருந்து முடிந்து வீடு திரும்பிய போது, ராஜேந்திரன் லட்சுமியிடம் இருந்து கம்மலை வாங்கி அடமானம் வைத்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அன்று இரவு 11 மணியளவில் மனைவி லட்சுமியை அழைத்து கொண்டு தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களிடம் விட்டு விட்டு ராஜேந்திரன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் லட்சுமி சுமார் 2 மணியளவில் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது தன்னை 2 நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி கணவரிடம் சண்டை போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், ‘‘இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது. சொன்னால் கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டி மனைவியை ராஜேந்திரன் விடிய விடிய தாக்கியதாக தெரிகிறது. மேலும் லட்சுமியின் முகத்தை உரலை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமிக்கு முகம், தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து லட்சுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு பெற்றோர்களும், மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் லட்சுமியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணமான 2-வது வாரத்தில் புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந் தாக்கிய கணவர் ராஜேந்திரன் குறித்து தலை ஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தலைஞாயிறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Tamilnews
* கணவர் குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்படும் விதத்தில் புதுப்பெண்ணின் தலையீடு இருக்கக்கூடாது. தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புதுப்பெண்ணின் குணாதிசயங்களை கணவரின் குடும்பத்தினர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் அது அவளுக்கு பாதகமாகவே அமையும். கணவரை அவருடைய குடும்பத்தினர் வசைபாடுவதாகவே இருந்தாலும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அதிலும் அவருடைய பெற்றோர் மகனின் தவறுகளை கண்டிக்கும்போது அமைதி காப்பதே நல்லது.
* கணவர் வீட்டினர் தன்னை 'என்ன நினைப்பார்களோ' என்று நினைத்து புதுப்பெண் தன்னுடைய இயல்பான சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப் படியே மாற்ற முயற்சித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக்கொடுக்காது. அவள் அவளாகவே இருப்பதுதான் அவளை பற்றி கணவர் குடும்பத்தினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். தனக்கு தெரியாத விஷயங்களை தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கக்கூடாது. அவள் வெளிப்படையாக பேசுவது அவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும்.
* திருமணமான புதிதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும், நேசத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கும் ஆர்வம் காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரை பற்றியும், அவர்களுடைய சுபாவங்கள் குறித்தும் கணவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கணவரே தனது குடும்பத்தில் உள்ள சிலரை பற்றி குறை கூறினாலும், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்புடன் பழக முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே ஒதுங்கி இருக்க முயற்சிப்பது புதுப்பெண்ணை பற்றி தவறான அபிப்பிராயத்தை விதைத்துவிடும்.
* கணவரின் உடன் பிறந்தவர்களிடம் சகஜமாக பழகுவது என்பது சிக்கலான விஷயம்தான். அவர்களும் புதுப்பெண்ணிடம் பழக தயங்கத்தான் செய்வார்கள். அதிலும் நாத்தனாரிடம் நல்ல நட்புறவை ஆரம்பத்திலேயே வளர்த்து கொள்ளாவிட்டால் இருவருக்குமிடையே தவறான புரிதல் உருவாகிவிடும். தோழியிடம் பழகுவது போல சகஜமாக சிரித்து பேசி உறவை வலுப்படுத்தி கொண்டால் அது கடைசி வரை சுமுகமாக நீடிக்கும்.
* கணவர் வீட்டில் இருக்கும் மற்ற பெண்களிடம் குழந்தைகள் மூலமாகவே உறவை வளர்த்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செல விடும்போது அது வீட்டில் உள்ளவர்களுடனும் நெருக்கத்தை அதிகப்படுத்தும். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு உணவு ஊட்டி விடுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது என நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம். சமையல் வேலைகளை பகிர்ந்து கொள்வதும் உறவை மேம்படுத்த உதவும்.
* புகுந்தவீட்டு உறவையும், பிறந்த வீட்டு உறவையும் சரிசமமாக பேண வேண்டும். ஒரேடியாக பிறந்த வீட்டு உறவை பற்றி பெருமை பேசுவதும், புகுந்த வீட்டினரின் செயல்பாடுகளை தனது வீட்டினருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதும் கூடாது. புகுந்த வீட்டினருடன் நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிறந்த வீட்டு உறவை உதாசீனப்படுத்துவதும் கூடாது. இரு குடும்பத்தினரும் உறவை வளர்த்துக்கொள்வதற்கு இணைப்பு பாலமாக புதுப்பெண் செயல்பட வேண்டும்.
* புகுந்த வீட்டினருடன் சுமுக உறவை பேணுவதில் மாமியார்-மருமகள் இடையேயான பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாமியாரை அன்னிய நபராக அணுகுவது அல்லது அவரிடம் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சிப்பதுதான் பிரச்சினையின் தொடக்கமாக அமையும். ஆரம்பத்திலேயே அவரையும் தன்னுடைய குடும்ப உறவுகளில் ஒருவராக பாவிப்பது இடைவெளி தோன்றுவதற்கு இடம் கொடுக்காது. அவரையும் தாயார் ஸ்தானத்தில் வைத்து தக்க மரியாதையுடன் பழக ஆரம்பித்தாலே போதும். உறவு வலுப்பட்டு விடும்.
* புதுப்பெண் கணவருடனான பந்தத்தையும் சுமுகமாக தொடர வேண்டும். அவருடைய அன்றாட நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள், அவருடைய குடும்ப உள் விவகாரங்கள் போன்றவற்றில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அது கணவன்-மனைவி இடையேயான உறவில் பங்கத்தை ஏற்படுத்திவிடும். தன்னுடைய சுதந்திரம் பறிபோய்க்கொண்டிருப்பதாக உணரும் நிலையை கணவருக்கு ஏற்படுத்திவிடக்கூடாது. அதற்காக கணவரின் நடவடிக்கைகளை கண்டும், காணாமல் இருந்துவிடவும் கூடாது. அவருடைய போக்கிலேயே சென்று நிறை, குறைகளை மனம் நோகாமல் எடுத்துக்கூறலாம்.
* குடும்ப பட்ஜெட்டை நிர்வகித்து அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது கணவரின் குடும்ப உறவுகளுக்குள் புகைச்சலையோ, மனக்கசப்பையோ ஏற்படுத்திவிடக்கூடாது. அவர்களுடைய வழக்கமான பழக்க வழக்கங்கள், செலவுகளில் தலையிட முயற்சிப்பது வீண் சச்சரவுகளையே ஏற்படுத்தும். குடும்ப வரவு-செலவுகளில் கணவரிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை மற்றவர்களிடமும் காண்பிக்க நினைப்பது உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.
* கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறும் ஆர்வத்தில் மனதில் தோன்று வதையெல்லாம் அப்படியே கொட்டிவிடக்கூடாது. அது பிரச்சினையில் தானாகவே மாட்டிக்கொள்வதற்கு வழிவகுத்துவிடும். வாழ்க்கைப் பயணத்தில் கூடவே வரும் துணையுடன் மனம் விட்டு பேசுவதற்கு காலங்கள் காத்திருக்கின்றன. பிரச்சினையை உண்டாக்குபவை எவை, அவசியம் பேசிய ஆக வேண்டிய விஷயங்கள் எவை, பேசக்கூடாத விஷயங்கள் எவை என மனத்திரையில் அசைபோட்டு அதன் பிறகு தேவைப்பட்டால் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். அனுசரித்து போவதும், அநாவசிய பேச்சை தவிர்ப்பதும் இல்லறம் என்றும் நல்லறமாக அமைய வித்திடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்