search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆட்சி நடக்கிறது. மக்கள் தி.மு.க. அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய விதிமுறைகளின்படி கலெக்டர் அனுமதி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 23-ந் தேதியன்றுநிச்சயமாக ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் அன்று ஜல்–லிக்–கட்டு நடக்–கும் வாய்ப்பு அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

    • முப்புலிசாமி கோவில் உற்சவத்தையொட்டி ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது.
    • அமைச்சர்கள் மூர்த்தி, பெரிய கருப்பன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்கின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் முப்புலி கோவில் உற்சவத்தை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நாளை நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள் களத்தில் இறங்குகின்றன. ஏராளமான மாடுபிடி வீரர்களும் மாடுகளைப் பிடிக்க முன்பதிவு செய்துள்ளனர்.

    நாளை (11-ந் தேதி) சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி.மூர்த்தி, கே. ஆர்.பெரிய கருப்பன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். முன்னதாக காளைக ளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே களத்தில் இறங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், டேபிள் சேர் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளும் வழங்கப்படு கிறது. பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடு களை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில தலைவர் பி.ராஜசே கரன் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • காளைகள் மற்றும் வீரர்களின் திறமைகளை கூடியிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
    • வீரர்களிடம் பிடிபடாமல் இருந்த காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், பாத்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, திருமலைசமுத்திரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது.

    இன்று மாவட்டத்தில் 3-வது ஜல்லிக்கட்டு தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் நடைபெற்றது. லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடந்த ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் தஞ்சை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர். முன்னதாக கோட்டாட்சியர் ரஞ்சித் ஜல்லிக்கட்டுக்கான விதிமுறைகளை உறுதிமொழியாக வாசிக்க அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து போட்டி தொடங்கியது. 12 சுற்றுக்களாக போட்டி நடத்தப்படுகிறது. முதலில் கோவில் காலை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வந்தன.

    அதனை தயாராக இருந்த வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு திமிலை பிடித்து கொண்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் அகப்படாமல் திமிறி சென்றன. இருப்பினும் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் காளையின் திமிலை பிடித்து அடக்கிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

    காளைகள் மற்றும் வீரர்களின் திறமைகளை கூடியிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

    வீரர்களிடம் பிடிபடாமல் இருந்த காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், பாத்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் முட்டியதில் வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

    விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் போலீசார் செய்திருந்தனர்.

    • மாடுபிடி வீரர்கள் முறையான பரிசோதனைக்குட்பட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்வர்.
    • மாதாக்கோட்டையில் நாளை நடைபெறுவது 3-வது ஜல்லிக்கட்டு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக் கோட்டையில் ஆண்டுதோறும் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நாளை (சனிக்கிழமை ) நடைபெறவுள்ளது.

    காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் முறையான பரிசோதனைக்கு உட்பட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்வர்.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துள்ளது.

    மாதாக்கோட்டையில் நாளை நடைபெறுவது 3-வது ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    • காளைகளும் கால்நடை மருத்துவக் குழுவினர் சோதனையிட்ட பிறகே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது.
    • மாடு பிடி வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சேந்தமங்கலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில் இன்று சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    போட்டியினை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்மாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து வாடிவாசல் வழியாக வெளிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் காட்சிகளை கண்டு களித்தார்.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்தபின் போட்டிகள் தொடங்கப்பட்டது. இதில் திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே விழாக் குழுவினரும், மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    அதே போல் காளைகளும் கால்நடை மருத்துவக் குழுவினர் சோதனையிட்ட பிறகே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. மாடு பிடி வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காளைகள் சீறிப்பாய்ந்து குதித்து களத்தில் நின்று விளையாடியது.
    • மாடுபிடி வீரர்கள் தங்களது முழு திறமைகளை காண்பித்து காளைகளை அடக்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள திருமலைசமுத்திரத்தில் இன்று பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 12 சுற்றுகளாக நடந்து வருகிறது. போட்டியில் வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாமல் இருக்க தென்னைநார்கள் பரப்பப்பட்டு இருந்தன.

    முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீறிப்பாய்ந்து குதித்து களத்தில் நின்று விளையாடியது. ஆக்ரோஷத்துடன் வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்கள் நெருங்கவிடாமல் அவர்களை தூக்கி பந்தாடியது. இருப்பினும் மாடுபிடி வீரர்கள் தங்களது முழு திறமைகளை காண்பித்து காளைகளை அடக்கினர்.

    களத்தில் விளையாடிய காளைகளின் ஆட்டத்தையும், அதனை அடக்கிய வீரர்களின் திறமைகளையும் கூடியிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ரசித்து பார்த்தனர். பலர் தங்களது செல்போன்களில் ஜல்லிக்கட்டை படம் பிடித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அவர்களிடம் பிடிபடாமல் இருந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

    இதில் காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அதிகமாக இருந்த வீரர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிசிக்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் வல்லம் போலீசார் ஈடுபட்டனர்.

    • புதுக்கோட்ைட முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    • இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளை–களை அடக்கிய மாடு–பிடி வீரர்களுக்கும் பரிசு–கள் வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா பூச் சொரிதல் மற்றும் தேரோட் டத்துடன் விமரிசையாக நடைபெறும்.மாசி பெருந்திரு விழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழாவும் அடுத்த மாதம் (மார்ச்) 13-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இந்த பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கவிநாடு கண்மாய் திட–லில் இன்று 60-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடை–பெற்று வருகிறது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழா–வில் 900 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

    போட்டியில் நன்கு பயிற்சி பெற்ற காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு சவால்விடும் வகையில் களத்தில் நின்று விளையாடின. இருந்த–போதிலும் மாடுபிடி வீரர்க–ளின் சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமில்களை பிடித்து அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர்.இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளை–களை அடக்கிய மாடு–பிடி வீரர்களுக்கும் பரிசு–கள் வழங்கப்பட்டன. முன்ன–தாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு விழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.விழாவில் மாவட்ட வரு–வாய் அலுவலர் செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், புதுக் கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் வை.முத்துராஜா, நகர செயலாளர் செந்தில், இளைஞர் அணி சண்முகம் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    • உப்பிலியபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் கடும் போட்டி போட்டனர்
    • காயமடைந்த வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டத்தில் பெரியசூரியூரில் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கிய ஜல்லிக்கட்டின் நீட்சியாக மணப்பாறை, நவல்பட்டு, அளுந்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங் களில் அடுத்தடுத்து தமிழர் களின் பாரம்பரிய விளை–யாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று உப்பிலியபுரத்தை அடுத் துள்ள டி.மங்கப்பட்டிபுதூ–ரில் இன்று 65-வது ஜல்லிக்கட்டு விழா கோலா–கலமாக நடைபெற்று வரு–கிறது. இதில் பங்கேற்ப–தற் காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபி–டித்து 650 காளைகளுக்கும், 200 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.திருச்சி மட்டுமின்றி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து காளை–கள் கொண்டு வரப்பட்டு போட்டியில் கலந்து–கொண் டன. இதில் முதலில் கோவில் காளை அவிழ்ந்து விடப்பட்டது. பின்னர் பதிவு செய்யப்பட்ட காளை–கள் ஒன்றன்பின் ஒன்றாக களமிறங்கின.நன்கு பயிற்சி பெற்ற காளைகள் களத்தில் நின்று விைளயாடி பார்வையா–ளர்களை வெகுவாக கவர்ந் தன. அதேபோல் போக்கு காட்டிய காளைகளின் திமில்களை பிடித்து அடக் கிய மாடுபிடி வீரர் களை ரசிகர்கள் கைதட்டி பாராட்டி ஆராவா–ரம் செய்தனர். இதில் சிறந்த காளைகள் மற்றும் காளை–யர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள் ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதையொட்டி முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஷ்மின், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தொட்டியம் இன்ஸ்பெக்டர், முத்தையன், முசிறி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், முசிறி அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் காவேரி, உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் 120 போலீசார் பாதுகாப்பு பணியினில் ஈடுபட்டனர்.அதேபோல் காயமடைந்த வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


    • ஜல்லிக்கட்டு போட்டியை காண திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூடியதால் மறவபட்டியில் திருவிழா கோலம் பூண்டது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியில் 200 ஆண்டுகள் பழமையான பெரிய அந்தோணியார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டு 120 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    போட்டியை விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் மிட்டல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதற்கு பிறகு போட்டி தொடங்கியது. வாடிவாசல் வழியாக வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். ஆனால் பல காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் நின்று விளையாடியது. மேலும் சில காளைகள் தன்னை அடக்க வந்த வீரரை தூக்கி பந்தாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், சைக்கிள், செல்போன் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    போட்டியை காண திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூடியதால் மறவபட்டியில் திருவிழா கோலம் பூண்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    காளைகள் தாக்கியதில் காயமடைந்த வீரர்களுக்கு மைதானத்தின் அருகிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • திருச்சி அளுந்தூரில் ஜல்லிக்கட்டில் களமாடிய காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்
    • இதில் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 207 மாடு–பிடி வீரர்கள் கலந்து கொண்ட–னர்.

    ராம்ஜிநகர்:

    திருச்சியை அடுத்த மணி–கண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்தில் தானா முளைத்த மாரியம் மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சேலம், சிவ–கங்கை ஆகிய மாவட் டங் களில் இருந்து சுமார் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 207 மாடு–பிடி வீரர்கள் கலந்து கொண்ட–னர். போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனி–யாண்டி தொடங்கி வைத்தார். இதில் பிடிபடாமல் களத்தில் நின்று விளையா–டிய மாடுகளுக்கும், மாடு–களை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு கட்டில், குளிர் சாதன பெட்டி, எல்இடி டி.வி., பீரோ உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கும் சிறந்த ஜல்லிக்கட்டு காளைக் கும் சிறப்பு பரிசுகள் வழங் கப்பட்டது. இப்போட்டியில் 3 மாடு–பிடி வீரர்கள், 3 பார்வை–யாளர்கள், 2 மாட்டின் உரிமையாளர்கள் காயம் அடைந்தனர். அவர்க–ளில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்து–வம–னைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி போலீஸ் ஏ.டி.எஸ்.பி. குத்தலிங்கம் திரு–வெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையில் 100-க்கும் மேற்ப்பட்ட போலீசார் செய்து இருந்த–னர். விழாவிற்கான ஏற்பா–டு–களை கிராம பட்டை–யதார்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள், விழா குழு–வினர் செய்திருந்தனர்.

    • மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது
    • 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெரிய அணைக்கரைப்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், மணப்பாறை போலீஸ் துணை சுப்பிரண்ட் ராமநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். சிறப்பு திருப்பலி நிறைவேற்றிய பின் வாடிவாசலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது.

    சுட்டெரிக்கும் வெயிலில் காளையர்களை காளைகள் விரட்டி அடிக்க, காளைகளை வீரர்கள் விடாமல் பிடிக்க என போட்டியில் களமே அதிர ஆர்வத்தில் பார்வையாளர்கள் உற்சாகமடைந்ததனர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், – வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. போட்டியில் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    போட்டியில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ராமநாதன்(மணப்பாறை), ஜாஸ்மீன் (முசிறி) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மணிகண்டம் அருகே அளுந்தூரில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது
    • போட்டியில் சுமார் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் 207 பேர் கலந்து கொள்கின்ற–னர்

    ராம்ஜிநகர்

    திருச்சி மாவட்டம் மணி–கண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தானா முளைத்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடை–பெறுவது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் நாளை மறுநாள் (19-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) அரசு அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை மதுரை, திண்டுக்கல், சேலம், சிவ–கங்கை ஆகிய மாவட்டங்க–ளில் இருந்து சுமார் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் 207 பேர் கலந்து கொள்கின்ற–னர். போட்டியில் தங்க காசு, வெள்ளி காசு, கட்டில், குளிர்சாதன பெட்டி, எல்இடி டி.வி., பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த ஜல்லிக்கட்டு காளை–களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகரன், கால்நடை உதவி இயக்குனர் கணபதி பிரசாத், நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மனோகர் ஆகியோர் வாடி–வாசல் மற்றும் ஜல்லிக் கட்டு போட்டிக்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிட்டனர். விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பட்டைய–தார்கள் மாரிமுத்து, தங்கையன், அண்ணாவி, சங்கர், நவீன், சசிகுமார், லட்சு–மணன், நரசிம்மன், ஊராட்சி மன்ற தலைவர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் பன்னீர், முன்னாள் துணைத் தலைவர் ஐயப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


    ×