search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர்
    • போட்டியில் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

    மணப்பாறை:

    தை மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் உள்ள வாடிவாசல்கள் அனைத்தும் களை கட்ட தொடங்கிவிடும். அந்த அளவுக்கு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டிகள் பிரப–லம் அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதற்கு அடுத்த–படியாக திருச்சி மாவட்டம் உள்ளது. பெரியசூரியூரில் தொடங் கிய ஜல்லிக்கட்டின் தொடர்ச்சியாக மணப்பாறை பகுதியில் ஆவாரங் காடு, கருங்குளம், பொத்தமேட்டுப்பட்டி, என்.பூலாம்பட்டியில் களை– கட்டியது. இதில் ஆயிரக்கணக்கான பயிற்சி பெற்ற காளைகள் களமாடி பார்வையாளர்களை பெரி–தும் கவர்ந்தது. நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில், காளையர்களும் மாடுகளை அடக்கி மழையில் நனைந்தனர். அந்த வரிசையில் இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோனியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதலில் வாடிவாசலில் இருந்து வழக்கப்படி செவ–லூர் சின்னாக் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப் பட்ட காளைகள் வாடிவாச–லில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது. அப்போது காளையர் களை காளைகள் விரட்டி அடிக்க விரட்டி அடித்த காளைகளை வீரர்கள் விடாமல் பிடிக்க என காளையா? காளையர்களா? வெற்றி யாருக்கு என்ற போட்டியில் களமே அதிர்ந்தது.ஜல்லிக்கட்டு காளைக–ளுடன் மல்லுக்கட்டிய வீரர்களின் ஆவேசத்தை ரசித்த பார்வையாளர்களின் ஆரவாரம். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்க–ளுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், – வெள்ளி நாணயங்கள், என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப் பட்டது. போட்டியில் காய–மடைந்த–வர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித் குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ராம–நாதன் தலைமையில் ஏரா–ளமான போலீசார் பாது–காப்பு பணியில் ஈடுபட்ட–னர்.


    • காளையர்களை காளைகள் விரட்டியும், துரத்தியும் மிரட்டின.
    • களத்தில் விளையாடிய காளைகளை வீரர்கள் விடாமல் திமிலை பிடித்து அடக்க போராடியது அதிர வைத்தது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த என்.பூலாம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தமிழ்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது.

    அப்போது காளையர்களை காளைகள் விரட்டியும், துரத்தியும் மிரட்டின. இருந்தபோதிலும் களத்தில் விளையாடிய காளைகளை வீரர்கள் விடாமல் திமிலை பிடித்து அடக்க போராடியது அதிர வைத்தது. இதனால் பார்வையாளர்களின் ஆராவாரம் கரைபுரண்டு உற்சாகமடைந்தது.

    இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    போட்டியில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித் குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கலப்பின மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது.
    • பொதுமக்களும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி அருகேயுள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார்-பிரியங்கா, இவர்களுக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    திருமண விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தமிழகத்தில் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு திருமணத்தை நடத்தினர்.

    கலப்பின மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது. இதனால் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் குறைந்த அளவே உள்ளது.

    இதனை பாதுகாக்கும் வகையில் காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று எங்கள் திருமணத்திற்கு முன்னதாகவே முடிவு செய்தோம்.

    அதன்படி எங்கள் திருமணத்தின்போது நாங்கள் பாசமாக வளர்த்துவரும் ஜல்லிக்கட்டு காளை, பசு மாடுகளுக்கு பூமாலை அணிவித்து குங்குமத் திலகமிட்டு மரியாதை செலுத்திய பிறகு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

    மேலும் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் விவசாயத்துடன் சேர்த்து நாட்டு மாடுகளை வளர்த்து விவசாயத்தை பெருக்கி நமது பாரம்பரியத்தை காத்திட வேண்டும்.

    அதுமட்டுமின்றி இளைஞர்களும். பொதுமக்களும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜல்லிக்கட்டில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளை காண சுமார் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியை அடுத்த கருங்குளத்தில் புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    முதலில் கோவில்காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது.

    அப்போது திடகாத்திரமாக கம்பீரப்பார்வையோடு வெளியே வந்த காளைகள் தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் கூட நெருங்கவிடாமல் பந்தாடியது. இருப்பினும் அருகில் நெருங்கிய வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதுமட்டுமின்றி அரட்டி மிரட்டிய காளைகளையும் வீரர்கள் மல்லுக்கட்டி திமிலை இறுகப்பற்றி அணைத்து வெற்றி பெற்றனர்.

    இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பிரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், கிப்ட் பாக்ஸ் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் கண்டுள்ளனர். போட்டியில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவமுகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசல் வழியாக துள்ளிக் குதித்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர். சுமார் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் என மூன்று சுற்றுகளாக பங்கேற்று வருகின்றனர். வீரர்கள் மற்றும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு உறுதிமொழி ஏற்ற பிறகு போட்டியில் பங்கேற்க வருவாய்த்துறை அனுமதித்தனர்.

    அனுமதிக்கப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வெளியே வந்த காட்சி ஜல்லிக்கட்டு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடங்க மறுக்கும் காளைகளை வீரர்கள் லாவகமாக அடக்கி தங்களது திறமையை வெளிக்காட்டினர். அதேபோல் காளைகளும் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் களமாடியது.

    போட்டியில் வென்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு, ரூ.5000 ரொக்கபரிசு, அண்டா, பீரோ, கட்டில் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண சுமார் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர்.

    • ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் இன்று காலை பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
    • பல்வேறு ஊர்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் விடப்பட்டது. இந்த காளை களை அடக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் இன்று காலை பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல், கரூர்,கள்ளக்குறிச்சி பெரம்பலூர்,உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் விடப்பட்டது. இந்த காளை களை அடக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கிவைத்தார். போட்டியை திரளானோர் பார்த்தனர். முன்னதாக எருதுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதன் பிறகே எருதுகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

    இந்தாண்டு முதன்முறை யாக ஜல்லிக்கட்டு போட்டியை காண பொது மக்களிடம் ரூ 300 பெற்றுக் கொண்டு காலரியில் அமர்ந்து பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

    மற்ற பொதுமக்கள் ஓரமாக நின்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை கூலமேடு, ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    • மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.
    • இதையொட்டி, சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத் தலைவர் மணிகண்டன் தலைமையில், திரளான இளைஞர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குமாரபாளையம், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம் மற்றும் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இதையொட்டி, சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத் தலைவர் மணிகண்டன் தலைமையில், திரளான இளைஞர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளனர்.

    அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் ஜல்லிக்கட்டு விழா சங்கம் செயல்படுகிறது. இச்சங்கம் சார்பில், தமிழக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில், மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வருகிற மார்ச் 3-ந் தேதி, சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்த விழாவில், தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி, ஜல்லிக்கட்டு விழா நடத்த திட்டமிட்டு உள்ளோம். எனவே எங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜல்லிக்கட்டு போட்டியை காண திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    தாடிக்கொம்பு:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி முதன்முறையாக கடந்த 20-ந்தேதி கொசவபட்டியில் ஜல்லிகட்டு நடந்தது.

    2-வது போட்டியாக திண்டுக்கல் அருகில் உள்ள உலகம்பட்டியில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்பேரில் இன்று போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்க 500 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

    மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் வரவழைக்கப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கு 22பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல்பரிசோதனை செய்து போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    காளைகளை பரிசோதிக்க 25 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் வந்திருந்தனர். போட்டிகளை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டதற்கு பின் 25 பேர் கொண்ட குழுவாக மொத்தம் 15 பிரிவு பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

    வாடிவாசலை கடந்து துள்ளி குதித்து ஓடிவந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். வெற்றிபெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், அண்டா, டி.வி, கடிகாரம், செல்போன், தங்கநாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    போட்டியை காண திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த போட்டியில் 4 பார்வையாளர்கள் உள்பட மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் என 15 பேர் படுகாயமடைந்தனர்.

    அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் பெரியதனக்காரர்கள் செய்திருந்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேர் உயிரிழந்தனர்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர்களில் 3 பேர் மாடு முட்டி படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கே.ராயவரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த கணேசன், சிராவயல் ஜல்லக்கட்டில் உயிரிழந்த பூமிநாதன், தடங்கம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த சிறுவன் கோகுல் ஆகியோரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என்ற பெற்றோரின் கதறல் கண்போர் கண்களை குளமாக்கியது.
    • குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு பார்க்க செல்லும் பெற்றோர் குழந்தைகளை தங்களது கவனத்திலிருந்து தவறவிட்டால் என்ன மாதிரியான துயரங்கள் நேரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான் தலைமை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 2-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடங்கம் தனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்தபடி வந்தன. காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். பல காளைகள் தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட்டு பிடிபடாமல் அசுர வேகத்தில் ஓடின.

    காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் பாலக்கோடு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூக்கடை வியாபாரி சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் ஜல்லிக்கட்டை பார்க்க வந்துள்ளார்.

    அவரது மகன் கோகுல் (வயது 14) பார்வையாளர் கேலரியில் நின்று காளைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் காளைகளை அருகில் சென்று பார்க்கும் ஆர்வத்தில் பார்வையாளர் கேலரியிலிருந்து இறங்கிய கோகுல் காளைகளை வாகனத்தில் ஏற்றும் இடத்திற்கு சென்று வேடிக்கை பார்த்தார்.

    அப்போது திடீரென ஒரு மாடு மிரண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோகுலை முட்டியது. இதில் வயிற்றில் கொம்பு குத்தி படுகாயம் அடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவனது உடலை பார்த்து தந்தை சீனிவாசன், தாய் கவுரம்மாள் ஆகியோர் கதறி அழுதனர். மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என்ற அவர்களது கதறல் கண்போர் கண்களை குளமாக்கியது.

    இந்நிலையில் சிறுவனின் தந்தை சீனிவாசன் கூறுகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் கூட அங்கு இல்லை.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 1 மணி நேரம் தாமதமானதால் எனது மகனை இழந்துவிட்டேன். முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படாமல் இந்த போட்டி நடத்தப்பட்டதால் எனது மகன் உயிர் பறிபோனது என கூறினார்.

    இதையடுத்து கனத்த இதயத்துடன் சிறுவன் கோகுலின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.

    குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு பார்க்க செல்லும் பெற்றோர் குழந்தைகளை தங்களது கவனத்திலிருந்து தவறவிட்டால் என்ன மாதிரியான துயரங்கள் நேரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

    • தடங்கம் கிராமத்தில் நாளை மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
    • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ெதாடங்கி வைக்கிறார்.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் நாளை மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் சுமார் 700 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ெதாடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தொலைக்காட்சிகளில் மதுரையில் மட்டுமே நடைபெறும் ஜல்லிக்கட்டுகளை பார்த்து வந்த நிலையில் தருமபுரியிலும் மக்கள் நேரடியாக பார்பதற்காகவும் தமிழர்களின் வீர விளையாட்டை தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழர்களின் வீர விளையாட்டு நாளை தடங்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியை காண்பதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வருகை தரும் வேளாண் மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தீயணைப்பு துறையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் ஜல்லிக்கட்டு போட்டியை காண தடங்கம் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.
    • காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் அழைத்து வரப்பட்டன. அவற்றுக்கு பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

    இதேபோல் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீரர்கள் உறுதிமொழியுடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

    இதில் மாடுபிடி வீரர்களான மயிலாப்பூரை சேர்ந்த ராபின் (வயது 21), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (24), நத்தத்தைச் சேர்ந்த இந்தியன் (21), பார்வையாளர் அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த கெடி (18), மாட்டின் உரிமையாளரான கோம்பைபட்டியை செல்வராஜ் (18) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதில் செல்வராஜ், இந்தியன் ஆகிய 2 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெவ்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதன் முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    • காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, பீரோ, நாற்காலி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.
    • வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் சீறிப் பாய்ந்து வெளியே வரும் போதும், வீரர்கள் காளைகளை அடக்கிய போதும் ஆரவாரத்துடன் கோ‌ஷங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை அடுத்த திருக்கானூர்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய விழாவில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பதிவு செய்த வீரர்களே அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் 550 காளைகளும், 401 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 12 சுற்றுகளாக போட்டி தொடர்ந்தது.

    சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். ஒரு சில காளைகளின் திமில்கள் வீரர்கள் பிடியில் சிக்கியது. ஆனால் பல காளைகள் திமிறி எழுந்து, யாருடைய கைகளிலும் அகப்படாமல் சீறிப்பாய்ந்து சென்றன. காளைகள் களத்தில் நின்று விளையாடி, வீரர்களை நெருங்கவிடாமல் தூக்கி வீசி பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன. ஆக்ரோஷமாக ஓடி வந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கிய காட்சிகள் சிலிர்ப்பூட்ட வைத்தது.

    காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, பீரோ, நாற்காலி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல் அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. போட்டியை காண தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் காலையிலேயே திரண்டனர். பலர் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே இருந்த உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நின்றும், களத்தில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் வெளிப்புறமாக நின்றபடியும் போட்டியை கண்டு களித்தனர்.

    வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் சீறிப் பாய்ந்து வெளியே வரும் போதும், வீரர்கள் காளைகளை அடக்கிய போதும் ஆரவாரத்துடன் கோஷங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர். பலர் போட்டியை தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் என 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் லேசான அளவில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா முன்னிலையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×