search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130808"

    நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகளாயின் குறைந்தபட்சம் ஆறு நாடுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதியோருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. தகுதி உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் வருகிற பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    அகவிலைபடியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பொங்கல் கருணை தொகை உடனடியாக வழங்க கோரி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    செய்துங்கநல்லூர்:

    அகவிலைபடியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பொங்கல் கருணை தொகை உடனடியாக வழங்கிட வேண்டி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார். செயலாளர் கருப்பசாமி, சுந்தரவள்ளி முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் துரைப்பாண்டியன், சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் பேசினர். முடிவில் அடைக்கலம் நன்றி கூறினார்.
    ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும்நிலையில் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #Pension
    புதுடெல்லி:

    முதியோர், விதவைகள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.

    அந்த ஓய்வூதிய தொகையுடன் மாநில அரசும் தன் பங்குக்கு பணத்தை கூடுதலாக கொடுத்து ஓய்வூதியம் வழங்குவது வழக்கமாக உள்ளது.

    ஆனால் மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை மிகக் குறைவாக இருக்கிது. அதாவது ஒரு நபருக்கு மாதம் ரூ.200 மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. 11 ஆண்டுகளாக இதே தொகையைத் தான் வழங்கி வருகிறார்கள். மேலும் கூடுதலான நபர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவில்லை.

    எனவே ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும், கூடுதல் நபர்களை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


    இந்த வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த விசாரணையின் போது ஓய்வூதியத் தொகை மிகக் குறைவாக இருக்கிறது. மத்திய அரசின் உதவிகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    நாளை மறுநாள் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது மத்திய அரசு சார்பில் பல்வேறு தகவல்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    அதாவது பென்சன் தொகையை உயர்த்துவது, அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு திட்டத்தை விரிவு படுத்துவது போன்ற தகவல்கள் அதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திட்டத்தை விரிவுபடுத்தவது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு ஆய்வுகளை தொடங்கி உள்ளது. தற்போது 3 கோடியே 9 லட்சம் பேர் உதவி தொகைகளை பெற்று வருகிறார்கள். அதை 2 மடங்காக்கி 6 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அது பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தில் ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.

    வருகிற பட்ஜெட்டில் இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக ஆய்வு அறிக்கை பெறப்பட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Pension #CentralGovernment
    முதியோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத்தை கால தாமதம் இன்றி வழங்க தனி நிறுவனம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. #Keralagovernment #SpecialCompanyForPension
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும், பணி ஓய்வு பெற்றவர்கள், முதியோர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல பிரிவினருக்கும் ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியங்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் பயனாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    பல்வேறு காரணங்களினால் மாதாமாதம் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், பண்டிகை நாட்களில் மட்டும் என வழங்கப்படும் நிலை உள்ளது.



    இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியத்தை மாதம் தோறும் தவறாமல் வழங்குவதற்கு என புதிய நிறுவனம் ஒன்றை நிதித்துறையின் கீழ் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியம் வழங்கப்படும் அவல நிலை மாறும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிறுவனமானது முழுவதுமாக மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த முடிவால் ஓய்வூதியத்தை ஆதாரமாக கொண்டு வாழும் பல்வேறு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #Keralagovernment #SpecialCompanyForPension
    மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். #AadhaarCard #aadhaarpension
    புதுடெல்லி:

    மத்திய அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டது. சிம் கார்டு வாங்குவது முதல் அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்துள்ள சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.


    இந்நிலையில், தன்னார்வ நிறுவனங்களுடனான சந்திப்பில் இன்று கலந்துகொண்ட இணை மந்திரி ஜிதேந்திர சிங், பணி ஓய்வு பெற்ற மூத்த மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதில் சிரமம் அடைவதாக தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவை தளர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். #AadhaarCard  #aadhaarpension
    ×