search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடிகள்"

    தமிழக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கி உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamal #makkalneethimaiyam

    கடலூர்:

    கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 ஆண்டுகளாக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கியுள்ளது. அனைத்து கட்சிகளையும் ரவுடி என கூறவில்லை. படித்தவர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். அதன்பேரில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

    40 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் செய்யாததை நான் செய்வேன். தூய்மையான அரசை கொண்டு வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திராவிடம் என்பது 2 கட்சிகள், 3 குடும்பங்களுக்கு சொந்தமானது கிடையாது. நாடு தழுவியது.

    கடலூர் மாவட்டத்தில் நான் 2 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அப்போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரி கிறது. தமிழகத்தில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மறதியாக உள்ளார்கள். அதை போக்க வேண்டும்.

    எல்லோரும் சேர்ந்தால்தான் தூய்மையான அரசியலை கொடுக்க முடியும். என்னைப்போல் மக்களும் மாற்றம் வேண்டும் என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.

    மதுரைக்கு பிரதமர் வந்தபோது ‘மோடி கோ-பேக்’ என்ற வாசகம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது. இது அரசியலுக்காக நடக்கிறது. அரசியல் தீண்டத்தகாதது அல்ல. அரசியலில் இழந்த மாண்பை மீட்க வேண்டும்.

    அனைவரும் சேர்ந்துதான் மது விலக்கை கொண்டு வர முடியும். அரசியல் காரணங்களுக்காக ஏழைகள் ஏழைகளாக உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #kamal #makkalneethimaiyam 

    அண்ணாநகரில் வாலிபர் கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அண்ணா நகர், அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36) ரவுடி. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    ரவுடியாக இருந்த சந்தானம் கடந்த சில மாதங்களாக திருந்தி பெயிண்டிங் வேலை செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சந்தானம் பணி முடித்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சத்யா நகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து சந்தானத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியில் ரவுடிகளாக வலம் வந்தவர்களை சந்தானம் கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் சந்தானம் இருந்தால் ஏரியாவில் மதிப்பு கிடைக்காது என்று எண்ணி அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சின்ன ராமபர்ட், ஜோசப் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஆந்திராவில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடிகள் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி பொது மக்களை தாக்கினர். இதில் 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகர் சேனியம்மன் கோவில் தெருவில் நேற்று இரவு பொது மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் 15 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பொது மக்களிடம் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர். கத்தி, அரிவாளை காட்டி பொது மக்களை மிரட்டி மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ரவுடிகளின் அட்டகாசத்தால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டனர். அவர்கள் ரவுடி கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர்.

    உடனே ரவுடிகள் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி பொது மக்களை தாக்கினர். இதில் 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் உஷாரான ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதில் ஒருவனை மட்டும் பொது மக்கள் விரட்டி பிடித்தனர். அவனுக்கு தர்மஅடி கொடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    விசாரணையில் பொது மக்களிடம் சிக்கிய வாலிபர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாதேஷ் என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரவுடி கும்பலின் தாக்குதலால் 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. தப்பி ஓடிய ரவுடிகள் குறித்து பிடிபட்ட மாதேசிடம் விசாரணை நடந்து வருகிறது.
    அவனியாபுரத்தில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்கும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவனியாபுரம்:

    மதுரை நகரில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சமூக விரோதிகள் தைரியமாக இந்த குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக அவனியாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளான வில்லாபுரம், மீனாட்சி நகர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் பலர் செல்போனை ரவுடிகளிடம் பறிகொடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    எந்தவித பயமும் இல்லாமல் பட்டப்பகலிலேயே மோட்டார் சைக்கிளில் வரும் ரவுடிகள் தனியாக செல்வோரை வழிமறித்து கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்றும் பட்டப்பகலில் செல்போன் பறிப்பு நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    அவனியாபுரம் அருஞ்சுனை நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 18). இவர் நேற்று பத்மா தியேட்டர் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 18 வயதுடைய 3 பேர் திடீரென்று சதீஷ்குமாரை அரிவாளை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.

    ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தைரியமாக ரவுடிகள் குற்றச் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. திருடு போன செல்போனின் மதிப்பு ரூ.21 ஆயிரம் ஆகும்.

    இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டுக்கள் முனியாண்டி, ராஜபாண்டி, இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×