search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோனி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
    • சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.

    இந்நிலையில் கேப்டன் டோனி தனது பயிற்சியை இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்ததை ஒட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    • இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது
    • இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.

    இந்நிலையில் தனது சக வீரர்களுடன் கேப்டன் டோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்சின் பிறந்தநாளை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சிஎஸ்கே அணி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.
    • முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.

    இந்நிலையில் லியோ படத்தில் உள்ள ஒரு மாஸ் நிறைந்த காட்சியை வைத்து டோனிக்கு புது வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவுக்கு அந்த படத்தில் உள்ள சிங்கம் பாடலை பின்னணியாக தயார் செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் வீடியோவில் கூஸ்பம்ஸ் இல்ல.. கூஸ்பம்ஸ் தான் வீடியோவே என பதிவிட்டிருந்தார். 

    • கடந்த ஜூன் மாதம் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.
    • தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 22-ந்தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப் டன் டோனி இந்த சீசனிலும் விளையாடுகிறார்.

    கடந்த போட்டித் தொட ரின்போது அவரிடம் ஓய்வு பற்றி கேட்டபோது, ரசிகர் களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய் வேன் என்று கூறினார். அதன்படி டோனி ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆயத்தமாகி வருகிறார்.

    அவர் கடந்த ஜூன் மாதம் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.

    இந்த நிலையில் டோனி 10 நாளில் பயிற்சியை தொடங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனி தற்போது நன்றாக இருக்கிறார். அவர் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இன்னும் 10 நாட்களில் டோனி வலைப்பயிற்சியை தொடங்குவார். மார்ச் முதல் வாரத்தில் எங்களது பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐ.பி.எல். சீசன் மார்ச் 22-ந்தேதி தொடங்குவதால் அந்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் முதல் முகாமை நடத்துவோம்.

    அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு ஐ.பி.எல். தொடரின் பாதி ஆட்டங்கள் வேறு நாட்டுக்கு மாற்றம் செய்யப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    போட்டி அட்டவணையை வேறு இடத்துக்கு மாற்றுவது பற்றி அவர்கள் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் ஐ.பி.எல். விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித்சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அதிகபட்சமாக தலா 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர்.
    • ஐ.பி.எல். தொடரை எடுத்துக் கொண்டால் 10 அணிகளுமே பலம் வாய்ந்தவையாகும். சிறந்த வீரர்களை தான் தேர்வு செய்துள்ளனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் நடைபெற்றுள்ளன.

    வீராட்கோலியின் ஆர்.சி.பி. (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. 3 தடவை இறுதிப்போட்டியில் தோற்று 2-வது இடத்தை பிடித்தது.

    தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அதிகபட்சமாக தலா 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 தடவையும், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகி யவை தலா 1 முறை சாம்பியன் பட்டன் பெற்றுள்ளன.

    இந்நிலையில் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல ஆர்.சி.பி. அணிக்கு உதவி செய்ய வேண்டும் என்று டோனியிடம் பெங்களூர் அணியின் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ரசிர் இந்த கேள்வியை எழுப்பினார்.

    அந்த ரசிகரின் கேள்விக்கு தோனி பதில் அளித்து கூறியதாவது:-

    அவர்கள் (ஆர்.சி.பி.) மிகவும் நல்ல அணியாகும். உங்களுக்கு அது தெரியும். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை திட்டமிட்ட படி எப்போதுமே சரியாக நடக்காது. ஐ.பி.எல். தொடரை எடுத்துக் கொண்டால் 10 அணிகளுமே பலம் வாய்ந்தவையாகும். சிறந்த வீரர்களை தான் தேர்வு செய்துள்ளனர்.

    சில வீரர்கள் காயத்தால் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. இது வெற்றி வாய்ப்பை பாதிக்கும். நான் ஏற்கனவே கூறியது போல் ஆர்.சி.பி. நல்ல அணிதான்.

    எங்கள் அணியிலும் கவலைப்பட நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எனது அணி குறித்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கிறது. வேறு அணிக்கு என்னால் எப்படி உதவ இயலும். நான் ஆர்.சி.பி.க்கு உதவினேன் என்றால் எங்கள் அணி ரசிகர்கள் எவ்வாறு நினைப்பார்கள்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    ரசிகர் கேள்வி கேட்பதும், டோனி அதற்கு பதில் அளிப்பதுமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
    • அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 398 என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    இந்நிலையில் டோனியின் ரன் அவுட்டுக்கு முகமது சமி பழி திர்த்தார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் களத்தில் நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என இன்று வரை ஏங்காத ரசிகர்கள் இல்லை.

    அந்த நிலையில் நேற்றைய அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டோனியின் ஜெர்சி நம்பர் 7 என்றும் முகமது எடுத்த விக்கெட்டும் 7 என்றும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். 

    • தீபாவளி பண்டிகையை ரிஷப் பண்ட், மகேந்திர சிங் டோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.
    • ரிஷப் பண்ட், டோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.

    டோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வென்று கொடுத்துள்ளார். ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிஷப் பண்ட், டோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்தது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று சென்னை வந்த டோனியை ஆப்கானிஸ்தான் வீரர் சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை ரஷித்கான் அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் உங்களை சந்திப்பதில் எப்போதுமே மகிழ்ச்சி என தலைப்பிட்டுருந்தார்.


    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
    • இவர் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

    இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனியுடன் இணைந்துள்ளார். அதாவது டோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதுதொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அஜித் படம் போனால் என்ன டோனியை இயக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகர் ராம் சரண் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் ராம் சரண் இன்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனியை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன்.
    • டோனி ரெய்னா மட்டும் இடையே வரலனா அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதில் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்.

    அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர். இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
    • இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.


    விக்னேஷ் சிவன் பதிவு

    இந்நிலையில், நடிகர் விக்னேஷ் சிவன் கிரிகெட் வீரர் டோனியுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டோனி, விக்னேஷ் சிவன் டீ- சர்ட்டில் கையொப்பமிடுகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த விக்னேஷ் சிவன், டோனியின் கைகளை பிடித்து முத்தமிடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், பாட்ஷா ஸ்டைலில் டோனிக்கு முத்தம் கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    ×