என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 133489"
- பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது.
- திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடந்தன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் உத்சவ பலி நடைபெற்றது,
அதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடந்தது. அதற்கு முன்னதாக இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்ப சாமியை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பள்ளி வேட்டைக்கு பின் யானை ஊர்வலம் மீண்டும் புறப்பட்டு இரவு 12 மணிக்கு சன்னிதானத்தை அடைந்தது.
திருவிழாவின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பகல் 11.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடக்கிறது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேளதாளம் முழங்க காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் புடை சூழ ஊர்வலம் புறப்படுகிறது. பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சாமி ஊர்வலம் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைகிறது. அங்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.
இதே போல், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு இன்று (புதன்கிழமை) சங்குமுகம் கடற்கரையில் நடைபெறுகிறது.
இதற்காக பத்மநாபசாமி கோவிலின் மேற்கு நடையில் இருந்து மாலை 5 மணிக்கு சாமி ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் விமான நிலையம் வழியாக கடந்து செல்லும் என்பதால் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணிநேரம் திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படும். இதன் காரணமாக மாலை 4 மணி முதல் 9 மணி வரை விமான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதன்கிழமை பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
- புதன்கிழமை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த மார்ச் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
7-ம் திருவிழா நாளான நேற்று வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.பின்னர் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளும், உத்சவ பலி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையிலும் நடந்தது.
மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து ஐயப்பனை தரிசனம் செய்ததோடு நெய்யபிஷேக வழிபாடு நடத்தினர்.
9-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சியும், 10-ம் திருவிழாவான நாளை மறுநாள் (புதன்கிழமை) பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும். விழாவையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- 4-ந்தேதி பள்ளிவேட்டை நடைபெறுகிறது.
- 5-ந்தேதி பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜிவரரூ, மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் கொடிக்கு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
நாளை முதல் கோவிலில் உற்சவ பலியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான ஏப்ரல் 4-ந் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது. மறுநாள் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது. ஆறாட்டு முடிந்த பின்னர் அன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும்.
பங்குனி உத்திர திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே கோவிலுக்கு வர வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மேலும் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
- 5-ந்தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி சபரிமலை கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி ஆராட்டு விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.
விழாவில் இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும்.
9-ம் திருவிழாவான அடுத்த மாதம் 4-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.
- பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
- ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நாட்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும். 10-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.
- 27-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது.
- ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (26-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.இருப்பினும் நாளை வேறு பூஜைகள் எதுவும் நடை பெறாது.
மறுநாள் (27-ந்தேதி) காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.
- 19-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.
- பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை 26-ந்தேதி திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நேற்று கிடையாது. அதே சமயத்தில் கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இன்று முதல் 19-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19-ந் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பின்னர் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9.45 மணிக்கு திருக்கொடியை ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
- தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
- தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் இன்று கிடையாது. அதே சமயத்தில் கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
நாளை (புதன்கிழமை) முதல் 19-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19-ந் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பின்னர் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9.45 மணிக்கு திருக்கொடியை ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
- சபரிமலை மண்டல பூஜையில் கிடைத்த தங்க நகைகள் அனைத்தும் கோவில் ஊழியர்களால் மதிப்பிடப்பட்டு உடனடியாக சபரிமலையில் இருந்து ஆரன்முளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
- மகரவிளக்கு காலத்தில் கிடைத்த சுமார் 180 பவுன் நகைகள் சபரிமலையில் இருந்து ஆரன்முளா பாதுகாப்பு அறைக்கு உடனடியாக கொண்டு செல்லப்படவில்லை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
கோவிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் அளித்த காணிக்கை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதாவது ரூ.370 கோடி வரை காணிக்கை வசூலானது.
இதில் 400 பவுன் நகையும் காணிக்கையாக கிடைத்தது. இவ்வாறு காணிக்கையாக கிடைக்கும் தங்கத்தை கோவில் ஊழியர்கள் உடனடியாக பிரித்தெடுத்து அதனை ஆரன்முளாவில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
சபரிமலை மண்டல பூஜையில் கிடைத்த தங்க நகைகள் அனைத்தும் கோவில் ஊழியர்களால் மதிப்பிடப்பட்டு உடனடியாக சபரிமலையில் இருந்து ஆரன்முளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் மகரவிளக்கு காலத்தில் கிடைத்த சுமார் 180 பவுன் நகைகள் சபரிமலையில் இருந்து ஆரன்முளா பாதுகாப்பு அறைக்கு உடனடியாக கொண்டு செல்லப்படவில்லை. இது பற்றிய தகவல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் காணிக்கையாக கிடைத்த 180 பவுன் தங்க நகைகளை ஆரன்முளா பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டின் திருவாபரண ஆணையாளர் பைஜூ விசாரணை நடத்த உள்ளார். அப்போது நகைகளை பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல தாமதப்படுத்தியவர்கள் யார்? என்பது பற்றிய விபரம் தெரியவரும்.
- இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
- இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் பெற்றனர். இந்த காலங்களில் கோவிலுக்கு ரூ.360 கோடி அளவில் வருமானம் கிடைத்தது.
மகரவிளக்கு பூஜைக்கு பின்னர் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை (13-ந்தேதி) மாசி மாதம் பிறக்க உள்ளதால், மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் நடையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
17-ந்தேதி வரை கோவில் திறந்திருக்கும். இந்த நாட்களில் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 13-ந்தேதி நெய் அபிஷேகம், பூஜைகள் நடைபெற உள்ளன.
- 17-ந்தேதி படிபூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார்.
தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் இல்லை. மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.
வருகிற 17-ந் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
- வருகிற 5-ந்தேதி முதல் நாணயங்கள் எண்ணும் பணி மீண்டும் தொடரும்.
- காணிக்கை உண்டியல்களில் ரூ.20 கோடிக்கும் அதிகமான நாணயங்கள் கிடைத்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்தவர்கள் தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகமாகவே இருந்தது. இதனால் தரிசனத்திற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர்.
அவர்கள் கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை போன்றவற்றின் மூலம் சபரிமலை கோவிலுக்கு இந்த ஆண்டு வருவாய் அதிகரித்தது. அதிலும் சபரிமலை வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் ரூ.351 வருமானம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ஆனந்தகோபன் கூறியதாவது:-
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன்மூலம் இந்த ஆண்டு ரூ.351 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கொரோனாவிற்கு முன்பு சபரிமலை கோவிலில் இந்த சீசனில் ரூ.269 கோடி தான் பெறப்பட்டு இருந்தது. எனவே இந்த ஆண்டு கூடுதலாக ரூ.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதற்கிடையில் காணிக்கை நாணயங்கள் எண்ணும் பணி இன்னும் முடியவில்லை. நான்கில் ஒரு பங்கு மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளது. தொடர்ந்து 70 நாட்களாக நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சோர்வு அடைந்ததால், அவர்களுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாணயங்கள் எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வருகிற 5-ந்தேதி முதல் நாணயங்கள் எண்ணும் பணி மீண்டும் தொடரும். காணிக்கை உண்டியல்களில் ரூ.20 கோடிக்கும் அதிகமான நாணயங்கள் கிடைத்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக எண்ணி முடித்தபிறகு, கோவிலின் வருவாய் மேலும் உயரும்.
கோவிலில் கிடைத்த வருமானத்தில் 40 சதவீதம் செலவுக்கு பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள பணம் வாரியத்திடம் ஓப்படைக்கப்படும். சபரிமலையில் அடுத்த சீசனுக்கு முன்பாக முன்வரிசை வளாகம் நவீனப்படுத்தப்படும். ரோப்வேக்கு நிலம் கொடுப்பதற்கு பதிலாக அடிமாலியில் உள்ள நிலம் வனத்துறைக்கு வழங்கப்படும். வன நிலம் கிடைத்ததும், ரோப்வே அமைக்கும் பணி தொடங்கும். நிலக்கல் பகுதியில் ரூ.15 கோடியில் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்