search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • நேர்மையுடனும் உழைத்திருந்தால் வேலை வாய்ப்பு எப்படி குறைந்திருக்கும்?.
    • உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிந்து விட்டதால், இலவச ரேஷன் முடிந்து விட்டது.

    வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கோல் இந்தியா மற்றும் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் 2020 முதல் 2022 வரை வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதை விளக்கும் வரைபடத்தையும் தமது டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ளார்.

    மேலும் அவர் கூறியுள்ளதாவது:

    இளைஞர்களின் கனவுகள் உண்மைதான், ஆனால் ராஜா (மோடி) வின் வாக்குறுதிகள் பொய்யானவை, அவரது பேச்சுகள் வெற்றுத்தனமானது. நேர்மையுடனும் உழைத்திருந்தால் வேலை வாய்ப்பு பெருகுவதற்குப் பதிலாக எப்படி குறைந்திருக்கும்? உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால், இலவச ரேஷன் முடிந்துவிட்டது. இப்போது தகுதியான கார்டு வைத்திருப்பவர்களுக்கு உத்தரபிரதேசத்தில் இலவச ரேஷன் கிடைக்காது.

    இப்போது ஏழைகளுக்கு ஒரு கிலோ கோதுமை ரூ.2க்கும், ஒரு கிலோ அரிசி ரூ.3க்கும் அரசு ரேஷன் கடைகளில் இருந்து கிடைக்கும். பணவீக்கத்தால் போராடும் நடுத்தர மக்கள் எப்படியாவது தங்கள் செலவைக் குறைத்து வாழ்கிறார்கள், ஏழைகள் இப்போது இரண்டு வேளை சாப்பாட்டுக்கு கூட ஏங்குவார்கள். இலவச ரேஷன் மற்றும் நன்றி மோடிஜி என்ற பெரிய போஸ்டர்கள் மீண்டும் ஒருமுறை இதை நிரூபித்துள்ளன. நண்பர்களின் அரசாங்கம் (மத்திய அரசு) நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 7-ந் தேதி பாத யாத்திரை தொடக்கம்
    • சுற்றுப்பயணம் முழு விவரம் வெளியீடு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    வருகிற 7-ந்தேதி கன்னி யாகுமரியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார். 3570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் 12 மாநிலங்களை கடந்து காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார். ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கு வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசாரும், குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி களும் மேற்கொண்டு வரு கிறார்கள்.

    ராகுல் காந்தி செல்ல உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் ஆய்வு செய் யப்பட்டு வருகிறது.ஏற்க னவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் வந்து ஆய்வு செய்திருந்த நிலையில் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்லக்குமார், விஜய் வசந்த் ஆகியோர் இங்கேயே முகாமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரு கிறார்கள்.

    7-ந்தேதி காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரிக்கு வரும் ராகுல்காந்தி மாலை கன்னி யாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கன்னியா குமரியில் பொதுக் கூட் டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடம் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட உள்ளது.

    7-ந்தேதி இரவு கன்னியாகுமரியில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பாத யாத்திரை தொடங்குகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகா னந்தா கல்லூரி வரை பாதயாத்திரை மேற் கொள் கிறார். அன்று இரவு விவே கானந்தா கல்லூரியில் தங்கும் வகையில் ஏற்பா டுகள் செய்யப்பட்டு வரு கிறது.

    8-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம் வருகிறார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து பொற்றையடி, வழுக்கம் பாறை வழியாக சுசீந்தி ரம் வந்தடைகிறார்.சுசீந்தி ரம் பள்ளியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    பின்னர் மாலை அங்கி ருந்து புறப்பட்டு நாகர் கோவில் சவேரியார் ஆலயம் டெரிக் சந்திப்பு வழியாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியை வந்தடைகிறார். இரவு ஸ்காட் கல்லூரியில் தங்குகிறார். 9-ந்தேதி காலை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்கு கிறார்.

    சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக புலியூர்குறிச்சி செல்கிறார். அங்கு புலியூர்குறிச்சியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியத்திற்கு பிறகு புலியூர் குறிச்சியில் இருந்து மேட்டுக் கடை வழியாக மூளகுமூடு சென்றடைகிறார்.அன்று இரவு மூளகுமூடு சென்மேரிஸ் பள்ளியில் தங்குகிறார்.

    10-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு சாமியார் மடம் சிராயன்குழி வழியாக மார்த்தாண்டம் சென்றடைகிறார். மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பின்னர் மதியத்திற்கு பிறகு அங்கி ருந்து புறப்பட்டு குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு சந்திப்பு வழியாக தலைச்சன் விளை செல்கிறார். அன்று இரவு செருவாரக்கோணம் பள்ளியில் தங்குகிறார்.

    11-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கேரளா மாநிலம் செல்கிறார்.இந்த இடங்களை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொள்ள பாதைகள் இறுதி வடிவம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    • அரசியல் சட்டம்தான் நீதிக்கான போராட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் அளிக்கிறது.

    புதுடெல்லி :

    கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரை குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி விடுதலை செய்தது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்று வெற்று கோஷம் எழுப்புபவர்கள், கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். இது, பெண்களின் மரியாதை, உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில், ''11 கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலையில் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. அரசியல் சட்டம்தான் நீதிக்கான போராட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் அளிக்கிறது. பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    • தனது தாயாரை சோனியா காந்தி சந்திக்க உள்ளார்.
    • சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா வெளிநாடு செல்கின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார்.

    வருகிற 7-ந்தேதி இந்த யாத்திரையை அவர் தொடங்குகிறார். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் 4ந் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்று ராகுல் உரையாற்றுகிறார்.

    இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம் மேற் கொள்ள உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியாகாந்தியுடன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வெளிநாடு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் அவர்கள் எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர். எந்த நாடுகளுக்கு அவர்கள் செல்கின்றனர் என்ற விபரங்கள் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் முன்பு, உடல் நிலை சரியில்லாத தனது தாயாரை சோனியாகாந்தி சந்திப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குமரி மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்தப்பட்டது.
    • இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை 148 நாட்களில் கடந்து காஷ்மீர் சென்று அடைகிறார்.

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    அவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை 148 நாட்களில் கடந்து காஷ்மீர் சென்று அடைகிறார். குமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் அவர் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    இதையொட்டி கன்னியாகுமரியில் ராகுல்காந்தியின் பாத யாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கும் இடங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் தமிழக மேலிட பார்வையாளருமான வேணுகோபால், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி நினைவு மண்டபம் காமராஜர் மணிமண்டபம் பாதயாத்திரை தொடக்க விழா நடக்கும் மைதானமான கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி மற்றும் அவர் பாதயாத்திரை செல்லும் பாதைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, டாக்டர் செல்வகுமார் மாணிக் தாகூர், மயூரா ஜெயக்குமார், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ரூபிமனோகரன், செல்வப்பெருந்தகை, மாநில துணைத்தலைவர் ராபர்ட்புரூஸ், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்தப்பட்டது. எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதி மணி, ஜெயக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை பகுதிகளை அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார்.
    • ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வகையில் ராகுல் காந்தி 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு செல்லும் அவர் நாடு முழுவதும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார் கள். இதையடுத்து இன்று காலை அகில இந்திய செயலாளர் ஸ்ரீவள்ள பிரசாத், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி., செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர். அதற்காக என்னென்ன முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    • நாடு முழுவதும் போதைப்பொருளை மாபியா கும்பல் வினியோகிக்கிறது.
    • ஊடகங்களும், அரசு விசாரணை அமைப்புகளும் மவுனம் சாதிக்கின்றன.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும், இந்த ஆண்டு மே மாதம் ரூ.500 கோடி போதைப்பொருட்களும், ஜூலை மாதம் ரூ.375 கோடி போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

    ஏற்கனவே போதைப்பொருள் பிடிபட்ட நிலையில், அதே துறைமுகத்துக்கு மீண்டும் மீண்டும் போதைப்பொருள் வந்து இறங்குவது ஏன்? குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு உள்ளதா? மாபியா கும்பலுக்கு சட்டம் குறித்த பயம் இல்லையா? அல்லது போதைப்பொருள் மாபியாவுக்கு பா.ஜனதா அரசு ஆதரவு அளிக்கிறதா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒரே துறைமுகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அடுத்தடுத்து பிடிபட்டுள்ளன. ஆனால், ஊடகங்களும், அரசு விசாரணை அமைப்புகளும் மவுனம் சாதிக்கின்றன.

    பா.ஜனதா அரசின் மூக்குக்கு கீழ் இருந்தபடி, நாடு முழுவதும் போதைப்பொருளை மாபியா கும்பல் வினியோகிக்கிறது. அந்த கும்பலுக்கு அரசும் உடந்தையா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் உயிரிழப்பு.
    • 97 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தில் 42 பேர் உயிரிழந்தனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கள்ளச் சாராயம் அருந்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வருத்தம் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் பல பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்களும் தொடர்ந்து மீட்கப்படுவதாகவும், போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு கொடுக்கிறது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் வாழ்ந்த இந்த பூமியில் இது கவலையளிக்கும் விஷயம் என்றும் தமது டுவிட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

    • சோனியாகாந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ராகுல் தலைமையில் காங்கிரசார் போராட்டம்.
    • பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை விஜய்சவுக் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை இழுத்துச் சென்று கைது செய்தனர். ராகுல்காந்தி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடக்கு நீருற்று பகுதி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 6 மணி நேரத்திற்கு பின்னர் ராகுல்காந்தி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி, அக்னிபாத் உள்ளிட்டவை குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களை சிறையில் அடைக்குமாறு இந்த நாட்டின் ராஜா உத்தரவிட்டுள்ளார் என்று பிரதமர் மோடி குறித்து புகார் தெரிவித்தார்.

    பாராளுமன்றத்திற்கு உள்ளே விவாதம் நடத்த அனுமதி அவர்கள் மறுப்பதாகவும், வெளியே எங்களை அவர்கள் கைது செய்கிறார்கள் என்றும் ராகுல் கூறினார்.  தாம் போலீசார் காவலில் வைக்கப்பட்டாலும், மக்களுக்காக குரல் எழுப்புவதை அவர்கள் குற்றம் என்று சொன்னாலும், ஒருபோதும் எங்கள் உறுதிபாட்டை அவர்களால் உடைக்க முடியாது என்றும் ராகுல் குறிப்பிட்டார். 

    • ராகுல் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போன அந்த மூதாட்டி, ராகுலின், தலையை கைகளால் அணைத்து, முத்தம் கொடுத்து கொஞ்சினார்.
    • இந்த காட்சிகளை ராகுலுடன் சென்ற கட்சி நிர்வாகிகள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 16 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி, கடந்த 2 நாட்களாக தொகுதி மக்களை சந்தித்து வருகிறார்.

    வயநாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராகுல் காந்தி, தொகுதி மக்களை அவரவர் பகுதிகளுக்கே சென்று சந்தித்து வருகிறார். இதற்காக அவர் வரும் பாதையில் ஏராளமான மக்கள், பெண்கள், வயதானவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

    அந்த வகையில் வயநாடு பகுதியில் சாலையோரம் உள்ள ஓட்டல் ஒன்றில் வயதான மூதாட்டி ஒருவர் காத்திருந்தார். ராகுல் அந்த வழியாக வந்ததும், அவரிடம் கட்சி நிர்வாகிகள், மூதாட்டி ஒருவர் காத்திருப்பதை தெரிவித்தனர்.

    உடனே ராகுல், காரில் இருந்து இறங்கி அந்த மூதாட்டியின் அருகே சென்றார். அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்ற ராகுல், அங்கு மூதாட்டியுடன் அமர்ந்து உணவு உண்டார். மேலும் அந்த மூதாட்டிக்கு தன் கைகளால் உணவும் வழங்கினார்.

    ராகுல் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போன அந்த மூதாட்டி, ராகுலின், தலையை கைகளால் அணைத்து, முத்தம் கொடுத்து கொஞ்சினார்.

    இந்த காட்சிகளை ராகுலுடன் சென்ற கட்சி நிர்வாகிகள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 16 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுபோல ராகுல் சுற்றுப்பயணம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவரை காப்பாற்றி அவரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார். இந்த காட்சியும் சமூக வலைதளத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.

    • பாஜக, மார்க்சிஸ்ட் இடையே ரகசிய புரிந்துணர்வு உள்ளது.
    • அவர்கள் செய்யும் வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    மலப்புரம்:

    கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாட்டில் தமது மக்களவைத் தொகுதி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ததுடன், அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மலப்புரம் பகுதியில் இன்று கேரள காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது:

    என்னிடம் (மத்திய அமலாக்கத்துறை) 5 நாட்கள் விசாரித்தபோது, ​​ஏன் 5 நாட்கள் விசாரணை செய்தார்கள், 10 நாட்கள் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். அவர்கள் அதை மீண்டும் செய்வார்கள் என்று நம்புகிறேன். கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தாது, ஏனெனில் பாஜக மற்றும் சிபிஎம் (மார்க்சிஸ்ட்) இடையே புரிந்துணர்வு உள்ளது.

    நமது அரசியல் சாசனத்தை பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றுகிறது. மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் பயப்படவில்லை, நாட்டின் கட்டமைப்பை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அவர்கள் செய்யும் வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    சிபிஎம் எனது அலுவலகத்தை அழிப்பது உள்ளிட்ட செயல்களை செய்து வருகிறது. சிபிஎம் என் அலுவலகத்தை எத்தனை முறை சேதப்படுத்தினாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பா.ஜ.க மற்றும் சிபிஎம் வன்முறை மூலம் மக்களை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அந்த கட்சிகளுக்கு தைரியம் இல்லை,

    என்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் உட்கார வைப்பதன் மூலம் மத்திய அரசும், எனது அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதன் மூலம் சிபிஎம்-மும் எனது நடவடிக்கையை மாற்றி விடலாம் என நம்புகின்றன. எனது நடத்தையை எதிரிகளால் வடிவமைக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் விரோதமும் இல்லை.
    • அவர்கள் குழந்தைகள், செயலின் விளைவுகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    வயநாடு:

    கடந்த மாதம் 24ந் தேதி கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ராகுல்காந்தியின் அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கேரளாவிற்கு இன்று பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, தாக்குதலுக்கு உள்ளான தமது அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    இது வயநாட்டு மக்களின் அலுவலகம். நடந்தது துரதிருஷ்டவசமானது. வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது. இதை செய்தவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர். அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் விரோதமும் இல்லை. அவர்கள் குழந்தைகள், செயலின் விளைவுகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ராகுல்காந்தி தமது பேட்டியின்போது, தமது அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்றோ, அந்த கட்சியின் மாணவர் அணியினர் என்றோ குறிப்பிடவில்லை, அவர்களை குழந்தைகள் என அழைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டியை தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் ராகுல்காந்தி, சாலை வழியே பேரணியாக சென்றார். 



    ×