search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை.
    • உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில்,

    "ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், ராணுவத்தில் உயிரிழந்த அக்னிவீரர் அஜய் குமார் குடும்பத்திற்கு மத்திய அரசு தற்போது வரை எந்தவொரு இழப்பீடும் வழங்கவில்லை. தனியார் வங்கியில் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணமும் ராணுவ குரூப் இன்சூரன்ஸ் நிதியில் இருந்து ரூ.48 லட்சமும் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.

    அஜய்குமாரின் சம்பள பாக்கியை இன்னமும் ஏன் அவரது வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை என கேள்வியெழுப்பிய அவர், இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீட்டிற்கும் இன்சூரன்ஸ் பணத்திற்கும் வேறுபாடு உள்ளது. உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.

    நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்தை நாம் மதிக்க வேண்டும். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது. இது ஒரு தேசிய பிரச்சனை இதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.

    நம் நாட்டில் ராணுவ வீரர் அக்னிவீரர் இருவரும் உயிர் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவ வீரருக்கு தியாகி பட்டம் கிடைக்கிறது. அக்னீவீரருக்கு தியாகி பட்டம் கிடைப்பதில்லை. ஒருவருக்கு பென்ஷன் கிடைக்கிறது. இன்னொருவருக்கு கிடைப்பதில்லை. நாட்டிற்காக யார் தியாகம் செய்தாலும் அவரை நாம் மதிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய அஜய்குமாரின் தந்தை, மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ், கேன்டீன் கார்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
    • பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

    "ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசியுள்ள அஜய் சிங்கின் தந்தை, "அக்னிவீரர் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவத்தில் வழக்கமான முறையில் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்துவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • நாடு முழுவதும் பா.ஜ.க. வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பதாகை ஏந்தி தர்ணா.

    புதுச்சேரி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசியதாக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதேபோல் ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் புதுச்சேரி சட்டசபை வளாகத்தின் முன்பு தரையில் அமர்ந்து பதாகை ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.

    ராகுல்காந்தி இந்து சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். 

    • இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார்.
    • அம்பானி, அதானி பேசிய பகுதிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 24-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 28-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அந்த விவாதத்தை தொடங்க முடியவில்லை. இந்தநிலையில் பாராளுமன்ற மக்களவையில் நேற்று இந்த விவாதம் தொடங்கியது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விவாதத்தில் பங்கேற்று சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீதும், பா.ஜ.க. தலைவர்கள் மீதும் ஆவேசமாக சுமத்தினார்.

    அவரது ஆவேச பேச்சுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்தில் அனல் பறந்தது.

    ராகுல்காந்தி பேசும் போது, "இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எந்த நேரமும் பயம், வன்முறை, வெறுப்புணர்வு, பொய்கள் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்று சொல்ல முடியாது" என்றார். அவர் அப்படி பேசும்போது பா.ஜ.க. எம்.பி.க்களை பார்த்து கைநீட்டி குறிப்பிட்டு பேசினார்.

    இதற்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பதில் அளித்து பேசுகையில், "ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தை வன்முறையாளர்கள் என்று சொல்வது தீவிரமான விஷயம் ஆகும்" என்றார்.

    அதேபோல மத்திய மந்திரி அமித்ஷாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "கோடிக் கணக்கான இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

    ராகுல் தனது பேச்சின் போது அக்னிவீர் திட்டம் பற்றியும் கடுமையாக குறைகூறி பேசினார். மேலும் தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி பற்றியும் குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் பேச்சு சபை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து ராகுல் காந்தி நேற்று விவாதத்தின் போது பேசிய பேச்சில் ஒரு பகுதியை நீக்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா முடிவு செய்தார். அதன்படி ராகுல் காந்தி பேச்சின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. இன்று காலை அதுபற்றிய தகவல்கள் வெளியானது.

    இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் குறித்தும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறித்தும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் நீக்கப்பட்டன. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறைகூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது.

    • ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை.
    • வெப்ப அலை தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகள்.

    மோடி அரசு பதவியேற்ற 15 நாட்களில் 10 சம்பவங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 15 நாட்கள்

    1. பயங்கரமான ரெயில் விபத்து

    2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள்

    3. ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை

    4. நீட் ஊழல்

    5. நீட் முதுகலை ரத்து

    6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு

    7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டண விலை உயர்வு

    8. காட்டுத்தீ

    9. தண்ணீர் பஞ்சம்

    10. வெப்ப அலை தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகள்

    தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் அவர் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க மாட்டோம். எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    இந்தியாவின் பலமான எதிர்க்கட்சி அழுத்தம் தருவதை தொடரும். பொறுப்பு ஏற்காமல் மோடி தப்ப முடியாது.

    • மோடி சென்ற வாகனத்தில் செருப்பு தூக்கி வீசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை.

    தான் போட்டியிட்டு வென்ற தொகுதியான வாரணாசி தொகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றிருந்தார். அப்போது மோடி சென்ற வாகனத்தில் செருப்பு தூக்கி வீசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் மோடி கான்வாய் மீது காலணி வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், மோடியின் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தவறுதான். ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்கள், தங்கள் பிரதிநிதி மீது எவ்வளவு அதிருப்தி அடைந்திருப்பர் என புரிந்துகொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
    • தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.

    இந்த நிலையில் 54-வது பிறந்த நாளை கொண்டாடிய ராகுல்காந்தி வெள்ளை நிற டி-சர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்கள் அனை வருக்கும் மனமார்ந்த நன்றி கள். எப்போதும் வெள்ளை நிற டி-சர்ட்டை' நான் ஏன் அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டி-சர்ட்டுகள் எனக்கு வெளிப்படைத் தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமை ஆகிய வற்றை குறிக்கிறது.

    உங்கள் வாழ்க்கையில் எங்கே, எப்படி இந்த மதிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டி-சர்ட்டை பரிசாக தருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதற்கு முன்பும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இந்த கேள்விக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்து இருந்தார். அப்போது, நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படு வதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்பு கிறேன்" என கூறி இருந்தார்.

    • பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

    இதையடுத்து வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க ராகுல்காந்தி முடிவு செய்தார். அதன்படி நேற்று ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இன்று வயநாடுக்கு வந்தார். இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    பின்னர் அவர் மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

    பின்னர் எடவண்ணாவில் நடந்த பொதுமக்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தாயின் மறைவிற்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக கூறினார்.

    அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது.

    நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல.

    ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு செய்ய தர்மசங்கடமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்றத்தில் வெற்றுக் கூச்சல் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
    • மக்கள் பிரதிநிதிகளாக யார் வந்தாலும் சரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் பதவி ஏற்று சாதனை படைத் துள்ளார். உலக தலைவர்கள் எல்லாம் வாழ்த்து தெரி வித்துள்ளாகள்.

    ஆனால் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை விரும்பும் ராகுல் காந்தி வாழ்த்து சொல்லவில்லை. நாட்டின் பிரதமருக்கு வாழ்த்து சொல்லும் பெருந்தன்மைகூட இல்லாத ராகுல் எதிர்கட்சி தலைவராகி என்ன செய்யப்போகிறார்.

    இதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத்தை கட்சி பாகுபாடு பார்க்காமல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி வாழ்த்தியதை கேட்டு அவர் கண் கலங்கினார்.

    எதிர்கட்சியாக இருப்பது ஆளும்கட்சியை எதிர்ப்பதற்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பாராளுமன்றத்தில் வெற்றுக் கூச்சல் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நல்ல திட்டங்கள் வந்தால் ஆதரிக்கவும் வேண்டும்.

    மக்கள் பிரதிநிதிகளாக யார் வந்தாலும் சரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுலை வீழ்த்தி ஸ்மிருதி இரானி வென்று அமைச்சரானார்.
    • இந்த தேர்தலில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

    2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திரபிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொக்குகளில் நின்றார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல்காந்தி தோல்வியை தழுவினார்.

    அதன் பின்னர் ஸ்மிருதி இரானி மோடியின் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார்.

    இந்நிலையில் இந்தாண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் மீண்டும் ஸ்மிருதி இரானி பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிஷோரிலால் சர்மா போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ரானியை 1.67 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதனையடுத்து, தேர்தலில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், ஸ்மிருதி இரானி வகித்து வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை தற்போது பாஜக எம்.பி. அன்னபூர்ணா தேவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

    • பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    • வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    நீட் தேர்வில் நடந்த முறைகேட்டால் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நரேந்திர மோடி இன்னும் பதவி ஏற்கவில்லை, நீட் தேர்வில் நடந்த முறை கேட்டால் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வு சீர் குலைந்துள்ளது.

    ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண் களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப் பெண்களைப் பெறுகிறார் கள். ஆனால் வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    கல்வி மாபியா மற்றும் அரசு எந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்த வினாத்தாள் கசிவுவை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. சட்டம் இயற்று வதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிப்பதாக உறுதி அளித்தோம்.

    இன்று நாட்டின் அனைத்து மாணவர் களுக்கும் நான் பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும், உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

    இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்கள் குரலை நசுக்க விடமாட்டோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.

    ×