என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பைரவர்"
- ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உப சக்தி உண்டு.
- கிரகத்திற்கு ஏற்ற உப சக்திகளை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
* சூரியன் - சுவர்ணாகர்ஷண பைரவர் - பைரவி
* சந்திரன் - கபால பைரவர் - இந்திராணி
* செவ்வாய் - சண்ட பைரவர் - கவுமாரி
* புதன் - உத்மத்த பைரவர் - வராகி
* குரு - அசிதாங்க பைரவர் - பிரம்மாஹி
* சுக்ரன் - ருரு பைரவர் - மகேஸ்வரி
* சனி - குரோதன பைரவர் - வைஷ்ணவி
* ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை
* கேது - பீஷண பைரவர் - சாமுண்டி
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தின் கரையில் கால பைரவர் சன்னிதி இருக்கிறது. இங்குள்ள பைரவர் சிலையை, திருவாசியுடன் ஒரே கல்லில் செதுக்கியிருக்கிறார்கள். எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் இந்த பைரவர் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் அருள்கிறார். தலையில் பிறை சந்திரன் சூடியிருக்கிறார். இவரை வழிபாடு செய்தால் ஆணவம் நீங்கும் என்கிறார்கள்.
- பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.
- பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
கால பைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவர மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
பைரவ மூர்த்தியை மூர்த்தி, பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களின் வணங்குகிறார்கள்.
- பைரவர் வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது.
- சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.
இல்லங்களில் திரிசூல வழிபாடாக போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்கு பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.
அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடம் இருந்து ஆரம்பித்து அர்த்தஜாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தஜாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.
பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதை தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்திய பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. மேலும் பைரவருக்கு எட்டு வித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம்.
அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்
இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது. விரதம் இருந்து பைரவரை மனம் உருகி வழிபடுவர்களுக்கும், உரிய முறைப்படி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கும் இந்த சக்தி கிடைக்கும்.
- பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.
- அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.
ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.
சிவ ரூபத்தில் இருக்கும் பைரவருக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் தயிர் சாதம். தயிர் சாதத்தை நைவேத்யமாக செய்து கொண்டு கோவிலுக்கு சென்று பைரவருக்கு படைக்கலாம். அது போல் பைரவருக்கு செந்நிற மலர்கள் மிகவும் பிடித்தமானவை. செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் பல விதமான தோஷங்களில் இருந்து நீங்கி அதிர்ஷ்டமான யோகங்களை பெறலாம்.
பைரவருக்கு மிளகு முட்டை வைத்து தீபம் ஏற்றினால் தீராத எவ்வளவு கடன் இருந்தாலும் விரைவாக தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அதுபோல் ஒரு முழு எலுமிச்சையை அவருடைய திருவடியில் வைக்கப்பட்டு பின்பு அதனை வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேறி நல்ல சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கும். இதனால் வீட்டில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் எளிதாக நீங்கி ஒற்றுமை ஓங்கும்.
ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை வீட்டில் நாணயத்தால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட்டால் வருமானம் பெருகும். செல்வ வளம் அதிகரிக்கும். இத்தகைய பலன்களை நல்கும் பைரவரின் அருள் கிடைத்தால் வாழ்வில் யோகம் தான். அதனால் நாளைய நாளை தவற விட்டுவிடாதீர்கள். பைரவரை வணங்கி நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
- பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
சிவனின் அம்சமான கால பைரவரை எந்தெந்த நாளில், எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.
பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.
பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் இருக்கும். அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார், என்பதால் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.
பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள், அதற்குரிய கிழமைகளில், வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.
ஞாயிறுக்கிழமை
சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடை பெறும்.
திங்கட்கிழமை
கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
செவ்வாய்க்கிழமை
மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.
புதன்கிழமை
மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.
வியாழக்கிழமை
தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வியாழக்கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை
ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக்கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சனிக்கிழமை
மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.
- நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
- தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவஅஷ்டமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும்.
காலபைரவர் அவதரித்த கால பைரவஅஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவஅஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்.
அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவஅஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.
சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு.
ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் நாளை வரும் கால பைரவஅஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.
மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.
பைரவ லட்சார்ச்சனை, ஸ்ரீருத்ர யாகம், ஸ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்
"ஓம் கால காலாய வித்மகே
கால தீத்தாய தீமகீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"
என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவஅஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம். அதன் பயனாக, எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.
- காலபைரவர் வழிபாடு மிகவும் தொன்மையானது.
- காலபைரவரை வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும்
கோவை நாதேகவுண்டன் புதூரில் திரிசூல வடிவில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குறித்து தர்மராஜா சுவாமிகள், அன்னதானமடாலயம் நிறுவனர் சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கூறியதாவது:
காலபைரவர் வழிபாடு மிகவும் தொன்மையானது. காலபைரவரை வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது உண்மை. காலபைரவருக்கு முதன்முறையாக கோவை ஆலாந்துறை அருகில் உள்ள நாதேகவுண்டன்புதூரில் திரிசூல வடிவில் முதன்முறையாக கோவில் அமைக்கப்படுகிறது.
இங்கு 9 அடி உயரத்தில் ஐம்பொன்னில் காலசம்காரீஸ்வர பைரவர் சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் இக்கோவிலில் அஷ்ட பைரவர், விநாயகர் பெருமான், சிவபெருமான், மதுர காளியம்மன், சனீஸ்வர பகவான், 27 நட்சத்திர சுவாமிகள், 12 ராசிகள் சுவாமிகள் மற்றும் 9 நவக்கிரக சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த கோவில் அமைக்கும் திருப்பணிகளை ஸ்ரீமத் தர்மராஜா சுவாமிகள் அறக்கட்டளை செய்து வருகிறது. தற்போது மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் மேற்கண்ட இடத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இந்த கோவில் அமைவதற்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்குமாறு ஸ்ரீமத் தர்மராஜா அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், ஸ்ரீமத் தர்மராஜா அறக்கட்டளை நிறுவனர் சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- இந்த சிலை உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது.
- பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள்.
- இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது.
கொடுமுடி :
காலபைரவர்...சிவபெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். சிவன் கோவிலின் வடகிழக்குப்பகுதியில் நின்றகோலத்தில் காட்சி தருபவர். பன்னிரு கைகளுடன்,நாகத்தை பூணுலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசகயிறு,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் காட்சி தருபவர்.
கால பைரவர் சனியின் குருவாகவும், 12 ராசிகள்,8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துப்பராகவும் கூறப்படுகிறது.
காசியில் கால பைரவருக்கு 8 இடங்களில் கோவில்கள் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காலபைரவர் கோவில் உள்ளது. பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட காலபைரவருக்கு ஈரோட்டில் பிரமாண்ட சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையம் என்ற இடத்தில் ஸ்வர்ண பைரவ பீடம் சார்பில் கடந்த 2014-ம்ஆண்டு காலபைரவர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் எங்கும் இல்லாத வகையில் நுழைவு வாயிலில் கோபுரத்துக்கு பதிலாக பிரமாண்ட காலபைரவர் சிலை கட்டப்பட்டுள்ளது.
இதற்காக 34 அடி உயரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதற்கு மேல் 39 அடி உயரத்தில் பிரமாண்ட காலபைரவர் சிலை அமைக்கப்பட்டு ள்ளது. 4 கைகளுடன் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தியவாறு நாயுடன் காலபைரவர் சிலை அமைக்கப் பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் மற்றும் காலபைரவர் சிலை மொத்தம் 73அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மட்டும் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக காலபைரவர் சிலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஸ்வர்ண ஹர்சன பைரவர் உள்ளார். அது தவிர சிவனின் 64 வகையான பைரவ அவதாரங்களில் 62 வகையான பைரவர் சிலை கோவிலின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக உயரமான இந்த கால பைரவர் சிலைக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆனாலும் தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் காலபைரவரை காண திரண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சிலை யுனிக் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தக்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனை விருதை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் யுனிக் சாதனை புத்தகம் பஞ்சாப் அமைப்பின் தென்னக பொறுப்பாளர் ரகுமான் பைரவர் ஆலயத்தின் பொறுப்பாளரான விஜய்சுவாமியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கணேச முர்த்தி எம்.பி., மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வளர்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்:
வளர்பிறை அஷ்டமியை ஒட்டி, கரூர் தோட்டக்குறிச்சி, சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை ஒட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் மண்மங்கலம், நஞ்சை புகழூர், காகிதபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது.
- சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த கோவில்.
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்.' இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, புகுர்ந்த் பைரவர் கோவில்.
இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவராக கருதப்படும், பைரவர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.
கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோவிலை, கேதார்நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலயமும் அழகாகத் தெரியும். கேதார்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவதற்கு முன்பாகவே, மலை உச்சியில் உள்ள இந்த பைரவர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுர்ந்த் மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.
- பஞ்ச பைரவ வழிபாடு என்பது, ‘பிதுர்தோஷ நிவர்த்தி’க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும்.
- இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு, பிதுர் தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள். வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற வானுலக பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலமாகும். எனவே தான் இத் தலம் 'ஆவூர்' என்றானது. ('ஆ' என்பது 'பசு'வை குறிக்கும்).
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், 'பஞ்ச பைரவ மூர்த்திகள்.' இந்த ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும். பஞ்ச பைரவ வழிபாடு என்பது, 'பிதுர்தோஷ நிவர்த்தி'க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையோ, வாய்ப்புகளோ அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பலபேர் அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர், ஆனால் வாழ்வில் அமைதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு, பிதுர் தோஷம்தான் காரணம். அவர்கள் அனைவரும், இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு, பிதுர் தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.
- 48 நாட்கள் விரதமிருந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
- லட்சுமி கடாட்ச யோகம் கிடைக்கும்.
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம். நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும்.
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.
தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்