search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 மணி நேரம் விசாரணை
    • போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர் அப்போது சார் பதிவாளர் பொறுப்பு அன்வர்அலி வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    கொட்டாரத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அன்வர்அலியை மந்தாரம்புதூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்வர் அலியிடம் லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அவரிடம் இருந்து ரூ.41 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 1 மணி வரை நீடித்தது.நேற்று ஒரே நாளில் 30 பத்திர பதிவுகள் நடந்துள்ளது. அதில் ஏதாவது பணம் பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் பணம் வாங்கிய தற்கான சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 15 நாட்களாக தான் சார்பதிவாளர் பொறுப்பு பணியை அன்வர்அலி கவனித்து வருகிறார். இந்த நிலையில் அவர் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி யிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அன்வர்அலி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீ சார் பரிந்துரை செய்துள்ளனர். எனவே அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் கிராம நிர்வாக அதிகாரி ஒருவரிடம் இருந்து ரூ.17,743 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சார்பதி வாளர் அலுவ லகத்திலும் பணம் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாயி வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • ஓட்டு வீட்டின் மேல் ஓடுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு இருந்தது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி கிராமம் மேல தெருவில் வசிப்பவர் பெருமாள் (வயது 55). விவசாயி, இவரது மனைவி தெய்வக்கண்ணி.

    இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று பெருமாள் அருகிலுள்ள வீரமாங்குடி மடம் கிராமத்திற்கு தனது உறவினர் இறந்த துக்கத்திற்கு அவரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    மறுநாள் வீட்டை வந்து பார்த்தபொழுது இவரது ஓட்டு வீட்டின் மேல் ஓடுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் இறங்கி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் இருந்த தங்க தோடு, தங்க மோதிரம், தங்க காசு, உள்ளிட்ட 6 கிராம் நகைகளையும், ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பெருமாள் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்க ளையும் கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்க ளையும் கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்து வருகின் றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில், நாமக்கல் மோகனூர் ரோட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தின், இயக்கமும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வரு கிறது. இந்த அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை காவல் கண்காணிப் பாளர் சுபாஷினி, ஆய்வா ளர் நல்லம்மாள் தலைமை யிலான போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    போலீசார் வந்தபிறகு, அலுவலகத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர் கள் ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அலுவலக கோப்பு களை துருவித்துருவி விசா ரணை நடத்தினர். அலுவல கத்தில் பணியில் இருந்த அனைத்து பணியாளர் களிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.

    மாலை தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது. சோதனையின் முடிவில் அங்கு கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ. 85,900 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • காருக்குள் கட்டுகட்டாக பணம் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைத்தனர்.
    • உதவியாளர் குமார் கைது செய்த போலீசார் உதவி செய்ய பொறியாளர் ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் சொத்து வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவுகளை, திருப்பூர் நெருப்பெரிச்சரில் பத்திரப்பதிவு ஜாயின்ட்-2 அலுவலகத்தில் மேற்கொண்டார். கட்டடத்தின் மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, களப்பணிக்காக, மதுரையில் உள்ள பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி., அலுவலகத்துக்கு பரிந்துரைத்தனர். மதுரையில் உள்ள உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) ராமமூர்த்தி, திருப்பூர் வந்து அக்கட்டிடத்தை கள ஆய்வு செய்தார்.

    இதற்கான மதிப்பீட்டு அறிக்கையை அளிக்காமல் காலம் கடத்தியதோடு, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கோபாலகிருஷ்ணன் கொடுக்க முன் வராததால் பின்னர் ரூ.75 ஆயிரம் ரூபாயாக குறைத்திருக்கிறார்.

    இருந்த போதிலும் பணத்தை கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில் லஞ்ச பணத்தை வாங்குவதற்காக, உதவி செயற்பொறியாளரின் உதவியாளர் குமார், (45) என்பவர் வந்துள்ளார். அவரிடம் கோபாலகிருஷ்ணன் பணத்தை வழங்கியபோது, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் உதவியாளர் குமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரது காரில் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கட்டுகட்டாக பணம் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைத்தனர்.

    அந்த பணம் குறித்து கேட்டபோது அதற்கான பதில் அவரிடம் இல்லை. இதனையடுத்து காரில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 6 லட்சத்து, 48 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் உதவியாளர் குமார் கைது செய்த போலீசார் உதவி செய்ய பொறியாளர் ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும்.
    • இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் சென்னையை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கீர்த்தனா தங்கவேல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் டிஜிட்டல் பண பரிவர்த்த னையால் பணத்தை இழந்துபாதிக்க ப்பட்டவர்களுக்கு ஆலோ சனைகளும், வழிகாட்டு தல்களும் செய்யப்பட்டது.

    கருத்தரங்கில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்தியாவில் ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வெவ்வேறு வழிகளை பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது.

    டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும்.

    இதில் பணம் செலுத்துபவர் மற்றும் பெறுபவர் இருவரும் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணத்தை அனுப்பவும், பெறவும் செய்கின்றனர்.

    இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.

    இது தவிர, மோசடி பேர்வழிகளால் பொதுமக்கள் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றப்படும்போது, சைபர் கிரைம் தடுப்பு அமைப்புகள் வழியாகவும் கண்டறிந்து பொதுமக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

    இதனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இந்த கருத்தரங்கில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்தால் செய்வதோடு நடவடிக்கை எடுக்க பரிந்து ரையும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    • பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் -செட்டிபாளை யம் ரோடு, சி.டி.சி டெப்போ அருகில் சங்கரநாராயணன் என்பவரது மனைவி உஷாராணி (வயது 60) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அருகில் இருந்தவர்கள் அவரது வீடு திறந்து கிடப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் வீட்டில் பணம் மற்றும் நகைகள் இல்லாததால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதற்கிடையே அந்த வீட்டின் அருகில் முருகன் என்பவரது மகன் அழகுராஜா ( 38 ) என்பவர் குடியிருந்து வருகிறார். அவரும் நேற்று வெளியில் சென்று இருந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மர்ம நபர் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 8,500 பணத்தை திருடியுள்ளார்.
    • ஏ.டி.எம் கொடுத்து பணம் எடுத்து கொடுக்க சொல்லி இருக்கிறார்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள குண்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முனியம்மாள் (வயது35). இவர் நேற்று பாலக்கோடு பஸ்நிலையம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 8,500 பணத்தை திருடியுள்ளார்.

    பாலக்கோடு அருகே உள்ள எர்ரசிகல அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது28). இவர் டாட்டா ஏசி வாகன ஓட்டுனராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் பாலக்கோடு அருகே உள்ள ஏ.டி.எம் - ல் பணம் எடுக்க சென்றபோது அருகில் உள்ளவரிடம் ஏ.டி.எம் கொடுத்து பணம் எடுத்து கொடுக்க சொல்லி இருக்கிறார்.

    இந்நிலையில் அவர் பணம் எடுத்துவிட்டு வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை இவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் ஏ.டி.எம்.மில் உள்ள ரூ.38,000 பணம் எடுத்துள்ளது தெரியவந்தது.

    இது குறித்து 2 பேர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
    • இதன் மூலம் பணத்தை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திரிகா புட் கிளை நிறுவனமாக செயல்பட்ட டி.எப்.எல்., மியூச்சுவல் (புட் பிளஸ்) நிறுவனத்தை சென்னையை சேர்ந்த ராமன், இந்திரா, புவனா நடத்தினர். கலப்படமற்ற உணவு பொருள் தயாரிப்புடன் சிறுசேமிப்பு திட்டத்தையும் தொடங்கினர்.

    பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்தனர். முதிர்வு காலத்திற்கு பிறகும் தொகை வழங்காமல் நிர்வாகத்தினர் அலைக்கழித்தனர். இதையடுத்து பரமக்குடியை சேர்ந்த நாகலட்சுமியின் புகாரின்பேரில் 2018ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு 2022 நவம்பர் 24-ந்தேதி முதல் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தில் இதுவரை 496 பேர் ரூ.1.22 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

    மேலும் வேறு எவரேனும் முதலீடு செய்து பாதிக்கப்பட்டிருந்தால் ராமநாதபுரம் நேருநகர் 4-வது தெருவில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் ஆஜராகி புகார் செய்யலாம். இதன் மூலம் பணத்தை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில நாட்களில் அனுப்பி விடுவோம் என தட்டி கழித்து வந்தனர்.
    • நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    மதுக்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோயம்புத்தூர், திருவாரூர், காங்கேயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் துனிசியா நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது.

    அங்கு சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம் என கூறி தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினர்.

    அனைவரிடம் வசூலித்த பணம் பல லட்சங்களை தாண்டும்.

    ஆனால் பல மாதங்களாகியும் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

    அவர்களிடம் கேட்டால் சரியான பதில் இல்லை.

    சில நாட்களில் அனுப்பி விடுவோம் என தட்டி கழித்து வந்தனர்.

    இதனால் பணத்தையும் கொடுத்து வேலைக்கும் செல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறோம்.

    எனவே அந்த 3 பேர் கூறிய வெளிநாட்டில் வேலை உள்ளது உண்மைதானா என்று விசாரிக்க வேண்டும்.

    மேலும் அவர்களிடம் இருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை 6 மணி அளவில், வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தோணியம்மாள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர் கண்ணாடியை எடுத்து நரேஷ்கமலின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய நிலையில் நரேஷ்கமல் கீழே விழுந்தார்.
    • பின்னர் வடமாநில மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கமலநாதன்.

    இவரது மகன் நரேஷ்கமல் (வயது 16) .இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

    இவர் வீட்டில் இருந்தபோது வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை பார்த்து நீ யார் என கேட்டுக் கொண்டிருந்த போதே மர்ம நபர் கண்ணாடியை எடுத்து நரேஷ்கமலின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய நிலையில் நரேஷ்கமல் கீழே விழுந்தார். பின்னர் வடமாநில மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்த வடமாநில மர்ம நபர் குறித்து தீவிர விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • அரிசிபாளையத்தில் நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் சையத் கபூர் தெருவை சேர்ந்தவர் பரணி என்கிற பழனி (வயது 45). இவர் தம்மண்ணன் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர்.

    இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து கிடந்தது.

    மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பழனி உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதே போல் அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளி சக்திவேல் (45) என்பார் வீட்டிலும் நேற்று மதியம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

    இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

    ×