search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஸ்ரீ தாயுமானவர் வித்யாலயம் உதவி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி குருகுலம் பள்ளி நிறுவனர் சர்தார் வேதரத்னம் பிள்ளையின் 126-வது பிறந்தநாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் சென்ட் உறுப்பினர் ராஜலிங்கம் தலைமையில் நடந்தது.

    விழாவில் சர்தார் தேசிய சேவைகள் மற்றும் கல்வி பணிகள் குறித்து கைலவனம் பேட்டை ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

    விழாவை யொட்டி வேதா ரண்யம் சரகத்தில் உள்ள 17 பள்ளிகளின் மாணவ- மாணவிகளிடையே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற 200 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர வடிவேல், முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் அம்பிகாதாஸ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சித்திரவேல், வைரக்கண்ணு உள்பட பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் வித்யாலயம் பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.

    • ரூ.18.89 லட்சம் மதிப்பீட்டில் ராயல் சிட்டியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் ஆய்வு.
    • ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், குடவாசல் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ்ஆய்வில், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உடனிருந்தார்.

    நீடாமங்கலம் ஒன்றியத்தி ற்குட்பட்ட, ஒளிமதி, ஒடந்துறை பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் பயனா ளியிடம் வழங்கப்படும் மருந்துவ சிகிச்சைகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.18.89 லட்சம் மதிப்பீட்டில் ராயல் சிட்டியின் பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருவதையும், பாப்பையன் தோப்பு, பாலகிருஷ்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிளவர் பிளாக் சாலையினையும், நீடாமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியினையும் பார்வை யிட்டு, மாணவ ர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், குடவாசல் பேரூராட்சியில் அகரஒகை காளியம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதார் சாலையினையும், கொரடாச்சேரி ஒன்றியம், வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு கற்பிக்க ப்பட்டுவரும் பாடமுறைகள் குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரை யாடினார்.

    இவ்ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிகின்றன.
    • தஞ்சையை சுற்றியுள்ள பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக மாணவர் நல மையமும் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமும் அஸ்கார்டியா பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மொழிப்புலத்தில் நடை பெறுகிறது.

    இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிகின்றன.

    இதில் தமிழ்ப் பல்கலை க்கழக மாணவர்களும், தஞ்சை யைச் சுற்றி யுள்ள பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவ ர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்த வழிகாட்டிக் கருத்தரங்கம் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடந்தது. முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் உள்ள வீ செர்வ் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர். எம்.எஸ்.விஜி கலந்து கொண்டு பேசுகையில், அப்துல்கலாம் போன்று வாழ்வில் முன்னேற நீங்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.

    இன்று அறிவியல் சார்ந்த ஆராய்ச்சித் துறையில் மாணவ, மாணவிகளின் பங்களிப்பும், ஆர்வமும் அதிகரித்து வருவது மகிழ்சியாக உள்ளது. அதுமட்டுமின்றி சமூக நலனிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கல்விப்பணியோ அல்லது மற்ற துறைகளிலோ முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் மட்டுமே சிறப்பானதொரு இடத்தை அடைய முடியும். எழுதப்படிக்க தெரியாத ஒரு 10 பேருக்காவது நம்மால் முடிந்த அளவு கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவுத்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • தங்களது வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்குள் புறப்பட வேண்டியுள்ளது.
    • பிரார்த்த னை கூட்டத்தில் மயங்கி விழுகின்ற அவல நிலையும் அடிக்கடி ஏற்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே போளையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாராப்பநாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமவாசிகளுக்கு பிரதான தொழில் விவசாயம், காய்கறி, பூ, கீரை போன்றவை இங்கு பயிரிடப்பட்டு உள்ளன.

    இந்த கிராமங்களில் இருந்து, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் படிக்கும் மாணவ - மாணவியர், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் இப்பகுதிகளில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோபிநாதம்பட்டி பகுதியை அடைந்த பிறகு அங்கிருந்து தான் அரூர், மொரப்பூர், தருமபுரி பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

    குறிப்பாக மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லுாரி செல்ல, கோபிநாத ம்பட்டி கூட்டு ரோடு பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 11 மற்றும் 12 வகுப்பு படிக்கக் கூடிய மாணவ மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று படித்து வருவதால் தங்களது வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்குள் புறப்பட வேண்டியுள்ளது.

    சில வீடுகளில் காலையில் உணவு சமைப்பதற்கு காலத்தாமதம் ஆவதால் மாணவ, மாணவிகள் சாப்பிடாமலே பள்ளிக்கு நடந்து சென்று காலையில் நடைபெறுகின்ற பிரார்த்த னை கூட்டத்தில் மயங்கி விழுகின்ற அவல நிலையும் அடிக்கடி ஏற்படுகிறது.

    அதே போல, விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர், கட்டுமான தொழிலாளர்கள், முதியோர் என, கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும், இளை ஞர்களும், வெளியூருக்குச் சென்று வேலை செய்து வீடு திரும்புவோரும் அதிகள வில் உள்ளனர்.

    மேலும் இந்த சாலையில் உள்ள மின்கம்பங்களில் மின்வி ளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு நவலை, சின்னாக வுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரி செல்லும் வகையில் காலை, மாலை இருவேளைகளில் அரசு பேருந்து ஒன்றை இயக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனப் பகுதி கிராம மக்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

    பெண்களுக்கும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியருக்கும் இலவச பேருந்து என அறிவித்து விட்டு இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கினால் இழப்பு ஏற்படுவதாகக் கூறி ஏற்கனவே இயக்கப்பட்ட பேருந்தை நிறுத்தியதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    சில நாட்களில் பொது தேர்வு நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்களும் , பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    • உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரி சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தமிழ்நாடு நவீனமடைந்த கதை என்ற தலைப்பிலும், கவிஞர் நந்தலாலா அகப்பொறியின் திறவுகோல்- கேள்விகளின் சிறப்பு என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினா ர்கள்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

    எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்- நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளரச்சியும், கணினி தமிழ் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்க ப்பட்டுள்ளது.இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன் பெறுவதோடு மட்டும ல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், நந்தலாலா, முனைவர் செந்தமிழ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை.
    • தாட்கோ மூலம் ரூ. 2.25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது :-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பலவேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சினை தாட்கோ சார்பாக வழங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு மூலம் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ

    மூலமாக ரூ.2.25 இலட்சம் வரை மானியத்துடன் கூடிய ரூ.10.00 இலட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

    எனவே மேற்காணும் இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்க ர்கள் தாட்கோ இணையத ளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட ) தாட்கோ வழங்கும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு.
    • மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

    நாகப்பட்டினம்:

    அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவை குறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி விழுந்தமா வடியிலுள்ள சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி-யில் பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு பயிற்சியாளராக சென்சை நாசர் தீன் கலந்து கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு பயிற்சிகளை அளித்தார்.

    தொடர்ந்து கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக்,குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

    நாகை அருகே அழிந்து வரும் தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாம் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    விழாவினை அகில இந்திய கராத்த சங்கத்தின் உடைய டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான எஸ் சாய் புருஸ் துவக்கி வைத்தார். ஆசிய கராத்தே நடுவர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட கரத்தைச் சங்கத் தலைவர் சென்சாய் ராஜா செய்திருந்தார்.

    • கைபந்தாட்ட போட்டியில் சீர்காழி பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
    • ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவிலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    கடற்கரை கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் கலந்து கொண்டனர்.

    19 வயது பிரிவில் ஆண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கோகுலன், அரிஷ் குமார், ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

    இதேபோல் 17 வயது பெண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட பாவனா, பிரியதர்ஷினி இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.

    இதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குனர்கள் பிரவின் வசந்த்ஜபேஷ், அனுஷாமேரி, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா, குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் அபிரகாம் மற்றும் பெற்றோர்கள் ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து திறந்த வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ, மாணவிகளை கோப்பைகளுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    பள்ளியில் அனைத்து மாணவ, மாணவகளும் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் போது பரஞ்ஜோதி ஜூவல்லரி பழனியப்பன், ஆங்கில ஆசிரியர் ரெங்கநாதன் உடனிருந்தனர்.

    • பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
    • பெற்றோர் கோரிக்கைகள் படிப்படியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆட்டோ கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் லயன்ஸ் சுரேஷ், தலைமை ஆசிரியை அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. 42வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாரப்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோர் ஒரு சில கோரிக்கைகள் வைத்து உள்ளீர்கள் .அதனை படிப்படியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாரப்பாளையம் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களின் தனி திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பரீட்சையில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலோ அல்லது தனித்திறமையில் வெற்றி பெற வில்லை என்றாலோ அந்த குழந்தையை உதாசீனப்படுத்தாமல் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள். பாரப்பாளையம் பள்ளியில் மார்ச் மாதம் நடைபெறும் ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் ,பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சுனில் குருசாமி, திருநகர் பாலு, சக்திவேல், முரளிதரன், சதீஷ்குமார் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை தேவகி நன்றி கூறினார்.

    • பள்ளியின் ஆண்டு விழா அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    • மாணவர்களின் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்கு வைத்து விழாற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளியின் ஆண்டு விழா அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜன், துணை தலைவர் வீரராசு, துணை செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் கொஞ்சம் வித்தியாசமாக திருமண விழாக்களுக்கு தாம்பூலம் வைத்து அழைப்பது போல் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பள்ளி ஆண்டு விழாற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.

    • முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கம், 2-ம் பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கம்.
    • மாணவ- மாணவிகளுக்கு விளையாடும் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பள்ளிகளில் இருந்து 150 மாணவ- மாணவிகள் சுமார் 9-க்கும் மேற்பட்ட குழுக்களாக கலந்து கொண்டனர்.

    இக்குழுக்கள் மாணவ- மாணவிகளுக்கு என தனி பிரிவாகவும், 8, 10, 12, 14 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கமும், 2-வது பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு விளையாடும் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

    போட்டி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எஸ்.ஏ.கார்த்திகேயன் மற்றும் பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×