search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141588"

    • குன்னூர் நகரசபை மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
    • குன்னூர் நகரசபை கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    குன்னூர்,

    குன்னூர் நகரசபை மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் வாஷிம் ராஜா, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகநாதன் உள்பட நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி பேசுகையில், அதிகாரிகள் மன்றத்தில் பொய்யான தகவல்களை அளிக்க வேண்டாம். என்ன நடந்ததோ அதை பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.

    அடுத்தபடியாக நகராட்சி கமிஷனர் ஏகநாதன் பேசும் போது, தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளும் சென்று பணிகளை சரிவர செய்ய வேண்டும்.

    இதனை நகர சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    திமுக நகர மன்ற உறுப்பினார் ஜெகநாதன் பேசும் போது, வண்ணார் பேட்டையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பணிகள் எதுவும் செய்யாமல், வேலை நடந்ததாக கூறி ரூ. 3 லட்சத்துக்கான தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அடுத்த படியாக தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் பேசும்போது, சிங்கார பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2 கடைகள் கட்டப்பட்டு உள்ளது.

    அதற்கு நகராட்சி அனுமதி அளித்து உள்ளதா, அதற்கான வரி வசூலிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து குன்னூர் நகரசபை கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    • ஆன்லைனில் மோசடி செய்த ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது.
    • பொதுமக்கள் 9498181206 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் மதுரை யில் உள்ள சங்க அரங்கத்தில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் கூறியதாவது:-

    காவல்துறையினர் தொழில்துறையினருடன் இணக்கமான சூழலில் இருக்கிறோம். சரக்குகளை ஏற்றிச்செலவதற்கு வாகன போக்குவரத்து வியாபாரி களுக்கு மிகவும் முக்கிய மானதாகும. அப்போது பிரச்சினை ஏற்படும்போது போலீசார் மிகவும் உதவியாக இருக்கிறோம்.

    சமீபத்தில் பைக்-லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தவறு பைக் ஓட்டி வந்தவர் மீதுதான் என்று தெரிந்தது. இது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது பற்றி நான் விசாரித்தபோது மோதிய 2 வாகனங்களில் எது பெரியதோ அதன்மீது தான் வழக்கமாக வழக்குப்பதிவு செய்து உள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நான் அவர்களை எச்சரித்து தவறு இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். பொய்யாக இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லி உண்மை குற்றவாளி மீது வழக்குப்பதிய கூறினேன்.

    டோல்கேட் அருகே சரக்கு வாகனங்களை மறித்து பணவசூல் செய்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை செய்தேன். பின்னர் இதில் தொடர்பு டைய ஆர்.ஐ. மீது நடவடிக்கை எடுத்தேன். அவர் உடனடியாக விருது நகருக்கு மாற்றப்பட்டார். இவ்வா றாக வியாபா ரிகளின் நியாயமான புகாருக்கு உதவியாக இருந்து வருகி றோம்.

    மேலும் இணைய வழியில் வர்த்தகம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக பண பரிவர்த்தனை செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் நிறைய மோசடி கும்பல் செயல் படுகின்றன. அவர்கள் போலியான ஜி.எஸ்.டி. எண்கள் வைத்து போலியான முகவரியில் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்தவர்கள் 1 மணி நேரத்துக்குள்ளாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்தால் இழந்த பணத்தை உடனடியாக மீட்டு விடலாம்.

    மதுரை மாவட்டத்தில் ரூ.30 லட்சம் மீட்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் ஓராண்டில் கஞ்சா வழக்குகளில் ரூ. 9 கோடி அளவிற்கு சொத்துக் கள் முடக்கக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்கள் 9498181206 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலி ஆவணம் தயாரித்து பெண்ணின் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது
    • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்கு

    திருச்சி,

    திருச்சி தொட்டியம் அருகே உள்ள ஏழூர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் தற்போது திருமணமாகி காஞ்சிபுரம் மாவட்டம் ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகர் செந்தில் ஆண்டவர் தெரு பகுதியில் கணவர் பரமசிவத்துடன் வசித்து வருகிறார். இவரது தந்தைக்கு சொந்தமான நிலம் தொட்டியம் ஏழூர் பட்டியில் உள்ளது. இதில் 29 சென்ட் நிலத்தை அவரின் தாத்தாவின் சகோதரர் வழி பேரன் பெரியசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளார். பின்னர் அதனை ஏழூர் பட்டி உப்பத்து பள்ளம் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். அதன் பின்னர் செல்லம்மாள் தனது மகள் லோகேஸ்வரி பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்து அதனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்பட்டது. இதனை அறிந்த கீதா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக உப்பிலியபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் அளித்தார். பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்த பெரியசாமி, அதனை வாங்கிய செல்லம்மாள், மகள் லோகேஸ்வரி, மருமகன் கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேர் மீது திருச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் விசாரணை நடத்தி வருகிறார்.

    • வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முருகன் (39). இவர் 2 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார்.

    இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக வேலை தேடி வந்தார். அப்போது பத்தி ரிக்கையில் வெளியான விளம்பரம் ஒன்றை பார்த்து திருநெல்வேலியில் செயல்படும் ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டார்.

    அவர்கள் பிரேசில் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை தயாராக இருப்பதாகவும், அதற்கு ரூ. 1 ½ லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய முருகன் 3 தவணைகளில் ரூ.1 ½லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் மேலும் ரூ.50 ஆயிரம் வாங்கி கொண்டு விசா ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனால் அது போலியானது என தெரியவந்தது.

    அதுகுறித்து அவர் ஏஜென்சியிடம் கேட்ட போது, வேலை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து ராஜபாளையம் கோர்ட்டில் முருகன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை பெற்று வந்துள்ளார்.
    • சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    ரோட்டை சேர்ந்தவர் நிலா (வயது 44). இவர் முதல் கணவரால் கைவிடப்பட்டதால் புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவியை கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெற்று வந்தார்.

    இதற்கிடையே நிலா, 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதை மறைத்து கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை அவர் பெற்று வந்துள்ளார்.

    இதற்கிடையே நிலா வுக்கு 2-வதாக திருமணம் ஆகி கணவர் இருப்பது தெரிய வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை அரசு நிறுத்தியது.

    அதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிலா அரசிடம் இருந்து பெற்ற ரூ.82 ஆயிரத்து 200-யை திரும்ப செலுத்தும்படி துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் நிலா மீது புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் இயக்குனர் முத்து மீனா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நிர்மலா (வயது 26). இவர் மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மும்பை பாந்த்ரா போலீசார் தேடி வந்தனர்.
    • நிர்மலா சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சேலம் வந்த போலீசார் அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நிர்மலாவை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் பாதுகாப்பட்டி சண்முகா நகர் அடுத்த ஜவகர் நகர் பகுதி சேர்ந்த வெங்கடேசன். இவரது மகள் நாகமணி என்கிற நிர்மலா (வயது 26). இவர் மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மும்பை பாந்த்ரா போலீசார் தேடி வந்தனர்.

    நிர்மலா சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சேலம் வந்த போலீ சார் அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நிர்மலாவை கைது செய்தனர். பின்பு அவரிடம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசா ரணை நடத்தி னர். விசா ரணையில், நிர்மலா தனது கூட்டாளிக ளுடன் மும்பை பாந்த்ரா பகுதியில் பகுதியில் உள்ள நகை கடையில் பழைய நகையை மாற்றி புது நகை எடுப்பது போல் காண்பித்து கவரிங் நகையை கொடுத்து மோசடி யில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    நகைக்கடை உரிமையா ளர் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்து நிர்மலாவின் கூட்டாளி களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சேலத்திற்கு வந்து நிர்ம லாவை கைது செய்துள்ள னர். இதை தொடர்ந்து நிர்மலாவை போலீசார் சேலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் ஆஜர் படுத்தினர். இதை தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் நிர்மலாவை மும்பைக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    • கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து அதற்கான வட்டியினை தராமல் இழுத் தடித்துள்ளார்.
    • திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    அண்ணா நகர் 6-வது அவென்யூவை சேர்ந்தவர் கணேஷ். இவரை சாலி கிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஹரி வெங்கடேஷ்வரன் தொடர்பு கொண்டு எனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 1.5 சதவீதம் மாதம் வட்டி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    அதை நம்பி கணேஷ் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தின் கர்நாடக வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்கு 3 மாதங்கள் வட்டியினை கணேசுக்கு ஹரி கொடுத்து உள்ளார்.

    அதன்பின்பு மீண்டும் முதலீடு செய்ய கூறியதால் வட்டிக்கு ஆசைப்பட்டு மேலும் ரூ.10 லட்சத்தை அனுப்பியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து அதற்கான வட்டியினை தராமல் இழுத் தடித்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை கணேஷ் திருப்பி கேட்ட போது சரியான பதில் அளிக்கவில்லை. கணேசின் மனைவி திவ்யா போலீசில் பணத்தை ஏமாற்றி மிரட்டுவதாக ஹரி வெங்கடேஷ்வரன் மீது புகார் செய்தார். புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • திருவெறும்பூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் ரூபாய் மோசடி
    • 10 ஆண்டுகள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதால் மோசடி செய்தவரை தேடுவதில் போலீசாருக்கு சிக்கல்

    திருச்சி,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செங்குந்தபுரம் கம்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (வயது 54). இவர் முன்பு திருப்பரம்பூர் ஜெய் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கே.ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை தனக்கு நன்கு தெரியும். உங்கள் மனைவிக்கு ஆசிரியை பணி வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கல்யாணசுந்தரம் கடந்த 2023 நவம்பர் 8ம் தேதி ஒரு ரூ.3 லட்சம் பணத்துக்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். ஆனால் அவர் வேலை வாங்கித் தரவில்லை. பின்னர் பணத்தை திருப்பி கேட்ட போது ஒரு ரூ. 22,000 மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட கல்யாணசுந்தரம் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கல்யாணசுந்தரம் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நடந்து பத்து ஆண்டுகள் கழித்து புகார் வந்துள்ளதால் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • மர்ம நபர் ஒருவர் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றார்.
    • புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள லட்சுமி கார்டனை சேர்ந்தவர் சதாசிவம்.

    இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 32). ஐ. டி. ஊழியர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்தது அதில் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புவனேஸ்வரி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.

    பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். மேலும் அவர் பிட்காயின் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் கூறினார்.

    இதனை உண்மையான நம்பிய புவனேஸ்வரி முதற்கட்டமாக முதற்கட்டமாக அவர் கூறிய வங்கி கணக்கில் அதற்குரிய வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் பணம் செலுத்தினார்.

    இதனை அடுத்து அவருக்கு லாபமாக ரூ.2800 பணம் கிடைத்தது. மேலும் ஆன்லைன் மூலமாக அவர்கள் அனுப்பிய பணிகளை செய்து கொடுத்தார்.

    அப்போது அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு காலகட்ட ங்களில் ரூ.8.97 லட்சம் பணம் அனுப்பினார்.

    ஆனால் அவர் கூறியபடி ஆனால் லாபத் தொகை கிடைக்கவில்லை. மர்ம நபர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ஆனந்தாநகரை சேர்ந்தவர் தீபக் தாமஸ். இவரது மனைவி அனுமோல் (வயது34). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரிடம் புதுவை காவல்துறையில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரராக பணிபுரியும் சணில்குமார்(41) மற்றும் இவரது அண்ணன் சுகேஷ் (43) ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை அருகே மொரட்டாண்டியில் குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறினர்.

    இதனை நம்பி அனுமோல் வீட்டுமனை வாங்க சணில்குமார் மற்றும் சுகேஷிடம் முன் பணம் கொடுத்தார்.

    இதுபோல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள், நர்சுகள் 17 பேர் வீட்டுமனை வாங்க ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சணில்குமார் மற்றும் சுகேஷிடம் ரூ.40 லட்சம் முன்பணம் கொடுத்தனர்.

    ஆனால் அவர்கள் வீட்டுமனை வாங்கிதர வில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மர்ம நபர் பிரபல ஓட்டல் குறித்து சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்றார்.
    • இது குறித்து விஜயகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் விஜயகுமார்(40). இவரது செல்போனுக்கு டெலிகிராம் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் என கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர், லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் பிரபல ஓட்டல் குறித்து சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் எனவும், அதற்கு ஆன்லைனில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறி அதற்கான வழி–முறைகளை தெரிவித்தார்.

    இதனையடுத்து அவருக்கு முதலில் 858 ரூபாய் கமிஷன் கிடைத்தது. பின்னர் அவர் ரூ.10,500 முதலீடு செய்தார்.

    அதற்கு அவருக்கு கமிஷன் தொகையுடன் சேர்த்து ரூ.17,948-ம், 3-வதாக முதலீடு செய்த ரூ.38,686க்கு கமிஷனுடன் சேர்த்து ரூ.51,015 கிடைத்தது.

    இதனை தொடர்ந்து சிறிது, சிறிதாக அவர் அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.7.24 லட்சம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை.

    மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்கிற்கு வரவு வைக்க முடியவில்லை.

    மர்ம நபர் அதிக கமிஷன் கிடைக்கும் என நம்ப வைத்து மொத்தம் ரூ. 7.24 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்து விட்டார். இது குறித்து விஜயகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பென்னக்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்
    • விசாரணைக்கு பின்னர் போலீசார் சிறையில் அடைத்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து லப்பை குடிக்காடு அருகேயுள்ள பென்னகோனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி .இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் சந்தோஷ்குமார் துபாயில் டிரேடிங் செய்து ஐந்து சதவீத வட்டி தருவதாக கூறி தொழில் செய்து வந்துள்ளார். இதே தொழிலை பெரம்பலூர் மற்றும் சென்னையில் அலுவலகம் அமைத்து 5 சதவீத வட்டி தருவதாக கூறி சுமார் 1300 கோடி ரூபாய் ஆயிரக்கணக்கான பேரிடம் வசூல் செய்து கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக ஒருவருக்கும் வட்டி தொகை தராததைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.இதன் அடிப்படையில் சந்தோஷ் குமாரின் மனைவி சிவசங்கரி சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில் பென்னகோணம் ஊராட்சி மன்ற தலைவரும் சந்தோஷ் குமார் என்பவருடைய தாயாருமான ஜெயலட்சுமி மீது மங்களமேடு காவல் நிலையத்தில் சுமார் 5 கோடியே இருவது லட்சம் பண மோசடி புகாரை சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த வினோத்துடன் ஐந்து பேர் புகார் அளித்திருந்தனர் .புகாரை விசாரித்த மங்களமேடு போலீசார் ஜெயலட்சுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×