search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத்"

    • இந்தியா- ஸ்பெயின் உறவுக்கு புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்தியாவை விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற பணியாற்றி வருகிறோம்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டி.ஏ.எஸ். எல்) ஆலை அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த வளாகத்தில் ராணுவத் துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    ராணுவத்துக்காக மொத்தம் 56 சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டி.ஏ. எஸ். எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

    ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கும்.


    இந்திய பாதுகாப்பு படைகளுக்காக சி-295 ரக விமானங்களை தயாரிக்க உள்ள டாடா விமான உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசும் இன்று காலை கூட்டாக திறந்து வைத்தனர். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

    எனது நண்பரும், ஸ்பெயின் பிரதமருமான பெட்ரோ சான்செஸ் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியா- ஸ்பெயின் இடையேயான உறவுக்கு புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலையானது இந்தியா-ஸ்பெயின் இடையேயான உறவை வலுப்படுத்துவதுடன், 'இந்தியாவில் தயாரிப்பு' 'உலகத்துக்கான தயாரிப்பு' ஆகிய திட்டங்களை வலுப் படுத்தியுள்ளது.

    சமீபத்தில் நாட்டின் மிகச் சிறந்த மகனான ரத்தன் டாடாவை நாம் இழந்தோம். அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால், அவரது ஆன்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

    நான் குஜராத் முதல்-மந்திரியாக இருக்கும்போது தொடங்கப்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலை மூலம், இன்று வெளிநாடுகளுக்கு ரெயில்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அது போன்று இந்த ஆலையில் இருந்து எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு விமானங்களை ஏற்றுமதி செய்யும் என்று நம்பிக்கை உள்ளது.

    நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி அமைப்பில், இந்தியா புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. 10 ஆண்டுகளுக்கு முன், உறுதியான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், இந்த உச்சத்தை அடைந்திருக்க வாய்ப்பில்லை.

    நாம் எடுத்த முடிவுகளுக்கான பலன் நம் கண்முன் இருக்கிறது. பொதுப் பணித்துறையை வலுப்படுத்த, பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்தோம்.

    உத்தரபிரதேசம், தமிழகத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு தளவாடங்கள், உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்து துறையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். இந்தியாவை விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற பணியாற்றி வருகிறோம். வருங்காலத்தில் இந்தியாவிலேயே பயணிகள் விமானங்களும் தயாரிக்கப்படும்.

    தற்போது, இந்திய விமான நிறுவனங்கள் 1,200 விமானங்கள் வாங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளன. விரைவில் இந்த ஆலை, இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக தேவை களையும் பூர்த்தி செய்யும் வகையில் முக்கியப் பங்காற்ற போகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசும்போது, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்தில் இருந்து முதல் விமானம் 2026-ல் வெளிவர தயாராகும் என்றார்.

    முன்னதாக வதோரா வந்த மோடியும், பெட்ரோ சான்செசும் வாகன பேரணியில் பங்கேற்றனர். அவர்களுக்கு மக்கள் சாலையின் இருபுறமும் கூடி வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிற்பகல் அம்ரேலிக்கு செல்லும் அவர் பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்கிறார்.

    இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

    • பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.
    • ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும்.

    குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டி.ஏ.எஸ்.எல்) வளாகத்தை மோடி- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    ராணுவத்துக்காக மொத்தம் 56 சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டி.ஏ.எஸ்.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

    ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளிக்கும்.

    இதைதொடர்ந்து, பிரதமர் மோடி லட்சுமி விலாஸ் அரண்மனையை பார்வையிட்டார். மதியம் 2.45 மணிக்கு அம்ரேலிக்கு செல்லும் அவர் பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்கிறார்.

    இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த ராணுவ விமான ஆலை மூலம், விமானப்படைக்குத் தேவையான 'சி-295' ரக போர் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளன.

    • சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது.
    • ராணுவ விமானத்தை தயாரிக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (28-ந்தேதி) குஜராத் செல்கிறார். காலை 10 மணிக்கு வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டி.ஏ.எஸ்.எல்) வளாகத்தை மோடி-ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள்.

    இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    ராணுவத்துக்காக மொத்தம் 56 சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டி.ஏ.எஸ்.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

    ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளிக்கும்.

    11 மணிக்கு அங்குள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். மதியம் 2.45 மணிக்கு அம்ரேலிக்கு செல்லும் அவர் பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்கிறார்.

    இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    • கனடாவில் டெஸ்லா கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தினால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது.

    கனடாவின் டொராண்டோ அருகே டிவைடரில் மோதிய டெஸ்லா எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    குஜராத்தை சேர்ந்த கேட்டா கோஹில் (30) மற்றும் நில் கோஹில் (26) ஆகியோர் மேலும் 2 நபர்களுடன் டெஸ்லா எலக்ட்ரிக் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது டிவைடரில் டெஸ்லா கார் மோதியுள்ளது. அதனால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக காரின் கண்ணாடிகளை உடைக்க சிலர் முயன்றதாக இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

    • 2019 முதல் 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்
    • தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார்

    குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, போலி மருத்துவமனை, போலி அரசு அலுவலகங்கள் அமைத்து நடத்தப்பட்ட மோசடிகள் அம்பலமாகின. இந்நிலையில் இதையெல்லாம் மிஞ்சும் வகையில் போலி நீதிமன்றம் நடத்தப்பட்டு குஜராத்தில் மோசடி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    குஜராத் காந்திநகரைச் சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்ற 37 வயது நபர் கடந்த 2019 முதல் தற்போது 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை ஒரு தீர்ப்பாயத்தின் நீதிபதி போலக் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிய இவர் நிலத்தகராறு பிரச்னைகளுக்கு ஒரு பக்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவதாக கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

     

    சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் சாமுவேல், இருதரப்பு மனுதாரர்களையும் தொடர்பு கொண்டு, உங்கள் பிரச்சனையைத் தீர்க்க அரசு தன்னை நியமித்துள்ளதாகக் கூறுவார். அவர்களை காந்திநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைப்பார்.

    இந்த அலுவலகத்தை நீதிமன்றம் போன்று செட் அப் செய்துள்ள அவர், மனுதாரர்களை விசாரணை செய்வதுபோல் பாவலா செய்து தனக்கு யார் பணம் கொடுத்தாரோ அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குவார். சாமுவேலின் கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் நடிப்பார்கள். இதை உண்மையான நீதிமன்றம் என்று நம்பி பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

    பால்டி பகுதியில் உள்ள அரசு நிலம் தன்னுடையது என்றும் வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். அவரிடம் பணம் பெற்ற சாமுவேல் இவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதாவது, தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார். ஆனால் அந்த உத்தரவு போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பான விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். 

    • போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகி லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் உள்ளார்
    • சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக் கதிதான் நேரும் என்றும் மிரட்டல் விடுத்தது.

    மகாராஷ்டிர அரசியல் தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஸ்னோய் தலைக்கு   ரூ.1.11 கோடி பரிசு அறிவித்துள்ளது சத்ரிய கர்னி சேனா என்ற அமைப்பு.

    வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகி தற்போது குஜராத் சபர்மதி சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ள நிலையில் கர்னி சேனாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக் பாபா சித்திக் அவரது எம்எல்ஏ மகனின் அலுவலகத்துக்கு வெளியே வந்துகொண்டிருந்தபோது மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

     

    இந்த வழக்கில், கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் அரியானாவைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை போலீசார்,கைது செய்தனர். இதற்கிடையே பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது. மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த கும்பல், சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக் கதிதான் நேரும் என்றும் மிரட்டல் விடுத்தது.

    இந்த நிலையில்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக சத்ரிய கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அவ்வமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் செகாவத், "லாரன்ஸ் பிஷ்னோயை கொல்லும் எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

     

    முன்னதாக ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னிசேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொகாமடி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மக்களை உளவியல் ரீதியாக கவரும் பொய்க் கணக்கு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
    • ஒவ்வொருவராக போன் நம்பரை கேட்டு OTP நம்பரை சொல்லச்சொல்லி தொந்தரவு செய்துள்ளனர்.

    இந்தியா முழுவதும் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் இலக்கோடு பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் உ.பி.யில் 2 கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததாக பாஜக கணக்கு காட்டியது. ஆனால் இது மக்களை உளவியல் ரீதியாக கவரும் பொய்க் கணக்கு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.

    அதிக உறுப்பிடர்களை சேர்க்க கட்சி மேலுடம் அழுத்தம் கொடுப்பதாலும், எந்த பகுதியில் அதிகம் உறுபினர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்ற போட்டியும் கட்சிக்குள் உள்ளது. அந்த வகையில் குஜராத்தில் நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ரன்சோதாஸ் பாபு டிரஸ்ட் கண் மருத்துவமனையில் நடு இரவில் புகுந்த பாஜகவினர் அங்கு கேடராக்ட் கண் அறுவை சிகிச்சை செய்து  படுத்து தூக்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரையும் எழுப்பி அவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளனர். 

    அவர்களை எழுப்பி ஒவ்வொருவராக போன் நம்பரை கேட்டு OTP நம்பரை சொல்லச்சொல்லி தொந்தரவு செய்துள்ளனர். மேலும் அவர்களின் போன்களில் கட்சி உறுப்பினராகச் சேர்க்கப்பட்டதன் கன்பர்மேஷன் மெசேஜ் வந்த பிறகே பாஜகவினர் அங்கிருந்து நகர்ந்துள்ளனர்.

    இதுதொடர்பாக பேசிய மருத்துவமனை டிரஸ்ட் தலைவர்,  தங்கள் டிரஸ்ட்  மூலம்  இலவச  கண்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதை தவறாக பயன்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தில் எங்களது டிரஸ்ட் உறுப்பினர் யாருக்கேனும் தொடர்பிருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருவதாக  ராஜ்கோட் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதை பலர் நகைக்கத்தக்க விஷயமாக பார்த்தாலும், இந்த பிரச்சனையின் தீவிரம் குறித்தும் சிலர்  எச்சரிக்கின்றனர். 

    • வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார்.
    • ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் இறந்துபோன பாம்பிற்கு இளைஞர் ஒருவர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வதோதரா மாவட்டத்தில் வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார். ஒரு அடி நீளமுள்ள ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    அந்த இடத்தில் எவ்வித அசைவும் இல்லாமல் விசமில்லாத பாம்பு ஒன்று இருந்துள்ளது. உடனே பாம்பின் வாயில் வாய் வைத்து தத்வி மூச்சுக்காற்று கொடுத்துள்ளார். முதல் 2 முறை மூச்சுக்காற்று கொடுத்தபோதும் அசைவில்லாமல் இருந்து பாம்பு மூன்றாவது முறை மூச்சுக்காற்று கொடுத்தபின்பு உயிர் பிழைத்துள்ளது.

    உயிர்பிழைத்த பாம்பு பின்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து தத்வி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
    • ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி 11,000 வைரக் கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.

    • நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத்தில் கட்டுமானப்பணியின்போது சுவர் இடித்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜசல்பூர் பகுதியில் காடி என்று இடத்தில் தனியார் தொழிற்சாலையின் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.

    நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் சிலர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். இன்று மதியம் மதியம் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 10 தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.

    மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.

    • குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
    • இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1814 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின்போது இந்த போதைப்பொருள் சிக்கியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.

    • 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்
    • பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது.

    அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று ஜென் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

     

    2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்தியப் பிரதமர் ஆவதில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது மோடி குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்று வருகிறது.

    கட்சி தொடக்க விழாவின்போது அவர் பேசியதாவது, குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் அவரது பேச்சுகளைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தோம்.

     

    ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது. பீகார் மக்கள் வேலை வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்தால் பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    ×