search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150704"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • அடிக்கடி என்னை சந்திக்க வருவார். நாங்கள் நீண்ட நேரம் பேசி கொண்டு இருப்போம். இதனை குப்புசாமி பார்த்துள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 40). பழக்கடை ஊழியர்.

    இவர் அவரது வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குப்புசாமியை அடித்து கொலை செய்த பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த பிராய்லர் கடை உரிமையாளர் அருண்குமார் (28)என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி என்னை சந்திக்க வருவார். நாங்கள் நீண்ட நேரம் பேசி கொண்டு இருப்போம். இதனை குப்புசாமி பார்த்துள்ளார்.

    சம்பவத்தன்று நான் எனது கோழிக்கடை பின்புறம் சென்றேன். அப்போது அங்கு குப்புசாமி மது குடித்து கொண்டு இருந்தார். அவர் என்னையும், என்னுடன் பழகும் இளம்பெண்ணையும் தவறாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நான் கேட்டபோது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் குப்புசாமி அவரது வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை கொலை செய்யும் திட்டத்துடன் கையில் உருட்டு கட்டையுடன் பின் தொடர்ந்து சென்றேன். அவரது வீட்டின் அருகே சென்ற போது தலையில் தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். பின்னர் நான் தலைமறைவாக இருந்தேன். போலீசார் என்னை விசாரணை நடத்தி கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட அருண்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர்.
    • சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் நவீன்குமார்(35). இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பருடன் வீடடைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இன்று காலையில் கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் உள்ள ஒரு பாறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே குடிபோதையில் உடன் வந்தவர் நவீன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பிஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்து அவரை தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ்(6) என்ற மகனும், தியா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் நவீன்குமாரின் மனைவியிடம் விசாரித்தபோது தனது கணவரிடம் செல்போன் இல்லை என்றும், தன்னிடம் மட்டுமே செல்போன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரது செல்போனை வாங்கி யார் யாருக்கு போன் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா அல்லது கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • சண்முக பிரியா அவருடன் வேலை பார்க்கும் மாரியம்மாளிடம் தகராறு குறித்து கூறி உள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் துறையூர் மேட்டில் தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சண்முக பிரியா (34). இவர் ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு தனது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கேட்ட போது கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து சண்முக பிரியா அவருடன் வேலை பார்க்கும் மாரியம்மாளிடம் கூறி உள்ளார். மேலும் தன்னுடைய கணவரை தண்டிக்க வேண்டும் என கூறினார். பின்னர் இவர்கள் 2 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி படுகாயம் ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி மதுரையை சேர்ந்த 8 பேர் கொண்ட கூலிப்படையை ரூ.3 லட்சத்துக்கு பேசி முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று மணிகண்டன் தனது டிரைவர் கார்த்திக் என்பவருடன் தொழிற்சாலையில் இருந்தார். அப்போது வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அவர் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்தார். அப்போது அதில் தொழிற்சாலைக்கு வெளியே சிலர் நிற்பது தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் வெளியே சென்று உங்களுக்கு யார் வேண்டும் என கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து 8 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து மணிகண்டன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிகண்டனின் மனைவி சண்முக பிரியா மாரியம்மாளுடன் சேர்ந்து ரூ.3 லட்சம் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தனது கணவரை தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சண்முகபிரியா, மாரியம்மாள் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.

    • கள்ளக்காதல் விவகாரம் நதியாவின் கணவருக்கு தெரிந்ததால் அதனை கண்டித்துள்ளார்.
    • கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகளுடன் நதியா வீட்டைவிட்டு வெளியேறினார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 36), லாரி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் மனைவி நதியா (32). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    செல்போன் 'ராங் கால்' மூலம் தங்கராஜிக்கும், நதியாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து செல்போனில் இருவரும் பேசி வந்தனர். பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. தங்கராஜ், அடிக்கடி சென்னைக்கு சென்று நதியாவை சந்தித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் நதியாவின் கணவருக்கு தெரிந்ததால் அதனை கண்டித்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகளுடன் நதியா வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர், தண்டராம்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து நதியாவும், தங்கராஜும் குடும்பம் நடத்தியுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மாங்காடு சென்ற நதியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் இரவு தங்கராஜின் சொந்த கிராமத்துக்கு வந்தார்.

    கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி ரேகா, இருவரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அதைத்தொடர்ந்து தங்கராஜ் மற்றும் நதியா ஆகியோர் பெரியகோலாப்பாடி கிராமத்தில் உள்ள முருகர் கோவில் பகுதிக்கு சென்றனர்.

    அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அழைத்து செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என நதியா மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தங்கராஜ், சேலையால் கழுத்தை நெரித்து நதியாவை கொலை செய்தார்.

    அப்போது, கிராம மக்கள் அந்த பகுதிக்கு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தங்கராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஈஸ்வரிக்கும், சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் அய்யப்பன் (வயது35). தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள சுடலை கோவிலில் புகுந்து சாமி சிலையை சேதப்படுத்தினார். இதனைதொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அய்யப்பனின் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தினால் தான் அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அய்யப்பனுக்கும், அவரது மனைவி ஈஸ்வரிக்கும் (வயது29) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் சீனித்துரை. விவசாயி. இவரது தோட்டத்திற்கு ஈஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். இந்த பழக்கத்தின் காரணமாக ஈஸ்வரிக்கும், சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 12-ந்தேதி அய்யப்பன் வீட்டிற்கு வந்த போது, ஈஸ்வரியும், சீனித்துரையும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார். இதனால் மனம் உடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவருக்கு ஆத்திரம் குறையாததால் வீட்டில் உள்ள துணிகளுக்கு தீ வைத்துள்ளார்.

    பின்னர் சுடலை கோவிலுக்குள் சென்று சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

    இதுகுறித்து அய்யப்பனின் தந்தை ராமையாவும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அத்துடன் அய்யப்பனின் உறவினர்களும், கிராம மக்களும் இருவரையும் கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அய்யப்பனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள சீனித்துரையை தேடி வருகின்றனர். 

    • கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
    • கள்ளக்காதலை முத்துராமலிங்கராஜன் கண்டித்து வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வட்டாலூரை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன்(வயது 45). பழைய இரும்பு வியாபாரி.

    கடந்த 9-ந்தேதி காலை பூலாங்குளம் காட்டுப்பகுதியில் முத்துராமலிங்கராஜன் கை, கால்கள் முறிக்கப்பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அதே பகுதியை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதனை முத்துராமலிங்கராஜன் கண்டித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து உஷாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உஷாவின் கள்ளக்காதலன் கடல்மணி தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து முத்துராமலிங்கராஜனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உஷாவை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவான கடல்மணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை கொண்டு ஆய்வு செய்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் பதுங்கியிருப்பதாக காட்டியது.

    உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது தூத்துக்குடியை நோக்கி அவர் சென்று கொண்டிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. அதனை வைத்து தனிப்படையினர் பின்தொடர்ந்து சென்று தூத்துக்குடியில் பதுங்கியிருந்த கடல்மணியை கைது செய்தனர்.

    அவரது நண்பரான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வட்டாலூரை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவிற்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.
    • கள்ளக்காதல் குறித்து அறிந்த முத்துராமலிங்க ராஜன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி ஆலங்குளத்தை அடுத்த அடைக்கலப்பட்டினம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன் (வயது 45). பழைய இரும்பு வியாபாரி.

    இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உஷா கணவரை பிரிந்து ஏ.பி.நாடானூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை முத்துராமலிங்க ராஜன் அங்குள்ள காட்டுப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய கை, கால்கள் முறிந்த நிலையில் இருந்தன. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    வட்டாலூரை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவிற்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த முத்துராமலிங்க ராஜன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

    ஆனாலும் 2 பேரும் அதனை கண்டு கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக முத்துராமலிங்கராஜன் கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் கடல்மணியை கைது செய்தனர். இதனால் கடல்மணிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த கடல்மணி மீண்டும் உஷாவுடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் உஷா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    முத்துராமலிங்கராஜன் உயிரோடு இருக்கும் வரை தங்களால் கள்ளக்காதலை தொடர முடியாது என்று முடிவு செய்த உஷாவும், கடல்மணியும் சேர்ந்து அவரை கொலை செய்துவிட முடிவு செய்தனர்.

    ஏற்கனவே தன்னை சிறையில் தள்ளியதால் ஆத்திரத்தில் இருந்த கடல்மணி இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்து முத்துராமலிங்கராஜனை அவரது நண்பர் ஒருவர் மூலமாக பூலாங்குளம் காட்டுப்பகுதிக்கு அழைத்து வர செய்துள்ளார்.

    அங்கு வைத்து முத்துராமலிங்கராஜனுக்கு அதிக அளவு மது வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் அவர் மதுபோதையில் மயங்கி கிடந்தார். அப்போது அங்கு வந்த கடல்மணி, அவரது கை மற்றும் கால்களை முறித்து அடித்துக்கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக உஷாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கடல்மணியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார்.
    • சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மொழுகம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 42). முன்னாள் ராணுவ வீரர். ஆரணி வி.ஏ.கே நகர் அருகில் உள்ள தேனருவி நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி ரேவதி, பிரியதர்ஷினி என்ற மகள் லிங்கேஸ்வரன், நிதின் ஆகிய மகன்கள் உள்ளனர்.

    கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி அவரது மகன் மகளுடன் ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார். அன்று இரவு ரேவதி அங்கேயே தங்கினார்.

    இந்த நிலையில் வெற்றிவேல் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேவதி அவரது கள்ளக்காதலன் நாகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து ரேவதி நாகராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலூர் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார். 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கணவனை கொடூரமாக கொலை செய்தது குறித்து ரேவதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜிடன் (41) கடந்த 3 ஆண்டுக்கு முன்பு எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம்.

    இதனையறிந்த எனது கணவர் கள்ளத்தொடர்பை கைவிடும் படி கூறினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் எனது மகள் மகன்களை அழைத்துக்கொண்டு ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன்.

    இதுகுறித்து நாகராஜுடம் தெரிவித்தேன். இருவரும் சேர்ந்து கூலிப்படை மூலம் வெற்றிவேலை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

    கடந்த மார்ச் மாதம் கூலிப்படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ராஜேஷ் (32) என்பவரை அணுகினோம். ரூ. 10 லட்சம் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தோம். கடந்த 6 மாதங்களாக எனது கணவரை கொலை செய்வதற்காக சமயம் பார்த்து காத்திருந்தேன்.

    அப்போதுதான் எனது கணவர் வெற்றிவேலுக்கு பைக் விபத்தில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன். அங்கு சிகிச்சை முடிந்து அவருடன் வீட்டிற்கு வந்தேன்.

    கணவன் தனியாக இருப்பதை பயன்படுத்தி அவரை தீர்த்து கட்ட இதுதான் நல்ல சமயம் என முடிவு செய்தேன்.

    இது குறித்து எனது கள்ளக்காதலன் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தேன். சம்பவத்தன்று அதிகாலை நாகராஜ் மற்றும் ஏற்கனவே பணம் கொடுத்து வைத்திருந்த கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது என்னுடைய கணவர் வெற்றிவேல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தினார். வலி தாங்காமல் கண் விழித்து அவர் சத்தம் போட முயன்றார். உடனே 3 பேரும் சேர்ந்து அவரை கட்டிலிலேயே அமுக்கி பிடித்தோம்.

    நான் எனது கணவரின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், வெற்றிவேலின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார். அவர்களை யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்தேன். பின்னர் எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது உறவினர்களிடம் போன் மூலம் தெரிவித்தேன்.

    அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது இறந்தது தெரியவந்தது. என் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தனர் .

    அப்போது கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்து தாக்கியதாக கூறி நாடகமாடினேன். ஆனாலும் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆணும், பெண்ணும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பாதிரிபுலியூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வனிதா கட்டிடவேலைக்கு சென்று வந்தார். அப்போது கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த ராம தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பா க்கத்தில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை ஆணும், பெண்ணும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பாதிரிபுலியூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் கள்ளக்கா தல்ஜோடி என்பது தெரியவந்தது. கடலூர் அருகே பல்லவ ராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். அவரது மனைவி வனிதா. இவர்க ளுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு சேகர் இறந்து போனார். எனவே வனிதா கட்டிடவேலைக்கு சென்று வந்தார். அப்போது கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த ராம தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராமதாஸ் பெயிண்டராக உள்ளார்.

    இந்த பழக்கம் நாளடை வில் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமை யில் சந்தித்துவந்தனர். இவரது தாய் பாலூரில் உள்ள காய்கறி ஆராய்ச்சி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு வனிதாவின் தாய் இறந்தார். எனவே வாரிசு அடிப்படையில் வனிதா வுக்கு காய்கறி ஆராய்ச்சி பண்ணையில் வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்ததால் ராமதாசை அடிக்கடி சந்திக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்துள்ளனர். என்றாலும் வனிதா அடிக்கடி வெளியூறுக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். உடனே உறவினர்கள் அவரை தேடினர். அப்போது அவர் பாதிரிகுப்பத்தில் இருப்பது தெரியவந்தது.

    உடனே உறவினர்கள் கண்டித்ததால் சொந்த ஊரான பல்லவராய நத்தம் கிராமத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்தார். இதனிடையே காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்கு வனிதா வேலைக்கு செல்லவில்லை. எனவே அங்குள்ள அதிகாரிகள் வனிதாவை கேள்விகேட்டனர். இதனால் மனமுடைந்த வனிதா வீட்டை விட்டு திடீரென வெளியேறினார். உடனே உறவினர்கள் தேடினர். அப்போது வனிதா கூத்தப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் வனிதாவும், ராமதாசும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக உறவின ர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் மனைவி சென்னையில் உள்ளார். அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • பிரேத பரிசோதனை முடிவில் அம்சலேகாவின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • ராஜீவ்காந்தி வீட்டுக்கு ஏழுமலை அடிக்கடி வருவதுண்டு. அப்போது மகாலட்சுமிக்கும், ஏழுமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பா.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு என்கிற ஏழுமலை (வயது 29). அவரது மனைவி அம்சலேகா (27). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் நிகில் என்ற மகன் உள்ளார்.

    கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை அம்சலேகா வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் விரைந்து சென்று அம்சலேகாவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனை முடிவில் அம்சலேகாவின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏழுமலையை கண்காணித்தனர். மேலும் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஏழுமலையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலிக்காக ஏழுமலை தனது மனைவி அம்சலேகாவை கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. ஏழுமலைக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி மனைவி மகாலட்சுமி என்பவருக்கும் தொடர்பு இருந்தது. ராஜீவ்காந்தி எலவனாசூர்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக உள்ளார். இவர் ஏழுமலையின் நண்பர் ஆவார்.

    அப்போது ராஜீவ்காந்தி வீட்டுக்கு ஏழுமலை அடிக்கடி வருவதுண்டு. அப்போது மகாலட்சுமிக்கும், ஏழுமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த விபரம் ராஜீவ்காந்திக்கு தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் கொலை செய்யப்பட்ட அம்சலேகாவுக்கு தெரியவந்தது.

    எனவே சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை தனது மனைவி என்றுகூட பாராமல் கொடூரமாக தாக்கினார். இதில் அம்சலேகா மயங்கி விழுந்தார்.

    உடனடியாக தனது நண்பரான ஆஸ்பத்திரி ஊழியர் ராசுவ்காந்திக்கு தெரிவித்தார். அவர் விரைந்து வந்து மயக்கம் தெளிவதற்காக ஊசி போட்டார். ஆனாலும் அம்சலேகா எழுந்திரிக்கவில்லை. இந்த விபரத்தை ஏழுமலை தனது அக்காள் கணவர் ரவிகார்த்திக்கிடம் தெரிவித்தார். அவர் நேராக ஏழுமலை வீட்டுக்கு வந்தார். அப்போது அம்சலேகா இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இந்த விசயம் வெளியே தெரியாமல் இருக்க அவர்கள் அம்சலேகாவை கழுத்தை இறுக்கி அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர்.

    ஊர் மக்களிடம் தனது மனைவி தற்கொலை செய்துவிட்டதாக கூறி நாடகமாடி உள்ளனர். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ஏழுமலை, ராஜீவ்காந்தி, மகாலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவிகார்த்திக்கை தேடி வருகிறார்கள்.

    • அஸ்ரப் அலி யூசுப்புக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
    • அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை 

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் அஸ்ரப் அலி யூசூப் (வயது 34). காய்கறி வியாபாரி. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் அஸ்ரப் அலி யூசூப்புக்கு காளம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இவர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அஸ்ரப் அலி யூசூப்பின் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவியை பிரிந்து கள்ளக்காதலி வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று கள்ளக்காதலி வீட்டில் இருந்த அஸ்ரப் அலி யூசூப் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பேரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    ஆனைமலை

    பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணுடன் வாலிபருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் நண்பரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தனது குழந்தையுடன் மாயமாகி விட்டார். இளம்பெண்ணின் கணவர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளுடன் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×