என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியரசு"
கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தனியரசு கரூர் புலியூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவை போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தது போல, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகிய 3 பேரும் இணைய வேண்டும். இல்லையென்றால், நடைபெற உள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thaniyarasu #Edappadipalaniswami #TTVDhinakaran
ஈரோடு:
ஈரோட்டில் ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்எல்ஏவுமான தனியரசு கலந்து கொண்டார்.
பின்னர் தனியரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சிக்குள்ளேயே மாறுபட்ட சூழல் நிலவிவருகிறது. தற்போது டிடிவி தினகரன் குறிப்பிட்ட எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அரசுக்கு நெருக்கடியையும் ,சங்கடத்தையும், தடுமாற்றத்தையும் கொடுத்து வருகிறார். இதை டிடிவி தினகரன் தவிர்க்க வேண்டும். ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்ததுபோல் டிடிவியும் இணைய வேண்டும்.
சபரிமலை விவகாரத்தை வைத்து கொண்டு அதில் கட்சியை உருவாக்கி மாநில முதல்வராக ஆசைப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த் இதில் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனுமதிப்பதாகவும் அதே சமயத்தில் ஐதீகம் மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார் .
இந்த கருத்து முரண்பட்டதாக உள்ளது இதன் மூலம் ரஜினி ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளார் என்பது தெளிவாகிறது. ரஜினியை அரசியலிலிருந்து தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். அவரை ஏற்க மாட்டார்கள். ரஜினி கட்சி தொடங்கினாலும் தொடங்காவிட்டாலும் அவரை ஒரு அரசியல் தலைவராக மக்கள் ஏற்க மாட்டார்கள். நடிகர் ரஜினியால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது.
இவர் அவர் கூறினார். #Rajinikanth
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
எதிர்கட்சிகளின் புகார் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்று நீதிமன்றங்கள் விரைவாக முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுத்ததில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. வழக்கு போடப்பட்டுள்ளது.
முதல்வர் தயங்காமல் பாரதியின் நெஞ்சுரத்துடன் வழக்குகளை சந்திக்க வேண்டும். நேர்மையாக இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
இது பின்னடைவு இல்லை. இந்த நடவடிக்கைக்கு முதல்வர் ஒத்துழைப்பார். ஒத்துழைக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட இந்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமி விரைவில் விடுதலையாவார்.
அமைச்சர்களை அன்பாக அணுகி தனது தொகுதிக்கு தேவையான நிதியை கருணாஸ் பெற்று இருக்க வேண்டும்.
கருணாசை இந்த அரசு மென்மையாக, தோழமையுடன்தான் பார்க்கிறது. கருணாஸ் மீண்டும் எங்களுடன்இணைந்து பணியாற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார். #Edappadipalaniswami #Thaniyarasu #Karunas #CBI
ஒமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு எம்.எல்.ஏ., நிருபரிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் மிகுந்த துயரத்தோடும், துன்பத்தோடும் கடந்த 100 நாட்களாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100-வது நாள் அந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அமைதியாக மனுகொடுக்கும் நிகழ்வை அரசு முன்கூட்டியே உளவுத்துறை மூலம் கண்டறிந்து அந்த மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயரசம்பவம் நடந்திருக்காது. ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் அறவழி போராட்டத்தை நடத்திவந்தனர். இதில் 13 பேரை சுட்டு வீழ்த்திய இந்த தமிழக அரசு அந்த மக்களை கையாண்ட முறை வேதனையளிக்கிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு முதல்வர் தரும் இழப்பீடு குறைவானது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உயிரை கொடுத்து உருவாக்கிய அரசு இந்த அ.தி.மு.க அரசு. தற்பொழுது பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து இனிமேல் இதுபோல சம்பவம் நடக்காது என உறுதி கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உறுதியளிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை குமாரசாமி கொடுக்கா விட்டால் அவருடைய அரசு நீடிக்காது, உச்சநீதிமன்றமும் கர்நாடக அரசுகுக்கு துணைபோனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை போல் வன்முறை போராட்டத்தை தமிழக மக்கள் கையில் எடுப்பார்கள். உலகத்திலேயே எந்த அரசும் பொதுமக்களுக்கு கொடுக்காத சுமையை மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு கொடுத்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை வரலாறு காணாத விலையேற்றத்தை மத்திய அரசு ஏற்றியுள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட பெறமுடியாத சூழ்நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்