என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உண்டியல்"
தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மலைப்பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 11 மணி நேரமும் ரூ.300 டிக்கெட் எடுத்த பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று ஏழுமலையானை 70,713 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். #Tirupati
அரக்கோணம்:
அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளிலும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் நடப்பதற்காக தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள், பணிகள் முடிந்தபின்னர் சரிவர மூடப்படவில்லை.
அரக்கோணம், பழனிப்பேட்டை, வி.பி.கோவில் தெரு மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்புஅந்த வழியாக நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி உள்பட பல்வேறு துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரக்கோணம் வி.பி.கோவில் தெருவை சேர்ந்த ஆர்.மோகன் (வயது 40) என்பவர் தனது சலூன் கடை முன்பாக நேற்று தெருவில் உண்டியல் வைத்து தெருவை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வலியுறுத்தி ஒவ்வொரிடமும் ஒரு ரூபாய் வீதம் உண்டியலில் வசூலித்து நூதன போராட்டம் நடத்தினார். இதில் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து உண்டியலில் ஒரு ரூபாயை செலுத்தினர்.
இது குறித்து ஆர்.மோகன் கூறுகையில், ‘‘நான் வசிக்கும் தெரு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. தெருக்களை சீரமைக்க நகராட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது கடை முன்பாக உண்டியல் வைத்து ஒரு நபரிடம் ஒரு ரூபாய் வசூலித்து போராட்டம் நடத்துகிறேன். உண்டியலில் வசூலிக்கப்படும் பணத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளேன்’’ என்றார்.
நகராட்சி ஆணையாளர் சண்முகம் (பொறுப்பு) கூறுகையில், ‘‘அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த தெருக்களில் சாலைகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. பணிகள் முடியாத தெருக்களில் பணிகள் முடிக்கப்படும். மிக விரைவில் ரூ.5 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்’’ என்றார். #ArakkonamRoad
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கல்லுமேட்டு பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கலியங்குப்பத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் பூசாரியாக உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை கொளஞ்சி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி கருவிகள், 100 கிலோ எடையுள்ள பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்களையும் காணவில்லை. இதுகுறித்து அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தையும், கோவிலில் இருந்த ஒலிபெருக்கி கருவிகள், பித்தளை உள்ளிட்ட பொருட்களையும் திருடி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. 2 உண்டியல்களிலும் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்