என் மலர்
நீங்கள் தேடியது "திருட்டு"
- மழைநீர் சூழ்ந்த பகுதியில் பார்வதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
- போலீசாரை கண்டதும் திருடர்கள் பயந்து தலைத்தெறித்து ஓடினர்.
கடலூர்:
வடலூர் அருகே பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் 2 நாட்களாக பெய்த கன மழையினால் ஓடைகள் மற்றும் வயல்களில் மழை நீரால் நெற்பயிர்கள் மூழ்கியது. பார்வதி புரம், மழைநீர் சூழ்ந்த பகுதியில் பார்வதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பார்வதிபுரம் வயல்களின் அருகே சுடுகாடு அருகில் என்.எல்.சியில் இருந்து எடுத்து வந்த காப்பர் கம்பியை திருடி வந்த திருடர்கள் கம்பியை தீயிட்டு, கொளுத்தி பிரித்தெடுத்து கொண்டி ருந்தனர். இதனை கண்ட கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி, வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்.ஐ சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் திருடர்கள் பயந்து தலைத்தெ றித்து ஓடினர். பின்னர் அங்கி ருந்த 80 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ இரும்பு காப்பர் கம்பியை போலீசார் பறி முதல் செய்தனர் இதை யடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பார்வதிபுரம் கிராமம் இந்திரா நகரை சேர்ந்த அந்தோணிராஜ், அந்தோணிராஜ் மகன் ஸ்டீபன் மற்றும் அடையாளம் தெரியாத பலர் மீது வழக்கு பதிந்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இருவரையும் இரும்பு திருடர்கள் என்று அடையாளம் கண்டதாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் கூறினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் முசாபர்பூரில் இரும்பு திருடியதாகக் கூறி இரண்டு நபர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முசாபர்பூர் நகரத்தில் உள்ள ஒரு பாலத்தின் அருகே இரும்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கம்பிகள் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு குவிண்டால் இரும்பு திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டு நபர்கள் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் இருவரையும் இரும்பு திருடர்கள் என்று அடையாளம் கண்டதாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் கூறினர். உடனே அப்பகுதியினர் ஒன்றுதிரண்டு, அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் இரண்டு நபர்களும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். அவர்கள் இருவரும் கம்பி திருடியதாக குற்றம்சாட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இரும்பு திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முசாபர்பூரில் வசிப்பவர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
- போர்வெல் லாரியில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயின
- சி.சி.டி.வி. காமிரா காட்சி மூலம் 3 பேர் சிக்கினர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் விஜயகுமார் என்பவர் மூன்று வருடங்களாக போர்வெல் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் போர்வெல் கடையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்து போர் போடும் இரும்பு ராடுகளை சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள 6 ராடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
காலையில் கடை உரிமையாளர் விஜயகுமார் வந்து பார்த்தபோது திருடு போனது அதிர்ச்சி அடைந்த அவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது டாட்டா ஏசி வாகனத்தில் திருடி செல்வது தெரியவந்துள்ளது.
ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி பிரியா இளங்கோவன் மற்றும் பாஸ்கர் மொய்சன் ஆகியோர் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் போர்வெல் லாரியில் திருடியவர்கள் ஜெயங்கொண்டம் கீழ தெரு பகுதியைச் சேர்ந்த விஜய், அன்புச்செல்வன், குடியரசன் ஆகியவர்கள் என தெரியவந்தது. மூன்று பேரையும் பிடித்து இரும்பு ராடுகள், டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- பெண் விவசாயி வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
- ஸ்கூட்டரில் வைத்த சாவியை எடுத்து கைவரிசை
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகர் வடக்கு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அருக்காணி (வயது 36). இவர் அருகே உள்ள ஒருவருக்கு சொந்தமான வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று அருக்காணி தனது வீட்டை பூட்டி விட்டு, அதன் சாவியை வீட்டிற்கு முன்புறம் நிறுத்தி இருந்த, அவரது ஸ்கூட்டரில் வைத்து விட்டு, வயலுக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.50 மணிக்கு வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மர்மநபர்கள் நோட்டமிட்டு ஸ்கூட்டரில் இருந்த வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருக்காணி இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- 2021-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி வண்டி திருட்டு போனது.
- செல்போனுக்கு நாகை போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.
தஞ்சாவூர் :
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழியிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கி ஓட்டி வந்தேன். 2021-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி இரவு விருத்தாச்சலம் காந்தி நகர் அருகே உள்ள சாவடி குப்பத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டின் எதிரில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தேன்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது எனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. எனது மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்து விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன்.
இந்த நிலையில் கடந்த மாதம் எனது செல்போனுக்கு நாகை போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதால் ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது.
ஏற்கனவே மோட்டார் சைக்கிள் காணாமல் போனதால் மனவேதனையில் இருந்த நான் இந்த குறுந்தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதனையடுத்து நான் எனது நண்பர்களுடன் நாகை மாவட்டத்திற்கு சென்று சில நாட்கள் எனது மோட்டார் சைக்கிளை தேடிப்பார்த்தேன்.
அப்போது நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருபவர் எனது மோட்டார் சைக்கிளை வைத்திருப்பதும், அவர் சிறுவன் ஒருவனுடன் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது.
அவர் போலீஸ்காரர் என்பதால் அவரிடம் எனது மோட்டார் சைக்கிள் குறித்து பேச பயமாக உள்ளது. எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து திருடு போன எனது மோட்டார் சைக்கிளை அந்த போலீஸ்காரரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
- அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் வட்ட கரை ஆர்.சி. சர்ச் ரோட்டில் கன்னியர்மடம் உள்ளது.இங்கு கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ளனர்.
நேற்று காலை கன்னியர் மடத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் ஆலயத் திற்கு சென்றனர். பின்னர் கன்னியர் மடத்திற்கு வந்த போது அங்கிருந்த ரூ.45 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் பணத்தை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.இதையடுத்து ஆசாரிப்பள் ளம் போலீசில் புகார் செய்த னர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்த னர்.
அப்போது கொள்ளை யன் ஒருவன் கன்னியாஸ்திரிகள் வெளியே செல்வதை நோட்டமிட்டு கன்னியர் மடத்துக்குள் புகுந்து பணத்தை எடுத்துச் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாஸ்திரிகள் வெளியே செல்வதை நோட்டமிட்டு வாலிபர் கைவரிசை காட்டியிருப்ப தால் கொள்ளையில் ஈடுபட் டது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- வீடு புகுந்து 2¼ பவுன் நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- பீரோவை உடைத்து எடுத்து சென்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 52). சம்பவத்தன்று நள்ளிரவு இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 2¼ பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்."
- கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை திருடிய பிரபல கொள்ளையன் போலீசார் கைது செய்தனர்.
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பகுதி சேர்ந்தவர் பழனிவேல் (வயது 57). இவர் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடந்த வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பழைய பித்தளை பொருட்கள், காப்பர் பொருட்கள், மற்றும் ஒயர்கள் செல்ப் மோட்டார்கள், போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பழனிவேல் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இதனிடையே பொருட்களை திருடியது சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சங்கர் (32) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் நேற்று சங்கரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- போலீஸ்காரரின் 5 பவுன் செயின் அபேஸ் செய்த மர்ம நபரை தேடிவருகின்றனர்
- பேருந்தில் சென்று கொண்டிருந்த போது சம்பவம்
திருச்சி:
தொட்டியம் தோளூர் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 30). இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தோளூர் பட்டியில் உள்ள தனது பெற்றோர்களை பார்ப்பதற்காக ரஞ்சித் குமார் திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் தொட்டியம் யூனியன் ஆபீஸ் அருகில் இருந்து தோளூர் பட்டிக்கு ஒரு அரசு பஸ்ஸில் ஏறினார். அந்த பஸ் முசிறி கைகாட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் மாயமானது கண்டு திடுக்கிட்டார்.
மர்ம நபர்கள் அவரது செயினை அபேஸ் செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீஸ்காரர் ரஞ்சித் குமார் முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்ஸில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஐந்து பவுன் செயினை தொலைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
- ராமநாதபுரத்தில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.
- இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சொர்ண கணபதி (வயது 36). இவர் ராமநாதபுரம் சபாநடேச ஐயர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு மாமியார் மற்றும் மனைவி குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பொருட்களை திருடிச் சென்றனர். நேற்று வீடு திரும்பிய சொர்ண கணபதி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் 9 பவுன் மற்றும் வெள்ளியிலான சாமி பொருட்கள், சாமி விளக்குகள், 2 பஞ்சாத்திர ருத்திரயாணி, ஒரு சந்தனபேழை, ஒரு குங்கும சிமில் ஆகியவை திருடு போயிருந்தது.
இதுகுறித்து அவர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இயற்கையின் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.
உடுமலை :
உடுமலை பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீசார் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- உடுமலை பகுதியில் பல இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து வீடு புகுந்து திருடிய குற்றவாளிகள் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.இந்தநிலையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதை விட சம்பவம் குறித்து வெளியே தெரியாமல் மறைப்பதிலேயே போலீசார் ஆர்வம் காட்டுகின்றனர்.அந்தவகையில் உடுமலையில் முக்கிய சாலையான கல்பனா சாலையில் கேரளாவைச் சேர்ந்த சிபு ஜோஸ் என்பவர் பல ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.அந்த கட்டிடத்திலேயே அவருடைய வீடும் உள்ளது.இந்தநிலையில் அவருடைய வீட்டின் முன் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதிகாலை நேரத்தில் 2 மர்ம நபர்கள் அவருடைய வீட்டு வளாகத்துக்குள் புகுந்து மோட்டார் சைக்கிளை தள்ளிச் செல்வது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.மேலும் அதே இரவில் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள அப்பாவு வீதியில் சீனு என்பவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதற்கு சில நாட்களுக்கு முன் காந்திநகரிலுள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பொதுவாக நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிக்கு இடையிலான,மக்கள் அசந்து தூங்கும் நேரத்திலேயே திருடர்கள் கைவரிசை காட்டுகின்றனர்.அந்த நேரத்தில் போலீசாரும் ரோந்துப் பணியை கிட்டத்தட்ட முடித்து விட்டு ஓய்வெடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.இது திருடர்களுக்கு சாதகமாக மாறி விடுகிறது.உடுமலை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.மேலும் ஒரு பகுதிக்கு போலீசார் ரோந்து முடித்துச் சென்று விட்டால் மீண்டும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை திருடர்களுக்கு ஏற்படாத வண்ணம் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு திடீர் விசிட் செய்ய வேண்டும்.மேலும் இரவு ரோந்துப் பணியின் போது சைரன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அத்துடன் வீடுகள் மற்றும் வீதிகளில் கண்காணிப்புக்கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
கனிம வளங்களை கொள்ளை அடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இயற்கையின் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.அதை உணர்த்தும் விதமாக உடுமலையை அடுத்த அமராவதி காவல் சரக பகுதியில் முறையான அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பேணிக்காத்து சேதாரம் இல்லாமல் பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தலையாய கடமையாகும்.இதில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு அதிக அளவில் உள்ளது.குறிப்பிட்ட இடைவெளியில் ரோந்து மற்றும் களஆய்வு சென்று கனிமவளங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது தலையாய கடமையாகும்.
ஆனால் உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது.கடந்த சில நாட்களாக மலை அடிவாரப் பகுதி மற்றும் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடிவைத்து தகர்த்து சைஸ்,சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்தும் நிலத்தடி நீர்உயர்வுக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண்ணை கடத்திச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன.மேலும் கிராவல்மண் கடத்தல் வெளியில் தெரியாத வகையில் மண்ணை முழுவதுமாக தண்ணீரில் நனைத்து லாரியில் லோடு ஏற்றி செல்கின்றனர்.இதனால் சாலை முழுவதும் ஈரப்பதம் அடைந்து சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில நபர்களின் சுயலாபத்திற்காக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலை சேதம் அடைவது வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி கனிம வள கொள்ளையால் இயற்கை மாற்றம் அடைந்து வருங்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுடன் உடந்தையாகவும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழு வீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனால் பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து கனிமவள கொள்ளையை தடுத்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்ற அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.
- சேத்தூரில் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் உபகரணங்கள் திருடு போயின.
- சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
சென்னையை சேர்ந்தவர் முத்து வெங்கடகிருஷ்ணன் (வயது 52). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது நிறுவனம் சார்பில் 2009-ம் ஆண்டு ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள முகவூர் ரோட்டில் செல்போன் டவர் நிறுவப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அந்த டவர் செயல்பாடின்றி இருந்தது.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் செல்போன் டவரில் இருந்த விலையுயர்ந்த பேட்டரிகள், மின் சாதனங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது. இதன் மதிப்பு ரூ. 26 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். இதுகுறித்து வெங்கடகிருஷ்ணன் சேத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.