search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    • குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை பகுதியில் சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதால் அதனை உயர்த்தி கட்டி, மாணவியரின் சங்கடத்தை போக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நகர மகளிரணி நிர்வாகி சித்ரா பொதுப்பணித்துறை அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினார்.

    இதற்கு நாமக்கல் செயற்பொறியாளர் அருள் பதில் அனுப்பிய கடிதத்தில், இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து நிதி பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் பணி செயலாக்கத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது பற்றி சித்ரா கூறுகையில், மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து என்னை நிதி பெற்று தர சொல்வது, பொதுநல ஆர்வலர்களை இழிவு படுத்துவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தில் இந்திய கப்பற்படையில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்
    • சேலம், நாமக்கல் மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    இந்திய நாட்டின் முப்படைகளான ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிக அளவில் நியமிக்க முடிவு செய்து மத்திய பா.ஜ.க. அரசு அக்னி பத் திட்டத்தை கடந்த 14-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த புதிய பணி நியமன முறையை 'டூர் ஆப் தி டூட்டி' என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். மாதந்தோறும் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் ஊதியம், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

    4 ஆண்டுகள் முடிவில் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் பட்டப்படிப்பு படித்து முடித்தற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

    20 சதவீதம் பெண்கள்

    இந்த திட்டத்தில் சேர வேண்டி தமிழகத்தில் அதிக அளவில் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்திய கப்பற்படையில் பெண் மாலுமிகளும் சேர்க்கப்பட உள்ளனர். இதில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    இத்திட்டத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பணி மற்றும் இளநிலை பட்டம் வழங்கப்படுவதால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2, பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்.

    17½ வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடற்படையில் சேரும் முதல் பிரிவினருக்கு ஐ.என்.எஸ்.சில்கா போர்கப்பலில் ஓடிசாவில் வருகிற நவம்பர் மாதம் 21-ந்தேதி பயிற்சிகள் தொடங்குகின்றன.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 17½ வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பின்னர் இந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.

    இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்தத் திட்டத்தை வாபஸ் பெறமுடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்திய கடற்படையில் முதல் முறையாக வீராங்கனைகள் சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் போர்க் கப்பல்களில் பணியாற்ற உள்ளனர்.

    • குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் காலை 6 மணிக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே ஒலகடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைமேடு பகுதிக்கு போதுமான ஆற்று குடிநீர் வரவில்லை என பவானி -வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் ஒலகடம் அருகே குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • விருது பெறுவதற்கு தகுதியான சிறந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறந்த சமூக சேவகர்களிடம் இருந்து கீழ்காணும் விவரப்படி இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களும் இருத்தல் வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சமூக நலம்- மகளிர் நலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனத்துக்கும், பெண்களுக்கான சிறப்பான பணிகளைச் செய்த சிறந்த சமூக சேவகர்களுக்கும் 2022-23-ம் நிதியாண்டில் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்படும் விருது பெறுவதற்கு தகுதியான சிறந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறந்த சமூக சேவகர்களிடம் இருந்து கீழ்காணும் விவரப்படி இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி விருதை பெறுவதற்கு சிறந்த சமூக சேவை நிறுவனம் மற்றும் சமூக சேவகர்களுக்கு உரிய தகுதிகளாக தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவரா–கவும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை , மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும் சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களும் இருத்தல் வேண்டும். தனிநபர் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கு தமிழக அரசின் விருதுகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், 3-வது தளம் , அறை எண்.303 (தொலைபேசி எண் 04362- 264505) தஞ்சாவூர் என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45-வது வார்டு காங்கேயம் ரோடு புளியமரத்தோட்டம் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பலதரப்பட்ட கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறும்போது , நாங்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் . நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என கூறிக்கொண்டு திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.
    • ஒரு மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட அனுப்பப்பட்டி காந்திநகர். பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு வைகை குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலை தொட்டி மூலம் தேக்கி வைக்கப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 22 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய்கள் உடைந்து இருந்ததால் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் சப்ளை முற்றிலும் தடைபட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த காந்தி நகர் மக்கள் காலி குடங்களுடன் திருமங்கலம்- செக்கானூரணி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஒரு மணி நேரம் நீடித்த மறியல் போராட்ட த்தினால் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம் அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார்.
    • சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட் மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வலிவலம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி கீழ கண்ணாப்பூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் கூடும் இடங்களில் சாராயம் விற்று வருகிறார்.

    இதுகுறித்து வலிவலம் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம் அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி தாலிச் செயினை கேட்டுச் சென்ற போது தாலி செயினை கொடுக்காமல் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்தும் வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கு எடுக்காத்தால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் ஒன்று திரண்டு முத்து கிருஷ்ணனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றனர்.அப்போது சாராய வியாபாரி தப்பித்து ஓடிய நிலையில் சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட், மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.மேலும் கூரை கொட்டகையை வெட்டி சாய்த்தனர். சாராய கடையை அந்த பகுதி மாதர் சங்க பெண்கள் அடித்து நொறுக்கி சாராய மூட்டைகளை சாலையில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீதும் அதற்கு துணைபோகும் நபர் மீதும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுத்து சாராயம் இல்லாத நாகை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் பெண்களுக்கும், பொது மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவி தலைமை வகித்தார்.
    • இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம்அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவி தலைமை வகித்தார். விழாவில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி கலந்துகொண்டு 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஜனனி, ஹேமதர்ஷினி, ஐஸ்வர்யா ஆகியோருக்கும், 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த லிதனியானா, சுமனா, காவியா, லாவண்யா ஆகிய மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.இவ்விழாவில் பாபநாசம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியர் செல்வராஜ், பாபநாசம் அன்னை சாரதா மகளிர் மன்ற தலைவி தில்லைநாயகி, சம்பந்தம், சமூக ஆர்வலர் பாண்டியன், உதவி தலைமை ஆசிரியர்கள் விஜய், சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி பேசினார்கள். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்பனா சாவ்லா விருது பெற சாதனை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கல்பனா சாவ்லா விருது ஆண்டு தோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப் பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டை மாவட்ட அணி சாம்பியன்
    • இந்தப்போட்டியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம் சாம்பியன் பட்டம் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் 2-ம் இடம் பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு குத்துச்சண்டை கழக செயலர் எம்.எஸ்.நாகராஜன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் பாக்கியமணி முன்னிலை வகித்தார். மாநில தொழில் நுட்பக் குழுத் தலைவர் டி.என்.செழியன் வரவேற்று பேசினார்.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா, புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வர் ஜின்ஸ் ஜோசப் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

    இந்தப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகள் வருகிற ஜூலை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    • பிரபல தனியார் பீடி கம்பெனியில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர்.
    • பீடி சுற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பீடி கடையை முற்றுகையிட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து செட்டியூர் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் பீடி கம்பெனியில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம், விடுமுறை, ஊதியம், பொங்கல் மற்றும் தீபாவளி போனஸ், தொழிலாளர் வைப்பு நிதி தொகை என எதுவும் அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    அதனை கண்டித்து அங்கு பீடி சுற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பீடி கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் வாசலில் நின்றுகொண்டு பீடி கம்பெனி நிர்வாகத்தை கண்டித்து கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு உடனடியாக தலையிட்டு பீடி சுற்றி வரும் பெண்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.

    பா.ஜனதா கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், தொழில் துறை பிரிவு ஒன்றிய தலைவர் சரவணன், இளைஞரணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் ஜோதி செல்வம், விளையாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் சக்தி கருப்பையா உள்ளிட்டோரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×