என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளி கைது"
- குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
- பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் படித்து வந்தார். இம்மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி 60 வயதான கூலித் தொழிலாளி பழனிசாமி என்பவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதில் கர்ப்பமான மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் இவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவிக்கு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சேலம் மாவட்ட போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியிடம் விசாரணை நடத்திய வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பூரணம் தலைமையிலான போலீசார், மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை பெற காரணமான கூலி தொழிலாளி பழனிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
மும்பை, சென்னை உட்பட பல இடங்களில் தேடிய போலீசார் ஒரு வழியாக முதியவர் பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.
- கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.
கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர். அவர்கள் அங்கு வலியால் துடித்து கொண்டிருந்த மாணவியை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவியிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 53) என்ற தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரமேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அவர் தாக்கி வந்தார்.
- ரமேஷ் வங்கி கணக்கில் உள்ள ரூ.16 ஆயிரம் பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). கூலித் தொழிலாளி.இவரது மனைவி அனிதா (26). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் ரமேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அவர் தாக்கி வந்தார். சம்பவத்தன்று ரமேஷ் வங்கி கணக்கில் உள்ள ரூ.16 ஆயிரம் பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அனிதா பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் வெளியே சென்றார்.
பின்னர் மது போதையில் வீட்டிற்கு வந்து தென்னை மட்டையால் அனிதாவை தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ரமேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
தலையில் பலத்த காயம் அடைந்து போராடிய அனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய ரமேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தம்பியுடன் நடந்து சென்ற சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
- சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் பக்கத்தில் உள்ள ஆவாரங்காடுஅருகே தனது தம்பியுடன் நடந்து வந்த 9 வயது சிறுமியை காட்டனாண்டிகுப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனுஷ் சிறுமியின் தம்பியிடம் ரூ. 10 கொடுத்து வீட்டிற்கு போக கூறினார். அதன்பின்னர் அந்த சிறுமியை தூக்கி சென்றுஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார். இது பற்றிசிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.பண்ருட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி இதுகுறித்து போக்சோசட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளி தனுஷை கைது செய்தனர்.
- கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
- நள்ளிரவு ஆகியும் பாண்டியம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டினுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.
அவர் தான் பாண்டியம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார்த்திகேயன் தொன்னம்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகே இறக்கி விடுமாறு கூறினார்.
- 2 பேரும் போதையில் அங்கேயே படுத்து தூங்கினர்.
ேகாவை,
சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் ஓதிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38) என்பவர் தன்னை தொன்னம்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகே இறக்கி விடுமாறு கூறினார். இதனையடுத்து அவரை கார்த்திக் தனது மொபட்டில் ஏற்றி சென்றார்.
இறக்கி விட்ட பின்னர் 2 பேரும் போதையில் அங்கேயே படுத்து தூங்கினர். அப்போது கார்த்திகேயன், கார்த்திக்கின் மொபட், செல்போன் ஆகியவற்றை திருடி தப்பிச் சென்றார். போதை தெளிந்து கண்விழித்த கார்த்திக் ெமாபட் மற்றும் செல்போன் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட், செல்போனை திருடிச் சென்ற கார்த்திகேயனை கைது செய்தனர். பின்னர் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தலைமறைவாக இருந்த சதீஸை அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியில் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
- சதீஸ் மீது குழந்தை திருமண தடுப்புச்சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள பொதிகுழத்தை சேர்ந்தவர் சதீஸ்(38). இவர் விறகு கரி மூட்டம் போடும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேகா, லதா, முருகலட்சுமி ஆகிய 3 மனைவிகள் உள்னர்.
கருத்து வேறுபாடு காரணமாக ரேகா, லதா பிரிந்து சென்று விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக முருகலட்சுமியுடன் அருப்புக்கோட்டை அருகே சின்னகட்டங்குடியில் சதீஸ் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சதீஸ் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய மைனர் பெண்ணை சம்பவத்தன்று சதீஸ் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் மைனர் பெண் மாயமானது தொடர்பாக அவரது தந்தை அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி உளுந்தூர்பேட்டையில் தங்கியிருந்த அந்த பெண்ணை மீட்டனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த சதீஸை அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியில் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்மீது குழந்தை திருமண தடுப்புச்சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மீட்கப்பட்ட மைனர் பெண் விருதுநகர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
- ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என சோதனை நடத்தினர்.
- மோப்ப நாய் மியா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.15 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது.
அதில் எதிர்புறம் பேசிய நபர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பெட்டி வெடிக்கும் என்று கூறி விட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அவர்கள் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என சோதனை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மியா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர்.
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை காரணமாக இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த ரெயில் தாமதமாக 8.45 மணிக்கு புறப்பட்டது.
இதேபோல் தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர். அந்த ரெயில் புறப்பட்டு செல்லும் வரை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதன் சிக்னல் குரும்பூரை காட்டியது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 42) என்பது தெரியவந்தது.
அவரை குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கணேசமூர்த்திக்கு மனைவி மற்றும் 1 மகன் இருப்பதும், அவர் வெல்டிங் பட்டறை தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி கோபித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்திய கணேசமூர்த்தி போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் விளைவிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கணேசமூர்த்தியை கைது செய்தார்.
- கொலை வழக்கில் எர்னஸ்ட் பால் என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
- இதுவரை 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி:
புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த துஷாபந்த் பெஹரா (வயது25) என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த எர்னஸ்ட் பால் (42) என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி எர்னஸ்ட் பால் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதை அவர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் செந்தில்ராஜ், மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த எர்னஸ்ட் பால் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். அவரது உத்தரவின் பேரில் எர்னஸ்ட் பாலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.
- கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
நீலகிரி
வெலிங்டன், குன்னூரில் மதுபோதையில் பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெண்ணுக்கு பாலியல் தொல்லை நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் மதுகுடித்து விட்டு போதையில் யார் வீட்டுக்குள்ளாவது நுழைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு மது குடித்துவிட்டு சரவணன் வெலிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது, அங்கிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து சரவணனை மடக்கி பிடித்தனர். கட்டிட தொழிலாளி கைது இதுகுறித்த தகவலின்பேரில் வெலிங்டன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததும், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
- சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப்பட்டியில் வசித்து வந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்ஷன் (8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
ராஜசேகர் பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் கோவித்துக் கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தேவி வந்து விட்டார். அங்கு வந்த ராஜசேகர் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுக்கவே மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராஜசேகரை அவரது உறவினர் வீடுகளில் தீவிரமாக தேடி வந்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ராஜசேகரை தேடி வந்தனர்.
அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று இரவு திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ராஜசேகர் பதுங்கி இருந்தது தெரிய வரவே போலீசார் அங்கு சென்று அவரையும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் கைது செய்தனர். பின்னர் போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப் பட்டியில் வசித்து வந்தார். இதனால் நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த விபரம் எனது மனைவிக்கு தெரியவந்தது. இதனை வைத்து அவர் தினேஷ் என்பவருடன் பழக்கத்தில் இருந்தார்.
இதனை நான் தட்டிக்கேட்டதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று தினேசுடன் தேவி பேசியது மற்றும் அவரது புகைப்படங்கள் குறித்த ஆதாரத்தைக் காட்டி கேட்ட போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
நீ கள்ளத்தொடர்பில் இருக்கும் போது நான் வேறு வாலிபருடன் பேசக்கூடாதா எனக் கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு அதிகமானது. எனவே அவரை கத்தியால் கழுத்தை அறுத்து வீட்டைப் பூட்டி விட்டு சென்று விட்டேன். அப்போது அங்கு அய்யப்ப பக்தர்களின் பஜனை கச்சேரி நடந்ததால் நாங்கள் சண்டை போட்டது வெளியே தெரியவில்லை. அதன் பிறகு எனது நண்பர்கள் சொல்லித்தான் தேவி இறந்த விபரம் எனக்கு தெரிய வந்தது. இதனால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் எனது 3 குழந்தைகளையும் என் தாயிடம் விட்டு விட்டு சென்று விட்டேன். அதன் பிறகு என் கள்ளக்காதலி சரோஜா தேவியுடன் திருச்சிக்கு வந்து விட்டேன்.
என் கையில் பணம் இல்லாததால் எனது நண்பருக்கு போன் செய்து கூகுல்பே மூலம் பணம் அனுப்புமாறு கேட்டேன். அவரும் பணம் அனுப்பி விட்டு போலீசார் தேடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.
நான் செல்போனை ஆன் செய்து பேசியதால் போலீசார் எனது இருப்பிடத்தை அறிந்து என்னை பிடித்து விட்டனர். நான் கொலை செய்த குற்ற உணர்ச்சி இருந்ததால் இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்காக பஸ்சில் ஏறி காத்திருந்தபோது போலீசார் என்னையும், சரோஜாதேவியையும் பிடித்து விட்டனர் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜசேகர் மற்றும் சரோஜா தேவியை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராஜசேகர் திண்டுக்கல் சிறையிலும், சரோஜா தேவி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- பூபதி தனது மனைவியுடன் குடும்பம் நடத்திய நண்பர் கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை மறந்து விட்டு வா, மது குடிக்கலாம் என கூறி அழைத்துள்ளார்.
- கண்ணனும் நண்பர் தானே அழைக்கிறார் என்று நம்பி திருவாக்கவுண்டனூர் பகுதியில் நண்பர் அழைத்த இடத்திற்கு வந்தார்.
சேலம்:
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36), வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பூபதியின் நண்பரான சேலம் அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் அடிக்கடி பூபதியின் வீட்டுக்கு வந்து சென்றார். இதில் கண்ணனுக்கும், சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கண்ணனுடன் அவர் தனியாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணன் மற்றும் சரண்யாவை மீட்டு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம்-2-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சரண்யா கணவருடன் செல்ல மறுத்து கண்ணனுடன் செல்வதாக எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் பூபதி தனது மனைவியுடன் குடும்பம் நடத்திய நண்பர் கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை மறந்து விட்டு வா, மது குடிக்கலாம் என கூறி அழைத்துள்ளார். கண்ணனும் நண்பர் தானே அழைக்கிறார் என்று நம்பி திருவாக்கவுண்டனூர் பகுதியில் நண்பர் அழைத்த இடத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் இருவரும் மது குடித்தனர்.
அப்போது பூபதி தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் கண்ணனை சரமாரியாக தாக்கினார். இதை சற்றும் எதிர்பாராத கண்ணன் அங்கிருந்து தலைதெறிக்க தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பூபதி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவர் போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.