search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • ஐ.டி.ஐ. அருகே கார் சென்றபோது எதிரே தஞ்சை நோக்கி வந்த மற்றொரு கார் மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிகோட்டையில் இன்று மதியம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு ஐ.டி.ஐ. அருகே அந்த கார் சென்றபோது எதிரே தஞ்சை நோக்கி மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். சிலர் பலத்த காயமடைந்தனர்.‌

    தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது கார்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிட்ரோயன் நிறுவனத்தின் eC3 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C3 காம்பேக்ட் ஹேச்பேக் மாடலை தழுவி பல்வேறு புது கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்பு தான் சிட்ரோயன் C3 கார் இந்திய சந்தையில், அந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. C3 கார் மாட்யுலர் CMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட மாடல் ஆகும்.

    இதே பிளாட்ஃபார்மில் உலகம் முழுக்க ஏராளமான கார் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில், E-CMP பிளாட்ஃபார்மில் C3 மாடலை சார்ந்த எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் சிட்ரோயன் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த காருக்கான டீசர், பெயர் விவரங்கள் உள்ளிட்டவைகளை சிட்ரோயன் அறிவித்து விட்டது. இந்த காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    சற்றே அளவில் பெரிய C3 மாடலின் ஸ்பை படங்கள் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த கார் மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட எஸ்யுவி மாடல் என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த கார் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி 7 சீட்டர் C3 எஸ்யுவி மாடல் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த கார் CC24 எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படுவதாக தெரிகிறது. இதன் டிசைன் C5 ஏர்கிராஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எஸ்யுவி மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட் கிளஸ்டர் டிசைன், புதிய செவ்ரான் லோகோ நீக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த நீளம் 4.4 மீட்டர்களாக இருக்கும் என்றும் வீல்பேஸ் 2.62 மீட்டர்களாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய 7 சீட்டர் C3 மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். முதற்கட்டமாக இந்த கார் பிரேசில் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் உண்மையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வந்த அல்டுராஸ் G4 எஸ்யுவி விற்பனையை சமீபத்தில் நிறுத்தியது.
    • கடந்த மாதம் இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்த கார் மாடல்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் (நவம்பர் 2022) இந்தியாவில் 61 ஆயிரத்து 140 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 36 ஆயிரத்து 087 யூனிட்களை விட அதிகம் ஆகும். இதில் கடந்த மாதம் 51 ஆயிரத்து 181 யூனிட்களை மஹிந்திரா விற்பனை செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 37 ஆயிரத்து 001 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மாத விற்பனையை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனம் 4 ஆயிரத்து 605 XUV700 டீசல் யூனி்ட்களை விற்பனை செய்தது. இத்துடன் 1,096 பெட்ரோல் யூனிட்கள் விற்பனை செய்தது. இதே போன்று ஸ்கார்பியோ சீரிஸ் (ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N) 4 ஆயிரத்து 181 பெட்ரோல் யூனிட்களும், 2 ஆயிரத்து 274 டீசல் யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    மஹிந்திரா தார் மாடலை பொருத்த வரை கடந்த மாதம் 3 ஆயிரத்து 759 டீசல் யூனிட்களும், 228 பெட்ரோல் யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன. XUV300 மாடலின் டீசல் மற்றும் பெட்ரோல் வெர்ஷன்கள் முறையே 3 ஆயிரத்து 108 மர்றும் 2 ஆயிரத்து 795 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இவை தவிர மஹிந்திரா பொலிரோ மாடலில் 7 ஆயிரத்து 984 யூனிட்களும், மராசோ மாடலில் 201 யூனிட்களும் விற்பனையாகின. கடந்த மாதத்தில் அல்டுராஸ் G4 மற்றும் KUIV100 Nxt பெட்ரோல் மாடல்கள் முறையே ஐந்து மற்றும் இரண்டு யூனிட்கள் விற்பனையாகின.

    • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்கள் இந்திய விற்பனையில் பெருமளவு வரவேற்பை பெற்று வருகிறது.
    • அடுத்த மாதம் முதல் மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்களை வாங்க முன்பதிவு செய்தவர்கள், அவற்றை டெலிவரி எடுக்க மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி கார்களின் வினியோகம் அதிகபட்சம் ஒன்பது மாதங்கள் வரை தாமதமாகிறது. கார்களின் காத்திருப்பு காலம், ஒவ்வொரு பகுதி மற்றும் மாடலுக்கு ஏற்ப வேறுபடும்.

    அரினா பிரிவில் மாருதி சுசுகி எர்டிகா மாடலை டெலிவரி எடுக்க வாடிக்கையாளர்கள் ஒன்பது மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து பிரெஸ்ஸா மற்றும் ஸ்விஃப்ட் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் முறையே மூன்று மற்றும் 2.5 மாதங்கள் ஆகும். டிசையர் மாடலுக்கு ஒரு மாதமும், ஆல்டோ மாடல் ஒரே வாரத்திலும் டெலிவரி செய்யப்படுகிறது.

    இதுதவிர வேகன்ஆர், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற அரினா பிரிவு மாடல்களின் காத்திருப்பு காலம் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. நெக்சா பிரிவில் மாருதி கிராண்ட் விட்டாரா, XL6 மற்றும் பலேனோ மாடல்களின் காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள் வரை உள்ளது.

    மாருதி சியாஸ் மாடலை டெலிவரி எடுக்க வாடிக்கையாளர்கள் 1.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இக்னிஸ் மாடல் ஒரு மாதத்திற்குள் வினியோகம் செய்யப்படுகிறது. காத்திருப்பு காலம் தவிர மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

    • எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய கார் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்திய சந்தையில் பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விலையை உயர்த்தி வருகின்றன.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இம்முறை எம்ஜி கார்களின் விலை ரூ. 90 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் மட்டுமின்றி மாருதி சுசுகி, கியா இந்தியா, ரெனால்ட் இந்தியா, ஆடி இந்தியா, மெர்சிடிஸ் பென்ஸ், ஜீப் போன்ற நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கின்றன. பெரும்பாலான கார் உற்பத்தியாளர்களும் ஆண்டு துவக்கத்திலேயே விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளன. தொடர்ந்து அதிகரிக்கும் உற்பத்தி செலவீனங்கள், உதிரி பாகங்கள் விலையை உயர்வே வாகன விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

    விலை உயர்வு தவிர எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி புதிய மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இத்துடன் ஹெக்டார் பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம். இரு கார்களை தொடர்ந்து எம்ஜி நிறுவனம் ஏர் EV எலெக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்கிறது.

    புதிய எம்ஜி ஏர் EV இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும். தற்போது எம்ஜி நிறுவனம் ZS EV எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. புதிய எம்ஜி ஏர் EV விலை இந்தியாவில் ரூ. 10 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 கார்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு தங்கள் செல்போன் வெளிச்சம் மற்றும் செய்கைகள் மூலம் சுமார் 300 மீட்டருக்கு முன்பாக ரெயிலை நிறுத்தினர்.
    • பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் தாய்-மகள் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் ரீத்தாபுரத்தை சேர்ந்தவர் வர்கீஸ் (49).

    இவர் நேற்று இரவு திங்கள்நகரில் இருந்து அழகிய மண்டபத்திற்கு காரில் வந்தார். காரில் அவரது மகள் ஆஷா (24), ஆஷாவின் மகள் செரியா (4) ஆகியோர் அமர்ந்திருந்தனர். கார் பரம்பை ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது வழி தெரியாமல் ரெயில்வே துறையினர் போட்டு இருந்த மண்பாதையில் சென்று விட்டனர்.

    சிறிது தூரம் சென்றதும் பாதை மாறிவிட்டதை உணர்ந்த வர்கீஸ் காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரெயில்வே தண்ட வாளத்தில் கவிழ்ந்தது.

    அப்போது திருவனந்த புரத்தில் இருந்து நாகர் கோவில் நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டி ருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு தங்கள் செல்போன் வெளிச்சம் மற்றும் செய்கைகள் மூல மும் சுமார் 300 மீட்டருக்கு முன்பாக ரெயிலை நிறுத்தினர். இதுபற்றி திங்கள்நகர் தீயணைப்பு நிலையம், ரெயில்வே துறைக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதனிடையே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வந்த ரெயில் இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கயிறு மூலம் காரை கட்டி இழுத்து மீட்டனர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில்கள் இயக்கப் பட்டன.

    பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் தாய்-மகள் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • ஆடி நிறுவனத்தின் Q2 மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் சர்வதேச சந்தையில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆடி நிறுவனத்தின் Q3 மாடல் இந்தியாவில் அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக மாறுகிறது.

    ஆடி இந்தியா நிறுவம் தனது Q2 ஆடம்பர காம்பேக்ட் எஸ்யுவி மாடலை சத்தமின்றி தனது வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட Q2 மாடல்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலக சந்தையிலும் ஆடி Q2 உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஆடி Q2 விற்பனை முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. அந்த வகையில் புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஆடி Q2 மாடல் நிறுத்தப்படும் என ஆடி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    ஆடி நிறுவனம் பெரிய பிரீமியம் கிராஸ்ஓவர் மற்றும் எஸ்யுவி மாடல்கள் மீது அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் அக்டோபர் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யுவி மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 228 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் கிராஷ் டெஸ்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • மஹிந்திரா மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களும் இந்த கிராஷ் டெஸ்டில் கலந்து கொண்டிருந்தன.

    குளோபல் NCAP கிராஷ் டெஸ்டிஸ் மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N மாடல் சோதனை செய்யப்பட்டது. இதில் அந்த கார் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கியது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. கார் நேரடியாக மோதியது மட்டுமின்றி, பக்காவாட்டு பகுதியில் இடிக்கும் போதும் சோதனை செய்யப்பட்டது. அதிலும் புதிய ஸ்கார்பியோ நல்ல புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    பக்கவாட்டு பரிசோதனையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N எஸ்யுவி மாடல் 17-க்கு 16 புள்ளிகளை பெற்றது. சைடு போல் டெஸ்டில் "OK" என்ற மதிப்பெண் பெற்றது. இந்த டெஸ்டில் பாடிஷெல் மற்றும் ஃபூட்வெல் பகுதிகள் மிகவும் திடமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பெரியவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட பரிசோதனையில் ஸ்கார்பியோ N மாடல் 34-க்கு 29.25 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    குழந்தைகள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 49-க்கு 28.93 புள்ளிகளை பெற்றது. இதில் மூன்று ஸ்டார்களையும், பெரியவர்கள் பயணம் செய்யும் போது நடத்திய சோதனையில் ஐந்து ஸ்டார்களை பெற்றது. குளோபல் NCAP வழிமுறைகளின் படி குறிப்பிட்ட புள்ளிகளை பெற்றால் மட்டுமே காருக்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.

    Photo Courtesy: Global NCAP

    • குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் மாருதி சுசுகி, மஹிந்திரா என பல்வேறு முன்னணி நிறுவன கார் மாடல்கள் பரிசோதனை செய்யப்பட்டன.
    • கிராஷ் டெஸ்டில் கலந்து கொண்ட கார்கள் பெற்ற முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன.

    குளோபல் NCAP 2022 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலை மீண்டும் ஒரு முறை டெஸ்ட் செய்தது. இதில் புதிய ஸ்விஃப்ட் கார் வெறும் 1 ஸ்டார் பெற்று அதிர்ச்சி அளித்து இருக்கிறது. ஸ்விஃப்ட் மாடலுடன் இக்னிஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ N போன்ற மாடல்களும் டெஸ்ட் செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்த புது விதிமுறைகளின் கீழ் இந்த கார்கள் டெஸ்ட் செய்யப்பட்டன.

    இதில் டெஸ்ட் செய்யப்பட்ட மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முன்புறம் இரட்டை ஏர்பேக், சீட் பெல்ட் பிரிடென்ஷனர்கள், ரியர் ISOFIX ஆன்கர்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஸ்விஃப்ட் மாடலை முன்னதாக 2018 வாக்கில் குளோபல் NCAP டெஸ்ட் செய்து இருந்தது. அப்போது இந்த கார் இரண்டு ஸ்டார்களை பெற்று இருந்தது.

    2022 ஸ்விஃப்ட் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட டெஸ்டில் 34-க்கு வெறும் 19.19 புள்ளிகளையே பெற்று இருந்தது. முன்புறமாக இடிக்கும் போது ஸ்விஃப்ட் கார் ஓட்டுனர் மற்றும் முன்புற இருக்கையில் அமர்ந்து இருந்த பயணிக்கு சிறந்த பாதுகாப்பை அளித்து இருக்கிறது. பக்கவாட்டில் நடத்தப்பட்ட டெஸ்டில் ஸ்விஃப்ட் கார் பயணிகளின் மார்பு பகுதியை சரியாக பாதுகாக்கவில்லை.

    குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட டெஸ்டில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடல் 49-க்கு 16.68 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதில் டைனமிக் ஸ்கோர் 12.82 புள்ளிகளும், CRS (சைல்டு ரெஸ்ட்ரைன் சிஸ்டம்) இன்ஸ்டாலேஷன் ஸ்கோர் 3.86 புள்ளிகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் இருவித என்ஜின்கள், நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் இந்திய விலை ரூ. 1 கோடியே 64 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த ஆண்டு தனது மாடல்களை அப்டேட் செய்தது. இதில் 2022 ரேன்ஜ் ரோவர் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் அறிமுகமானது. இந்திய சந்தையில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் இருவித என்ஜின், நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்த நிலையில், 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் டெலிவரி இந்தியாவில் துவங்கி விட்டதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலில் மிக மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், ஃபிலஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், கன்மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புது மாடலில் 13.1 இன்ச் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் 13.7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், பவர்டு கூல்டு/ஹீடெட் முன்புற இருக்கைகள், ஏர் பியூரிஃபயர், 23 ஸ்பீக்கர் கொண்ட மெரிடியன் ஸ்டீரியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்போர்ட் மாடல் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. செயல்திறனை பொருத்தவரை பெட்ரோல் என்ஜின் 394 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் 346 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் டெரைன் ரெஸ்பான்ஸ் 2 ஆஃப்-ரோடு ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • கேரளாவுக்கு கடத்தியபோது பிடிபட்டது
    • போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசாரும், வருவாய்த்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்தி தடுப்பதோடு, கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமை யிலான பணியாளர்கள், கல்குளம் வட்டம் குளச்சல் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தே கத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது.

    அந்த காரை நிறுத்தும் படிஅதிகாரிகள் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து சற்று தூரம் தள்ளி கார் நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்த னர். அப்போது காருக்குள் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளில் இருப்பது தெரியவந்தது. அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அரிசி மூடைகள் உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படை க்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டது. கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • ஒர்க்‌ஷாப்பில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் ஆவின் அலுவலகம் அருகே கார் ஒர்க்‌ஷாப் செயல்பட்டு வருகிறது. அங்கு கார் ஒன்றை ஊழியர்கள் இன்று பழுது பார்த்துக் கொண்டி ருந்தனர். அப்போது அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த கார் முற்றிலுமாக எரிந்து விட்டது.

    கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×