search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • வால்வோ இந்தியா நிறுவனம் இரண்டு கார்களின் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது பேஸ்லிப்ட் மாடல்களின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.

    வால்வோ இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வரும் தனது கார்களின் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பேஸ்லிப்ட் மாடல்கள் விலையை வால்வோ நிறுவனம் செப்டம்பர் 21 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.

    அதிகம் எதிர்பார்க்கப்படும் வால்வோ XC40 இம்முறை பெட்ரோல் மட்டுமின்றி மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என தெரிகிறது. இதே காரின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு மாற்றாக 2023 வேரியண்ட் அறிமுகமாகிறது.


    புதிய பேஸ்லிப்ட் மாடலில் கூர்மையான ஹெட்லைட்கள், ஃபிரேம்லெஸ் கிரில், ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய எக்ஸ்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. XC40 மாடல் மட்டுமின்றி வால்வோ XC90 மாடலும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

    வால்வோ XC90 புது வெர்ஷனில் புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த கார்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விலை அறிவிக்கப்பட்ட பின் துவங்கும்.

    • வாகனங்கள் மங்கலம் - பல்லடம் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன.
    • இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    திருப்பூர் :

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பொங்கலூரில் நடந்த கட்சி பிரமுகர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி நேற்று வந்தார். காலை 11 மணி அளவில், அவருக்கு திருப்பூர் அடுத்த மங்கலம் நால் ரோடு அருகே, கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

    இதனால் வாகனங்கள் மங்கலம் - பல்லடம் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன. அவ்வழியே பெண் ஒருவர் ஓட்டிவந்த கார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் இடது காலில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் மீது மோதிய பெண் குறித்து விசாரித்துவருகின்றனர்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் புதிய மஹிந்திரா லோகோவுடன் விற்பனையகம் வந்தடைந்துள்ளது.
    • முன்னதாக XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N போன்ற மாடல்களில் மட்டுமே புது லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது புது லோகோவை அனைத்து மாடல்களிலும் வழங்கும் பணிகளை மெல்ல துவங்கி இருக்கிறது. தற்போது மஹிந்திராவின் புது லோகோ XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N என மூன்று மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலும் விரைவில் புது லோகோவுடன் விற்பனைக்கு வருகிறது.


    புகைப்படத்தில் இருப்பதை போன்றே மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் நாட்டின் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ட்வின் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் காரின் கிரில், வீல் மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் புதிய பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. புகைப்படத்தில் இருப்பது மஹிந்திரா பொலிரோ நியோ டாப் எண்ட் N10 (O) வேரியண்ட் ஆகும்.

    காரை சுற்றி புது லோகோ தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    Photo Courtesy: The Car Show

    • மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக கார் சக்கரங்களுக்கு அருகே விழுந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பொன்மணி ( வயது 27). இவரது வீடு அருகே வசிப்பவர் சேகர் மகன் தேவேந்திரன்(28). இருவரும் பணிக்கம்பட்டி அடுத்து உள்ள க.அய்யம்பாளையம் பகுதியில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக தேவேந்திரன் மோட்டார்சைக்கிளில், பின்புறம் பொன்மணி அமர்ந்து கொள்ள இருவரும் சின்னியகவுண்டம்பாளையம் நோக்கி வந்தனர். பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில், சின்னிய கவுண்டம்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக கார் சக்கரங்களுக்கு அருகே விழுந்தனர். காயங்களுடன் தப்பிய அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் கண்காணிப்பு கேமரா விபத்து காட்சிகள் பல்லடம் பகுதியில் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

    • கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் புது மைல்கல் சாதனையை எட்டி அசத்தி இருக்கிறது.
    • இந்த மைல்கல்லை எட்ட கியா இந்தியா மூன்று ஆண்டுகளையே எடுத்துக் கொண்டுள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் 1 லட்சத்தி 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய உற்பத்தியை துவங்கிய மூன்றே ஆண்டுகளில் கியா இந்தியா இத்தகைய சாதனையை எட்டி இருக்கிறது. இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க 95 நாடுகளுக்கு செல்டோஸ், சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்களின் 1 லட்சத்து 50 ஆயிரத்து 395 யூனிட்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கியா செல்டோஸ் மட்டும் 72 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 54 ஆயிரத்து 153 யூனிட்கள், ஆகஸ்ட் மாதத்தில் 8 ஆயிரத்து 174 யூனிட்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்து இருக்கிறது.


    இதன் மூலம் மாதாந்திர ஏற்றுமதியில் கியா புது சாதனை படைத்து இருக்கிறது. மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தென்னமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு கியா இந்தியா தனது கார் மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    "சர்வதேச அளவில் கியா நிறுவனத்திற்கு இந்தியா மிக முக்கியமான சந்தை ஆகும். இந்தியா எங்களின் விற்பனை, உற்பத்தி மற்றும் ஆய்வுக்கு மிக முக்கிய களமாக மாறி வருகிறது. கியா நெட்வொர்க்கில் அனந்தபூர் ஆலை ஏற்றுமதிக்கு சிறந்த தளமாக விளங்குகிறது. இந்த ஆலையில் இருந்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தரமான வாகனங்களை அளித்து வருகிறோம்."

    "இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் உலக அரங்கில் நல்ல வரவேற்பை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியாவின் உற்பத்தி திறனுக்கு சான்றாக அமைவதோடு, தரமான வாகனங்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் திறன் நம்மிடம் அதிகம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது," என கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் மியுங் சிக் சோன் தெரிவித்து இருக்கிறார்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • புது காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் இந்திய சந்தையில் ஒருவழியாக C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்து விட்டது. புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் விலை ரூ. 36 லட்சத்து 67 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே இந்த மாடலில் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படவில்லை. மாறாக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலின் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.


    இந்த மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்-களுக்கு மாற்றாக தற்போது ஒற்றை எல்இடி ஹெட்லைட், ட்வின் எல்இடி டிஆர்எல்கள் காரின் முன்புற கிரில் பகுதியில் இணையும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதன் பம்ப்பரில் செங்குத்தான ஏர் இண்டேக்குகள் உள்ளன.

    பக்கவாட்டு பகுதியில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் 18 இன்ச் அலாய் வீல்கள், கிளாஸ் பிளாக் மிரர் கேப்கள், மேட் பிளாக் ரூஃப் ரெயில் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்மபட்ட எல்இடி டெயில் லைட்கள், 3டி கிராபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் 10 இன்ச் ஃபிரீ ஸ்டாண்டிங் இன்போடெயின்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 176.8 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஹூண்டாய் டக்சன், ஜீப் காம்பஸ் மற்றும் போக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X4 மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது X4 மாடலின் 50 ஜாரெ எம் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ X4 ஜாரெ எம் எடிஷன் மாடல் விலை ரூ. 72 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பிஸ்போக் எஸ்யுவி மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித பவர்டிரெயின்களில் கிடைக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் அதன் ஸ்டாண்டர்டு மாடல்களை விட ரூ. 1 லட்சம் வரை விலை அதிகம் ஆகும். ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பெரிய கிட்னி கிரில், கிளாஸ் பிளாக் பினிஷ், முன்புறம் மற்றும் பின்புறம் M லோகோ இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் M ஏரோடைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இது பாடி கலர் அப்ரான் மற்றும் சைடு சில்களை வழங்குகிறது. இத்துடன் 20 இன்ச் ஜெட் பிளாக் அலாய் வீல்கள் மற்றும் M ஸ்போர்ட் பிரேக் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.


    காரின் உள்புறம் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்போர்ட்ஸ் சீட்கள், மெமரி ஃபன்ஷன், ரியர் இருக்கைகளில் ரிக்லைன் வசதி, லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், M ஹெட்லைனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய பிஎம்டபிள்யூ X4 ஜாரெ எம் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த என்ஜின்கள் முறையே 251 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 261 ஹெச்பி பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ X4 30i 50 ஜாரெ எம் எடிஷன் விலை ரூ. 72 லட்சத்து 90 ஆயிரம் என்றும் பிஎம்டபிள்யூ X4 30d 50 ஜாரெ எம் எடிஷன் விலை ரூ. 74 லட்சத்து 90 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் இந்திய விலை விவரங்களை அறிவிக்க துவங்கி உள்ளது.
    • முதற்கட்டமாக அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் நான்கு வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா இந்திய சந்தையில் தனது புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் நான்கு வேரியண்ட்கள் விலையை அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த காரின் விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எஸ்யுவி-க்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும்- நியோ டிரைவ் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஸ்டிராங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் என இரண்டு வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்போது டாப் எண்ட் பிரிவில் கிடைக்கும் நான்கு வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    அதன்படி புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த காரின் செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வெர்ஷனில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் இ டிரைவ் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 79 ஹெச்பி பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் அதிகபட்சம் 114 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.

    அர்பன் குரூயிசர் நியோ டிரைவ் வெர்ஷனில் 1.5 லிட்டர் K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் இண்டகிரேடெட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 101 ஹெச்பி பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    • ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.
    • கார்களின் புதிய விலை இந்த மாதமே அமலுக்கு வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ், i20, வெர்னா, i20 N லைன், வென்யூ மற்றும் கிரெட்டா மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. அதன் படி இந்த கார்களின் புது விலை இந்த மாதமே அமலுக்கு வருகிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    பெட்ரோல் என்ஜின் கொண்ட கிராண்ட் i10 நியோஸ் மாடலின் விலை தற்போது ரூ. 6 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. இந்த காரின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டு விட்டன. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் டீசல் என்ஜின் வேரியண்ட்களின் விலை உயர்த்தப்படவில்லை. மேலும் ஹூண்டாய் ஆரா மாடல் விலையும் உயர்த்தப்படவில்லை.


    மிட்-சைஸ் செடான் மாடல் வெர்னா விலை ரூ. 3 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மட்டும் பொருந்தும். டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 8 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் வென்யூ டீசல் மற்றும் கிரெட்டா டீசல் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி டீசல் மாடல் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கிரெட்டா டீசல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 3 ஆயிரமும், டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை ரூ. 6 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் i20 மாடலின் விலை ரூ. 9 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • ஹோண்டா நிறுவனத்தின் சப்-காம்பேக்ட் செடான் அமேஸ் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
    • இந்திய சந்தையில் ஹோண்டா அமேஸ் மாடல் 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது அமேஸ் சப்-காம்பேக்ட் செடான் மாடல் இந்திய விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹோண்டா அமேஸ் மாடல் ஒன்பது ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் இரண்டு ஜெனரேஷன் மாடல்கள் மற்றும் சில பேஸ்லிப்ட் வெர்ஷன்களில் அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஹோண்டா அமேஸ் இருந்து வருகிறது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த மாதாந்திர விற்பனையில் அமேஸ் மாடல் மட்டும் 40 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. இதுதவிர அமேஸ் மாடலின் மொத்த விற்பனையில் 60 சதவீதம் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சந்தைகளில் நடைபெற்று இருக்கிறது.


    அதிக விற்பனை மட்டுமின்றி இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் குறைந்த விலை கார் மாடல் என்ற பெருமையை அமேஸ் பெற்று இறுக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 63 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    "ஹோண்டா அமேஸ் மாடல் விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை எட்டி இருப்பது பெருமை மிக்க தருணம் ஆகும். இந்த காரை அன்புடன் ஏற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றி. மேலும் பிராண்டுக்கு தொடர்ச்சியாக ஆதரவாக செயல்பட்டு வரும் விற்பனையாளர்களுக்கும் நன்றி. இந்தியாவில் எங்களின் எண்ட்ரி லெவல் மாடலாக ஹோண்டா அமேஸ் இருந்து வருகிறது."

    "பிரீமியம் செடான் மாடல் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களின் எதிர்பார்ப்புகளை கடந்துள்ளது. இதுவே அமேஸ் மாடல் பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் ஆகும்," என ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டகுயா சுமுரா தெரிவித்தார்.

    • ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல் கார்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • விலை மாற்றம் ராங்ளர் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என ஜீப் தெரிவித்து இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. விலை உயர்வில் ஜீப் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி ஜீப் ராங்ளர் மாடலின் அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் வேரியண்ட் விலை முன்பை விட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் முதல் துவங்குகிறது.


    ஜீப் காம்பஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 32 லட்சத்து 22 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போதைய விலை உயர்வை அடுத்து ஜீப் காம்பஸ் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இதே ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாத வாக்கில் ஜீப் காம்பஸ் விலை முறையே ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய M2 மாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த காரில் பெரும்பாலும் ரியர் வீல் செட்டப் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் அடுத்த தலைமுறை M2 மாடலை அக்டோபர் 11 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. G87 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் சிறய M கார் இரண்டவாது தலைமுறை மாடல் ஆகும். புதிய M2 மாடலில் S58 என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 450 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அறிமுகமாகும் CS/CSL மற்றும் காம்படிஷன் வெர்ஷன்கள் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் பெரும்பாலும் ரியர் வீல் செட்டப் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் எக்ஸ்-டிரைவ் AWD வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம்.


    தோற்றத்தில் புதிய M2 அதன் வழக்கமான மாடலை போன்றே காட்சியளிக்கும். 2 சீரிஸ் கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் நிலையில், பெரிய ஏர் இண்டேக், குவாட் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பெரிய அலாய் வீல்கள், க்ரிப் டயர்கள், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் கோ-ஃபாஸ்ட் வெர்ஷனில் லிப் ஸ்பாயிலர் வழங்கப்பட இருக்கிறது.

    உள்புறம் ஐடிரைவ் 8 வழங்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் திறன் இல்லாத கடைசி M கார் மாடல் ஆகும். புதிய தலைமுறை M2 மாடலை தழுவி பாரம்பரிய பிஎம்டபிள்யூ 3.0 CSL மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ×