search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓட்டல் அதிபர் பரிதாப இறந்தார்.
    • உயிருக்கு போராடிய அவரது மனைவி சாந்திலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 51).இவர் அதே பகுதியில் இயற்கை உணவகம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது மனைவி சாந்திலட்சுமியிடம் காரில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் இருவரும் நள்ளிரவு நேரத்தில் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இரவு 1.30 மணியளவில் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் கார் சென்றுகொண்டிருந்தது. உப்போடை பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த பஞ்சாட்சரம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய அவரது மனைவி சாந்திலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்கோடா நிறுவனம் பல்வேறு புது கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யவும் ஸ்கோடா முடிவு செய்துள்ளது.

    ஸ்கோடா நிறுவனம் கடந்த மாதம் நெக்ஸ்ட் விஷன் கான்செப்ட் மாடல் வரைபடங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த காரின் டிசைன் வரைபடங்களை ஸ்கோடா வெளியிட்டு உள்ளது. கான்செப்ட் மாடல் விஷன் 7S என அழைக்கப்படுகிறது. இந்த கார் மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட 7-சீட்டர் மாடல் ஆகும். டிசைன் வரைபடங்களில் இந்த கார் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய விஷன் 7S எஸ்யுவி மாடல் என ஸ்கோடா தெரிவித்து உள்ளது. வரைபடங்களின் படி இந்த காரின் வீல் ஆர்ச்கள் மீது பிளாக்டு-அவுட் கிளாடிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புறம் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட், ஏழு செங்குத்தான ஸ்லிட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் கிரில் மெல்லியதாக மாற்றப்பட்டு, ஹெட்லேம்ப் அதிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய டிஆர்எல்கள் காணப்படுகிறது.


    காரின் பின்புறம் டி டிசைன் டெயில் லேம்ப்கள், ரேன்க்டு ரியர் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளது. ஒட்டுமொத்த டிசைனுக்கு ஏற்ப இந்த காரின் விங் மிரர்கள் மெல்லியதாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    வரும் வாரங்களில் இந்த கார் பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல கார் மாடலாக மாருதி 800 விளங்குகிறது.
    • இந்தியாவில் மாருதி நிறுவன விற்பனையில் கணிசமான பங்குகளை மாருதி 800 பெற்று இருக்கிறது.

    மாருதி 800 காரை அறியாதவர்கள் இருக்க முடியாது எனலாம். இத்தகைய பிரபலமான ஹேச்பேக் மாடல் இந்தியாவில் முதல் முறையாக 1983 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் மாருதி 800 அமோக வரவேற்பை பெற்றதோடு, பலரும் கார் வாங்க காரணமாக அமைந்தது.

    1983 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாருதி 800 சமீபத்தில் 39 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதை ஒட்டி முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி 800 மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் மாருதி 800 முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.


    முதல் மாருதி 800 கார் மாருதி உத்யேக் லிமிடெட் நிறுவனத்தின் ஹரியானா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த காரின் சாவி டெல்லியை சேர்ந்த ஹர்பல் சிங் என்பவருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வழங்கினார். இந்த காரின் பதிவு எண் DIA 6479 ஆகும். இந்த காரை 2010 ஆம் ஆண்டு தான் மரணிக்கும் வரை ஹர்பல் சிங் வைத்திருந்தார்.

    இவரின் மறைவுக்கு பின், மாருதி 800 கார் அவரின் வீட்டு வாசலில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக துவங்கியது. இதே போன்று மாருதி சுசுகி நிறுவனமும் இந்த புகைப்படத்தை பார்த்து, காரை புதுப்பிக்கும் விருப்பத்தை தெரிவித்து இருந்தது. இதை அடுத்து காரின் ஒரிஜினல் உதிரிபாகங்கள் கொண்டு கார் புதுப்பிக்கப்பட்டது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேச்பேக் மாடல் டியாகோ அதன் பாதுகாப்பு திறனுக்கு பெயர் பெற்ற மாடல் ஆகும்.
    • டாடா நிறுவனத்தின் பெரும்பாலான கார் மாடல்களும் பாதுகாப்பு சோதனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன.

    டாடா டியாகோ கார் பயன்படுத்தும் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர், குடும்பத்துடன் அதில் பயணம் செய்து கொண்டு இருந்தார். சம்பவத்தன்று டியாகோ காரில் மொத்தம் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். கார் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருந்த போது, நிலை தடுமாறியதை அடுத்து கார், 25 அடி ஆழத்தில் விழுந்தது.

    கோர விபத்தை அடுத்து காரில் பயணித்தவர்கள் அதில் இருந்து வெளியேறி உள்ளனர். 25 அடி ஆழத்தில் கார் விழுந்த நிலையிலும், அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கிய கார் ஓனர், அதில் பயணம் செய்தவர்களுக்கு பேட்-ஏய்ட் போடும் அளவுக்கு கூட காயம் ஏற்படவில்லை என தெரிவித்து இருக்கிறார்.


    காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையில் ஏதோ வருவதை பார்த்து, ஸ்டீரிங்கை திருப்பியதில் கார் நிலை தடுமாறி கீழே விழுந்து வீடு மற்றும் கான்க்ரீட் தரையில் வேகமாக மோதி இருக்கிறது. விபத்தில் சிக்கிய டியாகோ கார் மிக மோசமாக சேதமடைந்து இருக்கிறது.

    கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அதில் இருந்தவர்கள், தாங்களாகவே வெளியேறி விட்டனர். அனைவரும் டாடா கார் வாங்க அறிவுறுத்தியதால், இந்த காரை வாங்கியதாக காரின் ஓனர் தெரிவித்து இருக்கிறார். டாடா கார்கள் இவ்வளவு தரமாக உருவாக்கப்படுவதற்கு காரின் ஓனர் தனது சமூக வலைதள பதிவில் நன்றியை தெரிவித்துள்ளார். இதோடு பாதுகாப்பை கருத்தில் கொள்பவர்கள் நிச்சயம் டாடா டியாகோ வாங்கலாம் என தெரிவித்து இருக்கிறார்.

    • மஹிந்திநரா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய XUV300 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த கார் சக்திவாய்ந்த டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய மேம்பட்ட மஹிந்திரா XUV300 எஸ்யுவி-க்கான டீசரை வெளியிட்டு உள்ளது. வெளிப்புறம் இந்த கார் சிறிதளவு மாற்றங்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் சக்திவாய்ந்த டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சப்-4 மீட்டர் எஸ்யுவி-யான மஹிந்திரா XUV300 தோற்றத்தில் புதிதாக காட்சியளிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக காரின் முன்புறம் வழங்கப்பட்டு இருக்கும் புதிய மஹிந்திரா நிறுவன லோகோ தெரிகிறது. இந்திய சந்தையின் சப்-4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் அதிக போட்டி நிறைந்து இருக்கும் நிலையில், மஹிந்திரா தனது XUV300 மாடலை அப்டேட் செய்து இருக்கிறது.


    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய XUV300 மாடலின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட்டு இருக்காது என்றே தெரிகிறது. இந்த காரில் சற்றே வித்தியாசமான பாக் லைட் ஹவுசிங், பெரிய அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வைட் நிற ரூஃப் மற்றும் புதிய ஷேட் ரெட் நிறம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய XUV300 மாடலில் 1.2 லிட்டர் T-GDI டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. தற்போதைய மாடலில் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    • ஆடி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
    • இந்த முறை கார்களின் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு ஆடி இந்தியாவின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த விலை உயர்வு செப்டம்பர் 20, 2022 முதல் அமலுக்கு வருகிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் தொடர் செலவீனங்கள் அதிகரிப்பு மற்றும் வினியோக சிக்கல் போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக ஆடி இந்தியா தெரிவித்து இருக்கிறது.


    தற்போது ஆடி இந்தியா நிறுவனம் ஆடி A4, A6, A8 L, Q5, Q7, Q8, S5 ஸ்போர்ட்பேக், RS 5 ஸ்போர்ட்பேக் மற்றும் RS Q8 போன்ற கார்களை பெட்ரோல் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இ-டிரான் பிராண்டின் கீழ் ஆடி இந்தியா நிறுவனம் இ-டிரான் 50, இ-டிரான் 55, இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55, இ-டிரான் GT மற்றும் RS இ-டிரான் GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    இது தவிர ஆடி இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் முற்றிலும் புதிய Q5 மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இத்துடன் இந்த மாடலின் வேரியண்ட் வாரியான அம்சங்கள் பற்றியும் ஆடி இந்தியா அறிவித்து விட்டது. இந்த காரின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் குரூயிசர் LC 300 இருக்கிறது.
    • இந்த மாடலின் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய லேண்ட் குரூயிசர் LC300 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். ஏற்கனவே இந்த லேண்ட் குரூயிசர் LC300 மாடல் பல்வேறு உலக நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த காருக்கான காத்திருப்புக் காலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாடுகளில் இந்த காரை பெற மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

    எனினும், இந்தியாவில் புதிய லேண்ட் குரூயிசர் LC300 மாடல் வினியோகம் ஒரு ஆண்டுக்கும் மேல் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய LC200 போன்றே புதிய டொயோட்டா LC300 மாடலும் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட யூனிட் வடிவில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட இருக்கிறது.


    தற்போது முன்பதிவு மட்டும் துவங்கி இருக்கும் நிலையில், இதன் விலை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்திய சந்தையில் புதிய டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலின் விலை ரூ. 2 கோடி வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரை வாங்குவோர் லேண்ட் குரூயிசர் LC300 மீது மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கி.மீ வாரண்டியை பெற முடியும்.

    வரும் மாதங்களில் புதிய லேண்ட் குரூயிசர் LC300 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகமானதும் இந்த கார் லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் காருக்கு போட்டியாக அமைகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த வரிசையில் ஸ்விப்ட் CNG மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் ஹேச்பேக் மாடலின் CNG வெர்ஷனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் CNG மாடல் விலை ரூ. 7 லட்சத்து 77 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது இந்த மாடல் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது. விரைவில் இந்த மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது.


    புகைப்படங்களின் படி ஸ்விப்ட் CNG காரில் எந்த விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தோற்றத்தில் ஸ்விப்ட் CNG மற்றும் பெட்ரோல் வெர்ஷன் ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது. காரின் பின்புற பெண்டரில் CNG டேன்க் விவரங்கள் மற்றும் CNG பில்லர் கேப் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காரில் ரிவைஸ்டு MID, பூட் பகுதியில் CNG டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி ஸ்விப்ட் CNG மாடலில் 1.2L K சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVT என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் 30.90 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    • ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் படுகாயம்
    • போலீசார் கார் ஓட்டி வந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). ஆட்டோ டிரைவர்.நேற்று மாலை தக்கலை மேட்டுகடையில் உள்ள ஒரு மண்டபத்தில் பொருள்கள் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வேகமாக ஒரு சொகுசு கார் வந்தது.

    அந்த கார் நிறுத்தியிருத்த லோடு ஆட்டோ மீது மோதியது. மேலும் முன்னால் சென்ற 2 மோட்டார் சைக்கிள் மீது மோதி தக்கலை பஸ் நிலையம் அருகே ஒரு மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதனால் லோடு ஆட்டோவில் இருந்த பத்மனாபபுரம் பகுதியை சேர்ந்த மணி (70), காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மாகின் வயது (42), மோட்டார் சைக்கிளில் வந்த தக்கலை ராமன்பறம்பை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் காயமடைந்தனர் .

    காயமடைந்த 3 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

    இது சம்பந்தமான ஆட்டோ டிரைவர் நாக ராஜன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சொகுசு கார் ஓட்டி வந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அஸ்வத் பெஞ்சமின் (37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்ஜினீயர் பலி ; மற்றொருவர் படுகாயம்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஏழுசாட்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர் பால்துரை. இவரது மகன் வருண் (வயது 27). இவர் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவரும் அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர் சித்தாந்த் (வயது 19) என்பவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மகாதானபுரம் ரவுண் டானா சந்திப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை வருண் என்பவர் ஓட்டி சென்றார். சித்தாந்த் அவருக்கு பின்னால் அமர்ந்தி ருந்தார். இவர்கள் தங்களது ஊரான ஏழுசாட்டுபத்துக்கு செல்வதற்காக அகஸ்தீஸ்வ ரத்துக்கு செல்லும் சாலை யில் திரும்பும்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது.

    இதில் இவர்கள் இரு வரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த வருணை108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வருண் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வருணின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • ஆம்புலன்ஸ் வழியை மறைத்து நின்ற டாக்டரின் காரால் மூதாட்டி பரிதாப இறந்தார்.
    • தலைமை பெண் டாக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை

    மதுரை புதூரை சேர்ந்தவர் பிரேமா (வயது 75). இவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் புதூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டிக்கு நாடித்துடிப்பு குறைவாக உள்ளது.

    அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர். இதையடுத்து மூதாட்டியை அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆஸ்பத்திரிக்குள் வரும் வழியில் டாக்டரின் கார் நின்று கொண்டு இருந்தது. ஊழியர்கள் ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் மூதாட்டியை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு அழைத்து வந்து 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

    இருந்த போதிலும் மூதாட்டி பிரேமா வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மூதாட்டியின் மகள் சுப்புலட்சுமி கூறுகையில், என் தாயாருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை ஆட்டோவில் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தோம். மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் தேவையற்ற கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக என் தாயார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார் என்றார். மதுரை புதூர் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் நிற்க வேண்டிய இடத்தில் தலைமை பெண் டாக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பெண் டாக்டரிடம் கேட்டபோது, "ஆம்புலன்சை இடம் மாற்றும் முடிவை நான் எடுக்கவில்லை. மாநகராட்சி நகர் நல சுகாதார அதிகாரி உத்தரவின் பேரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நோயாளி உயிரிழப்புக்கும், ஆம்புலன்ஸ் வெளியே நின்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.

    மாநகராட்சி நகர்நல சுகாதார அதிகாரி வினோத் கூறுகையில், "மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளிகள் அமர்வதற்காக தான் அந்த இடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்காக, புதூர் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இட நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஹேச்பேக் மாடல் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இந்த காரின் CNG வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது C3 ஹேச்பேக் மாடலின் புது வேரியண்டை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. விரைவில் சிட்ரோயன் C3 காரின் CNG வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சிட்ரோயன் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கணிசமான பங்குகளை பெற முடியும்.


    Photo Courtesy: GaadiWaadi 

    CNG கிட் பொருத்தப்படும் பட்சத்தில் இந்த காரில் குறைந்த அளவு பூட் ஸ்பேஸ் மற்றும் செயல்திறன் அளவுகள் குறைந்து இருக்கும். புதிய சிட்ரோயன் C3 CNG வேரியண்டிலும் 1.2 லிட்டர், NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 80.8 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. CNG-ஐ பயன்படுத்தும் போது செயல்திறன் மற்றும் டார்க் அளவுகள் கணிசமாக குறைந்து விடும். இந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுவதை பார்க்கும் போது பிரென்ச் நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரத்தை நீட்டிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதை அறிய முடிகிறது.

    ×