search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எம் பிரிவின் ஐம்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது.
    • இதன் அங்கமாக ஸ்பெஷல் எடிஷன் கார்களை அறிமுகம் செய்து வருகிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 5 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ. 67 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    மற்ற ஸ்பெஷல் எடிஷன் பி.எம்.டபிள்யூ. கார்களை போன்றே புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடலும் சென்னையில் இயங்கி வரும் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய 5 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எம் பிரிவு 50-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் டாப் எண்ட் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 530i எம் ஸ்போர்ட் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    இந்த மாடலில் 2 லிட்டர், ட்வின் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன்-4, DOHC பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 248 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தோற்றத்தில் இந்த கார் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 530i செடான் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஸ்பெஷல் எடிஷன் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    • மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N ஆட்டோமேடிக் மாடல் வெளியானது.
    • ஏற்கனவே இந்த காரின் மேனுவல் வேரியண்ட் விலை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N மாடலின் ஆட்டோமேடிக் மற்றும் 4 வீல் டிரைவ் வேரியண்ட்கள் விலையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பெட்ரோல் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம் ஆகும்.

    டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை அறிமுக விலை ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி தொடங்குகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.


    ஷிப்ட் ஆன் ஃபிளை 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்கார்பியோ N டீசல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய ஸ்கார்பியோ N பெட்ரோல் வேரியண்ட் விலை கடந்த மாதமே அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி இவற்றின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய ஸ்கார்பியோ N மாடலில் 2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் எம் ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 200 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 130 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகின்றன.

    • போர்டு நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சனந்த் ஆலை பணிகளை போர்டு நிறுத்தியது.

    போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து கடைசி கார் போர்டு இகோஸ்போர்ட் வெளியிடப்பட்டது. இந்த மாடல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் யூனிட் ஆகும். இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.


    இதைத் தொடர்ந்து போர்டு நிறுவனம் உற்பத்தி பணிகளை மெல்ல நிறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் போர்டு சனந்த் ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையில் இருந்து ஃபிரீஸ்டைல் மாடல் கடைசி யூனிட்-ஆக வெளியிடப்பட்டது. சென்னை ஆலை மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வந்தது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில் மீண்டும் பணிகளை தொடங்குவது பற்றி போர்டு நிறுவனம் இதுவரை எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. போர்டு நிறுவனம் தனது சனந்த் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆலையும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 ஹேச்பேக் மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
    • இதில் டூயல் ஸ்லாட் குரோம் கிரில் உள்ளது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட C3 ஹேச்பேக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 விலை இந்தியாவில் ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் பத்து வித நிறங்கள், இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    வெளிப்புறத்தில் புதிய சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், சிக்னேச்சர் டூயல் ஸ்லாட் குரோம் கிரில், ஃபாக் லைட்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் பம்பரில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது.


    காரின் உள்புறம் 2022 சிட்ரோயன் C3 மாடல் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் சீட், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, நான்கு ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், டில்ட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்டீரிங் வழங்கப்பட்டு உள்ளது.

    என்ஜினை பொருத்தவரை சிட்ரோயன் C3 மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 109 ஹெச்.பி. பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 81 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 லைவ்: ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் ரூ. 6 லட்சத்து 62 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் வைப் பேக் ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் டூயல் டோன் ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 6 லட்சத்து 93 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 06 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 கார் கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புது கார் கிராண்ட் விட்டாரா.
    • இது எஸ் கிராஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டீசர்களின் மூலம் இந்த மாடல் கிராண்ட் விட்டாரா எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். முன்பதிவுகள் நெக்சா விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் எஸ் கிராஸ் காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை விவரங்கள் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.


    ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன், முற்றிலும் புது கிரில், க்ரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பாடி நிறம் கொண்ட ORVM-கள், பிளாக் ரூஃப், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், டூ பீஸ் எல்இடி லைட் பார் உள்ளிட்டவை இந்த காரின் அம்சங்கள் ஆகும். இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், 9 இன்ச் பிரீஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளது.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் என்ஜின் 100 ஹெச்.பி. பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் 115 ஹெச்.பி. பவர், என்ஜின் டார்க் 122 நியட்டன் மீட்டர்களாகவும், எலெக்ட்ரிக் மோட்டார் டார்க் 141 நியூட்டன் மீட்டர்களாகவும் உள்ளது. இந்த என்ஜினுடன் e-CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்டு இருக்கிறது. 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புது ஆல்டோ மாடல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் வரும் மாதங்களில் இரண்டு புது கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் புது ஆல்டோ மாடல் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புது ஆல்டோ தவிர மாருதி கிராண்ட் விட்டாரா மாடல் இன்று (ஜூலை 20) சர்வதேச சந்தையில் வெளியாகிறது. இந்த மாடலின் விலை அறிவிப்புக்கு முன்பே முற்றிலும் புது ஆல்டோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இரு மாடல்களும் மாருதி சுசுகி வாகன பிரிவில் பெரிய இடைவெளியை கொண்டுள்ளன. ஆல்டோ கார் மாருதி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். கிராண்ட் விட்டாரா அந்நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி ஆகும். இவற்றில் ஆல்டோ மாடல் மாருதி அரினா விற்பனை மையங்களிலும், கிராண்ட் விட்டாரா மாருதி நெக்சா விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.


    முற்றிலும் புது ஆல்டோ மாடல் அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்கும். அதன்படி இந்த மாடலில் முற்றிலும் புதிய பிளாட்பார்ம் மற்றும் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. ஆல்டோ மாடல் சுசிகியின் மாட்யுலர் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாருதி நிறுவன கார் மாடல்களில் எஸ் பிரெஸ்ஸோ-வில் துவங்கி XL6 வரை பல்வேறு மாடல்கள் இந்த பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.

    புதிய ஆல்டோ மாடலில் K10C 1.0 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 796சிசி என்ஜின் வழங்கும் 19 ஹெச்.பி. மற்றும் 20 நியூட்டன் மீட்டர் டார்க்-ஐ விட அதிகம் ஆகும். இதே என்ஜின் புது மாடலின் பேஸ் வேரியண்ட்களில் வழங்கப்படலாம். 

    • கியா இந்தியா நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்திய சந்தையில் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது.
    • தற்போது இந்நிறுவனம் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்து லட்சம் கார்களை விற்று புது மைல்கல் எட்டியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்திலும் இந்த மைல்கல் எட்டி இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்திய சந்தையில் வலுவான இடத்தை பிடிக்க கியா நிறுவனம் தற்போது மஹிந்திராவுக்கு போட்டியாளராக உள்ளது.

    2017 வாக்கில் இந்திய எண்ட்ரியை அறிவித்த கியா இந்தியா ஜனவரி 2019 முதல் உற்பத்திக்கான டிரையல் பணிகளை துவங்கியது. இதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் பகுதியில் 536 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை கையகப்படுத்தியது. தற்போது கியா நிறுவனம் ஆண்டுக்கு மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டு இருக்கிறது. மேலும் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதை அடுத்து, உற்பத்தியை விரிவுப்படுத்தவும் கியா நிறுவனம் முடிவு செய்து உள்ளது.


    தற்போது கியா நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக கியா சொனெட் இருந்து வருகிறது. எனினும், இந்நிறுவனம் முதலில் அறிமுகம் செய்த கியா செல்டோஸ் மாடலின் வெற்றி இந்திய சந்தையில் அந்நிறுவனம் தடம் பதிக்க உதவியது. செல்டோஸ் மாடல் ஏராளமான அம்சங்கள், அசத்தல் பவர்டிரெயின் ஆப்ஷன்களை சரியான விலையில் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக அமோக வரவேற்பை பெற்றது.

    2020 ஆண்டு கியா நிறுவனம் கார்னிவல் எம்பிவி மற்றும் கியா சொனெட் சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கியா சொனெட் மாடல் அந்நிறுவன விற்பனையை மேலும் வலுப்படுத்தியது. ஆரம்பத்தில் கியா செல்டோஸ், அதன் பின் சொனெட் என அந்நிறுவன மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், தான் புதிதாக கியா கரென்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா கரென்ஸ் பெற்ற வெற்றியை கொண்டு முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் உடன் கியா இந்தியா போட்டியை ஏற்படுத்துகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புது தலைமுறை டக்சன் மாடல் அம்சங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு அப்டேட் வெளியாகி உள்ளது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய டக்சன் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புது ஹூண்டாய் டக்சன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தற்போது 2.0 லிட்டர் வடிவில் வழங்கப்பட்டுள்ளன. இவை 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    2022 டக்சன் மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் சென்சுயல் ஸ்போர்டினஸ் டிசைன் பின்பற்றப்பட்டு இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில் மற்றும் பாராமெட்ரிக் ஜூவல் பேட்டன் உள்ளது. இத்துடன் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.

    ஹெட்லைட்கள் கிரில்-மீது இரு புறங்களின் ஓரத்தில் செங்குத்தாக உள்ளது. முன்புறம் செண்ட்ரல் ஏர் டேம் மற்றும் சில்வர் ஃபாக்ஸ் பாஷ் பிளேட் உள்ளது. புதிய டக்சன் மாடலின் இந்திய வேரியண்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட்கள், வழங்கப்பட்டுள்ளன.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் பிரெஸ்ஸோ மாடலில் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் உள்ளது.
    • இதன் டாப் எண்ட் மாடல்களில் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் ORVM-கள் உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் 2022 எஸ் பிரெஸ்ஸோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலை ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐந்து வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள எஸ் பிரெஸ்ஸோ மாடல் தற்போது ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி கொண்ட K10C பெட்ரோல் என்ஜின் தொழில்நுட்பம் கொண்டு இருக்கிறது.

    இது அடுத்த தலைமுறை என்ஜின் ஆகும். இது 66 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் AMT வெர்ஷன்கள் லிட்டருக்கு 25.30 கி.மீ. மைலேஜ் வழங்குகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்கள் லிட்டருக்கு 34.76 கி.மீ. மைலேஜ் வழங்குகின்றன.


    விலை விவரங்கள்:

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ Std. MT ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம்

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ LXi MT ரூ. 4 லட்சத்து 95 ஆயிரம்

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ VXi MT ரூ. 5 லட்சத்து 15 ஆயிரம்

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ VXi+ MT ரூ. 5 லட்சத்து 49 ஆயிரம்

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ VXi (O) AGS ரூ. 5 லட்சத்து 65 ஆயிரம்

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ VXi+ (O) AGS ரூ. 5 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஸ்கோடா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 7 சீட்டர் மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • இந்த மாடல் மிகவும் வித்தியாசமான இண்டீரியர் கொண்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் புதிய விஷன் 7S கான்செப்ட் மாடல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஸ்கோடா விஷன் 7S டீசரில் புதிய காரின் இண்டீரியர் எப்படி காட்சியளிக்கும் எனதெரியவந்துள்ளது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் ஆகும்.

    ஸ்கோடா விஷன் 7S கான்செப்ட் மாடலில் 7 சீட்டர் செட்டப் உள்ளது. இது மிகவும் வித்தியாசமான 6+1 வடிவில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரியவர்கள் ஆறு பேரும், ஒரு இருக்கை குழந்தைகளை அமர வைக்க பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டு கார் கதவுகள் வரை நீள்கிறது. முன்புற இருக்கையில் உள்ள ஹோல்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    புதிய விஷன் 7S மாடல் டிரைவிங் மற்றும் ரிலாக்சிங் என இருவித சூழல்களுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிரைவிங் மோடில் கண்ட்ரோல்கள் வழக்கமான கார்களில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. ரிலாக்ஸ் மோடில் பின்புற இருக்கைகள் சற்றே பின்புறம் நகர்ந்து அதிக இடவசதியை ஏற்படுத்துகிறது. இது சவுகரியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

    கடந்த மார்ச் மாத வாக்கில் ஸ்கோடா அறிவித்த முற்றிலும் புதிய டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டு ஸ்கோடா விஷன் 7S உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிசைன் மொழியில் ஸ்கோடா நிறுவனத்தின் மதிப்புகளை எடுத்துரைக்கும் திடத்தன்மை, செயல்பாடு மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றை சார்ந்து கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த எம்.பி.வி. மாடலாக ஸ்டார்கேசர் இருந்து வந்தது.
    • இது மாருதி எர்டிகா மற்றும் கியா கரென்ஸ் மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்டார்கேசர் எம்பிவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் மாருதி எர்டிகா மற்றும் கியா கரென்ஸ் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும். முதற்கட்டமாக இந்தோனேசியாவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்டார்கேசர் அதன் பின் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும்.

    வெளிப்புறம் ஸ்டார்கேசர் மாடல் ஸ்டாரியா சார்ந்த முன்புறம் கொண்டு இருக்கிறது. ஹூண்டாய் ஸ்டாரியா மாடல் அளவில் பெரிய ஆடம்பர எம்பிவி மாடல் ஆகும். இது சர்வதேச சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்டார்கேசர் மாடலில் அதிநவீன தோற்றம், பொனெட் லைன் மீது ஃபுல்-விட்த் எல்இடி டிஆர்எல் கொண்டிருக்கிறது. முன்புற கிரில் செவ்வக வடிவம் கொண்டு இருக்கிறது. இதில் எல்இடி ஹெட்லேம்ப்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு உள்ளன. பின்புறம் டெயில் லேம்ப்கள் உள்ளன.


    காரினுள் ஆறு பேர் அமரும் வகையிலான இருக்கைகள் உள்ளன. கேபின் முழுக்க அதிகளவு சவுகரியம் வழங்கும் வகையில் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு உள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஏர்கான் வெண்ட்கள் உள்ளன.

    இந்தோனேசிய சந்தையில் இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்று இருக்கிறது. இந்த என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • இளையான்குடியில் பா.ஜ.க. நிர்வாகி கார் உடைக்கப்பட்டது.
    • டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பா.ஜ.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையான்குடி வழியாக ராமநாதபுரம் வந்தார்.

    அப்போது இளை யான்குடி கண்மாயக்கரை பகுதியில் அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் ஒரு டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவத்திற்கு இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி சாலை கிராமம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் வேலூர் இப்ராஹிம் சாலைகிராமத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் ராமநாதபுரம் சென்றார்.

    ×