search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 161148"

    தஞ்சை அருகே போர்வெல் போடும் வாகனத்தில் இருந்து விழுந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த கரந்தை கொடிக்காலூர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 43). இவர் போல்வெல் போடும் வாகன டிரைவராக உள்ளார். இந்த நிலையில் பால்ராஜ் சம்பவத்தன்று தஞ்சை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலையில் பத்துக்கட்டு என்ற பகுதியில் ஒரு வீட்டில் போர் வெல் போடுவதற்காக வாகனத்தை ஓட்டி சென்றார்.

    அப்போது வீட்டின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பால்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பாதிக்கப்பட்டு சுயநினைவின்றி கோமா நிலையில் இருக்கும் சிறுவனுக்கு உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 295 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். இதை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரபாகர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பொதுமக்கள் வழங்கக்கூடிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவின் தன்மை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். அதே போல முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேன்கனிக்கோட்டை நவுரோஜ் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரி(வயது 10) விபத்தில் பாதிக்கப்பட்டு சுய நினைவின்றி கோமா நிலையில் உள்ளான். அந்த சிறுவனின் பராமரிப்புக்காக மாதம்தோறும் ரூ.1,500 பெறுவதற்கான ஆணை மற்றும் கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து மருத்துவ செலவிற்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

    ஊடேதுர்க்கம் அருகே உள்ள யு.குருபரப்பள்ளியைச் சேர்ந்த சென்னம்மா (62) என்ற மூதாட்டி நேற்று முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார். இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து சென்னம்மாவுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். மனு கொடுத்த சில மணி நேரங்களில் உதவித்தொகைக்கான ஆணை கிடைத்த மகிழ்ச்சியில் மூதாட்டி சென்னம்மா, கலெக்டர் பிரபாகருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    பொன்னேரி அருகே பள்ளி செல்ல தாயுடன் நின்றபோது வேன் மோதி சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள ஆலாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு பிரியன், பிரியதர்ஷினி, பிரகதி என்கிற ஐஸ்வர்யா (வயது 4) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். 3 பேரும் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். பிரகதி யூ.கே.ஜி. படித்து வந்தார்.

    குழந்தைகள் 3 பேரையும் வழக்கமாக கல்பனா அரசு பஸ்சில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் குழந்தைகளுடன் பள்ளி செல்வதற்காக அதே பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

    அப்போது சோழவரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அந்த வேன் திடீரென பஸ்சுக்காக்கா காத்திருந்த கல்பனா மற்றும் அவர்கள் குழந்தைகள் மீது மோதியது. இதில் வேனின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பிரகதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கல்பனாவும், அவரது மற்ற 2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பிரகதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்பனா அலறி துடித்தது பரிதாபமாக இருந்தது. விபத்து பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    ஆத்திரம் அடைந்த அவர்கள் வேனின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். மேலும் வேன் டிரைவர் கோளூரை சேர்ந்த நந்தகுமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து ஏற்படுத்திய டிரைவரை கிராம மக்கள் பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    ×