search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மாப்பிளையூரணி ஊராட்சி ராம்தாஸ் நகரில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கிராமங்களில் மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே கிராம சபை கூட்டங்களை நடத்தி மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊராட்சி தலைவர் சரவணக்குமார், ஊராட்சி வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்படுகிறார். அரசின் திட்டங்களை ஊராட்சிக்கு பெறுவதில் முழு கவனமுடன் உழைக்கிறார். என்னை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு திட்டங்களை கோரிக்கைகளாக வைப்பார். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ், வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, ஊராட்சி உதவி இயக்குனர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா மற்றும் அதிகாரிகள் ,அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயகுமார் நன்றி கூறினார். கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி தலைமையில்

    கீழ கூட்டுடன்காட்டு ஆலமரத்தடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் கோமதி வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார். முள்ளக்காடு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக ஊராட்சித் தலைவர் கோபிநாத்நிர்மல் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

    கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகிபுரத்தில் ஊராட்சித் தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் பொன்மாரி செல்வராஜ் , ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .ஊராட்சி செயலர் சீனிராசு வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

    இதேபோல் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் குமரகிரி ஊராட்சித்தலைவர் ஜாக்சன் துரைமணி, மறவன்மடம் ஊராட்சித்தலைவர் லில்லிமலர், குலையன்கரிசல் ஊராட்சித்தலைவர் முக்கனி, கீழதட்டப்பாறை ஊராட்சித்தலைவர் பத்மா பொன்னுச்சாமி, அய்யனடப்பு ஊராட்சித்தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றபட்டது.

    • போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.
    • ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கோவை அணி பெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    தருவைகுளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றமும் இணைந்து நடத்திய போட்டியில் தூத்துக்குடி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.

    2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற கோவை அணியும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற ஈரோடு அணிக்கும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக மாநில ரஜினிகாந்த் ரசிகர்மன்ற தலைவர் சந்திரகாந்த் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றத்தினர் விஜய் ஆனந்த், ஜெயபால், அசோக்ராஜ், விஜய் சாம்சன், ரமேஷ் கார்த்திகேயன், கண்ணன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டு சேது பாதை ரோடு பகுதியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லதா ரஜினிகாந்த் பாரத சேவா நிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினர். விருதுநகர் மண்டல பொறுப்பாளர் ரஜினி முருகன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலெட்சுமி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப் பாளர் ராஜமனுவேல், நிர்வாகிகள் குமாரசாமி, செல்வம், சிரிதேவி, முனீஸ்வரி, ஜோதி காமாட்சி, கோவில்பட்டி முத்து மாரியப்பன், விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாஸ்கர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி உப்பாற்று ஓடை அருகே உள்ள பெரியசாமிநகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் பாஸ்கர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தென்திருப்பேரையை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தூத்துக்குடியின் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பன்னாட்டு ஜூனியர் சேம்பர், தூத்துக்குடி ஹெர்குலேனியம் எலைட் இணைந்து 'போதைப் பொருள் எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம்' என்ற தலைப்பில் நம்ம தூத்துக்குடியின் பெருநடை என்ற பெயரில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இன்று நடை பெற்றது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு போட்டிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியில் நிபந்தனை களுக்கு உட்பட்ட ரூ. ஒரு லட்சம் அளவிலான பரிசுகளும், பதிவு செய்த அனைவருக்கும் டீ சர்ட், பதக்கம், சான்றிதழ், கிட்பேக் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.

    • அ.தி.மு.க. சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • ஏரலில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏரலிலேயே கட்டித்தர வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உழைப்பாளர்கள் தினமான நாளை மே (1-ந்தேதி) தமிழகம் மற்றும் அ.தி.மு.க. செயல்படும் பிற மாநிலங்களில் மேதின விழா பொதுக்கூட்டம் நடத்திட அ.தி.மு.க. பொதுச்செய லாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணாநகர் சந்திப்பு, டூவிபுரம் 5-வது தெரு மெயின் ரோடு திடலில் சண்முகநாதன் (எனது) தலைமையில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர்கள் சரவணன், ராம கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார்கள்.

    கூட்டத்தில் தலைமை நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கத்தி னரும் கலந்து கொள்கிறார்கள். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப்பகுதி, பேரூராட்சி, மாநகர வட்ட, வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொழி லாளர்கள், தொண்டர்கள், மகளிர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மற்றொரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஏரலில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏரலிலேயே கட்டித்தர வேண்டும். ஏரல் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இன்னும் பல அரசு அலுவலகங்கள் அமைக்க போதிய இட வசதி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பத்திர பதிவு அலு வலகத்தை அவ்விடத்திலேயே கட்டித் தர வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரல் காந்தி சிலை முன்பு நாளை காலை 10 மணிக்கு சண்முகநாதன் (எனது) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறுதானியங்களின் பயன்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • சிறப்பு விருந்தினராக ஊராட்சிதலைவர் ராமலெட்சுமி கலந்து கொண்டார்.

    செய்துங்கநல்லூர்:

    தமிழக அரசு 2022-2023-ம் நிதி ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் சிறுதானியங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் கருங்குளம் வட்டார வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் சிறுதானிய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வழிகாட்டுதலின் படி நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் ராமலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலை குழுமம் விவசாய தொழில்நுட்பங்களை கலைநிகழ்ச்சி மூலம் கூறினர். உதவி வேளாண் அலுவலர் திருவேணி, அட்மா தொழில்நுட்ப மேலாளர் ராஜலெட்சுமி, முத்துசங்கரி, மகேஸ்வரி, சலோமியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் கடலில் கலக்கிறது.
    • திடீர் நீர்வரத்து காரணமாக உப்பாற்று ஓடை கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு, சிறு காட்டோடைகள் இணைந்து ஆறாக உருவெடுத்து ஓட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் சென்று கோரம்பள்ளம் குளத்தை வந்தடைகிறது.

    பின்னர் கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் சென்று தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு உப்பாற்று ஓடை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகப்பட்ச நீர்மட்டத்தை எட்டியது.

    இதனால் உபரிநீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. திடீர் நீர்வரத்து காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து உப்பாற்று ஓடையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ரூ.5 கோடிஇந்த நிலையில் உப்பாற்று ஓடையை ரூ.5 கோடி செலவில் சீரமைத்து மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி வீரநாயக்கன் தட்டு பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சிறுபாலங்கள் அமைத்தல், உள்வாங்கிகள் கட்டுதல், புனரமைத்தல், பிற வெள்ள பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறும்போது, கடந்த காலங்களில் உப்பாற்று ஓடையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம், சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம், திரு.வி.க.நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரப்பட்டி, வீரநாயக்கன்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளைநகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    எனவே இந்த பகுதிகளில் வருங்காலத்தில் காட்டாற்று வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு திட்டமாக கோரம்பள்ளம் ஆற்றில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்ட செயற்பொறியாளர் அ.வசந்தி, உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், ரத்தினகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்டேன்லி சாம்ராஜூடன் அறிமுகமாகி உள்ளார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம், ஸ்டேன்லி சாம்ராஜ் புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவருடைய மகன் ஸ்டேன்லி சாம்ராஜ் (வயது 47). இவர் சிமெண்ட், உப்பு மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

    ரூ.8 கோடி மோசடி

    இவரது பள்ளி நண்பரான தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகமாகி தான் உப்பு மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் ஸ்டேன்லி சாம்ராஜூடன் சேர்ந்து வியாபாரம் செய்ய விரும்புவதாகவும் கூறி உள்ளார். மேலும் சீலன் செல்வராஜ் அவருடன் வியாபாரம் செய்துவரும் தூத்துக்குடியை சேர்ந்த விஜய் என்பவரையும் ஸ்டேன்லி சாம்ராஜ்க்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

    பின்னர் சீலன் செல்வராஜ், விஜய் ஆகியோர் ஸ்டேன்லி சாம்ராஜ் நிறுவனத்துக்கு உப்பு, இரும்புபொருட்கள் வாங்குவதாக போலியான கொள்முதல் ஆணையை காண்பித்தும், வியாபாரத்துக்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறி 2020-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை ரூ.8 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 741 பணத்தை பெற்றுக் கொண்டு, எந்தவித வியாபாரமும் செய்யாமல் ஏமாற்றி உள்ளனர்.

    கைது

    இதுகுறித்து அறிந்த ஸ்டேன்லி சாம்ராஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தி சீலன்செல்வராஜ், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் இருவரும் இதுபோல வேறு யாரிடமும் மோசடி செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகம்பிரியா உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • மே 3-ந்தேதி தேரோட்டம் நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திருமந்திரநகரில் பழமையான சிவன் கோவிலான பாகம்பிரியா உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் 24-ந் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தினசரி சுவாமி, அம்பாள் சப்பர வீதிஉலா நடைபெறும். 7-ந் திருநாளான வருகிற 30-ந்தேதி சாமி, அம்பாள் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு வெள்ளை சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 8-ம் திருநாளன்று பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். மே 3-ந்தேதி தேரோட்டம் நடைபெறும்.

    முதலில் மகாகணபதி, முருகப்பெருமானும் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும், பின்னர் சுவாமி சங்கர ராமேஸ்வர பாகம் பெரிய அம்பாளுடன் பெரிய எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    தேரோட்டத்தின் போது பாண்டிச்சேரி, விருதாச்சலம், கரூர் பகுதி சிவ தொண்டர்களின் சிவகைலாய சிவபூதன வாத்தியங்கள், தேவார இன்னிசை வேதபாராயணம் நடைபெறும். அது மட்டுமன்றி யானை, ஆடு, குதிரை, களியல் ஆட்டம், மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், அணி வகுப்புகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கை நடைபெறும். தேரோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது விழா கமிட்டியாளர்கள் கோட்டுராஜா, கந்தசாமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், செந்தில், சோமநாதன், சாந்தி, முத்து, மந்திரமூர்த்தி, சண்முகம் பட்டர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • வருமான வரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டபிள்யூ.ஜி.சி. சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் சேகர் ஐசன்சில்வா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்தோபர், மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவி கனியம்மாள், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், விஜயராஜ், கோபால், நாராயணசாமி, ஜெயராஜ், சின்ன காளை, வெங்கட சுப்பிரமணியம், கனகராஜ், மணி, ராஜா, மெர்லின் ஜெபசிங், குமாரமுருகேசன், தாமஸ், தனுஷ், சுப்பிரமணி, அம்மாகிட்ட, மீனாட்சி, சுகுணா, சரஸ்வதி, சுடலைமாடி, மல்லிகா உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
    • போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதானி தொடர்பான 3 கேள்விகள் அடங்கிய தபால் கார்டை பிரதமருக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கி, தூத்துக்குடி தலைமை தபால்

    அலுவலகத்தில் தபால்கார்டுகளை தபால் பெட்டியில் போட்டார். தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கையெழுத்திட்டு தபால் கார்டுகளை பெட்டியில் போட்டனர்.

    இதில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல், மேற்கு, தெற்கு மண்டல தலைவர்கள் ராஜன் செந்தூர்பாண்டி, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், அருணாசலம், தனபால்ராஜ், மாவட்ட பொது செயலாளர் சின்ன காளை, செயலாளர்கள் கோபால், காமாட்சிதனபால், ஆரோக்கியம், வெங்கட சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டம் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் மற்றும் எதிர்வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு மகளிர் அணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஒன்றிய, நகர, மாநகரப்பகுதி, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் என். சின்னதுரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மத்திரமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சவுந்தரபாண்டி, தாமோதரன், நகர செயலாளர்கள் காயல் மௌலானா, வி.எம்.மகேந்திரன், பகுதி செயலாளர் பொன்ராஜ், ஜெய்கணேஷ், முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், நட்டார்முத்து, முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி, எஸ்.கே.மாரியப்பன், பேரூராட்சி செயலாளர்கள் வேதமாணிக்கம், காசிராஜன், செந்தில்ராஜகுமார், துரைச்சாமி ராஜா, அசோக்குமார், செந்தமிழ்சேகர், கிங்சிலி, குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், ஆறுமுகநயினார், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், வக்கீல் முனியசாமி, வெயிலுமுத்து, உரக்கடை குணசேகரன், நங்கைமொழி ஊராட்சிமன்ற தலைவர் விஜயராஜ், மனுவேல்ராஜ், பூந்தோட்டம் மனோகரன், குலசை சங்கரலிங்கம், அமிர்தாமகேந்திரன், ரத்தினசபாபதி, கார்தீஸ்வரன், ஆத்தூர் ராமசுப்பிரமணியன், சொக்கலிங்கம், மணிகண்டன், அர்சூன், பாலஜெயம், சாம்ராஜ், பூக்கடை வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×