search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • வி.இ.ரோட்டில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • பணிகள் துரிதமாக நடைபெற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் போக்கு வரத்து நெருக்கடிக்கு தீர்வு கண்டு,சீரான போக்கு வரத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி, சாலை அமைக்கும் பணிகள் மற்றும் சாலையோர பகுதிகளில் நடை பாதைகள், வடி கால்கள் உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    போக்குவரத்து சீராக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் தாமோதரன்நகர் சந்திப்பு வி.இ.ரோட்டில் போக்கு வரத்து அதிகமாக இருப்பதாக வந்த தகவலை யடுத்து அந்தப் பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டு ள்ளது. இதைத்தொடர்ந்து ரவுண்டானா அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பணிகள் துரிதமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவடி பண்ணை அரசு பள்ளியில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்திருப்பேரை பேரூராட்சி மாவடி பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    ஆசிரியர் கிங்ஸ்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் விஜி முன்னிலை வகித்தார். தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சித்தி ரம்ஜான், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி அனிற்றா ரூத் மங்களசெல்வி, ஆழ்வார் திருநகரி காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் ஆகியோர் பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமாக பள்ளி மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம், கொடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சுனந்தா நன்றி கூறினார்.

    • ராஜேசின் கையில் இருந்த செல்போனை 8 பேர் கொண்ட கும்பல் பறித்து கொண்டு தப்பி சென்றது.
    • 8 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர்காலனியில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

    செல்போன் பறிப்பு

    இங்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது28). என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ராஜேஷ், சக ஊழியர்களுடன் நிறுவன வளாகத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென ராஜேசின் கையில் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேல் (30) என்பவர் தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார் வையில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தனிப்படை காவலர் செல்வின் ராஜா, நகர உட்கோட்ட காவலர் மாணிக்கராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை விசாரணை நடத்தி வந்தனர். இதில் செல்போனை பறித்து சென்றது தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ் (20), வெங்கடேஷ் (19), மாரிமுத்து (19), சுரேஷ் (19), செந்தில் (19), ஜோஸ்வா டேனியல் (19) மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

    • மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற்றது.
    • மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி மற்றும் பெற்றோர்கள் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 2- வது கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரவி, பிரம்மானந்தம், பாலன், கிங்ஸ்டன்,போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், சிரில், ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், பெற் றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குடியரசு தினவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனைகளை தொடங்கி உள்ளனர்.

    நெல்லை:

    குடியரசு தினவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மகேந்திரகிரி இஸ்ரோ மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், வடக்கு விஜயநாராயணம் கடற்படை தளம் உள்ளிட்ட இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையம்

    மாநகர பகுதியில் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். டவுன் ரதவீதிகள், சந்திப்பு ரெயில் நிலையம், பாளை வ.உ.சி. மைதானம், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவை போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனைகளை தொடங்கி உள்ளனர். இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யதாஸ், செந்தில் மற்றும் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் மோப்பநாய் மூலமாக ேசாதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை நெல்லைக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் பார்சல் அலுவலகத்தில் இருந்து பொருட்களையும் சோதனை செய்தனர்.

    தென்காசி-தூத்துக்குடி

    தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் ஆகாஷ் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்காக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் சுமார் 1,000 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ரெயில்நிலையம், விமான நிலையம், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படு கின்றனர். தண்டவாளங்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    • ரத்தினம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • செல்போனை பறித்த அந்தோணி சூர்யா,சக்திகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நேற்றிரவு வெளியூர் சென்று விட்டு புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றவர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து ரத்தினத்திடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அவர் தாளமுத்து போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த அந்தோணி சூர்யா (வயது 22) அவரது நண்பர் சக்திகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

    • சுதாகரின் ஆடு நேற்று மாலை வீட்டின் முன்பு மேய்ந்து கொண்டு இருந்தது.
    • விசாரணையில் திருமணி என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 34). நேற்று மாலை இவரது ஆடு வீட்டின் முன்பு மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் காரில் அந்த ஆட்டை திருடி சென்றார். இதனை பார்த்த சுதாகர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக பொதுமக்கள் திரண்டு வந்து அவர்களை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் டென்சன்பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் தூத்துக்குடி ராஜூ நகர் 6-வது தெருவை சேர்ந்த திருமணி (42) என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.
    • ஆதிச்சநல்லூர் உள்பட 5 இடங்களில் இந்த மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ளது கொங்கராயக்குறிச்சி கிராமம். வரலாற்று தொன்மை வாய்ந்த இந்த ஊர் ஆதிச்சநல்லூரில் 1899-ம் ஆண்டு அகழாய்வு நடத்திய அலெக்சாண்டர் ரியாவால் கண்டறியப்பட்ட 37 தொல்லியல் களங்களில் ஒன்றாகும். மேலும், இந்த ஊரே ஆதிச்சநல்லூர் இடுகாட்டில் புதைந்த மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் ரியா குறிப்பிட்டுள்ளார்.

    கள ஆய்வு

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கொங்கராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற இடங்களில் அதிக அளவில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது. எனவே, இவ்வூரில் தொல்லியல்துறை களஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகின்றது.

    இந்த நிலையில் திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணிக்காக கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக இவ்வூரின் வயல்வெளியில் உள்ள வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பிவிட தோண்டிய பள்ளத்தில் இருந்து எலும்புகளுடன் தொல் பொருட்களும் வெளிவந்தன. இதனை வியப்புடன் கண்ட பொதுமக்கள், குவிந்து கிடக்கும் எலும்புகளை பார்த்து அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதனை அடுத்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் மத்திய தொல்லியல் துறையினர் சார்பில் இவ்விடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களின் வாழ்விடத்தை கண்டறிய மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர் உள்பட 5 இடங்களில் இந்த மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையில் கொங்கராயகுறிச்சியில் ஏற்கனவே சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரும் மீண்டும் அந்த இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தோண்டியுள்ளனர். இதில் அந்த பகுதியில் உள்ள மணலில் புதைந்திருந்த பானைகள், வாழ்விடப்பொருட்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆறுமுகத்துரை ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணி செய்து வந்தார்.
    • மடத்தூர் சர்வீஸ் ரோட்டில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஆறுமுகத்துரை மீது மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகத்துரை (35). இவர் மதுரை பைபாஸ் ரோடு திருச்செந்தூர் ரவுண்டானா அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணி செய்து வந்தார்.நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். மடத்தூர் சர்வீஸ் ரோட்டில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஆறுமுகத்துரை மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
    • வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள், திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பொங்கல் திருநாளை யொட்டி 30-வது வட்ட தி.மு.க. மற்றும் டூவிபுரம் இளைஞர் அணி சார்பில் 20-ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி டூவிபுரம் 10-வது தெருவில் நடைபெற்றது.

    அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அதிஷ்டமணி, நிர்வாகிகள் ராஜ்மோகன், கார்த்திகேயன், அந்தோணிராஜ், அன்பழகன், நாராயணராஜ், சுப்பிரமணியன், கணேசன், சபேசன், சந்திரசேகர், தங்ககுமார், சீனிவாசன், செல்வராஜ், சின்ராஜ், அன்னராஜன், டேனியல், ஜெயராமன், ரவிக்குமார், சத்யநாராயணன், ராஜ்நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேக் உமர் வரவேற்றார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். பின்னர் அமைச்சர் கீதாஜிவன் பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெரிய மாநிலம் தமிழ்நாடு. பொருளாதார வளர்ச்சி என பல முன்னேற்றப்பாதையில் சென்றுள்ளதை ஒன்றிய அரசே கூறியுள்ளது.

    அ.தி.மு.க.வில் 2 பேரும் தன்னை காப்பாற்றிக் கொள்வதில் தான் குறியாக உள்ளனர். தமிழ்மொழி, கலாசாரம் போன்ற பல்வேறு வளர்ச்சியடைந்துள்ள காரணத்தால் ஒன்றிய நமது அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை குறைத்து கொண்டே வருகிறது.

    நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக திறமையால் அதையும் சமாளித்து பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் லட்சிய வழியில் முதல்-அமைச்சர் பணியாற்றி கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாடு என்ற பிரச்சனையை சிலர் கிளப்பினார்கள். தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்க நாடார் தியாகத்தை நாம் போற்றுவோம்.

    வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. திராவிட மாடல் ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கனகராஜ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர் பொன்னப்பன், வட்டச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, பாலு மற்றும் கருணா, அல்பட், கிளிப்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டச்செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • சண்முகவேல் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • பலத்த காயம் அடைந்த சண்முகவேலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்

    (வயது 39). இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள் (31).

    விபத்தில் பலி

    இவர் நேற்று மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தட்டப்பாறை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்திற்கு சென்றார். அங்கு பேச்சியம்மாளை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பி னார்.

    அவர் செக்காரகுடி அருகே வரும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.
    • வனத்துறையினர் மிளா மானை மீட்டு விளாத்திகுளம் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை நண்டு வலை வைப்பதற்காக சென்றனர். அதனை தொடர்ந்து இன்று காலையில் அந்த நண்டை எடுப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றனர்.

    கடல் தொழில் முடிந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏதோ தத்தளித்துக் கொண்டி ருந்ததை பார்த்த சக மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கரை பகுதிக்கு வந்து மேலும் 2 பேரை அழைத்து சென்று அந்த மானை பத்திரமாக பைபர் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அங்கே அது தப்பி ஓட நினைத்ததால் அதை கால் பகுதியை கட்டி வைத்திருந்தனர்.

    பின்பு வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு விளாத்திகுளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த அரியவகை மானை அப்பகுதி மீனவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

    இதுகுறித்து மீனவர் ஜேரோன் (பைபர் போட் உரிமையாளர்) கூறுகையில், நாங்கள் அதிகாலை 5 மணிக்கு கடலில் நண்டு வலையை எடுத்து நண்டுபிடித்து வரும்போது கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பகுதியில், கடலில் பறவைகள் கூட்டமாக மானை தூரத்தி கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே நாங்கள் 4 பேர் சேர்ந்து அதனை மீட்க முயன்றோம். ஆனால் அதன் எடை அதிகமாக இருந்ததால் எங்களால் அதனை மீட்க முடியவில்லை. பின்னர் கரைக்கு வந்து கூடுதலாக 2 பேரை அழைத்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளாவின் கொம்பில் கயிற்றை கட்டி கரைக்கு இழுத்து வந்து வனசரகத்திற்கு தகவல் கொடுத்தோம். பின்பு அவர்கள் வந்து ஆட்டோவில் ஏற்றி வனப்பகுதியில் விட்டனர் என்றார்.

    ×