என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 162849"
- பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறியாளர் பாரதிதாசன் தலைமையில் நிகழ்ச்சி.
- நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் புருஷோத்தமன், குமார், மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:-
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறியாளர் பாரதிதாசன் தலைமையில் புவி வெப்பமயமாதலை தடுக்கவும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தி ஆக்சிஜனை அதிகப்படுத்தவும் பொன்னேரி பழவேற்காடு ஏலியம்பேடு சாலை ஓரங்களில் 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் புருஷோத்தமன், குமார், மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.
- பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன் பேசியதாவது:- அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, மஞ்சள், சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இவர்களின் விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது தினமும் 9 முதல் 10 மணி நேரம் மட்டுமே குறிப்பிட்ட நேரமில்லாமல் வினியோகிக்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள். முன்பு போல் 14 மணி நேரம் முறைப்படி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட சேவூர், பாப்பான்குளம், காசிலிங்கம்பாளையம் பகுதிகளில் மழை பெய்தபோது ஏற்பட்ட சூறாவளிக்காற்றால் வாழை மற்றும் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதுபோல் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம், அலகுமலை, பொங்கலூர் ஊராட்சிகளில் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முறையாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு மற்றும் இன்சூரன்சு தொகை பெற்றுத்தர வேண்டும். பயிர்களுக்கு இன்சூரன்சு செய்வதை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
நூற்றாண்டுகள் பழமையான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
- இரவு 8:00 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
- காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது.
திருப்பூர் :
காங்கயம் சுற்றுப்பகு தியில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
மழையின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பல இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தது. அதில், நத்தக்காடையூர், ரத்தினபுரியில் விநாயகர் கோவில் அருகே கூலி தொழிலாளி, சுப்பிரமணி, என்பவர் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. இதைப்போல் காங்கயம் - ஈரோடு ரோட்டில் முள்ளிப்புரம் பகுதியிலும், சுந்தராபுரி பகுதியிலும் பலத்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ரோட்டில் கிடந்த மரங்களை அகற்றினர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து தடைப்பட்டது.
- சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சிக் குட்பட்ட கோவில்பட்டி விளக்கு பகுதியில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதில் சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் பஸ்களில் சென்ற பயணிகள் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தன் சொந்த செலவில் ஜே.சி.பி. எந்திர உதவியுடன் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தார். இரவு நேரம் என்று கூட பாராமல் துரிதமாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வ லர்களும் வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டினர்.
மேலும் சாலையோ ரத்தில் காய்ந்து பட்டுப்போன நிலையில் இருந்து வரும் மரங்களை அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் துறை சார்ந்த அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- திடீரென வீசிய காற்றின் வேகம் காரணமாக பூவரச மரமானது வேரோடு பெயர்ந்து மருத்துவமனையின் நடைபாதையில் குறுக்காக விழுந்தது.
- 1 மணி நேரத்திற்கு பின்னர் மரம் அகற்றப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை.இந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான பூவரச மரம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென வீசிய காற்றின் வேகம் காரணமாக பூவரச மரமானது வேரோடு பெயர்ந்து மருத்துவமனையின் நடைபாதையில் குறுக்காக விழுந்தது. அப்போது நோயாளிகளோ பார்வையாளர்களோ யாரும் உள்ளே செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், மற்றும் விபத்து ஏற்படவில்லை.
மேலும் மரம் பாதையின் குறுக்காக விழுந்ததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமலும், பார்வையாளர்கள் வெளியே செல்ல முடியாமலும் தவிப்புக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் மரம் அகற்றப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 60 ஆண்டு பழமையான பூவரச மரம் காற்றுக்கு வேரோடு சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மரத்தின் சுற்றி குப்பை கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளித்தது.
- புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் ரெயில்வே கேட்டின் கீழ்புறம் மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி அளித்தது. இந்நிலையில் நேற்று மாலை மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் தீ வேகமாக பரவி பழமை வாய்ந்த புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி பாலச்சந்தர் தலைமையில் சிறப்பு அலுவலர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமி, ராஜேந்திரன், விவேகானந்தன் மற்றும் உதய பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது.
- துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் குட்டை அருகே தைல மரம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது. இதனை வருவாய்த்துறையினர் அகற்றவில்லை. இதுகுறித்து கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது மரம் சாய்ந்து விழுந்தது குறித்து துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனுமதி கொடுத்த பின்பு தான் மரத்தை ஏலம் விட்டு அகற்றப்படும் என்றனர்.
- மனித - விலங்கு மோதல், பிரச்னை சமீப காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
- வெளிநாடுகளில் மரத்தை வெட்ட கடும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை.
திருப்பூர்:
பல்லடம் திருச்சி ரோடு வனாலயத்தில் வான்மழை கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:-
வெளிநாடுகளில் மரத்தை வெட்ட கடும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை. மனித - விலங்கு மோதல், பிரச்னை சமீப காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு நாடு நன்றாக இருக்க 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் நம்மிடம் 24 சதவீதம் மட்டுமே உள்ளன. மரங்களை விரைவாக வளர வைப்பது, பயன்படுத்துதல் என்பதை ஆராய்ந்து வருகிறோம். வளர்ச்சி அடையும் நாடுகளில் இருந்த இந்தியா தற்போது வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது.
- பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் ஜே.கே.ஜே.காலனி முதலாவது வீதி அருகே, சுமார் 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது. இதனை நேற்று சிலர் வெட்டுவதாக வரு வாய்த் துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்ற போது அங்கு அந்த மரத்தை சிலர் முழுமையாக வெட்டி விட்டனர். உரிய அனுமதியின்றி மரம் வெட்டியது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 40 வயதான அரசமரம் - வேப்பமரம் ஆகிய 2 மரங்களும் அருகருகே வளர்ந்து உள்ளன.
- மக்கள் கடவுளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியில், சுமார் 40 வயதான அரசமரம்- வேப்பமரம் ஆகிய 2 மரங்க ளும் அருகருகே வளர்ந்து உள்ளன. இதனை அங்குள்ள மக்கள் கடவு ளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கி ழமை களில் வழிபாடு நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் அரசு -வேம்பு மரங்களுக்கு திருமணம் செய்ய அந்தப் பகுதி மக்கள் முடிவெ டுத்தனர். இதை யடுத்து அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக அரச மரத்துக்கு வேட்டியும், வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு கள் நடந்தன. மேலும் 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டது.
அதை த்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, மந்திரங்கள் ஓதி, பொது மக்கள் புடை சூழ வேப்ப மரத்துக்கு தாலி கட்டி ,அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை தண்டபாணி கோவில் அர்ச்சகர் நாகராஜ குருக்க ள் நடத்தி வைத்தார். அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- புளி பறிக்க ஏறியபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே பனவிளை தாறாவிளையை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ் (வயது52). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மதியம் இவர் தனது வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளி பறிக்க மரத்தில் ஏறினார்.அப்போது எதிர்ப்பாராமல் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து மிக்கேல் ராஜின் மனைவி லதா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்