search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லக்னோ"

    • நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் சாரதா நகர் பகுதியில் வசிக்கும் முதியவர் 2 நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    இந்த மனிதாபிமானமற்ற செயல் முதியவரின் பக்கத்து வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், "லக்னோ, சாரதா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற முதியவர், மதியம் 2 நாய்க்குட்டிகளை அக்கம் பக்கத்தில் இருந்து எடுத்தார். பின்னர் அவர் அவற்றை வீட்டிற்குள் கொண்டு சென்றார். அங்கு நாய்குட்டிகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது. லக்னோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
    • 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.

    நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.

    டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்
    • இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி, இந்தியா தனது வீரம் மிக்க இந்திய இராணுவத்தை பெருமைப்படுத்தவும் ,நன்றி செலுத்தவும் இந்திய இராணுவ தினத்தை கொண்டாடுகிறது.

    1949ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியான மார்ஷல் கே.எம் கரியப்பாவின் 76வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    மார்ஷல் கே எம் கரியப்பா ஜனவரி 15, 1949 அன்று பிரிட்டிஷ் தலைமை தளபதியான ஜெனரல் பிரான்சிஸ் புட்சருக்குப் பிறகு இந்திய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார். அதனால் இந்த மறக்கமுடியாத நாளில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அணிவகுப்பு நடைபெறும்.

    இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர். மேலும், தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    இவ்விழா உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெறுகிறது.இன்று 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    ஜெனரல் மனோஜ் பாண்டே, தேச சேவையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    "இந்த இராணுவ தினமான 2024ல், இந்திய இராணுவத்தின் அனைத்து தரவரிசைகள், சிவில் ஊழியர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவையில் தங்கள் உயிரைக் கொடுத்த வீரார்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம். அவர்களின் தியாகம் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.இந்திய இராணுவம் 2024 ஐ "தொழில்நுட்பத்தில் இணைந்து செயலாற்றும் ஆண்டாக" இருக்கும்.இது இராணுவத்தின் திறன் தொழில்நுட்பத்தின் மாற்றத்திற்க்கு இணைந்து செயல்படும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

    தேசிய உணர்வில் இந்திய ராணுவத்துக்கு தனி இடம் உண்டு. தேசம் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதியில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."ஜெய் ஹிந்த்" என்று தனது உரையை முடித்தார்.

    மேலும் இராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • தோல்வியடைந்த லக்னோ அணியையும், நவீன் உல் ஹக்கையும் ரசிகர்கர் கிண்டல் செய்து வருகின்றனர்.
    • ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் 2023 சீசன் வரும் 28-ந் தேதியுடன் முடியவடைய உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் 2-ல் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயாமாக மாம்பழம் உள்ளது. மாம்பழம் சீசன் கேள்விபட்டிருக்கோம். ஆனால் ஐபிஎல் தொடர்ல இது மாம்பழம் சீசனா மாறியிருக்கு என்று சொல்லலாம்.

    இந்த மாம்பழல் சீசன் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர், லக்னோ அண்யின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஆவர். அவர் பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய போது விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடினார். இது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இறுதியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணியையும், அந்த அணியின் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்கள் மூலமாக ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    அதில் லக்னோ அணி வீரர்களே டென்சன் வேண்டாம். லக்னோவில் டிஸ்யூ பேப்பர் ரெடி பன்ன ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டிருந்தனர். 

    • ராணுவ வளாக சுவர் இடிந்து, குடிசை பகுதி மீது விழுந்தது.
    • உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு

    லக்னோ:

    உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் லக்னோ அருகே உள்ள தில்குஷா பகுதியில் ராணுவ வளாகத்திற்க வெளியே ஏராமானோர் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர்.

    நேற்றிரவு கன மழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக, காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா தெரிவித்தார்.

    அதிகாலை 3 மணியளவில் ஒன்பது உடல்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.

    மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதேபோல் உன்னாவ் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதில் கணவன், மனைவி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்து சம்பங்களில் ஒரே நாளில் 12 பேர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஒரே நேரத்தில் அதிகமானோர் டிஎன்ஏ (மரபணு) பகுப்பாய்வு செய்து லக்னோ பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். #IISF2018
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் சர்வதேச அறிவியல் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லக்னோவில் உள்ள கோயங்கா பள்ளியை சேர்ந்த 550 மாணவர்கள் ஒரே நேரத்தில் வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை எடுத்து பகுப்பாய்வு சோதனை செய்தனர்.

    ஒரே நேரத்தில் அதிகமான பேர் டிஎன்ஏ பகுப்பாய்வு சோதனை செய்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. முன்னதாக அமெரிக்காவின் சியாட்டில் மாநிலத்தில் 302 மாணவர்கள் சோதனை செய்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


    ஆண்டுதோறும் பெங்களூருவில் நடக்கும் விமான கண்காட்சி இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #AeroIndia #AirExpo
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டு தோறும் விமான கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கண்காட்சியை இம்முறை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த தகவலோ, மறுப்பு தகவலோ வரவில்லை.

    விமான கண்காட்சி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதும், கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2019 உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பெங்களூருவில் நடைபெறும் உலக புகழ் பெற்ற விமான கண்காட்சியை உத்தரபிரதேசத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் பெங்களூருவில் உள்ளது. ஆயினும் இந்த விமான கண்காட்சியை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்நிலையில், குமாரசாமி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
    ×