search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகம்"

    • 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது 6 புதிய மருத்துவக் கல்லூரியில் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

    • காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்கிறது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24-ந் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேலும் வலுவடைந்து நேற்று தென்மேற்கு மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவானது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து செல்லும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (24-ந் தேதி) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ந் தேதி மாலை நிலவும்.

    இந்தப் புயல் சின்னம் தமிழக கரையையொட்டி உருவாகி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் 24-ந் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.
    • குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிக பட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கி டையே இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்ச ரிக்கையும் விடுத்துள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தையொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் வருகிற 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத் தில் மேலும் மழை பெய்யுமா? என்பது தெரிய வரும்.

    இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்க கடலில் உருவாகும் குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி ஹாட் ஸ்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த வார மும் மழை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    • 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்.
    • மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்க முயற்சி.

    தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை."

    "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது."

    "இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது."

    "எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள்/ வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை."

    "வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது, அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை, சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை பெய்தது.

    மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் இரவில் அதிக அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் இரவில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஓட்டப்பிடாரத்தில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி

    களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் அணைக்கரை தரைப்பாலம் மூழ்கியது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூணாம்சேத்தி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரசேகர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையால் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மாலையில் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. பின்னர் இரவில் மழை பெய்யத் தொடங்கியது. திருச்சி மாநகரில் விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    தஞ்சை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை இடைவிடாமல் பெய்தது.

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. நேற்று 105 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.16 அடியாக உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணி மண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாலையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    சேலம் ஆத்தூர், நத்தக்கரை, சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வேருடன் சாய்ந்தது. புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழைபெய்து வருகிறது.

    • தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
    • கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது. இந்நிலையில் வரும் மே 21 ஆம் தேதி 30 வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேறக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் கூட்டத்தில் மே மாதத்தில் தமிழகத்துக்கு 2.5 தி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், மே 16 ஆம் தேதி காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் இந்த ஒன்றரை மாதத்தில் 3.3 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும்.
    • தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பற்றாக்குறை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் மார்ச் 1-ந்தேதி முதல் இன்று வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு 99 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் இந்த ஒன்றரை மாதத்தில் 3.3 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 2 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

    திண்டுக்கல்லை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பற்றாக்குறை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ந்தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாளை தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 15-ந்தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 16-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 17, 18-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜி-பே, போன் பே மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம்.
    • மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி.) மூலம் தினமும் 1000 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

    கோடைக்காலம் என்பதால் தற்போது அனைத்து பஸ்களிலும் முழு இடங்களும் நிரம்பி விடுகின்றன. குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    இணையதளம் வழியாக எளிதாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பயணிகள் வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர்.

    இந்த நிலையில் பயணிகளுக்கு கூடுதலாக மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி பரீட்சார்த்தமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பஸ்களிலும் இந்த வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    1000 வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு பஸ் களிலும் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. இனி டிக்கெட் எடுக்க ரொக்கமாக பணம் கொடுக்க தேவையில்லை. வங்கி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்றவற்றின் மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

    மின்னணு பண பரிவர்த்தனை திட்டத்தை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    முன்பதிவு செய்யாமல் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் பஸ்சிற்குள் டிக்கெட் எடுக்கும் போது சில்லரை பிரச்சினை ஏற்படுகிறது. குடும்பமாக பயணிக்கும் போது ஆயிரக்கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது சில்லரை கொடுப்பதில் கண்டக்டருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்படுவது உண்டு.

    இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட்டிற்காக பெரும் தொகையை கையில் எடுத்து செல்லத் தேவையில்லை. இந்த திட்ட செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் அனைத்து பஸ்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.
    • சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெப்ப தாக்கத்தை தாங்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீசி வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.

    கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் அதாவது 110.3 பாரன்ஷீட்டர் டிகிரி வெயில் பதிவானது. ஈரோடு, திருச்சி, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் 104, 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் உள்ளது.

    வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை தருகிறது. ஆனால் தொடர்ந்து வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அநேக இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் ஓரிரு இடங்களில் மிக மிக அதிமாகவும் வெயில் பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    நாளை ஒரு சில இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கோடை மழை ஒரு சில பகுதிகளில் பெய்ய தொடங்கியதால் நாளை முதல் 10-ந் தேதி வரை வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.

    அதேநேரத்தில் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பநிலை இருக்கும். இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் சுட்டெரித்தது.

    பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. அதிலும் கடலோர மாவட்டங்களில் அறவே மழை இல்லாததால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெப்ப தாக்கத்தை தாங்க முடியவில்லை.

    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
    • கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பல மளிகை பொருட்களின் விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அரிசி உற்பத்தி குறைந்து விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி கொண்டு வரப்படுவதால் அரிசி ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் துவரம் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் வாகன செலவு, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் பருப்பின் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்கிறது. ரூ.122-க்கு விற்கப்பட்ட உளுந்தம் பருப்பு ரூ.145-க்கும், ரூ.155-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.172-க்கும், ரூ.110-க்கு விற்கப்பட்ட பாசி பருப்பு ரூ.120-க்கும், ரூ.72-க்கு விற்கப்பட்ட கடலை பருப்பு ரூ.84-க்கும், ரூ.82-க்கு விற்கப்பட்ட உடைத்த கடலை ரூ.102-க்கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட கொண்டை கடலை ரூ.180-க்கும், ரூ.77-க்கு விற்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.

    ரூ.82-க்கு விற்கப்பட்ட கடுகு ரூ.95-க்கும், ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட வெந்தயம் ரூ.95-க்கும், ரூ.38-க்கு விற்கப்பட்ட சர்க்கரை ரூ.44-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட தனியா ரூ.120-க்கும் விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் சில பொருட்கள் மட்டும் விலை குறைந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் கிலோ ரூ.635-க்கு விற்கப்பட்ட சீரகம் ரூ.380 ஆக விலை குறைந்துள்ளது. ரூ.225-க்கு விற்கப்பட்ட சோம்பு ரூ.195 ஆகவும், ரூ.420-க்கு விற்கப்பட்ட மிளகாய் தூள் ரூ.410 ஆகவும், ரூ.360-க்கு விற்கப்பட்ட மல்லித்தூள் ரூ.340 ஆகவும், ரூ.250-க்கு விற்கப்பட்ட மிளகாய் ரூ.210 ஆகவும் விலை குறைந்துள்ளது.

    மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் சமையல் எண்ணெய் விலையில் மட்டும் தற்போது எந்த மாற்றமும் இல்லை.

    • சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.

    செங்கல்பட்டு:

    சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிட்டுள்ளது. கட்டண உயர்வு வரும் ஏப்.1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×