என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்கம்பி"
தஞ்சாவூர்:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
பூதலூரில் பலத்த மழை பெய்தது. பூதலூர் ரெயில்வே கீழ் பாலத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மாலை பெய்த மழை காரணமாக பூதலூரில் தாழ்வான பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
இதைபோல திருக்காட்டுப் பள்ளி, செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருக்காட்டுப் பள்ளியில் அரசு மருத்துவ மனை, போலீஸ் நிலையம் முன்பும் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.
திருக்காட்டுப் பள்ளி பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்த குறுவை பயிர் சாகுபடி நடந்து வந்தது. இந்த மழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
பூதலூர் அருகே உள்ள ராயன் முண்டான் பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி கவிதா. இவர் நேற்று ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று சக தொழிலாளர்களுடன் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது இடியுடன் மழை பெய்தது. திடீரென கவிதாவை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பூதலூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு, கவராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுசிலா (வயது 60). இவர் நேற்று வீட்டின் பின்புறம் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார்.இதில் மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு மகன் வீரமணி (30). ஓடி வந்து தனது தாய் சுசிலாவை தூக்க முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மழை மற்றும் காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு விடுமுறை அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், வலங்கைமான், நன்னிலம், நீடாமங்கலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வலங்கை மான் பகுதியில் பலத்தமழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இன்றும் பலத்த மழை பெய்து வருவதால் கலெக்டர் நிர்மல்ராஜ் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்திலும் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிபட்டனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-
கல்லணை - 50.6
திருக்காட்டுப்பள்ளி - 71.8
தஞ்சாவூர் - 20
வலங்கைமான் - 39.4
நன்னிலம் - 58.4
சீர்காழி - 76.4
நீடாமங்கலம் - 47.8
முத்துப்பேட்டை - 30.6
திருவாரூர் - 34.6
நாகை - 37.4
வேதாரண்யம் - 63.6
பூதலூர் - 102.2
வெட்டிக்காடு - 22.2
ஒரத்தநாடு - 28.4
பட்டுக்கோட்டை - 40.7
மதுக்கூர் - 62
தர்மபுரி மாவட்டம் பயர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (27). இவர் சென்னையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். தற்போது சென்னை துறைமுகம் 5-வது வாயிலில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால நடைபாதை பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு மற்ற தொழிலாளர்களுடன் குமரேசனும் வேலை செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில், நடை மேம்பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த ரெயில்வே மின்சார கம்பியில் விழுந்தார். இதனால் குமரேசன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார்.
இதை கண்ட மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 60), விவசாயி. ஆமுர் ஊராட்சியில் குடிநீர் பம்ப் ஆபரேட்டராக இருந்தார்.
நேற்று மாலை அவர் விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்தார்.
இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘மின்சாரம் தாக்கி விவசாயி கன்னியப்பன் மயங்கி விழுந்த நிலையில் மின்சாரத்தை துண்டிக்க கோரி மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டால் யாரும் கண்டு கொள்ளவில்லை.
வடக்குப்பட்டு கிராமத்தில் பல மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பது பற்றியும், மின் கம்பிகள் தாழ்வாக செல்லுவது குறித்தும் பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தாலேயே விவசாயியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி மெயின்ரோடு மேட்டிருப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அமிர்த கணேசன் (வயது 18). இவர் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை அமிர்த கணேசன் அப்பகுதியில் உள்ள தனது தாத்தா சண்முகம் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வீட்டின் மாடியில் மழை நீர் தேங்கி அடைத்திருப்பதை பார்த்தார். இதனால் தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தார். அப்போது அவர் செல்போன் பேசிய படியே தேங்கி கிடந்த தண்ணீரில் இறங்கினார்.
அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பி , அமிர்த கணேசன் உடல் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். நீண்டநேரமாக அமிர்த கணேசனை காணாததால் அவரது உறவினர்கள் தேடினர். அப்போது வீட்டின் மாடியில் அமிர்த கணேசன் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தரங்கம்பாடி தாசில்தார் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் விரைந்து வந்தனர்.
மறியல் செய்தவர்களுடன் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் , குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும். பலியான அமிர்த கணேசன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மயிலாடுதுறை சப்- கலெக்டர் தேன்மொழி விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் மறியல் செய்த உறவினர்களிடம் , இதுபற்றி அரசு கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.
இதன்பின்னர் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் இன்று பள்ளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 11 குழந்தைகள் மீது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்