search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கை"

    • சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
    • திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    தேனி மாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 33). திருநங்கையான இவர் கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வீர புலி பகுதியில் வசித்து வந்தார்.

    கூலி வேலை செய்து வந்த சுமன் இன்று காலை வீரபுலி பகுதியில் ரோட்டோரத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    ரோட்டோரத்தில் பிணமாக கிடந்த சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பலியான திருநங்கை சுமனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும். கடந்த வாரம் கன்னியாகுமரி பகுதியில் ரோட்டோரத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்த நிலையில், மேலும் ஒரு திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவருக்கும் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.நட்பாக பழகிய இவர்கள், நாளடைவில் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது அந்த வாலிபர், வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.இதை நம்பிய வினோத்குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். மேலும் தனது பெயரையும், காதலன் விருப்பத்திற்கு ஏற்ப வினோதினி என மாற்றிக் கொண்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பாலூரில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த வாலிபர், வினோதினியுடன் குடும்பம் நடத்த மறுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.மேலும் வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த வினோதினி, அந்த வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, பாலூர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் இருதரப்பினரையும் கடந்த மாதம் 3-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் பேரில் வினோதினி, ஊர் பஞ்சாயத்துக்கு புறப்பட்ட போது அந்த வாலிபரின் உறவினர்கள் அவரை தடுத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார். இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் வினோதினியின் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.இதனால் பாதிக்கப்பட்ட வினோதினி, கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது பற்றி அறிந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அவரது கையில் “விவேக் லவ்” என்று பச்சை குத்தி இருந்தார்.
    • சுமார் 5 அடி உயரம் உடைய அவர் சுடிதார் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து இருந்தார்

    கன்னியாகுமரி :

    தோவாளை அருகே உள்ள வெள்ளமடம் பகுதி யில் ஏராளமான திருநங்கை கள் தங்கி யிருக்கிறார்கள். அவர்கள் கன்னியாகுமரி உள்பட பல்வேறு இடங்க ளுக்கு சென்று தர்மம் எடுத்து பிழைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    சுமார் 5 அடி உயரம் உடைய அவர் சுடிதார் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அவரது கையில் "விவேக் லவ்" என்று பச்சை குத்தி இருந்தார்.

    இதற்கிடையில் அங்கு வந்த ஒரு சில திருநங்கைகள் அவரை காட்டு ராணி என்று அழைப்பதாக கூறினார்கள். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது.

    • குமார் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் குமார்(34). இவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது குமாரி டம் திருநங்கை ஒருவர் ஆசை வார்த்தை கூறி ஒரு ஆட்டோவில் 5 ரோடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே குமாரிடம் இருந்த செல்போனிலிருந்து வேறொரு செல்போன் எண்ணிற்கு கூகுள்பே மூலம் ரூ.5 ஆயிரத்தை அனுப்ப வைத்துள்ளார்.

    பின்னர் குமாரிடம் தகராறு செய்து ஆட்டோவில் இருந்து குமாரை கீழே இறக்கி விட்டு திருநங்கை தப்பி சென்று விட்டார். இது குறித்து குமார் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.
    • விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சென்னையில் இருந்து 45 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் நேற்றிரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் குடிபோதையில் இருந்த நிலையில் பஸ் நிலையத்தின் முன் பகுதியில் வந்த போது திருநங்கை ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

    தொடர்ந்து 2 பேரும் ஆட்டோவில் சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். பின்னர் திருநங்கை அந்த நபரிடம் பணம் கேட்டார். ஆனால் அந்த நபர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்காஹே கடந்த 2020-ல் அந்த நாட்டிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தார்.
    • 2021-ல் தனது பாலினத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

    கனடாவின் தேசிய மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள டேனியல் மெக்காஹே சர்வதேச கிரிக்கெட்டில் முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார்.

    அமெரிக்காவில் இம்மாதம் 4 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் இவர் களமிறங்க உள்ளார்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்காஹே கடந்த 2020-ல் அந்த நாட்டிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தார். 2021-ல் தனது பாலினத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

    • விஜய் என்ற அனாமிக்கா தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் என்ற ஊரை சேர்ந்த பூபதி என்பவரது மகன் விஜய் என்ற அனாமிக்கா (வயது 22). திருநங்கை. இவர் பிடாகத்தில் இருந்து செஞ்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அவர் சிட்டாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அனாமிகா வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனாமிகா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சியை சேர்ந்த விஜயதாஸ் என்பவரது மகன் பாலாஜி (23), காதர் என்ப வரது மகன் சானவாஸ் (23) ஆகியோர் காயங்களுடன் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.செஞ்சியை அடுத்த ஊரணித் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). இவர் தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
    • வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்துவந்த ஜகாத், தனது வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுத்தார். இதனை ஜியா பாவல் அறிவித்தார்.

    ஆனால் தங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கோழிக்கோடு மாநகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் குழந்தைக்கு ஜியா பாவலை தந்தை என்றும், ஜஹாத்தை தாய் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில் திருநங்கை தம்பதியான ஜியா பாவல் மற்றும் ஜஹாத் ஆகிய இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்களது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய்-தந்தை என்று இருப்பதற்கு பதிலாக பெற்றோர் என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குழந்தையின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஆணாக அடையாளப்படுத்தி, தற்போது சமுதாயத்தில் ஆணாக வாழ்ந்து வருவதால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை மற்றும் தாயின் பெயரை தவிர்க்குமாறு மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.

    மேலும் தங்களை பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அதிகாரிகள் மறுத்ததாகவும் கோர்ட்டில் தம்பதியினர் தெரிவித்தனர். அதனைக்கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.

    ஆனால் மனுவில் சில தொழில் நுட்ட குறை பாடுகளை அரசு வக்கீல் சுட்டிக்காட்டினார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
    • திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை.

    ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங்கினார்.

    ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார்.

    திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று பைர்வா கூறினார்.

    பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

    மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நூர் ஷெகாவத் கூறினார்.

    நூர் ஷெகாவத் இப்போது திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

    • இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • கத்திமுனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜனனி, பிளசிகா. திருநங்கைகளான இருவரும் நேற்று இரவு மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜீசஸ் கால்ஸ் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த போதை வாலிபர்கள் 2 பேர் பிளசிகாவை அழைத்து பேச்சுக் கொடுத்தனர்.

    பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனனி உடனடியாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மகாராஜன் ஆகியோர் விரைந்து வந்தனர் மேலும் கடத்தி செல்லப்பட்ட பிளசிகாவின் செல்போன் "டவர் லொகேஷன்" மூலம் செட்டியார் அகரம் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மறைவான பகுதியில் போதை வாலிபர்களின் பிடியில் சிக்கி தவித்து வந்த பிளசிகாவை பத்திரமாகமீட்டனர்.

    அப்போது போதை வாலிபர்கள் சப் - இன்ஸ்பெக்டர் மகாராஜனை சரமாரியாக தாக்கி அவரது வயிற்றில் கடித்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பிளசிகாவை கடத்தியது ஆவடியை சேர்ந்த ரவுடி ஜெகன் (வயது 30) மற்றும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பது தெரிந்தது. அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த ஜெகன் மற்றும் தினேஷ் இருவரும் பிளசிகாவிற்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது இதனால் மயங்கிய பிளசிகாவை போலீசார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசிடம் இருந்த தப்ப முயன்ற ரவுடி ஜெகனுக்கு வலது காலில் அடிபட்டு எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது. கத்தி முனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருநங்கை மாயா, திருநம்பி கணேஷ் ஆகிய இருவரும் அங்குள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
    • தமிழகத்தில் இதுபோன்ற திருமணங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(21). இவர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறி மாயா என்ற பெயரோடு வாழ்ந்து வந்தார். மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(24). இவர் பெண்ணாக பிறந்து திருநம்பியாக மாறி கணேஷ் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளோ, அர்ச்சகர்களோ இந்த திருமணத்தை நடத்தி வைக்க முன்வரவில்லை. இதனைதொடர்ந்து திருநங்கை மாயா, திருநம்பி கணேஷ் ஆகிய இருவரும் அங்குள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

    உடன் வந்த திருநங்கைகள் இந்த திருமணத்தை நடத்தி வைத்து அவர்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அபிராமி அம்மன் கோவிலில் நடந்த இந்த வித்தியாசமான திருமணத்தை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    இதுகுறித்து திருமணத்தை நடத்தி வைத்த திருநங்கைகள் தெரிவிக்கையில், தன்பாலின ஜோடிகள் சேர்ந்து வாழ உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கி உள்ளது. இதேபோல் திருநங்கையும், திருநம்பியும் திருமணம் செய்து கொண்டு வாழும் முறையை கேரள உள்ளிட்ட பிறமாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் சமூகத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற திருமணங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கி வருகின்றனர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது போல இதுபோன்ற திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் மாற வேண்டும். இவர்களும் மனிதர்கள் என்பதை உணர்ந்து இந்த தம்பதிகளுக்கு சமூகம் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

    அப்போதுதான் தாழ்வுமனப்பான்மையால் தற்கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்றனர்.

    • திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறுமியிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்றனர். திடீரென சிறுமியை தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு அங்குள்ள சர்வீஸ் ரோடு வழியாக சென்றனர்.

    அங்குள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச் சென்ற வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி சாலைக்கு ஓடி வந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.

    அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றார். அவரை கண்டதும் வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த திருநங்கைக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    ×