search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தப்பியோட்டம்"

    • மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
    • மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர்கண்ணன். இவரது மனைவி மனைவி சரண்யா.

    இவர் தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யா வின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி யடைந்த சரண்யா செயினை பிடித்து கொண்டார்.

    இருந்தாலும் மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே பூ வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் ராஜபாதர் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 34). பூ வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் குதிரை சுரேஷ் (32). விக்னேஷ் (30). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர்.

    அப்போது வேலாயுதத்திற்கும் குதிரை சுரேசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குதிரை சுரேஷ் மற்றும் விக்னேஷ், வேலாயுதத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்த வேலாயுதத்தை மீட்ட பொதுமக்கள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    ஓசூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிளைச் சிறையில் தற்போது 32 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதில் அடிதடி வழக்கில் கைதான கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் ஜீவா நகரை சேர்ந்த தனஞ்ஜெய் (வயது 40) என்ற கைதியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று காலை 7.30 மணிக்கு தப்பி ஓடி விட்டார். அவர் வாசல் வழியாக சென்றாரா அல்லது கழிவறை வழியாக சென்றாரா என்று தெரியவில்லை.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

    கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.

    ×