என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீருடை"
புதுச்சேரி:
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் சார்பில் கல்வித்துறை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். இளைஞர் பெருமன்ற துணை செயலாளர் லூதியர், துணைத்தலைவர்கள் பெருமாள், முரளி, பல்கலைக் கழக பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் அந்தோணி நோக்கவுரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் எழிலன் மற்றும் இளைஞர், மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி 4 மாதமாக வழங்கப்படாத சீருடைகளை உடனடியாக வழங்க வேண்டும். கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு காக்கி நிற சீருடையும், 15வருட அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நீல நிற சீருடையும் வழங்கப்படுகிறது. மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2செட் சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்படுகிறது. சீருடைக்கு தேவையான துணிகள் வழங்கப்படும் ஊழியர்கள் அதனை வேண்டிய அளவிற்கு தையல்கலைஞர்களிடம் கொடுத்து அவர்களின் அளவிற்கு ஏற்ப தைத்து கொள்வார்கள்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் வாகனங்களை இயக்கும் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பேட்ஜ், சட்டை பையில் பெயர் பேட்ஜ், சட்டை பட்டன்கள் போக்குவரத்து கழக அடையாளம் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் பல ஊழியர்கள் அதனை பின்பற்றுவது கிடையாது, காக்கி சட்டையும் பேன்ட்டும் அணிந்தே அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர்.
மேலும் தனியார் பஸ் டிரைவர்களும் இதையே அணிந்து பஸ்களை இயக்கி வருவதால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் தனியார் பஸ் எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் ராமேசுவரம் கிளை பணிமனையில் பணிபுரியும் மீனாட்சிசுந்தரம்(வயது42) என்பவர் தமிழக அரசின் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பஸ்சை இயக்கி வருகிறார்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அணியும் சீருடையை பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை முறையாக அணிந்து வாகனங்களை இயக்குகிறார். சக ஊழியர்கள் கேலி செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்களையும் இதே போல சீருடை அணிவதற்கு மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தி வருகிறார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே ரூ. 137.18 மதிப்பில் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனைச்சாவடியில் ஆந்திரா மற்றும் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்காக 10 வழித்தடங்களும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்காக 6 வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
கடத்தல் பொருட்களை மிக நுட்பமாக கண்டறியும் வகையில் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஸ்கேனிங் வசதியும், சரக்கு வாகனங்களுக்கான எடை மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சோதனைச் சாவடியாக அமைந்துள்ளது. இதற்கான முழு பணிகளும் முடிவடைந்து விட்டன. முதல்-அமைச்சரால் மிக விரைவில் இது திறக்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறந்திட இன்னும் 15 நாட்கள் உள்ளது. அதற்குள் போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைத்து பள்ளி வாகனங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு அந்த வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்படும்.
நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் கூடிய 5 ஆயிரம் புதிய பேருந்துகள் போக்குவரத்து துறையிலே கொண்டு வர இருக்கிறோம். மாணவர்கள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக நவீன படிகட்டுகள் கொண்ட பேருந்துகளாக அவை அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 70 புதிய பேருந்து பணிமனைகளை திறக்க வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதிகளின் படி அறிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது சுமார் 54 பணிமனைகள் திறக்கப்பட்டு உள்ளன. சில பணிமனைகளுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
சில பணிமனைகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. இவையெல்லாம் முடிவு பெற்று கூடிய விரைவில் அறிவிக்கப்பட்ட அத்தனை பணிமனைகளும் திறக்கப்படும்.
மாணவர்கள் சீருடையில் இருந்தால் போதும். அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்திட அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை போட்டு உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
அப்போது அவருடன் ஊரக தொழில்துறை அமைச் சர் பெஞ்ஜமின், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி, இணைஆணை யர் பிரசன்னா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி, பொன்னேரி எம். எல்.ஏ. சிறுனியம் பலராமன், கும் மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கே.எஸ். விஜயகுமார் ஆகியோர் உடன் வந்தனர். #mrvijayabhaskar #schoolstudents
திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு ஊர்காலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் கிளை 3-ல் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து குமுளிக்கு செல்வதற்காக பஸ்சை எடுத்தார். அப்போது அவர் சீருடை அணியவில்லை. இதனை அறிந்த போக்குவரத்து பணிமனை உதவி பொறியாளர் தினகரன் விரைந்து வந்து சுரேசை பஸ்சை எடுக்க விடாமல் தடுத்தார்.
இதனால் டிரைவருக்கும், உதவி பொறியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டிரைவர் சுரேஷ் பஸ் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சீருடை வழங்காததை கண்டித்து கோஷம் போட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து நான் நிரந்தர பணியாளராக பணியாற்றுகிறேன். ஆண்டுக்கு 2 செட் சீருடை (2 பேண்ட், 2 சட்டை) வழங்க வேண்டும். ஆனால் இது கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் சீருடை தைப்பதற்கான தையல் கூலியும் வழங்கவில்லை. இது குறித்து கிளை மேலாளர் மூலம் மதுரை பொது மேலாளருக்கு மனு கொடுத்துள்ளேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
சீருடை வழங்காததை கண்டித்து கம்பம் யூனிட் 2-ல் பாலகிருஷ்ணன் என்பவரும் போராட்டம் செய்துள்ளார். இது போன்ற நிலை திண்டுக்கல் கோட்டம் முழுவதும் உள்ளது. எனவே அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Tamilnews
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த கல்வி ஆண்டு 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெளிர் பச்சை சட்டை(அக்குவா கிரீன்), அடர் பச்சை கால் சட்டை (மெடோ கிரீன்) வழங்கப்பட உள்ளது.
6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் வெளிர் பிரவுன் சட்டையும், பழுப்பு சிவப்பு கால் சட்டையும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.
இந்த சீருடைகளுக்கான துணிகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை வழங்குகிறது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய சீருடைகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்