search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 169049"

    • அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புகார் மனு அளிக்கலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், அனைத்து டி.எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏதேனும் புகார் இருப்பின் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புகார் மனு அளிக்கலாம். மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பட்டு வேட்டி, பட்டு சேலையில் வந்தனர்
    • 5 வருடமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் பிந்து (வயது 23). இவர் குளச்சலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குலசேகரம் மங்கலத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர் தக்கலையில் ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு பிந்து அடிக்கடி செல்லும்போது விக்னேசை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து பிந்து வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து தந்தையின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் காதலன் விக்னேசுடன் சென்றார்.

    இந்த நிலையில் பிந்துவை காணவில்லை என பெற்றோர் தேடத் தொடங்கினர். இது பற்றி தெரியவந்ததும் பிந்து, காதலன் விக்னேசுடன் நேற்று இரவு குளச்சல் போலீஸ் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தார்.

    அப்போது காதல் ஜோடியினர் பட்டு வேட்டி, பட்டுச்சேலை அணிந்து வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விசாரணை நடத்தினார்.

    அப்போது பிந்து, தாங்கள் 5 வருடமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது பிந்து, காதலர் விக்னேசுடன் செல்வதில் உறுதியாக இருந்ததார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி விக்னேஷூடன் அனுப்பி வைத்தனர். அப்போது பிந்து வீட்டிலிருந்து தான் எடுத்து சென்ற ஸ்கூட்டியை தந்தையிடம் ஒப்படைத்து சென்றார்.

    • திருநங்கைகள் புகுந்து கட்டாயமாக பணம் கேட்டு தொல்லை தந்து வருகின்றனர்.
    • வணிகர்கள் நிம்மதி இழந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் போலீஸ் நிலையத்தில் பல்லடம் அனைத்து வணிகர் சங்க தலைவர் ராம்.கண்ணையன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தனசீலன், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி, செயலாளர் லாலா கணேசன், மாநகர தலைவர் ஜான்வல்தாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    பல்லடம் நகரில் உள்ள கடைகள், வணிக நிறுவன ங்களுக்குள் திருநங்கைகள் புகுந்து கட்டாயமாக பணம் கேட்டு தொல்லை தந்து வருகின்றனர். அவர்களுக்கு பணம் தரவில்லை என்றால் கூட்டமாக வந்து மிரட்டுவது ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் வணிகர்கள் நிம்மதி இழந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 25ந் தேதி பல்லடத்தில் தள்ளு வண்டியில் துரித உணவு வியாபாரம் செய்து வரும் இசக்கிபாண்டி என்பவர் மீது திருநங்கைகள் கடுமையாக தாக்குதல் நடத்திபலத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வியா பாரியை தாக்கியவர்க ளை கைது செய்ய வேண்டும். மேலும் பல்லடம் நகரில் உள்ள வியாபாரிக ளுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற விதமாக, அனைவரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
    • யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்க ளுக்கு சரியான உடற்பயிற்சி அல்லது மன வலிமையை ஊக்குப்படு த்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு இயக்குனர் சங்கர் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்ற க்கூடிய காவலர்களுக்கு மனவலிமையை ஊக்கப்படு த்தும் நோக்கத்துடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதி காவல் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் ரயில் நிலையம் அருகில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு காவல் நிலையம்,15 வேலம்பாளை யம் காவல் நிலையம் மற்றும் வடக்கு மகளிர் காவல் நிலைய காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    • குறும்பட போட்டியில் மதுரை மாநகர போலீசுக்கு முதல் பரிசு கிடைத்தது.
    • முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

    மதுரை

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் கூடுதல் இயக்குநரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசாருக்கிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 45 குறும்பட வீடியோக்கள் பங்கேற்றன.

    அவற்றை காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு தணிக்கை குழு ஆய்வு செய்தது. இதில் முதல் பரிசாக ரூ. 35 ஆயிரத்தை மதுரை மாநகர காவல் துறையினர் பெற்றனர். 2-வது பரிசு ரூ.25 ஆயிரத்தை கோவை போத்தனுர் ெரயில்வே காவல்துறையினரும், 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை திருவாரூர் மாவட்ட காவல் துறையினரும் பெற்றனர்.

    பரிசு தொகையையும், சான்றிதழையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் வழங்கினார். முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

    • பிளஸ்-2 படிக்கும் போது இருந்து காதலித்து வந்துள்ளனர்
    • ஒரு இந்து ஆலயத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 23), ஆட்டோ டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்யா (20) என்பவரும் பிளஸ்-2 படிக்கும் போது இருந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஜித், ஆர்யாவை பெண் கேட்டு சென்று உள்ளார். ஆனால் ஆர்யாவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆர்யாவை அவரது சகோதர்கள் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு தினசரி அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஸ்ரீஜித், ஆர்யாவை அப்பகுதியில் உள்ள ஒரு இந்து ஆலயத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    இருவரின் வீட்டாரையும் போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் யாரும் போலீஸ் நிலையத்திற்கு வராததை அடுத்து சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

    • ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
    • ஜேப்படி ஆசாமிகள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மத்திய பஸ் நிலையம், கோவில் வழி, புதிய பஸ் நிலையம் இயங்கி வருகின்றன. கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புது பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மத்திய பஸ் நிலையத்திலருந்து டவுன்பஸ்கள் மற்றும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செல்கின்றன. தினந்தோறும பல ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவும் பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் எப்.ஆர்.எஸ் என்னும் சாப்ட்வேர் மூலம் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்:-

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் லட்சக்க ணக்கான தொழிலா ளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வாரத்தில் சனி ஞாயிறுகளில் சம்பளம் அளித்து விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் சிலர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பஸ் மூலம் திருப்பூர் நகரத்துக்கு வருகிறார்கள். இது போன்ற நேரத்தில் ஜேப்படி ஆசாமிகள், செல்போன்கள் திருட்டு, நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர். மேலும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம்நகை பறிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபடுகிறோம். குற்றங்களை தடுக்கும் வகையில் சோதனையில் சிக்கக்கூடிய சந்தேக நபர்கள் ஏதாவது வேறு வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ள பழைய குற்றவாளி களை உடனே கண்டறியும் வகையில் எப்.ஆர்.எஸ். என்னும் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் துணையுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் போட்டோ எடுத்தால் அவர்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் முழுமையான விவரமும் வந்துவிடும் . இதனால் எளிதாக குற்றவாளிகளை கைது செய்ய முடிகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

    • பிரபல டைரக்டர் டைரக்ட் செய்து வரும் சினிமா படத்தின் வெளிப்புறபடபிடிப்பு நடந்து வருகிறது.
    • பொறுப்பாளரிடம் வழங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிரபல டைரக்டர் டைரக்ட் செய்து வரும் சினிமா படத்தின் வெளிப்புறபடபிடிப்பு நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள பகுதியிலும் கடற்கரை சாலை பகுதியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

    இந்த நிலையில் இந்த சினிமா படத்தில் நடித்த துணை நடிகைகள் தங்களுக்கு சம்பளம்தரவில்லை என்று கூறி இன்று காலை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் 2 துணை நடிகர்களும் வந்தனர்.

    இது பற்றி அந்த 2 துணை நடிகைகளிடமும் 2 துணை நடிகர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த படத்தின் டைரக்டர் நடிகைகளுக்குரிய சம்பளத்தை ஏற்கனவே அந்த படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த பொறுப்பாளரிடம் வழங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அந்த படப்பிடிப்பு குழுவை சேர்ந்த பொறுப்பாளர்களை போலீசார் விசாரணை க்கு வரும்படி அழைத்து உள்ளனர்.

    • கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் கிளம்பிச் சென்றனர்.
    • மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்து வேகமாக தப்பி செல்வதாகவும் தகவல் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வேலம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 62). இவர் வாய்க்கால்மேடு பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டின் மாடியில் குடியிருந்து கொண்டு கீழ் தளத்தில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 6 மணியளவில் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் கிளம்பிச் சென்றனர். இந்த நிலையில் அவருக்கு சுமார் காலை 8.30 மணி அளவில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாகவும், மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்து வேகமாக தப்பி செல்வதாகவும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக பாலசுப்பிரமணியம் இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் பழனியிலிருந்து அவர் உடனடியாக வீடு திரும்பினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 2 மர்ம நபர்கள் காலை சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு வருவதும், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் வீட்டின் உரிமையாளர் பாலசுப்பிரமணியத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.3 லட்சம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் இது குறித்து அவினாசிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர்- தாராபுரம் பிரதான சாலையில் அதிகாலை நேரத்தில் திருட்டுப் போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர்.
    • கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது37). பனியன் நிட்டிங் நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில்தனக்கு தெரிந்த கணபதிபாளையத்தை சேர்ந்த ராஜா (44),திண்டு க்கல்லை சேர்ந்த பாபு (53) ஆகியோர் தொழில் நிமித்தமாக ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆவண செலவுக்காக ரூ.20 லட்சம் கேட்டனர். நான் ரூ.19 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம்அனுப்பி வைத்தேன். கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.அதன்பிறகு அவர்கள் கடன் தொகையை பெற்றுக்கொடுக்கவில்லை.

    நான் அனுப்பி வைத்த பணத்தையும் திருப்பி க்கொடுக்காமல் ஏமாற்றி, எனக்கு கொலைமி ரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார். புகாரை பெற்ற போலீசார் ராஜா, பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிளஸ்-2 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது.
    • 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் நாளை 13-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிகிறது.

    பிளஸ்-2 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது. 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 6 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியைமேற்கொள்ள உள்ளனர்.

    பிளஸ்-1 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது. 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 24 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள், 214 தனித்தேர்வர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 93 தலைமை ஆசிரியர்கள், 93 துறை அலுவலர்கள், 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 106 தலைமை ஆசிரியர்கள், 106 துறை அலுவலர்கள், 1,780 அறை கண்காணிப்பாளர்களாக 1,780 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட உள்ளது. இந்த முன்னேற்பாடுகள் அனைத்தையும் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • முகாமில் பரிசோதனைகள் செய்யப்பட்டு,மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் உடல் நலன் கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முயற்சியால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் பரிசோதனை, இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, மேலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.முகாமில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர்.

    ×