search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள்"

    • மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
    • பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.

    ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.

    • காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் கடந்த 9-ந் தேதி போலீஸ்காரர் முகமது ஹபீஸ் ஷாக் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது அவர் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • தபடோல் பகுதியில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொணடனர்.

    நியாமி:

    ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஜூலை மாதம் அதிபர் முகமது பாசும் சிறைபிடிக்கப்பட்டார். அதுமுதல் அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அண்டை நாடான மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்குள்ள தபடோல் பகுதியில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொணடனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 29 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாக நைஜர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை சீர்குலைக்க குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர்.
    • நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் நேற்று பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    இதற்காக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 3 முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆவர்.

    இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பெயர் முகமது ஷாநவாஸ் ஆலம், முகமது ரிஸ்வான் அஸ்ரப், முகமது அர்ஷத் வர்சி என்று தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது.

    இவர்களில் முகமது ஷாநவாஸ் ஆலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியை சேர்ந்தவர். இவர் சுரங்க என்ஜினீயர் என்பதால் அவருக்கு குண்டு வெடிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் தெரிந்துள்ளது. அவரது மனைவி பிறப்பால் இந்துவாக இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்.

    முகமது அர்ஷத் வர்சியும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அலிகார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் பி.டெக். முடித்து உள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பி.எச்.டி. பட்டத்தையும் பெற்றுள்ளார்.

    முகமது ரிஸ்வான் அஸ்ரப் கணினி அறிவியலில் பிடெக் படித்தவர். உத்தர பிரதேசத்தில் உள்ள அசம்கர் பகுதியை சேர்ந்தவர். மதகுருவாகவும் பயிற்சி பெற்றுள்ளார்.

    இவர்களில் முகமது ஷாநவாஸ் ஆலம் என்பவர் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளார். மற்ற இருவரும் அவரது கூட்டாளிகள் ஆவர். இந்நிலையில் கைதான 3 பயங்கரவாதிகள் பற்றியும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் மூத்த அதிகாரி எச்.ஜி.எஸ். தலிவால் கூறியதாவது:-

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட நபர்களில் மிக முக்கியமானவர் முகமது ஷாநவாஸ் ஆலம். இவரை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவரது கூட்டாளிகளான முகமது ரிஸ்வான் அஸ்ரப் லக்னோவிலும், முகமது அர்ஷத் வர்சி உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளனர். வட இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கடந்த ஜூலை மாதம் புனேயில் நடந்த சோதனையின் போது முகமது ஷாநவாஸ் ஆலமை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே அவரை பற்றி தகவல் தருபவருக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.

    டெல்லியில் முகமது ஷாநவாஸ் ஆலம் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், ரசாயன பொருட்கள், ரிமோட்டுகள், பேட்டரிகள், டைமர்கள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஜிகாதி இலக்கிய புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நன்கு தெரிந்த இடங்களை குறிவைத்து தாக்கி அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. பண்டிகை காலங்களில் அவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டு இருந்தனர். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை சீர்குலைக்க அயோத்தி, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர். இதற்காக இறுதிகட்ட பணியில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் அக்ஷர்தாமையும், மும்பையில் சபாத் ஹவுசையும் குறிவைத்து இருந்தனர்.

    கைதான 3 பேரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததுடன், வழக்கமான தகவல்களை அந்த அமைப்புடன் பகிர்ந்து வந்ததும் கண்டறியப் பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயெ வழங்கவும் ஐஎஸ் அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும் இவர்கள் டெல்லியை தவிர உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மற்றும் மகராஷ்டிராவிலும் முகாம்களை கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டு குவியல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசக்கார வேலைகளில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ராணுவத்தினரின் உதவியுடன் குல்கம் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டு குவியல்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் பயங்கரவாதிகள் 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

    • சென்னையில் இன்று 7 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் இறங்கி ஒத்திகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் ஆண்டு தோறும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று 7 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தேசிய பாதுகாப்பு படையினர், சென்னை மாநகர போலீசார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஒத்திகை நடைபெறும் இடங்கள் மிகவும் ரசியமாக வைத்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் மாலையில்தான் ஒத்திகை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலையில் சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தான் மாநகராட்சி கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது போன்று பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினர். இதற்காக பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் இறங்கி ஒத்திகை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மற்ற இடங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

    • கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    • அறிவிக்கப்பட்ட, தப்பியோடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சொத்துக்கள் முடக்கம்

    ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பயங்கரவாதிகளுக்கு சிலர் அடைக்கலம் கொடுக்கின்றனர்.

    இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் பட்டியலை ஜம்மு-காஷ்மீர் போலீசார் சேகரித்து வந்தனர். கடந்த 1990-ல் இருந்து இந்த பட்டியலை எடுத்து வைத்துள்ளனர். தற்போது, அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளி, தப்பியோடிய குற்றவாளி என அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறுகையில் ''இந்தியாவுக்கு துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்னர். அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்கிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிட முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.

    டோடா மாவட்டத்தில் இதற்கான பணி தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்ள 16 பேர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள். இவர்களுடைய சொத்துக்கள் வருவாய்த்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை விற்கவோ, மாற்றவோ முடியாது.

    மேலும், வேண்டுமென்றே பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்தவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அப்பாவி மக்கள் மிரட்டப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ''ஜம்மு-காஷ்மீரின் சோபார் பகுதியில் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள், அசம்பாவித செயல்களுக்கு துணை போகமாட்டார்கள் என நம்புகிறேன். போலீஸ் மற்றும் பாதுகாப்புப்படையால் மீதமுள்ள வேலைகளை சிறப்பாக முடியும். புகலிடம் கொடுக்காதீர்கள். பல சகாப்தமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதம் காரணமாக பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்'' என துணைநிலை ஆளுநர் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    1990-ல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எல்லைத்தாண்டி, ஆயுத பயிற்சி பெற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்றனர். பெரும்பாலானோர் பயங்கரவாத செயல்களுடன் காஷ்மீர் வந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    2010-ல் ஜம்மு-காஷ்மீர் அரசு, சரணடைந்தால் மறுவாழ்வுக்கு உதவி செய்யப்படும் என அறிவித்தது. 300 பேர் குடும்பத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியா வந்தனர். ஆனால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார்.
    • இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பி ஓடி பல ஆண்டுகளாக தேடப்பட்டு வருபவர்களை கைது செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தோடா மாவட்டத்தில் ஆதில் பரூக் பரிதி, ஜாவேத் என்ற முகமது இக்பால், நிஷார் அகமது என்ற முஜாகித் உசேன், தாரிக் உசேன், இஷ்தியாக் அகமது, அஜாஸ்அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.

    இவர்களில் பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார். இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஜம்முவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
    • பயங்கரவாதிகள் பிடிபட்டதால் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதியில் பயங்கரவாதிகளின் செயல்பாடு அதிகரிப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

    இதையடுத்து இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து மச்சால் செக்டார் பகுதி மற்றும் உரி மற்றும் பாரமுல்லா பகுதிகளில் தனித்தனி குழுவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உரியின் சுருண்டா பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான நபர் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார். போலீசார், ராணுவத்தினரை பார்த்தவுடன் சந்தேகமடைந்த அவர் ஓடத் தொடங்கினார்.

    வீரர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து 2 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் அஹ்மத் டின் மற்றும் முகமது சதீக் கட்டானா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடம் இருந்து 2 கையெறி குண்டுகள், ஒரு சீனத் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

    இதேபோல பாரமுல்லா பகுதியில் தார்சூ சோபோரைச் சேர்ந்த அக்தர் பட், சுருண்டா ஊரியைச் சேர்ந்த முகமது அஸ்லம் கட்டானா, ஜப்லா ஊரியைச் சேர்ந்த முனீர் அகமது, கிராங்சிவனைச் சேர்ந்த முதாசிர் யூசுப் கோக்னோ மற்றும் ஹர்துஷிவாவைச் சேர்ந்த பிலால் அகமது தர் ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்து 4 கையெறி குண்டுகள், 2 கைத்துப்பாக்கிகள், 2 மெகசின்கள், 10 தோட்டாக்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 8 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா சட்டம்) மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எஸ்.எஸ்.பி. அமோத் நாக்புரே கூறுகையில், பிடிபட்ட பயங்கரவாதிகள் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். தகுந்த நேரத்தில் பயங்கரவாதிகள் பிடிபட்டதால் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டம் தகிகோட் பகுதியில் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த பயங்கரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் நேற்று மீட்டனர். இதுபற்றி ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை தலைவர் முகேஷ் சிங் கூறுகையில், குந்த கவாஸ் பகுதியில் கடந்த 5-ந்தேதி பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றிருவர் காயங்களுடன் தப்பினார். அவரை தேடி வந்தோம். தற்போது மீட்கப்பட்டது அவரது உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த உடல் கிடந்த பகுதியில் இருந்து 2 கயெறி குண்டுகள், 2 ஏ.கே. ரக துப்பாக்கி தோட்டா தொகுப்பு, 32 கைத்துப்பாக்கி தோட்டாகள் கைப்பற்றப்பட்டன என்றார்.

    • பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது
    • என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்

    நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது போர்னோ நகரம். பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது.

    ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர்.

    "நேற்று காலை அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் வந்தார்கள். வயல் வேலையில் இருந்த விவசாயிகளின் பண்ணைகளை நாசம் செய்தார்கள். பிறகு அவர்களை கொன்றார்கள். கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்" என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறினார்.

    இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். (Islamic State of West Africa) எனும் அமைப்பும் அந்நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    • விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
    • ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று மாலை அவர் அஜதலில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

    ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தை தேடினர். அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக்கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீசார், ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரர் ஜாவித்தை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் கார் கண்டு பிடிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவர் கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    • காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
    • அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

    காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×