search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • சந்திரயான்-3 திட்டம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
    • ஸ்பெயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் 34 லட்சம் பேர் பார்த்து இருந்தது தான் உலக சாதனையாக இருந்தது.

    புதுடெல்லி:

    சந்திரயான்-3 திட்டம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

    நேற்று மாலை 6.03 மணிக்கு லேண்டரை சந்திரனில் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தது. இதனை 56 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர்.

    இதற்கு முன்பு, ஸ்பெயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் 34 லட்சம் பேர் பார்த்து இருந்தது தான் உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையையும் சந்திரயான்-3 நேரலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

    • 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் சாதனம் வெளியில் வந்ததும், சிறிது தூரம் தானாக இயங்கியது.
    • நிலவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் லேண்டரில் உள்ள கருவிகள் மதிப்பீடு செய்யும்.

    சென்னை:

    நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

    ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியா, 'சந்திரயான்' விண்கலம் மூலம் முயற்சிகளைத் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது முதல்முயற்சியாக, 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் ரூ.365 கோடியில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

    அது 2009-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 11 அறிவியல் கருவிகளைத் தாங்கி சென்ற சந்திரயான்-1, நிலவில் தண்ணீா் இருப்பதை உறுதி செய்தது.

    ரூ.604 கோடி செலவில் உருவான சந்திரயான்-2 விண்கலம், எல்.வி.எம். ராக்கெட் மூலம் 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. செப்டம்பர் 6-ந்தேதி நிலவின் மீது அதை இறக்கும் முயற்சியின்போது, தோல்வியடைந்தது.

    சந்திரயான்-2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக, தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ந் தேதி எல்.வி.எம். மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

    சந்திரயான்-3 விண்கலம், 18 நாட்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த 7-ந் தேதி லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டது. லேண்டா் சாதனத்தின் மென் தரையிறக்கம், நேற்று (புதன்கிழமை) மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் 26 கிலோ எடையுள்ள ரோவர் சாதனத்தை உருவாக்கி உள்ளனர். லேண்டருக்குள் வைக்கப்பட்டிருந்த ரோவர் சாதனம் சிறிய சாய்வு தளம் வழியாக வெளியே வருவதற்கு விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    லேண்டர் தரை இறங்கியதும் நிலவின் மேற்பரப்பில் இருந்து தூசிகள் கிளம்பின. அந்த தூசிகள் தணிந்த பிறகுதான் லேண்டரை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர்.

    பூமியில் உள்ளது போன்று நிலவில் ஏற்படும் தூசிகள் உடனே விலகாது. ஈர்ப்பு சக்தி காரணமாக சில மணி நேரங்களுக்கு பிறகுதான் மாறும். அந்த வகையில் நேற்று மாலை 6.03 மணிக்கு தரை இறங்கியதும் ஏற்பட்ட தூசி விலகுவதற்கு சுமார் 3 மணி நேரம் ஆனது.

    ரோவரில் உள்ள மிக நுணுக்கமான கருவிகள் தூசியால் பழுதடைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கிய நிலையில் 3 மணி நேரம் கழித்து ரோவரை வெளியேற்றும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

    அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு லேண்டருக்குள் இருந்து சாய்வு தள பாதை மூலம் ரோவர் வெளியேறியது.

    6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் சாதனம் வெளியில் வந்ததும், சிறிது தூரம் தானாக இயங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது கருவி மூலம் நடைபயணத்தை தொடங்கி விட்டது. ரோவர் சாதனம் லேசர் கதிர்களை பாய்ச்சி ஆய்வு செய்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கியது.

    முதலில் செ.மீ. செ.மீட்டராக அது நகர்ந்தது. பிறகு அது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆய்வு பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி ரோவர் சாதனம் தானாக இயங்கி மேலும் சில மீட்டருக்கு நகர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

    ரோவர் சாதனத்தில் 2 அதிநவீன கருவிகள் இருக்கின்றன. ஏபிஎக்ஸ் எஸ் எனப்படும் கருவியானது முதலில் செயல்பட தொடங்கியது. இந்த கருவிகள் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள ரசாயன சேர்க்கைகள் ஆய்வு செய்யப்படும். நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் எந்த அளவு உள்ளது என்பதையும் இந்த கருவி அளவிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவிக்கும்.

    ரோவரில் லிப்ஸ் என்ற கருவியும் இருக்கிறது. இது நிலவில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், லித்தியம், ஹைட்ரஜன் போன்ற கனிமங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கும்.

    நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் கூறுகள் இருப்பதை சந்திரயான்-1 திட்டம் வாயிலாக இஸ்ரோ உறுதி செய்தது. இது தொடர்பாக அமெரிக்கா நடத்திய ஆய்வுகளிலும், நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் பனிக்கட்டிகள் பெரும் அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்த தண்ணீர் பனிக்கட்டிகள் வாயிலாக, நிலவில் இருந்த எரிமலைகள் குறித்தும், விண்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் இந்த பூமிக்கு வழங்கியவை குறித்தும், பூமியில் பெருங்கடல் உருவானது பற்றியும் விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

    மேலும் ஹைட்ரஜன் தயாரிக்கவும், நிலவில் ஆக்சிஜன் உருவாக்கவும், நிலவில் சுரங்கப் பணிகள், செவ்வாய் கிரகத்திற்கான பயணம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தென் துருவ ஆய்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ள லேண்டர் சாதனமும் தன்னிச்சையாக சில ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்காக லேண்டரில் 5 நவீன கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. ரம்பா, சேஸ்ட், இல்சா எனப்படும் அந்த கருவிகள் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள் பற்றி ஆய்வு செய்யும். நிலவில் உள்ள மேடு, பள்ளங்களை லேண்டர் கண்காணித்து படம் பிடித்து தகவல்கள் தரும்.

    அதுமட்டுமின்றி நிலவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் லேண்டரில் உள்ள கருவிகள் மதிப்பீடு செய்யும். மேலும் நிலவில் விரிசல்கள் இருந்தால் அவை எப்படி ஏற்பட்டன. அவற்றுக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதையும் லேண்டர் சாதனத்தில் உள்ள கருவிகள் ஆய்வு செய்து தகவல்களை தரும்.

    மொத்தத்தில் உலக விண்வெளி ஆய்வில் பல புதிய தகவல்களை லேண்டரும், ரோவரும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 சாதனங்களும் அடுத்த 13 நாட்களுக்கு தொடர்ந்து ஆய்வுகளை செய்யும்.

    ஆயிரக்கணக்கான புகைப்படங்களுடன் தகவல்களையும் இந்த சாதனங்கள் வழங்க உள்ளன. 14 நாட்களுக்கு பிறகு இந்த இரு சாதனங்களும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் ஆர்பிட்டரும், சந்திரயான்-3 உந்துவிசை கலனும் தொடர்ந்து மேலும் சில ஆண்டுகளுக்கு சந்திரனை சுற்றி வரும். இவற்றின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-4 திட்டத்தை கையில் எடுக்க உள்ளனர்.

    • விக்ரம் ரோவர் நிலவின் தென்துருவத்தில் நேற்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது
    • அதன்பின் ஆறு மணி நேரத்திற்குப்பின் பிரக்யான் ரோவர், நிலவை தொட்டது

    சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. அதன்பின் அங்குலம் அங்குலமாக லேண்டரில் இருந்து அடியெடுத்து வைத்து சுமார் 6 மணி நேரம் கழித்து நிலவில் பிரக்யான் ரோவர் கால்பதித்தது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    இந்த நிலையில், "நிலவின் தென்துருவத்தில் இந்தியா (பிரக்யான் ரோவர்) நடைபயணம் செய்தது. விரைவான அப்டேட் விரைவில்" என இஸ்ரோ டுவீட் செய்துள்ளது. இதன்மூலம் முதன்முதலாக ரோவர் எடுக்கும் நிலவின் படத்தை வெளியிட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. ரோவர் நிலவில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.

    • சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.
    • இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வாஷிங்டன்:

    சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. 'நாசா' தலைவர் பில் நெல்சன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியாவுக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிலவுப் பரப்பு மண்ணும், நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமப்பகுதி மண்ணும் ஏறக்குறைய ஒன்றுபோல இருப்பதுதான்.
    • சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெங்களூருவில் உள்ள ‘இஸ்ரோ’ தலைமையகத்துக்கு இந்த மண் அனுப்பப்பட்டது.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 'சந்திரயான்-3' விண்கல 'லேண்டர்' வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 'சந்திரயான்-2' விண்வெளிப் பயண இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, 'சந்திரயான்-3' திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    இப்படி தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் 'மண்'ணுக்கும் 'சந்திரயான்-3' விண்கல வெற்றிப்பயணத்தில் பங்கு இருக்கிறது என்றால் அது உண்மை.

    ஆம், 'சந்திரயான்-3' விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவில் நிஜமாக தரையிறக்கப்படுவதற்கு முன்பே அது தரையிறக்கப்பட்டு சோதிக்கப்பட்டது, நமது நாமக்கல் மாவட்ட மண்ணில்தான்.

    காரணம், நிலவுப் பரப்பு மண்ணும், நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமப்பகுதி மண்ணும் ஏறக்குறைய ஒன்றுபோல இருப்பதுதான்.

    நிலவின் தென்துருவப் பரப்பு, ஊடுருவும் எரிமலைப் பாறை வகை சார்ந்த 'அனார்த்தோசைட்' மண்ணைக் கொண்டிருக்கிறது. அதே போன்று நாமக்கல் மாவட்ட மண்ணும் உள்ளது.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெங்களூருவில் உள்ள 'இஸ்ரோ' தலைமையகத்துக்கு இந்த மண் அனுப்பப்பட்டது.

    அந்த பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இயக்குனரான பேராசிரியர் எஸ்.அன்பழகன் கூறுகையில், 'நிலவு பரப்பின் மண்ணைப் போன்ற மண் தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே 'சந்திரயான்' திட்ட சோதனைக்காக நாங்கள் இந்த மண்ணை அனுப்பிவைத்தோம். 3-வது முறையாக இவ்வாறு மண் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 டன் மண் அனுப்பப்பட்டது' என்றார்.

    ஆக, 'சந்திரயான்-3' விண்கல பயண வெற்றியில் இந்தியராக மட்டுமல்ல, தமிழராகவும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

    • லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர் சில மணி நேரங்களில் நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது.
    • சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

    மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது.

    இந்நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    வாஷிங்டன்:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

    மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்னவொரு அருமையான தருணம், இன்று காலை சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா இன்று முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது ரோவர்
    • இது 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு நடத்துகிறது.

    புதுடெல்லி:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

    மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    இதையடுத்து, விக்ரம் லேண்டர் தரையிறங்கியபின் இந்தத் திட்டத்தின் அடுத்த பணியான பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறியது. இது விஞ்ஞானிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

    இந்நிலையில், நிலவின் தரைப்பகுதியில் பிரக்யான் ரோவர் தடம் பதித்தது. ரோவர் அங்கேயே உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை ஜனாதிபதி டி.வி.யில் பார்த்து மகிழ்ந்தார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன்மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

    இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோ மற்றும் சந்திரயான் 3 திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம், நமது விஞ்ஞானிகள் புதிய வரலாற்றை உருவாக்கியது மட்டுமல்லாமல், புவியியல் யோசனையையும் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். உண்மையிலேயே இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்வானது அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன். மேலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். சாதனைகள் மேலும் வரவிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

    • விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் சாதனைக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    • சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன. ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை.

    தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தென் துருவத்திற்கு அருகில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விண்வெளியை ஆராய்வதில் இது ஒரு நீண்ட முன்னேற்றம். அறிவியல் மற்றும் பொறியியலில் இந்தியா அடைந்துள்ள வியத்தகு முன்னேற்றத்திற்கான சான்றாகும் இது என வாழ்த்தியுள்ளார்.

    • நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
    • நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கி இன்று சாதனை படைத்துள்ளது.

    இதற்கிடையே, நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    அந்தப் புகைப்படத்தில், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி காட்டப்பட்டு உள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது.

    இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கும் பணி தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவில் தரையிறங்கும் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. லேண்டரில் இருந்து மெல்ல தரையிறங்கும் பிரக்யா, முதலில் தன்னை சுமந்த விக்ரமை படமெடுக்க உள்ளது.

    முன்னதாக லேண்டர் தரையிறங்கியபோது, நிலவில் புழுதி படலம் ஏற்பட்டது. அது அடங்கிய பின்னர், லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை.
    • லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

    இதற்கிடையே, நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    சந்திரயான்- 3 லேண்டருக்கும் பெங்ளூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே தொலைதொடர்பு இணைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விக்ரம் லேண்டர் பிடித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    அந்தப் புகைப்படத்தில், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி காட்டப்பட்டு உள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது.

    ×