search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெறுகிறது.
    • இந்நிகழ்வை பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் இருந்தபடி பார்வையிட உள்ளார் என தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

    இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான் 3 விண்கலம் தரையிறக்கும் நிகழ்வை அங்கிருந்து பார்வையிட உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆகஸ்ட் 23-ந்தேதி தரையிறங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தள்ளிப்போக வாய்ப்பு என்ற செய்தி வெளியானது
    • திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என தற்போது அறிவிப்பு

    சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    • இறுதி கட்ட பணியை சவாலாக ஏற்று முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த கட்ட நிறைவு பணிக்காக காத்திருக்கிறார்கள்.
    • கடந்த 18-ந்தேதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டது.

    'சந்திரயான்-3' விண்கலம் நாளை மறுநாள் (23-ந்தேதி) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    இதற்கான பணிகள் நாளை மாலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக லேண்டரை மிக மிக மெதுவாக நிலவின் மேற்பரப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த பணிகளில்தான் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்குள் 'விக்ரம்' லேண்டர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த பணிதான் மிக மிக முக்கியமான பணியாகும். இந்த இறுதி கட்ட பணியை சவாலாக ஏற்று முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த கட்ட நிறைவு பணிக்காக காத்திருக்கிறார்கள்.

    'சந்திரயான்-3' திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனில் இருந்து லேண்டர் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அது ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்று வட்டப்பாதையில் வலம் வந்தது. தொடர்ந்து அதன் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரை இறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

    அதன்படி கடந்த 18-ந்தேதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 24 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்று வட்டப்பாதைக்கு லேண்டர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    தரையிறங்கும் சூழல் சாதகமற்றதாக இருந்தால் ஆகஸ்டு 27ம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோவின் அகமதாபாத் மை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்குள் 'விக்ரம்' லேண்டர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
    • லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும்.

    சென்னை:

    'சந்திரயான்-3' விண்கலம் நாளை மறுநாள் (23-ந்தேதி) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் நாளை மறுநாள் மாலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    அதற்கு முன்னதாக லேண்டரை மிக மிக மெதுவாக நிலவின் மேற்பரப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த பணிகளில்தான் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்குள் 'விக்ரம்' லேண்டர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த பணிதான் மிக மிக முக்கியமான பணியாகும். இந்த இறுதி கட்ட பணியை சவாலாக ஏற்று முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த கட்ட நிறைவு பணிக்காக காத்திருக்கிறார்கள்.

    'சந்திரயான்-3' திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனில் இருந்து லேண்டர் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அது ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்று வட்டப்பாதையில் வலம் வந்தது. தொடர்ந்து அதன் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரை இறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த 18-ந்தேதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 24 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்று வட்டப்பாதைக்கு லேண்டர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவே சுற்று வட்டப்பாதை தூரம் குறைப்பதற்கான இறுதி நடவடிக்கை ஆகும்.

    இதையடுத்து நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நாளை மறுநாள் (23-ந்தேதி) மாலை 5.45 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

    எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும்.

    இதற்கான காலம் வெறும் 1 நிமிடங்கள்தான் என்ற போதிலும், 'சந்திரயான்-3' திட்டத்தின் மொத்த வெற்றியும் அந்த இறுதி தருணத்திலேயே அடங்கி உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    லேண்டர் கலன் சீரான இயக்கத்தில் உள்ளது. அந்த கலன் தனது செயல்பாடு களை தன்னகத்தே ஆய்வு செய்து தரை இறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காக காத்திருக்கும். அதன் பின்னர் நிலவில் வருகிற 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு தரை இறங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் 5.45 மணிக்கு லேண்டர் மெல்ல மெல்ல நிலவின் தென் பகுதியில் தரை இறங்க தொடங்கும். 6.04 மணிக்கு அது தரை இறங்கி விடும். இந்த இடைபட்ட 19 நிமிடங்கள்தான் மிக முக்கியமானது.

    இந்த 19 நிமிடங்களும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி உலகம் முழுக்க வாழும் இந்தியர்கள் அனைவரும் திக்... திக்... மனநிலையுடன் இருக்க வேண்டியது இருக்கும். இதில் வெற்றி பெறுவதற்காகவே லேண்டரை கவனமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கையாண்டு வருகிறார்கள்.

    லேண்டரின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். கடந்த 2 நாட்களாக லேண்டரில் உள்ள அதிநவீன கேமரா மூலம் நிலவின் தென்பகுதி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    தென் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை லேண்டர் கேமரா படம் பிடித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பி உள்ளது. அந்த புகைப்படங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். நிலவின் தென்பகுதியில் எந்த இடத்தில் லேண்டரை தரை இறக்கினால் மிகவும் சுமூகமாக இருக்கும் என்பதை புகைப்படங்களுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் விவாதித்து வருகிறார்கள்.

    லேண்டரில் அதிநவீன லேசர் கருவிகளும் உள்ளன. அவற்றின் துணையுடன் நிலவின் தென் பகுதியில் தரை இறக்குவது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. லேண்டர் அனுப்பிய புதிய புகைப்படங்களை இஸ்ரோ இன்று காலை வெளியிட்டது. நிலவின் தென் பகுதியில் பல்வேறு பகுதிகளை லேண்டர் படம் பிடித்து இருப்பதை அந்த காட்சிகளில் காண முடிந்தது.

    நிலவில் இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களது விண்கலன்களை தரை இறக்கி சாதனை படைத்துள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெறப்போவது புதன்கிழமை தெரிய வரும்.

    லேண்டர் வெற்றியானது இந்திய விஞ்ஞானிகளுக்கு மற்றொரு புதிய சாதனையையும் படைக்க உதவியாக இருக்கும். நிலவின் தென் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரை இறக்கிய நாடு என்ற சிறப்பும் இந்தியாவுக்கு கிடைக்கப் போகிறது.

    நிலவின் தென் பகுதியில்தான் அதிகளவு கனிம வளங்கள் உள்ளன. அங்கு லேண்டர் துணையுடன் 14 நாட்கள் நடத்தப்படப் போகும் ஆய்வுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    • நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக 'சந்திரயான்-3' விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது.
    • லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தைக் குறைத்து, நிலவில் அதை தரையிறக்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஸ்ரீஹரிகோட்டா:

    நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக 'சந்திரயான்-3' விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    அதன் பின்னர், புவி சுற்றுவட்டப் பாதையில் பூமியை சுற்றி வந்த 'சந்திரயான்-3' ஆகஸ்டு 1-ந் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 5 நாள் பயணத்துக்குப் பிறகு ஆகஸ்டு 5-ந் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் 'சந்திரயான்-3' நுழைந்தது.

    அதன்பிறகு, சுற்றுப்பாதையின் உயரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு அருகே 'சந்திரயான்-3' கொண்டு வரப்பட்டது. கடந்த 17-ந் தேதி நிலவின் தரையில் இருந்து 153 கி.மீ. உயரத்தில் 'சந்திரயான்-3' விண்கலம் இருந்தபோது, அதில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்டது.

    அதன்பிறகு, உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை நிலவை ஒட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்தன. இனி உந்துவிசை கலன் தொடர்ந்து நிலவை சுற்றியபடி அடுத்த சில மாதங்களுக்கு ஆய்வுப்பணியை மேற்கொள்ளும்.

    அதேநேரத்தில், லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தைக் குறைத்து, நிலவில் அதை தரையிறக்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, திரவ வாயு எந்திரம் இயக்கத்தின் மூலம், நிலவின் தரையில் இருந்து 113 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் கருவி கடந்த 18-ந் தேதி கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து 2-வது கட்டமாக லேண்டர் கருவியின் சுற்றுவட்டப் பாதையின் உயரம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. தற்போது, நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக வந்துள்ள லேண்டர், குறைந்தபட்சம் 25 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவிலும் சுற்றிக் கொண்டிருக்கிறது.

    அடுத்ததாக, 40 நாள் தொடர் பயணத்தின் நிறைவு நிகழ்வான, லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் நாளை மறுநாள் (23-ந் தேதி) மாலை 5.45 மணிக்கு மேற்கொள்ளப்பட இருந்தது. அதாவது, எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டர் கருவியின் வேகத்தை படிப்படியாக குறைத்து, இறுதியாக பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவந்து, மெதுவாக நிலவில் தரையிறக்கப்பட இருக்கிறது.

    'சந்திரயான்-2' விண்கலம் இந்த இடத்தில்தான் தோல்வி அடைந்தது என்பதால், இந்த முறை இஸ்ரோ விஞ்ஞானிகள், லேண்டர் கருவி நிலவில் தடம் பதிக்கச் செல்லும் ஒவ்வொரு நொடியையும் மிகவும் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர்.

    இம்முறை லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். லேண்டர் தரையிறங்கிய 2 மணி நேரத்தில், அதிலுள்ள ரோவர் வாகனம் சாய்வுதளம் வழியாக நிலவில் இறங்கி தனது ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

    இந்த நிலையில், நேற்று இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், திடீரென லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான நேரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதாவது, 23-ந் தேதி மாலை 5.45 மணிக்கு பதிலாக 19 நிமிடங்கள் தாமதமாக, மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து சந்திரயான் 3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும்போது அங்குள்ள சூழல், இடர்பாடுகளை கண்டறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை லேண்டர் படம் பிடித்து அனுப்பி உள்ளது.

    நிலவில் உள்ள சூழல் மற்றும் இடர்பாடுகளை கண்டறிய பொருத்தப்பட்ட கேமரா கடந்த 19ந்தேதி நிலவை புகைப்படம் எடுத்த நிலையில் இன்று மீண்டும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

    • சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்டது.
    • தற்போது விக்ரம் லேண்டர் பாதை குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது.

    சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

    நிலவை நெருங்கிய நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் பாதை குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    தற்போது சந்திரயான் 3 விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் 25x134 கி.மீ. தூரத்தில் உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    இதையடுத்து, திட்டமிட்டபடி 23-ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அடுத்தடுத்து விண்கலங்கள் வருவது நிலவின் மேற்பரப்பில் எதையும் மாற்றி அமைக்காது.
    • ஆரோக்கியமான போட்டியானது, வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும்.

    புதுடெல்லி:

    நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து 'லேண்டர்' நேற்று வெற்றிகரமாக பிரிந்தது.

    நிலவில் 23-ந்தேதி தரை இறங்கும் இந்த லேண்டர் சாதனத்துக்குள் உள்ள 'ரோவர்' தனது ஆய்வை தொடங்கும்.

    இதற்கிடையே, இந்தியாவுக்கு போட்டியாக ரஷியாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி உள்ளது. கடந்த 10-ந்தேதி, லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. கடந்த 1976-ம் ஆண்டு, லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா செலுத்தியது. அதன்பிறகு, 47 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஆய்வு செய்ய முனைந்துள்ளது.

    லூனா-25 விண்கலம், நேரடியாக நிலவை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் எடை 1,750 கிலோ மட்டுமே. ஆனால், சந்திரயான்-3 விண்கலத்தின் எடை 3,800 கிலோ.

    எனவே, சந்திரயானை விட வேகமாக நிலவை நெருங்கி உள்ளது. அதன் எரிபொருள் சேமிப்பு திறனும் அதிகம். எனவே, சந்திரயானுக்கு முன்பாகவே, வருகிற 21-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏவப்பட்ட 11 நாட்களில் தரையிறங்குகிறது.

    இந்தியா-ரஷியா இடையிலான இந்த போட்டி சூடுபிடித்துள்ளது.

    நிலவின் தென்துருவம், நீர்வளம் நிறைந்ததாக கருதப்படுகிறது. தனித்துவமான புவியியல் அம்சங்களை கொண்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கான வளங்கள் அங்கு இருப்பதாக கருதப்படுகிறது.

    எனவே, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இந்தியாவும், ரஷியாவும் போட்டியிடுகின்றன.

    இதுதொடர்பாக 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கே.சிவன், பெங்களூருவில் உள்ள இந்திய வான்இயற்பியல் நிலைய விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-

    அடுத்தடுத்து விண்கலங்கள் வருவது நிலவின் மேற்பரப்பில் எதையும் மாற்றி அமைக்காது. ஒவ்வொரு ஆராய்ச்சியிலும் கிடைக்கும் தகவல்கள், நிலவின் கடந்த காலத்தையும், சிறப்பம்சங்களையும் தெரிந்து கொள்ள உதவும்.

    ரஷியாவும் நிலவை ஆய்வு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளிடையிலான போட்டி, மக்களிடையே ஆர்வத்தை தூண்டுவதுடன், புதிய விஷயங்களை கண்டுபிடிக்க உதவும்.

    ஆரோக்கியமான போட்டியானது, வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும். ஒரு நாடு, மற்ற நாட்டின் கண்டுபிடிப்புகளிலும், பின்னடைவுகளிலும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

    எனவே, இந்த ஆய்வு, வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு பாதை அமைக்கும். நிலவின் மர்மங்களை புரிந்துகொள்ள உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • இன்று காலை 8.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கிலோ மீட்டராக குறைக்கும் பணி தொடங்கியது.
    • லேண்டர் கேமரா மூலம் ஆக.9ம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 33 நாட்களாக தனது நிலவின் பயணத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது.

    திட்டமிட்டபடி 40 நாட்கள் பயணத்துக்கு பிறகு வருகிற 23-ந்தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை லேண்டர் பிரியும் நிகழ்வையும், 23-ம் தேதி நிலவில் விண்கலம் தரையிறங்குவதையும் இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை 8.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கிலோ மீட்டராக குறைக்கும் பணி தொடங்கியது.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    லேண்டர் கேமரா மூலம் ஆக.9ம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    புகைப்படம் எடுத்திருப்பதன் மூலம் லேண்டரில் உள்ள கேமரா சோதனையும் முடிந்துள்ளது. லேண்டரில் உள்ள கிடைமட்ட வேக கேமரா மூலம் நிலவின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    • நிலவின் மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் 30 கிலோ மீட்டராக வருகிற 20-ந்தேதி குறைக்கப்படும்.
    • தென் துருவ ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பியுள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    முதலில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 5-ந்தேதி நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் நுழைந்தது. அதிகபட்சமாக சுமார் 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நீள் வட்ட பாதையில் முதலில் சுற்றியது.

    நிலவின் ஈர்ப்பு விசையை நெருங்கிய போது விண்கலத்தின் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதையடுத்து படிப்படியாக நிலவின் மேற்பரப்பில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் இருக்கும் உயரம் குறைக்கப்பட்டது. 6-ந்தேதி 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 4,313 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது.

    பின்னர் 9-ந்தேதி 1,433 கி.மீட்டராகவும், 14-ந்தேதி 177 கி.மீட்டராகவும் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் குறைக்கப்பட்டது.

    3-வது கட்ட உயரம் குறைப்பின் போது விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 150x177 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. அதாவது குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும் அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவு வட்ட பாதையில் சுற்றி வருகிறது.

    இந்த நிலையில் இந்த தூரத்தை மேலும் குறைத்து நிலவுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரயான்-3 விண்கலத்தை நிலைநிறுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதில் 4-ம் கட்டமாக சுற்றுப் பாதை குறைப்பு பணியை இன்று தொடங்க திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை 8.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கிலோ மீட்டராக குறைக்கும் பணி தொடங்கியது.

    இப்பணி வெற்றிகரமாக நடந்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் 153 கி.மீx163 கி.மீ. தொலைவில் விண்கலம் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இன்று நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் குறைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது. விண்கலம் 153 கி.மீ. x 163 கி.மீ. சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

    இத்துடன் நிலவை சுற்றும் நிகழ்வு நிறைவடைகின்றன. ப்ராபல்ஷன் மாட்யூல் (உந்துவிசை கலன்) மற்றும் லேண்டர் மாட்யூல் ஆகியன தனித்தனி பயணங்களுக்கு தயாராகுவதற்கான நேரம் இது. ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டரை பிரிப்பு நிகழ்வை நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    உயர குறைப்பின் முயற்சியின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் பிரிக்கப்படும். அதன்பின் லேண்டர் நிலவை நோக்கி பயணிக்கும்.

    நிலவின் மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் 30 கிலோ மீட்டராக வருகிற 20-ந்தேதி குறைக்கப்படும்.

    சந்திரயான்-3 விண்கலம் பயணம் முக்கிய கட்டத்தில் இருக்கிறது. இந்த பயணத்தில் முக்கிய நிகழ்வான உந்து விசை கலனில் இருந்து லேண்டர் தனியாக பிரிப்பதை நாளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    உந்துவிசை கலனில் இருந்து லேண்டரை பிரிப்பதற்கான சாதகமான சூழல், செயல்பாடு உள்ளதா? என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்கிறார்கள்.

    சந்திரயான்-3 விண்கலம் 33 நாட்களாக தனது நிலவின் பயணத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது.

    திட்டமிட்டபடி 40 நாட்கள் பயணத்துக்கு பிறகு வருகிற 23-ந்தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை லேண்டர் பிரியும் நிகழ்வையும், 23-ந்தேதி நிலவில் விண்கலம் தரையிறங்குவதையும் இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    நிலவின் தென்துருவத்தை அடைவதற்கு பல நாடுகள் முயற்சி செய்து வருகிறது. நிலவின் வட துருவத்தைவிட தென் துருவத்தில் இறங்குவது மிகவும் சவாலான ஒன்று. இதனாலேயே, பல நாடுகள் இதனை கைவிட்டு விட்டன.

    சூரிய குடும்பம் உருவான போது, தென் துருவத்தில் காந்தக்குவியல்கள் உருவாகின. இதனால் தென் துருவ ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிலவு உருவானபோது என்ன இருந்ததோ அதெல்லாம் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதன் மூலம் பூமி எப்படி உருவானது? மனிதர்கள் எப்படி உருவானார்கள்? என நாம் அறியாத , நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அதுபோல், நிலவின் ரசாயனம், மண், நீர் போன்றவைகளையும் ஆய்வு செய்ய முடியும்.

    எந்த ஒரு நாடும் தென் துருவம் வரை விண்கலத்தை அனுப்பியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரயான் 3 மேலும் நிலவிற்கு அருகே சென்றிருக்கிறது
    • அடுத்த கட்ட குறைப்பு ஆகஸ்ட் 16-ந்தேதி திட்டமிடப்பட்டிருக்கிறது

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திரயான் 3 எனும் விண்கலத்தை கடந்த ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவியது.

    இதில் ஒரு ஆர்பிடர், விக்ரம் எனும் பெயரிட்ட லேண்டரும், நிலவின் மேற்புறத்தில் நகர்ந்து ஆராய்ச்சிகள் செய்து புகைப்படங்கள் எடுக்கும் சிறு வாகனமான பிரக்யான் எனும் ரோவரும் இணைக்கப்பட்டுள்ளது.

    வரும் 23-ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் இறக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலவை சுற்றி பயணம் செய்து வரும் இந்த விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையிலிருந்து அதன் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவின் மேற்பரப்பில் இறக்கும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

    ஆகஸ்ட் 9-ம் தேதி 174 கிலோமீட்டர் x 1437 கிலோமீட்டரில் சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை மாற்றியமைக்கப்பட்டது. தற்போது அதன் சுற்று வட்டப்பாதை 150 கிலோமேட்டர் X 177 கிலோமீட்டர் எனும் அளவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் அது நிலவிற்கு இன்னும் அருகே சென்றிருக்கிறது.

    அடுத்த கட்ட சுற்று வட்டப்பாதை குறைப்பு ஆகஸ்ட் 16 அன்று காலை 8.30 மணியளவில் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டப்படி நிலவில் இதன் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவிற்கு பிறகு இந்த சாதனையை புரிந்த முதல் நாடாக இந்தியா திகழும்.

    • 100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன.
    • லேண்டர் "டீபூஸ்ட்" முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    பெங்களூரு:

    நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சந்திராயன்-3 விண்கலம் கடந்த 14-ந் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளை கடந்து சென்றுள்ள இந்த விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து வருகிற 23-ந் தேதி மாலை 5.47 மணி அளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 5-ந்தேதி மாலை 5 மணி அளவில் சந்திராயன்-3 விண்கலம் நிலவு பாதையில் இருந்து நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் லுனார் ஆர்பிட் இன்ஞக்சன் மூலம் நுழைந்தது.

    சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இன்று முதல் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணி தொடங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியை யும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே 4 குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திராயன்-3 நிலவில் அதன் ஆராய்ச்சி தொடங்கியை தகவல்களை வழங்கும்.

    இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:-

    தற்போது விண்கலம் நிலவை நெருங்க 3 டி-ஆர்பிட்டிங் நிகழ்வுகள் உள்ளன. இன்றும், வருகிற 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதன் சுற்றுப்பாதை சந்திரனில் இருந்து 100 கி.மீ. வரை குறைக்கப்படும். லேண்டர் ப்ரொபல்ஷன் மாட்யூல் பிரிப்புப் பயிற்சியானது, லேண்டர் "டீபூஸ்ட்" முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23-ந் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும்.

    இந்த முறையும் விக்ரமில் உள்ள 2 என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும் அது இன்னும் தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எனவே இவை சரியாகச் செயல்படும் பட்சத்தில் விக்ரம் லேண்டர் பல தோல்விகளைச் சமாளிக்கும் வகையில் முழு வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது.

    விக்ரம் லேண்டரை சந்திரனில் செங்குத்தாக தரை இறக்குவது இஸ்ரோ குழுவின் முன் உள்ள மிகப்பெரிய சவால். ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிந்ததும், அது கிடைமட்டமாக நகரும். தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம், அது சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்கு வதற்காக செங்குத்து நிலைப்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    சந்திராயன்-2 பணியின் போது, இஸ்ரோ தனது லேண்டரை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறக்க தவறியது. எனவே இந்தமுறை இந்தப் பயிற்சி மிகவும் முக்கியமானது. கிடைமட்டத்தில் இருந்து செங்குத்து திசைக்கு மாற்றும் திறன் மிக நுட்பமானது. இங்குதான் கடந்த முறை பிரச்சினை ஏற்பட்டது.

    பயன்படுத்தப்படும் எரிபொருள் குறைவாக உள்ளதா, தொலைவு கணக்கீடுகள் சரியாக உள்ளதா மற்றும் அனைத்து வழிமுறைகளும் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும் சவாலாக உள்ளது. எப்படி என்றாலும் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ குழு இந்த முறை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சந்திரயான் 3 எடுத்த நிலவின் முதல் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
    • சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத் தொடங்கியது.

    சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, சந்திரயான் 3 எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இதுவாகும்.

    இந்நிலையில், சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் முதல் கட்ட பணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது. சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வரும் 9-ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ×