search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • இஸ்ரோ, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
    • உலகளாவிய வணிக வெளியீட்டு சேவை சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2வது ஏவுதளத்தின் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் எல்.வி.எம். 3- எம் 2 ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45 வது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. அதை அங்கிருந்த மைதானத்தில் திரண்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    வணிக பயன்பாட்டுக்காக இஸ்ரோவின் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் 'ஒன்வெப்' நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது.

    இந்தியாவின் மிகப்பெரிய பிரம்மாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட் கருதப்படுகிறது. திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட் முதல் முறையாக சுமார் 6 டன் எடையுள்ள 36 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    இந்நிலையில், இஸ்ரோ, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

    உலகளாவிய இணைப்புக்கான 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களுடன் நம் கனமான ஏவுகணை எல்விஎம்3ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோ, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இன்-ஸ்பேஸ்வுக்கு வாழ்த்துகள். உலகளாவிய வணிக வெளியீட்டு சேவை சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
    • சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

    சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

    இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. எனினும், நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது.

    நிலவின் இருண்ட பக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வந்தது.

    இதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.

    இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

    எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

    விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல் துறை, ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.
    • மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும்.

    மயிலாடுதுறை:

    இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் நேற்று மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர், ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

    பின்னர் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல் துறை, ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக மாறும். தற்போது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும்.

    மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும், ஆன்மிகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மிக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிவன் தனது குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டார்.

    • 1980-களின் பாதியில் தான் இந்தியா விண்வெளி ஆய்வு மையம் சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புக்கான ஆய்வுகளை தொடங்கியது.
    • இஸ்ரோவின் வெற்றிக்கு தனிநபர் காரணமல்ல. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

    திருவனந்தபுரம்:

    இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற சினிமா பல்வேறு மொழிகளில் படமாக எடுக்கப்பட்டது.

    மாதவன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நம்பி நாராயணன் பற்றி இடம் பெற்ற தகவல்கள் தவறு என்று நம்பி நாராயணனுடன் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் முத்துநாயகம், சசிகுமார், நம்பூதிரி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்தில் இடம்பெற்ற பல தகவல்கள் தவறு. நம்பி நாராயணனை கைது செய்ததால் தான் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு தாமதம் என்பதும் தவறு.

    1980-களின் பாதியில் தான் இந்தியா விண்வெளி ஆய்வு மையம் சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புக்கான ஆய்வுகளை தொடங்கியது.

    அப்போது அதன் திட்ட இயக்குனராக இ.வி.எஸ்.நம்பூதிரி நியமிக்கப்பட்டார். என்ஜினின் 12 கட்டங்கள் வரை இ.வி.எஸ்.நம்பூதிரி தலைமையிலான குழுவினரே தயாரித்தனர்.

    அந்த சமயத்தில் நம்பி நாராயணனுக்கு கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புடன் எந்த தொடர்பும் இல்லை. அதன்பின்னர் ஞானகாந்தியின் தலைமையில் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு விரிவுபடுத்தும் பணிகள் நடந்தது. அதிலும் நம்பிநாராயணன் இடம்பெறவில்லை.

    அதன்பின்பு 1990-ல் கிரையோஜெனிக் உந்துவிசை இயக்க திட்டத்தை திரவ உந்துவிசை திட்ட மையத்தில் தொடங்கியபோது நம்பிநாராயணனை திட்ட இயக்குனராக முத்துநாயகம் நியமித்தார்.

    இஸ்ரோவின் வெற்றிக்கு தனிநபர் காரணமல்ல. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    • தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள்.
    • செயற்கைக் கோள்களை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    சென்னை:

    பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய செயற்கை கோள் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.

    ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்களை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டபோது, செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. கடைசி நிலையில் ஏற்பட்ட தகவல் இழப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

    இதையடுத்து எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    'இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை 356 கிமீ  வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. சென்சார் செயலிழப்பே தோல்விக்கு காரணம். சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, செயற்கைக் கோள்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. குழு அமைக்கப்படடு தோல்வி குறித்து ஆராயப்படும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும்' என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
    • இன்று காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கியது.

    அதன்படி, இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதி-சாட் என்கிற 2 எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம்.

    பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

    இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை. இ.ஓ.எஸ். 2 மற்றும் ஆசாதி-சாட் செயற்கைக்கோள்களின் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோளாரை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

    • ராக்கெட்டுக்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கியது.
    • இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

    இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில், இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

    இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம்.

    பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். மேலும், இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் பாய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.#ISRO #PSLVC42
    ஐதராபாத் :

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.



    இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு ராக்கெட் வெற்றிகரமாக  விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #PSLVC42 
    விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கு பயன்படுத்தப்பட உள்ள விண்வெளி உடை மற்றும் மாதிரி விண்கலம் போன்றவை காட்சிக்கு வைத்துள்ளது. #ISRO #2022SpaceMission
    பெங்களூரு: 

    இஸ்ரோவுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பணிக்குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 6-வது எடிஷன் விழாவில் அறிவித்தார். #ISRO #2022SpaceMission

    இந்தியா 2022 க்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ வின் முக்கிய நோக்கம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா வை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய சாதனை பட்டியலில் நான்காவது உலக நாடாக வேண்டும் என்பது தான்.

    இஸ்ரோ மற்றும் சிஎன்இஎஸ் பிரெஞ்சு ஸ்பேஸ் நிறுவனம் அனைத்து துறைகளிலும்  இருக்கும் கை தேர்ந்த  வல்லுநர்களை வைத்து பணிக்குழுவை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக விண்வெளி மருத்துவம், விண்வெளி சுகாதார கண்காணிப்பு, வாழ்க்கை ஆதரவு, கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளிக் குப்பைகள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார அமைப்பு என அனைத்துத் துறைக்கும் தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனன்ர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கேள் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரோ, அதன் விண்வெளி வீரர்கள் மூலம் நுண்ணோக்கி மீது சோதனைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்திய மற்றும் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சி குழு காலநிலை கண்காணிப்பு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு, புதிய கண்டுபிடிப்பு, புதிய விண்வெளி வாகன கண்டுபிடிப்பு போன்ற அனைத்துத் துறையிலும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி மேம்பாட்டில் ஈடுபடுமென்று விழாவில் தெரிவிக்கப்பட்டது.

    பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போவில் இஸ்ரோ உருவாக்கிய ஒரு ஸ்பேஸ் உடை காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த விண்வெளி ஆரஞ்சு நிற  உடை திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் மையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக   உருவாக்கப்பட்டது. இந்த உடையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்றை வைக்கப்பட்டு இருக்கும். விண்வெளி வீரர் 60 நிமிடங்கள் இடைவெளியில் சுவாசிக்க அனுமதிக்கிறது.

    2022 ஆம் ஆண்டில் இந்திய விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக இஸ்ரோ இரண்டு உடைகளை  உருவாக்கியுள்ளது. விண்வெளியில் இருந்து  வருவதற்கு உரிய கேப்சூல் மாதிரை இஸ்ரோ ஏற்கனவே மாதிரியை சோதனை செய்துள்ளது. #ISRO #2022SpaceMission
    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலை இஸ்ரோ தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. #ISRO #VikramSarabhai
    பெங்களூரு:

    குஜராத் மாநிலத்தில் பிறந்தவரான விக்ரம் சாராபாய் இங்கிலாந்தில் இயற்கை அறிவியலில் படித்து வந்த போது, இரண்டாம் உலகப்போர் மூண்டதால் நாடு திரும்பி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். 

    சி.வி.ராமனின் வழிகாட்டுதலில் காஸ்மிக் கதிர்களின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். போர் முடிந்ததும், இங்கிலாந்தில் படிப்பைத் தொடர்ந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நாடு திரும்பினார்.

    இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை (INCOSPAR) தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக விக்ரம் சாராபாய் நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதைச் சோதிப்பதற்கான திட்டங்களை அவர் வகுத்தார்.

    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் 99-வது பிறந்த நாள் விழா பெங்களூரு இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ×