என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 172230"
- புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது.
- மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 18 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அமைக்க ஒப்புதல் கேட்டு, பல்வேறு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் தொழில்நுட்ப ரீதியான மருத்துவ வசதிகள் உள்ளதா, உள்கட்டமைப்பு நிலவரம் குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய மருத்துவம் மற்றும் சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மூத்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ வித்யா தலைமையிலான மாவட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்.
குழு அதிகாரிகள் கூறுகையில், புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது. தற்போது நடைமுறை மாற்றப்பட்டு மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்துள்ள மருத்துவமனைகளில் ஆய்வு நடக்கிறது என்றனர்.
- வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.
- புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராயபுரம்:
புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது 7 வயது மகன் சாய். தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றுமாலை தேவேந்திரனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.
அப்போது சாய் தனது வீட்டின் பால்கனியில் உள்ள கேட்டை திறந்து வெளியில் இருந்த சிறிய தூணில் நின்று ஒளிந்து கொள்ள இறங்கினார்.
இதில் கால் தவறி அவன், 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
- நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி:
கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- 235 வகையான அரசு திட்டங்கள் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் போலீஸ் துறையையும், ஆஸ்பத்திரிகளையும் இணைக்கும் வகையில் மெடிக்கோ லீகல் கேஸ் இன்டிமேஷன் சிஸ்டம் என்ற புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியின் அறிமுக விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று புதிய செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-
தகவல் தொழில்நுட்பம் தற்போது விவசாயிகள், சாதாரண மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. தமிழகத்தில் 235 வகையான அரசு திட்டங்கள் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு 16 ஆயிரம் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இ-ஆபீஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் பைலட் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மெடிக்கல் லீகல் கேஸ் இண்டிமேஷன் சிஸ்டம் மாநில அளவில் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஆசாரிபள் ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் 4 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டேப் லெட்டை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி னார்.
விழாவில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 108 சிவாலயம் தோப்பு தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன் (வயது 70 ) இவரது மகன் சிவகுரு ( 29 ) கூலி தொழிலாளி.
இவர் தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சா லையில் பாபநாசம் 108 சிவாலயம் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவரது தந்தையார் ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி சப்இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுரு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவக்கொல்லை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்கு ட்பட்ட பகுதியான பண்ணை வயல் சாலையில், மெயின் ரோட்டில் இடது புறத்தில் சிவக்கொல்லை பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க, ஊதா கலர் கட்டம் போட்ட கைலியும், பழுப்பு நிற கட்டம்போட்ட முழுக்கை சட்டையும் ஒரு வெள்ளை பனியன் பழுப்பு நிற ஜட்டி அணிந்த ஆண் பிரேதம் ஒன்று நேற்று மாலை 5 மணியளவில் கண்ட றியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த நபர் பற்றிய விபரம் தெரிந்தால் பட்டுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரை தொடர்பு கொள்ளலாம்.
- பேராவூரணியில் அரசு காமராஜர் ஆஸ்பத்திரி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேராவூரணி:
பேராவூரணியில் அரசு காமராஜர் மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
30-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நவீன உபகரணங்களுடன் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து பேசி னார்.
அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், பேராவூரணி அரசு காமராசர் மருத்துவ மனை மேம்பாட்டிற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமை ச்சருக்கும் பேராவூரணி தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அசோக்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
- சூர்யா வயலுக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.
- சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே வளத்தாமங்கலம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் சூர்யா (வயது 25) இவர் தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காததால் மனமுடைந்த சூர்யா வயலுக்கு வைத்திருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் இறந்து விட்டார்.
இதுகுறித்து சூர்யாவின் தந்தை ராஜாங்கம் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
- காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள வெண்டையம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது34) விவசாயி.
அதே பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா (26).
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று புதுக்குடியில் நடைபெற்ற திருமணத்திற்கு இளையராஜா, ராஜா ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
அப்போது திருமண மண்டபத்தின் அருகே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ராஜா ஆத்திரம் அடைந்து இளையராஜாவை கீழே தள்ளி விட்டு கத்தியால் குத்தி உள்ளார்.
இதில் காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
- 100 சதவீதம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் சுத்தப்படுத்தலாம்
- நவீன நீராவி சலவை கூடத்திற்கு சுமார் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 2 சலவை எந்திரங்கள்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது.
ரூ.54 லட்சத்தில் நவீன கருவிஇங்கு அறுவை அரங்குகள் மற்றும் சிறப்பு துறைகளான இருதயவியல்துறை, சிறுநீரகவியல் துறை, டயலிசிஸ் பகுதி, தீவிர சிகிச்சை பிரிவு போன்ற பகுதிகளில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை பிரிவை மேம்படுத்த மத்திய நுண்கிருமி நீக்கும் பகுதியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்மா ஸ்டெரிலைசர் என்ற நவீன கருவி நிறுவப்பட்டு உள்ளது.
இந்த கருவி மூலம் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யும் கருவியின் உதிரி பாகங்கள், ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவிகள், மயக்கவியல் துறை கருவிகள், மற்றும் நவீன அறுவை சிகிச்சை கருவிகளான எண்டாஸ் கோப்பி, லேப்பராஸ் கோப்பி கேமராக்கள், வெண்டிலேட்டர் உதிரி பாகங்கள் போன்ற கருவிகளை 100 சதவீதம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் சுத்தப்படுத்தலாம். அதாவது, ஹைட்ரஜன் பொராக்சைடு மற்றும் பிளாஸ்மா தொழில் நுட்பத்தில் கிருமிகளை நீக்கம் செய்து மறுபடியும் பயன்படுத்த முடியும்.
பொதுவாக இந்தகருவி கார்ப்பரேட் மருத்துவமனையில் மட்டும்தான் நிறுவப்பட்டிருக்கும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு பிறகு கன்னியாகுமரி மருத்துவமனையில் தான் தற்போது நிறுவப்படுள்ளது.
மேலும் இந்த மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தும் கருவிகளை கிருமி நீக்கம் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 3 நவீன ஆட்டோ கிளைவ் எயந்திரங்களையும், நவீன நீராவி சலவை கூடத்திற்கு சுமார் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 2 சலவை எந்திரங்களையும் வாங்கி வழங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
புதிய கருவி நிறுவும் நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயாஸ், கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ், மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர்டு ஜான்சன், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப்சென் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வல்லம்:
தஞ்சை அருகே ரெட்டிப்பா ளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் குமார் (43).
கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு குமாரிடம் கோபித்து கொண்டு மாரிய ம்மாள் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.இதனால் மனவேதனை யில் குமார் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையல் நேற்று மது அருந்திவிட்டு வந்த குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
குமார் தூக்கில் தொங்குவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து குமாரின் தாய் லட்சுமியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது.
- இரவு நேரங்களில் நிரந்தர டாக்டர்களும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான தொக்காளிகடு, மாளிய க்காடு, ஏரிப்புறக்கரை, மகிழங்கோட்டை, ராஜாமடம் ஆகிய பகுதிகளில் ஏராள மான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் உடல்நிலை சார்ந்த பிரச்சி னைகள் என்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வது வழக்கம்.
இந்நி லையில், அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றியும், அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையிலும் உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்பட்டு இங்கு கொண்டுவர படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாத நிலை உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் நிரந்தர டாக்டர்களும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே, சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் அதிரா ம்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் தமீம் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்