search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம்"

    • வங்காளதேசம் சார்பில் தௌஹித் ரிடோய் 74 ரன்களை குவித்தார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி பூனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிங்கிய வங்காளதேசம் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 36 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் குவித்தனர்.

    இவருடன் ஆடிய மஹமதுல்லா 32 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் மற்றும் மெஹிடி முறையே 21 மற்றும் 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
    • பாகிஸ்தான் சார்பில் பஹார் ஜமான் அதிரடியாக விளையாடினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, அப்துல்லா ஷபீக் மற்றும் பஹார் ஜமான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அப்துல்லா ஷபீக் சிறப்பாக விளையாடி 68 ரன்களை குவித்தார். பஹார் ஜமான் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களுக்கு நடையை கட்டினார்.

    அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களையும், இஃப்திகார் அகமது 17 ரன்களையும் அடித்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த மஹ்மதுல்லா நிதானமாக விளையாடி 56 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டன.

    வங்காளதேசத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    வங்காளதேசத்தின் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவடத்தில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றப்பட்டு இருந்தது. எக்ஸ்பிரஸ் ரெயில் மெல்ல தண்டவாளம் மாறிக் கொண்டிருந்த போது, திடீரென வேகமாக வந்த சரக்கு ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மோதியது.

    இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தவர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    ரெயில் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணையும் துவங்கி நடைபெற்று வருகிறது.

    • கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    • இந்திய அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார். கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் விராட் கோலி.

    முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

    இந்நிலையில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மற்றொரு விதிவிலக்கான போட்டி..! வங்கதேசத்துக்கு எதிரான அபார வெற்றியால் எங்கள் கிரிக்கெட் அணிக்கு பெருமை. உலகக் கோப்பையில் தற்போது எங்கள் அணி சிறப்பான பார்மில் உள்ளது. அடுத்த போட்டிக்கு வாழ்த்துக்கள்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    • ஜடேஜா, சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    • இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்களை எடுத்தார்.

    உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன் முறையே 8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 48 மற்றும் 53 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கே.எல். ராகுல் பொறுப்பாக ஆடினார். இதன் காரணமாக இந்திய அணி 41.3 ஓவர்கள் முடிவில் 261 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை அடிக்க, கே.எல். ராகுல் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

    • முஷ்ஃபிகுர் ரஹிம் 38 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.
    • ஜடேஜா, சிராஜ், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன் முறையே 8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

     

    இவர்களை தொடர்ந்து வந்த தௌஹித் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடி வந்த முஷ்ஃபிகுர் ரஹிம் 38 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். மஹ்மதுல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 36 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

    போட்டி முடிவில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்சென் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவன் கான்வே சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார். டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 89 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 248 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டி முடிவில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

     

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 259 ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா டக் அவுட்டானார். திலக் வர்மா 5 ரன்னிலும், இஷான் கிஷன் 5 ரன்னிலும், கே.எல்.ராகுல் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஜடேஜா 7 ரன்னிலும் வெளியேறினர்.

    தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.அவர் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 42 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

    இறுதியில், இந்திய அணி 259 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் சார்பில் முஸ்தபிர் ரகுமான் 3 விக்கெட்டும், மெஹதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.
    • முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினார். முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    ஆனாலும் சுப்மன் கில் நிதானமாக ஆடி சதமடித்தார்.இதில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

    • இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
    • கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.

    கிரிக்கெட் களத்தில் ஆடும் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் விராட் கோலி ரசிகர்களை மகிழ்விக்காமல் இருந்ததே இல்லை என்லாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனக்குள் இருக்கும் காமெடியை வெளிப்படுத்த விராட் கோலி தவறியதே இல்லை.

    அந்த வகையில், இன்று இந்தியா மற்றம் வங்காளதேசம் அணிகள் இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் போது, "வாட்டர் பாய்"-ஆக களத்தில் இருந்த இந்திய அணி வீரர்களுக்கு நீராகாரம் கொண்டு வந்தார். அப்போது விராட் கோலி வேகவேகமாக ஓடி வந்தார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை விராட் கோலி ஓடிய விதம் அனைவரையும் சிரிப்பலையில் மூழ்க செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    ×