என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    • தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ரூ.1,000 கோடி டாஸ்மாக்கில் கொள்ளையடித்தது யார் என்று கண்டுபிடியுங்கள்.

    * தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    * சிறுமி முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை.

    * பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறோம்.

    * காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.

    * மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.

    * ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தெரியவில்லை. தெரியாதது குறித்து தவறாக சொல்லி விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

    மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முன்மொழிகிறார்.

    வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

    நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    • ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கை அடுக்கிக்கொண்டே போகலாம்
    • ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது என்று பார்த்திபன் பேசினார்.

    சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.

    ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

    கவர்னரை புகழ்ந்த பார்த்திபனுக்கு வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "பெருமதிப்புக்குரிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம்.

    திரைத்துறையில் தங்களுக்கென புதிய_பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.

    அந்த ஒத்தசெருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று.

    மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.

    ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள்.

    இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல,"குழந்தை திருமணம் நல்லது.

    நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்" என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா?

    அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா?

    தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு.

    ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற

    புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
    • 24,80,45,828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

    இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் 14 லட்சம் பள்ளிகளில் சுமார் 61.6 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் 28.3 சதவீதம் பள்ளிகளில் இரண்டு மொழிகளும், 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி கற்பிக்கப்பட்டு வருவது மத்திய கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

    தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3.2 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வெளியிட்ட தகவல்களின் படி, "1471891 இந்திய பள்ளிகளில் 61.6 சதவீதம் பள்ளிகளில் 74.7 சதவீத மாணவர்கள் அதாவது 248045828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன."

    "மொத்தமாக உள்ள இந்திய பள்ளிகளில் 28.3 சதவீதம் பள்ளிகளில் 16.8 சதவீதம் மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் அருணாசல பிரதேசத்தில் 0.3 சதவீத பள்ளிகளில் மட்டுமே மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. நாகாலாந்தில் 2.5 சதவீதமும், தமிழ்நாட்டில் 3.2 சதவீதம் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மூன்று மொழிகளில் கற்பிக்கும் முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. குஜராத்தில் 97.6 சதவீத பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன என்று மத்திய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    • இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார்.

    தமிழக சட்டசபையில் கடந்த 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்த மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.

    இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேச உள்ளனர்.

    அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றனர். அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.

    இன்றைய கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்கி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

    • இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
    • பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.

    சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. மீனவர் கைது சம்பவங்களை கண்டித்து நேற்று தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    ஒவ்வொரு முறை தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வருகிறார். 

    • சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை?
    • தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்' என்பது அந்த மொழி மீதான வெறுப்பல்ல, 'எங்கள் தாய்மொழியையும், நம் தாயையும் பெருமையுடன் பாதுகாப்போம்' என்பதாகும். இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவிற்கு 2 மொழி மட்டுமின்றி, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை.
    • சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

    ஐதராபாத்:

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பேசியதாவது:

    இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். தமிழ்நாட்டிலும் எங்களுக்கு அரசியல் ஆதரவாளர்கள் உள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் எங்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.

    தமிழ் மக்கள் எனது தெலுங்கு உரைகளைக் கேட்கிறார்கள் என்பதை அறிந்தேன். தமிழ் மக்கள் காட்டிய அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்-இது என்ன வகையான தர்க்கம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாண் இந்தி, தமிழ் மராத்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்.

    • எனது கூட்டத்திற்கே தமிழக அமைச்சர்கள் வரவில்லை என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் குற்றச்சாட்டு
    • இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது.

    மக்களவையில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நானே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். ஒரு முறை வேளாண் துறை பணிக்காகவும், ஒரு முறை ஊரக வளர்ச்சிக்காகவும் வந்தேன். இப்போது நான் எந்த குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை, ஆனால், இரண்டு முறையும் ஊரக வளர்ச்சி அமைச்சரோ அல்லது வேளாண் அமைச்சரோ எனது கூட்டத்திற்கு வரவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்கு வந்த போது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சமீபத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.அவருக்கு சில தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது

    MGNREGS-கீழ் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் ஒன்றிய அரசினால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 2,839கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கும்,எங்கள் மாநில நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்

    கனிமொழி அவர்களும் நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன? இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

    அவர் தமிழ்நாடு வந்தபோது,குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது. துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியதையும் கூட அறிவார்.

    இது தவிர, காணொலி வாயிலான ஆய்வுக்கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்துகொண்டுள்ளேன்.

    இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் போல பேசியுள்ளது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல

    இந்த கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில் இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால் நாம் பாராட்டியிருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
    • நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கன்னியாகுமரியில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    சி.ஐ.டி.யூ. மாநாடு நடைபெறுவதையொட்டி நாகர்கோவிலில் இன்று மாலை ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. வெட்டூர்ணிமடத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி நாகர்கோவில் நாகராஜா திடலை சென்றடைகிறது. பின்னர் நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரியில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ.வின் 15-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு நமது சமூகத்தில்அமைதியையும்பொருளாதாரத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

    குறிப்பாக சிறு தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்படுகின்றன. நமது பண மதிப்பு வீழ்ந்து கொண்டே இருக்கிறது. அன்னிய செலாவணி வீழ்ச்சி அடைகிறது. இவையெல்லாம் மிக மோசமான அறிகுறி. இலங்கையில் இருந்த அறிகுறி கள் இப்போது இந்தியாவில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இது அபாயகரமானது என்று மத்தியஅரசை எச்சரிக்கிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளில் உடனடி யாக மாற்றம் செய்ய வேண் டும் என்று வலியுறுத்து கிறோம்.

    நவீன தொழிற்சாலை களில் செயற்கை மூளை, ரோபோக்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்த காரணத்தினால் இருக்கிற வேலையும் பறிபோகிறது. உண்மைகளை மறைக்க கடுமையாக பொய் சொல்கி றார்கள். ஏன் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது என்று கேட்டால் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு கூடி விட்டது என்று நிர்மலா சீத்தாராமன் கூறுவதுபோல ஏராளமாக கூறுகிறார்கள்.

    மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்க வில்லை. கல்வியில், சுகா தாரத்தில் என எல்லா வற்றிலும் தலையிடுகிறார் கள். அதே நேரத்தில் அவர்கள் மக்கள் மத்தியில் சாதி, மதம், மொழியைச் சொல்லி மடைமாற்றம் செய்கிறார்கள். தமிழ்நாட் டில் இந்தி திணிப்பு, அதை யொட்டி இங்கு எழும் எதிர்ப்பு இந்த பிரச்சனைகள் தான் விவாதத்துக்கு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

    மத்திய அரசு நமக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருப்பது போன்ற வை விவாதத்துக்கு வரக்கூ டாது என்று நினைக்கி றார்கள். அதற்கு ஏற்ப பல்வேறு சதிகளை செய்கி றார்கள். கேரளத்திலும் இதை தான் செய்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக் கையில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தி ருந்தார்கள்.

    அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை.அரசாங்கத்தின் செயல் எங்களுக்கு திருப்தி அளிக்க விலலை என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். போக்கு வரத்தில் கடந்த ஆட்சியிலிருந்து இதுவரை 85 மாதங்களாக பஞ்சப்படி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை கொடுப்போம் என்று சொன்னார்கள் அதை கொடுக்கவில்லை.

    பழைய ஓய்வூதியம் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்றார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொடுத்து விட்டார்கள். 10 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் ஒரு தொழிலாளி அரசுத்துறையில் பணி யாற்றி இருந்தால் நிரந்தப்ப டுத்துவதாக சொன் னார்கள் செய்யவில்லை. அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை கால முறை ஊதியத்துக்கு கொண்டு வருவோம் என்று சொன்னார்கள் செய்ய வில்லை.

    தொழிற்சங்கம் அமைக் கும் உரிமையே கேள்விக் குள்ளாகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் அர சாங்கம் தலையிட்டு முடி வுக்கு கொண்டு வர வேண்டும். தொழிலாளி கள் அவர்க ளது உரி மையை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அதைக் கெடுக்க முத லாளிகள் முற்பட்டால் அதில் அரசாங்கம் தலை யிட வேண்டும் என்பது எங்களது ஒரு கோரிக்கை.

    மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். சொத்து மதிப்புகள் அவர் கள் போட்டிருக்கும் வரி மிகவும் மோசமானது. சென்னை போன்ற நகரங் களில் தண்ணீர் கட்ட ணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீட், மொழி, மாநில உரிமை போன்றவற்றில் மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிரான மாநில அரசின் நிலைபப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

    மின்சார சட்டம் 2003-இன் படி கட்டணத்தை உயர்த்தாவிட்டால் கடன்தர மாட்டேன் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது என்கிறார்கள். பல விசயங் கில் அப்படி கட்டாயப்ப டுத்துவார்கள் அது மக்க ளை பாதிக்குமா இல்லையா என்பதிலிருந்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். கட்டண உயர்வு அவசிய மற்றது செய்திருக்க கூடாது.

    அரசாங்கம் இதற்கு வேறு வழிகளை தேட வேண்டுமே தவிர மக்களிட மிருந்து வசூலிக்க கூடாது. உயர்வு கடுமையாகவும் இருக்கிறது. சொத்து வரி 150 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ரூ.4 ஆயிரத்திற்கு பதிலாக இப்போது ரூ.27 ஆயிரம் கட்ட வேண்டும். ஆகவே இந்த பிரச்சனையில் அர சாங்கம் சற்று கனிவொடு பரிசீலிக்க வேண்டும். ஏழை மக்களை பாதிப்பிலிருந்து விடுவிக்கிற அளவுக்கு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
    • அடையாள அட்டை வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரளா வில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று கண்டன ஆர்ப்பா ட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பொன் சோபன ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் இந்திரா, சித்ரா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், பொன் சுந்தர், மாரிமுத்து, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    ×