search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு உரங்களுடன் இடுபொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கபடும்
    • வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான 1312 மெட்ரிக் டன் யூரியா தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் வந்துள்ளது. இவைகள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள சில்லரை உர விற்பனையாளர்கள், உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.

    உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது.மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், உரங்களை விற்பனை செய்வதும் கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.


    • அலெக்சாண்டர் (வயது46) விவசாயி. நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்
    • திடீரென அவரை கதண்டு குளவி கடித்ததில் அலெக்சாண்டர் நிலை குலைந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயபாளையம் அருகே உள்ள கரடி சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது46) விவசாயி. நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவரை கதண்டு குளவி கடித்ததில் அலெக்சாண்டர் நிலை குலைந்து போனார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து தகவலின் பெயரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன

    • 100 நாள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்று விடுகின்றனர்.
    • பயிர் பராமரிப்பு செலவு அதிகமாகி விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறோம்.

    இன்றைய காலகட்டத்தில் வயலில் இறங்கி விவசாய வேலையை செய்வதற்கு ஆள் கிடைப்பது இல்லை. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் தீவிரமானபிறகு பெண்கள் அனைவருமே அந்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதுவே விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று தனது உள்ள குமுறலை வெளிப்படுத்தி உள்ளார் தென்காசி மாவட்ட விவசாயி ஒருவர்.

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் அருகில் உள்ளது பாறைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது கிராமத்தில் நான் 4 ஏக்கர் நில பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். பிப்ரவரி முதல் ஜூன் வரையில் கோடை கால பருவத்திலும் செப்டம்பர்-ஜனவரி வரையில் மழை கால பருவத்திலும் விவசாயம் செய்து வருகிறோம். இந்த 2 பருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரையில் களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்காக அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கடைசி 30 நாட்கள் அறுவடை பணிக்கும் கூலி ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த காலகட்டங்களில் 100 நாள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்று விடுகின்றனர்.

    இதனால் பயிர்களுக்கு களை எடுக்க ஆள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 100 நாள் வேலை காரணமாக 7 மணி நேர வேலை என்பது 4 மணி நேரமாக சுருங்கி போய்விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு அதிகமாகி விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறோம்.

    தற்போது நான் 3 ஏக்கரில் பருத்தி பயிரிட்டுள்ளேன். எங்கள் பகுதியில் தற்போது 100 நாள் திட்ட பணிகள் நடைபெறுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே கலெக்டர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருந்தால் அவர்களை களை எடுக்க அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு கூலி, பஞ்சப்படி, பயணப்படி,மதிய உணவு என அனைத்தையும் கொடுக்க தயாராக உள்ளேன்.

    இவ்வாறு விவசாயி மகேஸ்வரன் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அமராவதி அணை நீர்மட்டம் உயராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
    • கடந்த ஒரு மாதத்தில் 4.54 அடி மட்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கருர்:

    கேரள மாநிலம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஏப்ரல் மாத துவக்கத்தில் அணையின் நீர் மட்டம் 52.79 அடியை எட்டியிருந்தது. ஆனால் நேற்று அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 270 கன அடியாகவும், அணை நீர் மட்டம் 56.33 அடியாக மட்டுமே இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் 4.54 அடி மட்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    அமராவதி அணை மூலம் கரூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. மேலும், அரவக்குறிச்சி, கூ.பரமத்தி, தான் தோன்றமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளை சேர்ந்த, கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஜூலை மாத இறுதியில் அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என கரூர் மாவட்ட விவசாயிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் அணையின் நீர் மட்டம் உயராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்கப்படுமா என்ற கவலையில் உள்ளனர்.


    • புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • பெரம்பலூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புஜங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகள் புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை பாசன வாய்க்கால்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளைவாய்க்கால் எண்கள் 25,26,27 ஆகியவற்றிற்காக நில கையகயெடுப்பு அறிவிப்பானை செய்திதாள் மூலம் அறிந்தோம்.

    மூன்று கிளைவாய்க்கால்களும் சுமார் 4 கி.மீ நீலத்திற்கு அமைத்து அதற்காக சுமார் 600 ஏர்ஸ் பாசன நிலம் கையகப்படுத்த உள்ளனர், ஆனால் இந்த வாய்க்கால்கள் அமைய உள்ள வழித்தடங்களில் 100 ஏர்ஸ் நிலங்கள் கூட தரிசு மற்றும் மானவாரி நிலங்கலாக இல்லை. இந்தநிலையில் 3 வாய்க்கால்கள் அமைக்க பட்டால் கிராம பொது மக்களாகிய நாங்கள் மிகபெரிய துன்பங்களையும் துயரங்களையும் வாழ்வாதாரங்களையும் அனுபவிக்க நேரிடும்.எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்தின் வழியாக அமைய உத்தேசித்துள்ள கள ஆய்வு செய்து கிளை வாய்க்கால்கள் அமைக்கும் முயற்சியை கைவிட கோகிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


    • பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்திட 700 எக்டருக்கு ரூ.5 கோடியே 80 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை) கணக்கிடப்பட்ட அடிப்படையில் 100 சதவீதம் மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு பெரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ -2, ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தங்கள் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு சொட்டுநீர் அல்லது தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து முருகன் குடித்துள்ளார்.
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகன் உயிரிழந்தார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த களர்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). விவசாயியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து முருகன் குடித்துள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பேசினார்
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இயல்பான மழையளவான 73.30 மி.மீ.க்கு 80.05 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரையில் 6.75 மி.மீ. கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. பயிர்ச் சாகுபடி விவரம் 2022-2023ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய நெல் 101375 எக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 2156 எக்டேர் பரப்பளவிலும், பயறு வகைப் பயிர்கள் 4800 எக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 14374 எக்டேர் பரப்பிலும், கரும்பு 2256 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 452 எக்டேர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12584 எக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    இடுபொருட்கள் இருப்பு மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 31.907 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 36.310 மெ.டன் பயறு விதைகளும், 2.037 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.336 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0,048 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.

    2021-22 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு, 47 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 79 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 79 தரிசு நில தொகுப்பில் 39 தொகுப்புகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு ஒரு தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

    தரிசு நில தொகுப்புகளில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், மானிய முன்பதிவு, உதவி வேளாண்மை அலுவலர் வருகை குறித்த தகவல், வானிலைச் செய்திகள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.


    • சிமெண்ட் சாலைகள் அலங்கார தரைகள் பதிப்பதால் பாசன கால்வாய்கள் சேதம் அடைகிறது.
    • விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பு ரேவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள பாசன கால்வாய்களின் கரைப்பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் அலங்கார தரைகள் பதிப்பதால் பாசன கால்வாய்கள் சேதம் அடைகிறது. இதன் காரணமாக கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் கடை வரம்பு விவசாயம் அழிந்து விடும். எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து மணல் எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளிப்பதில் கா லதாமதம் ஆக்கி வருகி றார்கள். ஆனால் நாகர்கோ வில் நகரின் மையப்பகுதியில் உள்ள சுப்பையார் குளத்தில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் மணல் எடுக் கப்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை பற்றி தெரிவிக்க வேண்டும்.

    வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் சுங்கான் கடை வழியாக ஏராளமான கனரக வாகனங்களில் மணல் கொண்டு செல்லப் படுகிறது. விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.

    விவசாயத்திற்கு பயன்படும் மணலை எடுக்க அதிகாரிகள் அனுமதி அளிக்காதது வேதனை அளிக்கிறது. வண்டல் மண்ணை விவசாயத்திற்கு எடுக்க அனுமதி அளிக்கும் வகையில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மேற்பார்வையில் குளங்களில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    புத்தன்அணையிலிருந்து நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண் டும். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் பொது மக்கள் தவித்து வருகிறார்கள். நாகர்கோவில் நகருக்கு புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புத்தளத்தில் உள்ள தென்னை பண்ணையில் தென்னை மரங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. தேங்காய் விலை ரூ.9 க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் மரங்களின் விலை ரூ.125 முதல் ரூ.300க்கு விற்கப்பட்டு வருகிறது. இதை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீரினை பயன் படுத்துவோர் சங்க தேர்தல் தற்போது நடந்து முடிந் துள்ளது. புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட தலை வர்களுக்கு பதவியேற்பு விழா நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மேலும் தேர்வு செய்யப்படாமல் காலியாக உள்ள பதவி இடங்களை நிரப்ப உடனே தேர்தல் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதிலளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது 100 குளங்களில் மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. குளங்களில் இருந்து மணல் எடுப்பதற்கு 302 விண் ணப்பங்கள் பெறப்பட்டுள் ளது. அதிகாரிகள் பரிசீலித்து மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கி வருகிறார்கள்.

    புத்தளம் தென்னை பண்ணையில் மரங்களின் விலையை குறைப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய முடியும். நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் வெற்றி பெற் றோருக்கான பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை விரை வில் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

    • மதுரை அருகே விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து கூடக்கோவில், மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கல்லணையைச் சேர்ந்தவர் இருளப்பன் (வயது 70), விவசாயி. இவருக்கு 4 வருடங்களுக்கு முன்பு இடது கண்ணில் அடிபட்டது.

    அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின்னரும் கண்ணில் தொடர்ந்து வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியடைந்த இருளப்பன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இருளப்பன் மகன் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கே. நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வலம்புரி (75) என்பவருக்கு கடந்த சில மாதங்களாக கண்பார்வை குறைந்தது.

    இதில் விரக்தியடைந்த வலம்புரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்டலமாணிக்கம் இன்ஸ்பெக்டர் விமலா வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

    • அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது.
    • மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தாராபுரம் வட்டம், அமராவதி பாசனப் பகுதிகளான அலங்கியம், தாராபுரம், தளவாய்பட்டிணம், கொழிஞ்சிவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். தண்ணீா் பற்றாக்குறையால் மக்காச்சோளப் பயிா்கள் தற்போது காயும் தருவாயில் உள்ளது. அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். ஆகவே, அமராவதி அணையில் இருந்து மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி வட்டம் தளவாய்பாளையம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தாா் சாலைகள் தோண்டப்பட்டது. இதன் பின்னா் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சேதமான தாா் சாலைகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்பட்டு பலா் காயமடைந்து வருகின்றனா். ஆகவே, தாா் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்..

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குநா் (வேளாண்மை) மா.மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபட்டனர்
    • இதில் 11 ஜோடி மாடுகளைக்கொண்டு விவசாயிகள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர்.

    ஆலங்குடி

    தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், சித்திரை முதல் நாளான நேற்று முன்தினம் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட எஸ்.குளவாய்ப்பட்டியில் நல்லேர் பூட்டும் நிகழ்வு நடந்தது.இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி தேங்காய், பழம், தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து விளைநிலத்தில் வழிபட்டனர்.

    அதன் பின்பு வரிசையில் அணிவகுத்து நின்ற டிராக்டர்களுக்கும் பூஜைகள் செய்யபட்ட பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது.இதில் 11 ஜோடி மாடுகளைக்கொண்டு விவசாயிகள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், கடந்த காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் மாடுகளைக்கொண்டு நல்லேரு பூட்டி தமிழ்புத்தாண்டை வரவேற்றனர். ஆனால் போதுமான மழை இல்லாததால், மாடுகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதனால், விவசாயிகள் தங்களது மாடுகளை வளர்க்க இயலாமல் விற்பனை செய்துவிட்டனர்.இருப்பினும் ஒரு சில விவசாயிகள் மட்டும் பாரம்பரியமாக கால்நடைகளை கொண்டே வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சித்திரை முதல் நாள் நல்லேறு பூட்டினால் விவசாயம் செழிக்கும் என்று தங்கள் முன்னோர்கள் கடைபிடித்து வந்த மாண்பை தாங்களும் ஆண்டு தோறும் அதனை கடைபிடித்து வருவதாகவும், இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையிலே நல்லேரு பூட்டியுள்ளோம் என்று கூறினர்.


    ×