search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
    • 2,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    தாராபுரம் :

    விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4 மாத இடைவெளியில் மூன்று தவணைகளில் இத்தொகை வழங்கப்படுகிறது. இதில் 13வது தவணையாக 2,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுகின்றனர். திட்டத்தின் கீழ் ஏராளமான போலி விவசாயிகள் பயன் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து சரியான விவசாயிகளுக்கு மட்டும் நிதியுதவி சென்று சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.இதனால் சம்மந்தப்பட்ட விவசாய நிலம் யார் பெயரில் உள்ளதோ அவர்களது வங்கிக் கணக்கிற்கு தான் உதவித் தொகை விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இடைப்பட்ட நாட்களில் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பட்டியல் உறுதி செய்யப்பட்டது.

    இது குறித்து வேளாண்மை துறையினர் கூறுகையில், விவசாய நிலம் வைத்துள்ள பலர் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். தங்களது பெற்றோர் பெயரில் உள்ள நிலத்துக்கு வாரிசுகள் சொந்தம் கொண்டாடும் போது, எந்த வாரிசின் பெயரில் நிலம் உள்ளதோ அவரது வங்கிக் கணக்கிற்கு தான் உதவித் தொகை அனுப்பப்படும். இதனை விண்ணப்பதாரர்களுக்கு தெளிவுப்படுத்தி வருகிறோம் என்றனர்.

    • மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
    • உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்

    சேலம்:

    சேலம் தெற்கு மின் கோட்டம் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் கடந்த 4 மாதமாக உதவி பொறியாளராக பணிபுரிந்தவர் சுகவனம் (வயது 52). இவர் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் உட்பட்ட வெட்டுக்காட்டில் ஏற்கனவே புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்ததாக புகார் இருந்தது.

    இது தொடர்பான புகாருக்கு இவருக்கு முன் பணியில் இருந்த உதவி பொறியாளர் பவ்யா மீது குற்றம் சாட்டி காலம் கடத்தி வந்தார் . கடந்த 23-ந் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் இனியும் தாமதிக்காமல் மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.

    இதை அடுத்து பணியை விரைந்து முடிக்க ஆட்டையாம்பட்டி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவரது நடவடிக்கைக்கும் கீழ்படியாமல் பணியை நிறைவு செய்யவும் ஒத்துழைக்காமல் சுகவனம் மறுத்துவிட்டார். இதனால் இதர பிரிவு உதவி பொறியாளரை வைத்து மின்மாற்றி பணியை நிறைவு செய்து பயன்பாட்டு கொண்டுவரப்பட்டது .

    இதன் அறிக்கை சேலம் மின் வட்டம் மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்.

    • இரும்பு கொக்கியை எடுத்து தேங்காய் பறிக்க முயன்றுள்ளார்.
    • அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 50 ).இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (45 ) என்பவர் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கொக்கியை எடுத்து தேங்காய் பறிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் இரும்பு கம்பி பட்டதில் குமார் மீது மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டை விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கபட்டது
    • 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வேளாண் உழவர் நலத்திட்டம் மூலமாக முழு மானியத்தில் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை வேளாண் விரிவாக்க மையம் கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி கலந்து கொண்டு வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடு பொருட்களை வழங்கினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துகளில் ஒன்றான அரவம் பட்டியில் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வேளாண் உழவர் நலத்திட்டம் மூலமாக முழு மானியத்தில் வழங்கப்பட்டது.

    மேலும் ரோட்டவேட்டர் கருவி வேளாண் பண்ணை கருவிகள், விசை தெளிப்பான், உளுந்து விதைகள், ஜிப்சம், சிங் சல்பேட் முதலான இடுப்பொருட்கள் 50 சதவீத மானியத்தில் தகுதியுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் உழவர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவற்றில் பயனடைவதற்கான அரசு வழிகாட்டுதல்களையும் விபரமாக எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர் நாகராஜ், ரெகுநாதன், சங்கர், செல்வம், கமலி, காளிதாஸ், அட்மா திட்ட பணியாளர்கள் ராஜீவ், சங்கீதா, சுப்ரமணியன், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார்.

    ஜோலாப்பூர்:

    மராட்டிய மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பார்ஷி பகுதியைச் சேர்ந்தவர்ராஜேந்திர துக்காராம் சவான் (வயது 58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வேளாண் விளை பொருள் விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் கடுமையான விலை வீழ்ச்சியால் 1 கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்பட்டது.

    மொத்தத்தில் 512 கிலோ வெங்காயத்தை விற்றதில் விவசாயி துக்காராமுக்கு ரூ.512 மட்டுமே கிடைத்தது. வெங்காயத்தை 70 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்றதற்கான லாரி வாடகை, சுமை கூலி ஆகியவற்றுக்கு ரூ.510 செலவானது. அந்த வகையில் 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி துக்காராமுக்கு எல்லா செலவும் போக மிஞ்சியது வெறும் 2 ரூபாய்தான்.

    வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர், விவசாயி துக்காராமிடம் 2 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அந்த காசோலையையும் 15 நாட்களுக்கு பிறகே பணமாக்க முடியும். இந்த காசோலை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததன் மூலம் எனக்கு வெறும் 2 ரூபாயே கிடைத்தது. இந்த விளைவிக்க கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் செலவழித்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ வெங்காயத்துக்கு 20 ரூபாய் சம்பாதித்தேன். இந்த ஆண்டு மொத்தமே 2 ரூபாய்தான் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயி துக்கராமிடம் வெங்காயத்தை வாங்கிய வியாபாரி கலீபா கூறுகையில், "ரசீதுகள் மற்றும் காசோலைகள் வழங்கும் செயல்முறையை நாங்கள் கணினி மயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக துக்காராமுக்கு பிந்தைய தேதியிட்ட காசோலை கொடுக்கப்பட்டது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.

    விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெங்காயம் தரம் குறைந்ததாக இருந்தது. இதற்கு முன்பு அவர் 18 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயர்ரக வெங்காயத்தை கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு மற்றொரு முறை அவரது வெங்காயத்துக்கு கிலோவுக்கு 14 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது தரம் குறைந்த வெங்காயத்தை கொண்டு வந்ததால் கிலோ 1 ரூபாய்க்கே எடுக்க முடிந்தது" என்றார்.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (வயது 75).

    இவர் சம்பவத்தன்றுஇரவு கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்கன்னியாகுமரி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவரது உடல்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்பிரேதபரிசோதனைசெய்யப்பட் டது. இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ேமாட்டார் சைக்கிளில் கிராம நிர்வாக அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறியதில் கீழே விழுந்தில் ஜெயபால் பலத்த காயம் அடைந்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 58) .

    விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்காடு கிராம நிர்வாக அலுவலகம் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலகம் அருகே சற்றுதூரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறியதில் கீழே விழுந்துள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெயபால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சை க்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபால் உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் சதிஷ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடலாடி அருகே காணாமல் போன விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.
    • இவர் இந்தப்குபதியில் உள்ள பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழச் செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனம் (வயது45), விவசாயி. இவர் இந்தப்குபதியில் உள்ள பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார்.

    கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மயில்வாகனம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மயில்வாகனத்தின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில், சிக்கல் அருகே உள்ள ஆண்டிச்சிகுளம் கண்மாய் மேற்கு பகுதியில் விவசாயியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    கடலாடி இன்ஸ் பெக்டர் ஜான்சிராணி, கீழச் செல்வனூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச் சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பிணமாக கிடந்தது. மயில்வாகனம் என்பதை உறுதி செய்தனர். அவரது உடலை போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாயி மயில்வாகனம் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் மின் கோட்ட நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் செயற் பொறியாளர் (பொது) திருஞானசம்பந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.கிருஷ்ணாபுரம் வே.மந்தராசலம் கொடுத்த மனுவில், சாலைப்புதூர் பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதியில் உள்ள வலசுபாளையம் நாச்சிமுத்து,வேலுசாமி ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு இலவச விவசாய மின்சார இணைப்பு ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்று கடந்த 22ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை . அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.விரைவில் விவசாய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயியான பாண்டியராஜிக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
    • மனம் உடைந்த பாண்டியராஜ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(வயது 39). விவசாயி. இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.

    பாண்டியராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அவரை, மனைவி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த பாண்டியராஜ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய அரசின் குழு இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறது.
    • விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது இந்த திறனற்ற தி.மு.க. அரசு.

    சென்னை :

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பருவம் தவறி பெய்த மழையினால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்காக காத்திருந்த நெல் பயிரையும், அறுவடை செய்யப்பட்டு ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய, விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களையும், அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதத்தையும் ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டிற்கு வருகிறது.

    மத்திய அரசின் நெல் கொள்முதல் ஈரப்பத வரைமுறையின்படி நெல் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கீழே இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் தற்போது பெய்த கனமழையினால் ஈரப்பதம் 22 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு தமிழக பா.ஜ.க. துணை நிற்கும்.

    அதே வேளை தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்தபின்னர் கொடுத்த வாக்குறுதிகள் என எதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது இந்த திறனற்ற தி.மு.க. அரசு.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சிய போக்குடன் செயல்படும் இந்த திறனற்ற தி.மு.க. அரசு இதற்கு மேலும் தாமதிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பா ரகத்தை விதைப்பு செய்து வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார்.
    • 5000 கிலோ மகசூல் செய்த விவசாயியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தில் நெல் விவசாயம் முழுவதும் நவீனமயமாக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    அனைத்துக்கும் இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் வேளாண்மை செய்து அதன் மூலம் தரமான நெல்லை அரிசியை தர வேண்டும் என்று ஒரு பக்கம் முன்னெடுப்புடன் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இயற்கை வேளாண்மை முயற்சிகள் விவசாயிகளிடையே முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு சிலர் பரிட்சார்த்தமுறையில் இயற்கை விவசாயத்தை செய்து வருகின்றனர்.

    இது போன்ற ஒரு நிலையில் பூதலூர்- தஞ்சை சாலையில் உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குழந்தைவேலு தன் மகன் பார்த்திபனுடன் இணைந்து தன்னுடைய விவசாய நிலத்தில் அரை ஏக்கர் பரப்பில் மருத்துவ குணம் கொண்ட சீரக சம்பா ரகத்தை விதைப்பு செய்து வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார்.

    அவர் தஞ்சை அருகே உள்ள நடார் கிராமத்தில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் கண்காட்சியில் இலவசமாக வாங்கிய சீரகசம்பாவிதை நெல்லை விதைத்து நல்ல முறையில் அறுவடை செய்துள்ளார்.

    120 நாள் வயதுள்ள சீரகச் சம்பா நெல்லை இவர் தனது வயலின் ஒரு பகுதியில் நேரடி விதைப்பாக விதைப்பு செய்துள்ளார்.விதைப்பு செய்த உடன் எந்தவித ரசாயன உரங்கள் பயன்படுத்தவில்லை.

    ஒரே ஒருமுறை மற்றும் களை எடுத்துள்ளார்.நல்ல நிலையில் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் ஆட்களை விட்டு அறுத்து வயலிலேயே தார்ப்பாய் போட்டு ஆட்களை கொண்டு அடித்து விளைச்சலை கண்டுள்ளார்.இவர் அரை ஏக்கர் பரப்பில் பயிற்செய்த சீரகசம்பா நெல் 16 மூட்டை மகசூல் கண்டுள்ளது.

    எந்தவித செலவும் இல்லாமல் வேளாண் திருவிழாவில் இலவசமாக வாங்கிய விதையை கொண்டு விதைப்பு செய்து மற்றவர்களுக்கு முன்னதாக அறுவடை செய்து ஏறக்குறைய 5000 கிலோ மகசூல் செய்த விவசாயியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

    ×